ஒரு சுமங்கலி ஒரு கோடி சுமங்கலிகளை உருவாக்குவதே தெய்வீகம் !

குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சிவமய போற்றித் துதிகள்

இறைவனின் அனுகிரகத்தை நாம் எவ்வகையில் உடலில் ஏற்கிறோம்?

எம்பெருமானின் அனுகிரக சக்திகள் மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றில் உள்ள பல சக்தி மையங்கள் வழியாக ஏற்கப்படுகின்றன. மனித உடலில் நடு மையம், மத்ய மையம், ஆரண மையம் என்ற மூன்று சக்தி மையங்கள் இருந்தாலும், ஆரண மையம் வழியாகவே பெரும்பாலான அனுகிரக சக்திகள் ஏற்கப்படுகின்றன. சில அபூர்வமான வேத சக்திகள் தீட்சை என்னும் குடுமி வழியாக ஈர்க்கப்படுகின்றன. கடுக்கன், ருத்ராட்சம், தீனக் காப்பு, திருமாங்கல்யம், வளையல்கள், நெற்றியில் தரிக்கும் விபூதி, குங்குமம், காலில் மெட்டிகள், மருதாணி போன்றவற்றின் மூலமாகவும் சிலவிதமாக அனுகிரக சக்திகள் உடலில் விரவுகின்றன என்பதும் உண்மையே.

இவ்வாறு ஆரண மையம் வழியாகக் கிட்டும் அனுகிரக சக்திகள் மற்ற உடல் பாகங்களுக்கும் பரவி நிரவி நிற்க வேண்டும் அல்லவா? இதற்கு அருள்புரியும் மூர்த்தியே செவலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபூமிநாதர் ஆவார். மேலும் இந்த ஆண்டில் வாகன விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் வாகனங்களுக்கு அதிபதியான செவ்வாய் மூர்த்தியை வேண்டி விபத்துக்களைத் தவிர்த்தல் அவசியமாகிறது. செவ்வாய் பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள்புரியும் வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவைத்யநாத சுவாமியை துதித்தலால் செவ்வாய் பகவானின் அனுகிரகத்தால் விபத்துகளிலிருந்து நாம் மீள முடியும். இவ்வாறு நாம் அனைத்து விதமான சுபமங்கள சக்திகளையும் இவ்வாண்டில் பெற்று வாழ அருள்புரியும் மூர்த்திகள், அம்பிகைகளின் பெயர்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றைத் தினந்தோறும் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அஷ்டோத்திர நாமாவளியாகவோ, இஷ்ட நாம ஜப மந்திரமாகவோ, எண் சக்திகளை விருத்தி செய்து கொள்ளும் பூஜையாகவோ ஆற்றி அனைவரும் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

திருமணக் கோலம்
திருவீழிமிழலை

1. ஓம் ரீம் அபீதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வராய நமஹ
2. ஓம் ரீம் கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வராய நமஹ
3. ஓம் ரீம் திரிபுரசுந்தரி சமேத ஓளஷதீஸ்வராய நமஹ
4. ஓம் ரீம் அஞ்சனாக்ஷி சமேத கச்சபேஸ்வராய நமஹ
5. ஓம் ரீம் திரிபுரசுந்தரி சமேத பக்தவத்சலேஸ்வராய நமஹ
6. ஓம் ரீம் அமிர்தேஸ்வரி சமேத சந்த்ரசேகரேஸ்வராய நமஹ
7. ஓம் ரீம் ராஜராஜேஸ்வரி சமேத சந்த்ரமௌலீஸ்வராய நமஹ
8. ஓம் ரீம் அபிவிருத்திநாயகி சமேத அட்சயபுரீஸ்வராய நமஹ
9. ஓம் ரீம் அருமருந்துநாயகி சமேத கற்குடிநாதாய நமஹ
10. ஓம் ரீம் மோகனவல்லி சமேத கங்காதரேஸ்வராய நமஹ
11. ஓம் ரீம் சீதளாம்பிகை சமேத ஒத்தாண்டேஸ்வராய நமஹ
12. ஓம் ரீம் மாணிக்கவல்லி மரகதவல்லி சமேத மகாலிங்கேஸ்வராய நமஹ
13. ஓம் ரீம் கோமதி சமேத சங்கரநாராயணாய நம
14. ஓம் ரீம் அன்னபூரணி சமேத க்ருபாகூபாரேஸ்வராய நமஹ
15. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வராய நமஹ
16. ஓம் ரீம் திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ
17. ஓம் ரீம் பிரேமராம்பிகை சமேத அங்குனேஸ்வராய நமஹ
18. ஓம் ரீம் பிரசன்ன குந்தளாம்பிகை சமேத தாந்த்ரீஸ்வராய நமஹ
19. ஓம் ரீம் பவானி சமேத சங்கமேஸ்வராய நமஹ
20. ஓம் ரீம் பரஞ்சோதி பார்வதி சமேத பரியாமருந்தீஸ்வராய நமஹ
21. ஓம் ரீம் காமாட்சி சமேத ஆனேஸ்வராய நமஹ
22. ஓம் ரீம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வராய நமஹ
23. ஓம் ரீம் நாகாம்பிகை சமேத கோடி சூரிய பிரகாசாய நமஹ
24. ஓம் ரீம் அதுல்ய சுந்தரி சமேத அப்ரதீஸ்வராய நமஹ
25. ஓம் ரீம் சிவகாம சுந்தரி சமேத கைலாசநாதாய நமஹ
26. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத கைலாசநாதாய நமஹ
27. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வராய நமஹ
28. ஓம் ரீம் சிவபூரணி சமேத பைரவேஸ்வராய நமஹ
29. ஓம் ரீம் ஆத்மநாயகி சமேத ருத்ரகோடீஸ்வராய நமஹ

தழுவக் குழைந்த கோலம்
பழையாறை

30. ஓம் ரீம் நிறைவளையாம்பிகை சமேத வாலீஸ்வராய நமஹ
31. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத மல்லீஸ்வராய நமஹ
32. ஓம் ரீம் பாலசுந்தரி சமேத பாதாள ஈஸ்வராய நமஹ
33. ஓம் ரீம் காமகோடீஸ்வரி சமேத வைத்யநாதாய நமஹ
34. ஓம் ரீம் உமையாம்பிகை சமேத வீரசேகராய நமஹ
35. ஓம் ரீம் சாந்தநாயகி சமேத ஸ்வர்ணவாரீஸ்வராய நமஹ
36. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத சரணாகதரட்சகாய நமஹ
37. ஓம் ரீம் ஆரணவல்லி சமேத பூமிநாதாய நமஹ
38. ஓம் ரீம் குங்குமவல்லி சமேத சப்தரிஷீஸ்வராய நமஹ
39. ஓம் ரீம் பூலோகநாயகி சமேத பூலோகநாதாய நமஹ
40. ஓம் ரீம் ஜகத்ரட்சகி சமேத ஜகதீஸ்வராய நமஹ
41. ஓம் ரீம் அத்வைத நாயகி சமேத சற்குண லிங்கேஸ்வராய நமஹ
42. ஓம் ரீம் ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வராய நமஹ
43. ஓம் ரீம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வராய நமஹ
44. ஓம் ரீம் அலங்காரவல்லி சமேத கீர்த்திவாகீஸ்வராய நமஹ
45. ஓம் ரீம் பால்வளநாயகி சமேத பசுபதீஸ்வராய நமஹ
46. ஓம் ரீம் சௌந்தரநாயகி சமேத பிரம்மபுரீஸ்வராய நமஹ
47. ஓம் ரீம் சுகந்தகுந்தளாம்பிகை சமேத மத்ஸ்யபுரீஸ்வராய நமஹ
48. ஓம் ரீம் குந்தளேஸ்வரி சமேத குந்தளேஸ்வராய நமஹ
49. ஓம் ரீம் கோகிலாம்பிகை சமேத கோடீஸ்வராய நமஹ
50. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத ரிஷபாபுரீஸ்வராய நமஹ
51. ஓம் ரீம் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வராய நமஹ
52. ஓம் ரீம் துங்கஸ்தனாம்பிகை சமேத கைலாசநாதாய நமஹ
53. ஓம் ரீம் கமலாம்பிகை சமேத காளீஸ்வராய நமஹ
54. ஓம் ரீம் அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வராய நமஹ
55. ஓம் ரீம் சிவகாமி சமேத சந்த்ரசேகராய நமஹ
56. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத ப்ராணநாதேஸ்வராய நமஹ
57. ஓம் ரீம் கற்பகாம்பிகை சமேத அமராதீஸ்வராய நமஹ
58. ஓம் ரீம் விசாலாட்சி சமேத ராமநாதீஸ்வராய நமஹ
59. ஓம் ரீம் தையல்நாயகி சமேத வைத்யநாதாய நமஹ
60. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வராய நமஹ
61. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத மந்திரபுரீஸ்வராய நமஹ
62. ஓம் ரீம் மூலிகாரட்சாம்பிகை சமேத அரப்பளீஸ்வராய நமஹ
63. ஓம் ரீம் காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வராய நமஹ
64. ஓம் ரீம் ஜெகதாம்பிகை சமேத பூலோகநாதாய நமஹ
65. ஓம் ரீம் வாலாம்பிகை சமேத ஆம்ரவனேஸ்வராய நமஹ
66. ஓம் ரீம் அன்னபூரணி சமேத ஓதவனேஸ்வராய நமஹ
67. ஓம் ரீம் ஞானாம்பிகை சமேத பரசுநாதாய நமஹ
68. ஓம் ரீம் சுகந்த குந்தளாம்பிகை சமேத பத்ரிகாபரமேஸ்வராய நமஹ
69. ஓம் ரீம் பிரசன்ன நாயகி சமேத கைலாச நாதாய நமஹ
70. ஓம் ரீம் அஞ்சனாட்சி சமேத அமிர்தகடேஸ்வராய நமஹ
71. ஓம் ரீம் கருணாகரவல்லி சமேத கைலாயநாதாய நமஹ
72. ஓம் ரீம் அருந்தவ நாயகி சமேத கைலாசநாதாய நமஹ

சிவசக்தி தரிசனம்
அவளிவநல்லூர்

73. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத மங்களநாதாய நமஹ
74. ஓம் ரீம் சுந்தரநாயகி சமேத அபயவரதீஸ்வராய நமஹ
75. ஓம் ரீம் ஆனந்தவல்லி சமேத ராஜராஜேஸ்வராய நமஹ
76. ஓம் ரீம் வித்யசௌபாக்யாம்பிகை சமேத பக்தவத்சலேஸ்வராய நமஹ
77. ஓம் ரீம் சுந்தரவல்லி சமேத சோமநாதாய நமஹ
78. ஓம் ரீம் சுரும்பார்குழலி சமேத ரத்னகிரீஸ்வராய நமஹ
79. ஓம் ரீம் ஹேமவர்ணாம்பிகை சமேத தாருகாவனேஸ்வராய நமஹ
80. ஓம் ரீம் அஞ்சனாட்சி பாலாம்பிகை சமேத உஜ்ஜீவநாதாய நமஹ
81. ஓம் ரீம் காந்திமதி சமேத பஞ்சவர்ணேஸ்வராய நமஹ
82. ஓம் ரீம் ஸ்ரீமதி சமேத சப்தரிஷீஸ்வராய நமஹ
83. ஓம் ரீம் சுகந்தகுந்தளாம்பிகை சமேத மாத்ருபூதேஸ்வராய நமஹ
84. ஓம் ரீம் சௌந்தரநாயகி சமேத எறும்பீஸ்வராய நமஹ
85. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத நித்ய சுந்தரேஸ்வராய நமஹ
86. ஓம் ரீம் சௌந்தர நாயகி சமேத புஷ்பவனேஸ்வராய நமஹ
87. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத பிரமசிரக் கண்டீஸ்வராய நமஹ
88. ஓம் ரீம் பிருகந் நாயகி சமேத கபர்தீஸ்வராய நமஹ
89. ஓம் ரீம் பிருகத் சுந்தர குஜாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வராய நமஹ
90. ஓம் ரீம் பவளக் கொடியம்மை சமேத ஆபத்சகாயேஸ்வராய நமஹ
91. ஓம் ரீம் அதுல்ய குஜாம்பிகை சமேத மாசிலாமணீஸ்வராய நமஹ
92. ஓம் ரீம் கந்துக கிரீடாம்பிகை சமேத கோடீஸ்வராய நமஹ
93. ஓம் ரீம் சுகந்தகுந்தளாம்பிகை நித்யகல்யாணி சமேத எழுத்தறி நாதாய நமஹ
94. ஓம் ரீம் தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதேஸ்வராய நமஹ
95. ஓம் ரீம் மேகலாம்பிகை சமேத ஆதிமூலேஸ்வராய நமஹ
96. ஓம் ரீம் விசாலாட்சி பாலாம்பிகை சமேத நீலகண்டேஸ்வராய நமஹ
97. ஓம் ரீம் பாலாம்பிகை சமேத மாற்றறிவரதாய நமஹ
98. ஓம் ரீம் பர்வதவர்த்தினி சமேத ராமநாதாய நமஹ
99. ஓம் ரீம் ஆவுடை நாயகி சமேத பரங்கிரி நாதாய நமஹ
100. ஓம் ரீம் வேணுவாக்குவாஹினி சமேத குற்றால நாதாய நமஹ
101. ஓம் ரீம் திரிபுரந்தர நாயகி சமேத மகுடேஸ்வராய நமஹ
102. ஓம் ரீம் கிருபாநாயகி சமேத பசுபதீஸ்வராய நமஹ
103. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத அரங்குள நாதாய நமஹ
104. ஓம் ரீம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதாய நமஹ
105. ஓம் ரீம் ஜகதாம்பிகை சமேத வல்லீஸ்வராய நமஹ
106. ஓம் ரீம் சிவகாமி சமேத நடராஜாய நமஹ
107. ஓம் ரீம் பெரியநாயகி சமேத பிரம்மபுரீஸ்வராய நமஹ
108. ஓம் ரீம் லோபாமாதா சமேத அகஸ்தீஸ்வராய நமஹ

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

இதய நோய் அகற்றும் இறைத் துதிகள்

கலியுகத்தில் இதய நோயால் பலரும் வருந்துவர் என தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த முனிவர்கள் எம்பிரானிடம் வேண்டி பன்னெடுங்காலம் கடுந் தவம் இயற்றி இருதய நோய் அகல அற்புதமான இறைத் துதிகளைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையுடன் இத்துதிகளை ஓதி வருவோர்க்கு இருதயம் பலம் அடைந்து நன்னிலை அடைவர். மேலும் இவர்கள் திருச்சி திருவானைக்கோயில் பிரகாரத்தில் உள்ள எட்டுத் திக்கு கொடி மரங்களுக்குச் சுத்தமான 16 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வீக்கம் நீங்கி சுகமடைவர்.

திருமண தரிசனம்
திருத்துறைப்பூண்டி

தேவமொழி இருதயக் காப்பு மந்திரம்

அங்காதங்கால் லோம்னோ லோம்னோ
ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம்
விவ்ருஹாமி தே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

இதயக் கவசத் துதி தமிழில்

இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்.

மனித உடலின் பற்பல சிறப்புகளின் ஒன்றே இரத்த ஓட்டத்தை நிர்வகிக்கும் இதயமாகும். இதயம் அல்லது இரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்கள் பழுதடைந்தால் மனிதனின் நிலை என்னாவது ? இதைக் குறிப்பதாகவே சித்தர்கள் இதய கமலக் கோலம் என்ற ஒரு சிறப்பான கோல வழிபாட்டை அருளியுள்ளனர். எங்கும் பிரியாத, தொடர்புடைய ஒரே கோட்டினால் ஆன கோலமாகத் திகழ்வதே இந்த இதயக் கோலத்தின் சிறப்பாகும். இதயக் கமல கோலத்தை இங்குள்ள வீடியோவில் பார்த்து திருத்தலங்களில் இட்டு வருவதும் இதயத்திற்கு பலமளிக்கும், இதயக் கோளாறுகளுக்கு பலனளிக்கும் ஒரு அற்புத வழிபாடாகும். நாயன்மார்களுள் தண்டியடிகள் குருடராய் பிறந்தும் இறைவனுக்கு சேவை செய்து வந்தது நீங்கள் அறிந்ததே. அதே போல் வாயில் நாயனார் தன் இதயத்தில் இறைவனுக்குக் கோயில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்த இனிய வரலாறும் நாம் அறிந்ததே. இந்த இரு நாயன்மார்கள் முன்பு திருத்தலங்களில் இதயக் கமல கோலத்தை பச்சரிசி மாவால் வரைந்து வழிபடுவதால் இதயக் கோளாறுகளால் வருந்துவோர் நற்பலன் பெறுவார்கள்.

இதயகமல கோலம்

கண்களை இதயத்தின் வாயில்கள் என்று கூறுகிறோம். உண்மையே. கண்கள் மூலம் காணும் தவறான காட்சிகள் இதயத்தை பலவீனப்படுத்துவதால் குருடர்களுக்கு ஆற்றும் சேவைகள் இதய நோய்களுக்கு துரித நிவாரணம் அளிக்கின்றன.
குருடர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற வசதிகள் அளித்தல்
இயன்றபோது அவர்களை திருஅண்ணாமலை, பழநி, நெடுங்குடி போன்ற மலைத்தலங்களுக்கு கிரிவலம் அழைத்துச் சென்று இறை மூர்த்திகளின் அனுகிரகங்களை பெற்றுத் தருதல்
மகாபாரதம், இராமாயணம், ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வரும் அடிமை கண்ட ஆனந்தம் போன்ற சுவையான இறை அனுபவங்களை படித்துக் காட்டுதல்
பிரெய்லி கடிகாரங்கள், அபேகஸ் போன்ற கணக்கு கருவிகளை அளித்து அவர்களை ஊக்கப்படுத்துதல்
போன்ற குருடர் சேவைகள் சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துவதுடன் நமது சந்ததிகளுக்கும் இறை பக்தியை ஊட்டும் சாதனங்களாகும்.

துர்நாற்றம் அகல வாரம் ஒரு முறையாவது மாசிக்காய் ஒரு துண்டை வாயில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வைத்திருந்து கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரத்தை மனதிற்குள் ஓதி வந்தால் துர்நாற்றம் விலகுவதுடன் அவர்கள் பேச்சில் தெளிவும் ஏற்படும்.

“ஓம் தத் புருஷாய வித்மஹே
மாசிக்காய் தேவாய தீமஹி
தந்நோ ஜனரஞ்சன ப்ரசோதயாத்.”

 

பிறவிப் பிணி அறுக்கும் பேரருள் மந்திரம்

பிணிகளில் கொடியது பிறவிப் பிணியாகும். இப்பிணிக்கு மருந்து சொல்வது யாரால் இயலும்? பிறவிப் பிணியையும் வேரறுக்க வல்ல ஓர் அரிய மருந்தை எளிய பாடல் மூலம் அளித்துள்ளார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். அவர்கள் திருவாய் மலர்ந்து அருளிய இப்பாடலை காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நம்பிக்கையுடன் ஓதி இயன்ற தானத்தை அளித்து வந்தால் மிக விரைவில் இப்பிறவியிலேயே முக்தி நிலையை அடைந்து விடலாம் என்பது உறுதி.

தழுவக்குழைந்த கோலம்
சத்திமுற்றம் கும்பகோணம்

மலையைப் பார்க்கும்போது மகாதேவா உன்நினைவு
மலர்களைப் பார்க்கும்போது மலருது உன்நினைவு
வில்வ இலையைக் காணும்போது பெருகுது உன்நினைவு
திருநீறு கொள்ளும்போது கூடுது உன்நினைவு

தாயினை நினைக்கும்போது நீ தந்தது நினைவாகுது
வானளாவ வளர்ந்ததை நினைக்கும்போது நீ கொடுத்தது நினைவாகுது
வந்த இடர்களை நினைக்கும்போது நீ தடுத்தது நினைவாகுது
பிறந்ததை நினைக்கும்போது உன்னை நினைப்பதே முடிவாகுது
திறந்த வெளியெல்லாம் பார்க்கும்போது அருணாசலா நீ ஒன்றே என முடிவாகுது.

ஸ்ரீஜேஷ்டா தேவி போற்றித் துதிகள்

(சனீஸ்வர பகவான் ஸ்ரீஜேஷ்டாதேவியை சுஜனி என்ற தேவமொழியில் ஓதி வணங்கிய துதியை தமிழ் மொழியில் அருளியவர் ஸ்ரீசதாதப சித்த ஈச பிரான் ஆவார்)

1. ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி
2. ஓம் க்லீம் அடைக்கலம் அருள் அன்னையே போற்றி
3. ஓம் க்லீம் சிவனருள் இனிதருள் சியாமளா போற்றி
4. ஓம் க்லீம் ஆசை அறுப்பாய் போற்றி
5. ஓம் க்லீம் மும்மலம் நீக்கும் மூலதேவியே போற்றி
6. ஓம் க்லீம் பாற்கடல் பனித்த பைந்தளிர் போற்றி
7. ஓம் க்லீம் சுயம்வர சூட்சும சுந்தரி போற்றி
8. ஓம் க்லீம் சுரபி முலைப்பால் சுவையே போற்றி
9. ஓம் க்லீம் இணைகரம் ஓர்கரம் உவந்தாய் போற்றி
10. ஓம் க்லீம் ஆதவன் செஞ்சுடர் அருட்குடை போற்றி
11. ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி
12. ஓம் க்லீம் சந்தியா வந்தன தாரகை போற்றி
13. ஓம் க்லீம் மூலாதார முப்புரி முனிநிழல் போற்றி
14. ஓம் க்லீம் ஆறாதாரம் அமர்தீ அருளே போற்றி
15. ஓம் க்லீம் தினகரன் கனல்மேவும் வெஞ்சுடர் போற்றி
16. ஓம் க்லீம் அங்காரகனுக்கு அருள் அம்மையே போற்றி
17. ஓம் க்லீம் நீலோத்பலம் நயந்த நிர்மலா போற்றி
18. ஓம் க்லீம் முத்திக்கு வித்தே முழுமதி போற்றி
19. ஓம் க்லீம் நித்திய திருவடி நீங்காய் போற்றி
20. ஓம் க்லீம் நிலமளந்தான் நல்லுறவே போற்றி
21. ஓம் க்லீம் தீர்க சுமங்கலித் தாயே போற்றி

ஸ்ரீஜேஷ்டாதேவி பூவாளுர்

22. ஓம் க்லீம் வரம்பிலா வரமருள் வனிதா போற்றி
23. ஓம் க்லீம் உள்ளம் உவக்கும் உண்மை போற்றி
24. ஓம் க்லீம் துன்பத்திடை துணை வரும் தோணி போற்றி
25. ஓம் க்லீம் அறிதுயிலான அருமருந்தே போற்றி
26. ஓம் க்லீம் வழித் துணை நீயே தோளா மணியே போற்றி
27. ஓம் க்லீம் ஆனந்த பைரவி அமுதே போற்றி
28. ஓம் க்லீம் ஆணி பொன்னம்பலத்து அற்புதமே போற்றி
29. ஓம் க்லீம் சுந்தர வடிவழகி சூலினி போற்றி
30. ஓம் க்லீம் சாட்சியானவளே சத்தியமே போற்றி
31. ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
32. ஓம் க்லீம் தன்னிலை மறைக்கும் தயாநிதி போற்றி
33. ஓம் க்லீம் என்னிலை எனக்கருள் எந்தாய் போற்றி
34. ஓம் க்லீம் எண்ணம் வண்ணமாக்கும் ஏந்திழை போற்றி
35. ஓம் க்லீம் சித்சபையின் நர்த்தனமே சிந்தாமணி போற்றி
36. ஓம் க்லீம் குருவருள் திருவருள் நினதருள் போற்றி

நமது பூமியில் உள்ள தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தேவ லோகங்களிலும் சரஸ்வதியின் அருளால் தோன்றிய பல்லாயிரக் கணக்கான மொழிகள் உண்டு. அது போல சனீஸ்வர லோகத்திற்கு உரித்தான தேவமொழியே சுஜனி என்னும் மொழியாகும். யாராக இருந்தாலும் தமது தாய் மொழியிலேயே உரையாடுவதால் தங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளியிடலாம் என்ற கருத்தை ஒட்டி சனீஸ்வர பகவானும் ஸ்ரீஜேஷ்டா தேவியை தன்னுடைய தேவ அன்னையாகக் கருதி அந்த மாதாவைத் தன்னுடைய லோகத்திற்கு உரித்தான சுஜனி என்ற தேவமொழியில் துதி செய்து வணங்கினார்.

ஸ்ரீஜேஷ்டாதேவி வாலிகண்டபுரம்

சுஜனி மொழியில் அமைந்த துதியை கலியுக மக்களும் உணர்ந்து பயன்பெறுவதாற்காக திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதா தப சித்த பிரான் அந்த சனீஸ்வர துதியின் தத்துவத்தை தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள். மிகவும் சக்தி வாய்ந்த இத்துதிகளின் ஆழ்ந்த உட்பொருளை உணர்ந்து கொள்ள குறைந்தது 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பது சித்தர்கள் கருத்து.

இருப்பினும் மூன்று துதிகளின் மேலோட்டமான பொருளை மட்டும் இங்கு அளித்துள்ளோம். இதன் மூலம் அனைத்து துதிகளின் மகத்துவத்தையும் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து ஸ்ரீஜேஷ்டாதேவியை துதித்து, வணங்கி பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீஜேஷ்டாதேவி செம்பொனார்கோவில்

ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி

ஐந்து அட்சரங்களின் சக்தியாக விளங்கும் நாதனான ஆதிசிவன் அருளால் தோன்றிய ஐந்து எழுத்து நாமம் கொண்ட சதாதபஸ் என்னும் அடியேன் ஐந்து வண்ணமாய் உலகெங்கும் விளங்கும் மக்கள் ஐந்து விதமாய் துலங்கும் அனைத்து சுக போகங்களையும் பெற்று வாழ ஐந்து கரங்களுடன் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கி ஐந்து எழுத்து தேவியின் துதியை சமர்ப்பிக்கிறேன் என்பது இத்துதியின் மேலோட்டமான பொருளாகும்.

உலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் சிவப்பு, கருப்பு போன்ற ஐந்து வண்ணம் உடையவர்களாய்ப் பிரிக்கலாம். இவ்வாறு ஐந்து வண்ணம் உடைய மக்களுக்கும் அருள்பாலிப்பதால் திருச்சி உறையூரில் அருள்புரியும் பெருமான் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்தால் துதிக்கப்படுகிறார். உலகத்தில் எந்த வண்ணம் உடைய மனிதர்கள் எந்த இடத்திலிருந்து எந்த மொழியில் இறைவனைத் துதித்தாலும் அவர்கள் பிரார்த்தனை உறையும் இடமே உறையூர் என்பதாகும்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

மனிதப் பிறவி எடுத்த ஓர் உயிர் 32 விதமான இன்பங்களையும்  சுக போகங்களையும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவித போகங்களையும் ஒரு மனிதன் அனுபவித்தால்தான் அவன் முக்தி பெற்று அடுத்த ஜீவ நிலைக்கு உயர முடியும். இவ்வாறு 32 விதமான இன்பங்களை மக்கள் அனுபவிப்பதற்காகவே நமது முன்னோர்கள் 32 விதமான அறங்களைப் போதித்து அதைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தியும் வந்தார்கள்.

கலியுகத்தில் அத்தகைய 32 அறங்களையும் நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதால் ஸ்ரீஅகத்திய பெருமான் பெருங்கருணை கொண்டு 32 தேவாரத் துதிகளை அருளியுள்ளார்கள். இத்துதிகளைத் தொடர்ந்து ஓதி வந்தால் இறைவன் அருளால் 32 விதமான அறங்களை ஆற்றிய பலன்களையும் நாளடைவில் பெறமுடியும். (3+2=5 என்பதால் 32 அறங்களும் ஐந்தாய் விளங்கும் என்பதன் பொருள் இதுவே,)

ஐந்து எழுத்து தேவி என்பது ஸ்ரீஜேஷ்டாதேவியைக் குறிக்கும் நாமம் ஆகும். ஸ்ரீஜேஷ்டாதேவியை மூத்த திருமகள் என்று துதித்து வணங்குவதல் மரபு. ராமரை பெருமாள் என்றும் லட்சுமண மூர்த்தியை இளைய பெருமாள் என்றும் அழைப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே.

ஸ்ரீஜேஷ்டாதேவி உய்யக்கொண்டான்மலை

எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் கிழக்கு திக்கு நோக்கி நின்று ஆரம்பித்தல் நலம் என்ற வழக்கத்தை ஒட்டி எண் கணித சூத்திரப்படி ”ஐங்கரன் அவணியாய்” என்ற பத்து எழுத்துக்களும் கிழக்கு திக்கைச் சுட்டுகின்றன. மேலும், எட்டு திக்குகளுடன், ஆகாயம், பாதாளம் என்ற திக்குகளும் சேர்ந்து திக்கு சக்திகள் பத்தாக அமைவதால் ஸ்ரீஜேஷ்டா தேவியின் இம்முதல் துதி திக்கு தேவதா வழிபாடாகவும் மலரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இத்துதியில் உள்ள சக்தியை மக்களுக்கு அளிப்பதற்காக ஸ்ரீசதாதப சித்த பிரான் தன்னுடைய அருந்தவ சக்திகளை ”க்லீம், போற்றி” என்ற அட்சரங்களில் பதித்து வைத்துள்ளார். மேலும், இந்த துதிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாய் இருப்பதால் இவற்றை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி விடாமல் இருப்பதற்காக இத்துதிகளை ”ஓம்” என்ற அட்சர பாதுகாப்புப் பெட்டகத்தில் பொலிந்து வைத்துள்ளார்.

இம்முதல் துதியில் உள்ள அட்சரங்கள் 18. அதாவது 1+8=9. 9 என்ற எண் விநாயகப் பெருமானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் உரியதாக இருப்பதால் இம்முதல் துதியே மக்களுக்கு ஆதி, அந்தமாய் அனைத்து நலன்களையும் நல்க வல்ல அற்புதமான மகத்துவத்துடன் விளங்குகிறது. மேலும் எண் 9 முழுமையையும் பூர்ணத்துவத்தையும் குறிக்கும்.

ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி

பொதுவாக, மகா விஷ்ணு நெற்றியில் திருநாமத்துடனும், சிவபெருமான் திருநீற்றுப் பட்டையுடனும் திகழ்வார்கள் அல்லவா? ஆனால், குறித்த விசேஷ தினங்களில் இருவரும் தங்கள் நெற்றித் திலகங்களை மாற்றிக் கொள்வதுண்டு.

உதாரணமாக, வைகுண்ட ஏகாதசி திருநாளன்று சிவபெருமான் நெற்றிக்கு அழகான திருமண் தரித்து நாம அலங்காரத்துடன் சென்ற விஷ்ணு மூர்த்தியை வைகுண்டத்தில் தரிசித்து மகிழ்வார். அதே போல மகா சிவராத்திரி அன்று லட்சமி தேவி பெருமாளுக்கு திருநீற்றை நீரில் குழைத்து இட அந்த அற்புதமான விபூதி அலங்காரத்துடன் திருக்கைலாயம் சென்று சிவபெருமானை தரிசித்து மகிழ்வார்.

எனவே இறை மூர்த்திகளிடம் எந்த பேதமும் கிடையாது. இதை உணர்ந்தாவது சிவ, வைஷ்ணவ பக்தர்கள் அந்தந்த மூர்த்திகளுக்கு உரித்தான விசேஷ பூஜை தினங்களில் குறித்த நெற்றித் திலகங்களை அணிந்து வழிபாடுகளை இயற்றுவதால் தங்கள் பக்தியை எளிதாக பெருக்கிக் கொள்ள முடியும்.

நெற்றித் திலகம் என்பது இறை மூர்த்திகளுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும் நெற்றித் திலகம் இன்றியமையாததே. கணவன்மார்கள் தினமுமோ அல்லது வெள்ளிக் கிழமைகளிலாவது தங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் நெற்றி, முன் வகிடு, திருமாங்கல்யம் இவற்றில் தூய்மையான குங்குமத்தால் பொட்டு வைத்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் பெண்களின் சுமங்கலித்துவ சக்திகள் விருத்தியாகி அது கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுளையும் லட்சுமி கடாட்ச சக்திகளையும் அளிக்கும்.

ஸ்ரீஜேஷ்டாதேவி திருவானைக்கோவில்

அதே போல மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்கள் வெளியே செல்லும்போது இறைவனை வேண்டி கணவன்மார்களின் நெற்றியில் குங்குமத்தால் திலகம் இட  வேண்டும். இது கணவன்மார்கள் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் இடர்களை, தடங்கல்களை நீக்கி அவர்களுக்கு வெற்றியை அளிக்கும். அதனால் இத்திலகம் வெற்றித் திலகம் என்றழைக்கப்படுகிறது.

சப்த ரிஷிகள் ஒரு முறை ஸ்ரீஅகத்திய பெருமானை அவருடைய காரியங்களில் ஏற்படும் தொடர்ந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்று கேட்டபோது அப்போது அவர், ”அடியேனுடைய தர்ம பத்தினி லோபாமாதா அடியேன் வெளியே செல்லும்போதெல்லாம் அடியேனுக்கு வெற்றித் திலகமிட்டு எம்பெருமானை பிரார்த்தித்துதான் விடை கொடுப்பாள். அதுவே அடியேன் ஆற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றி வாகை சூட உதவி புரிந்தது,” என்று பணிவுடன் பதிலளித்தாராம்.

எப்போதும் வெற்றியையே நல்கும் வர சக்திகளை அகத்திய மாமுனி பெற்றிருந்த காரணத்தால்தான் அவர் ஸ்ரீராமருக்கே ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஜெயராமனாக ராவணனை வெற்றி கொள்ளச் செய்தார்.

அவ்வாறு கணவன்மார்கள் மனைவிமார்களுக்கு சுமங்கலித் திலகம் இடும்போதும், மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு வெற்றித் திலகம் இடும்போதும்
இறை நாமம் திருநாமம்
திருநாமம் ஒரு நாமம்
ஒரு நாமம் நாமபுரீசா நின் திருநாமமே
என்று ஸ்ரீநாமபுரீசரை தியானித்து திலகம் இடுதல் நலம். ஸ்ரீநாமபுரீசர் திருத்தலம் புதுக்கோட்டை பட்டுக் கோட்டை சாலையில் ஆலங்குடியில் அமைந்துள்ளது.
இவ்வாறு தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஸ்ரீஜேஷ்டா தேவி தன் உத்தம கணவரான உத்தாதலக மகரிஷிக்கு நெற்றித் திலகம் இடுவது வழக்கம். நாம் காலையில் எழுந்து கரதரிசனம் செய்யும்போது உத்தாதலக மகரிஷியை தியானித்து வணங்கும்போது ஸ்ரீஜேஷ்டாதேவியின் சுமங்கலித்துவ சக்திகளும், உத்தாதலக மகரிஷியின் தபோ பல சக்திகளும், சாயா தேவி சூரிய பகவானின் பாஸ்கர சக்திகளும், நவ கிரக சக்திகளும் நமது நெற்றியில் பதிக்கப்படுகின்றன.

ஸ்ரீஜேஷ்டாதேவி பெருநகர்

நீங்கள் கர தரிசனம் செய்யும்போது உங்களின் விரல் அமைப்பைக் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். உங்களது இடது சூரிய விரல் (மோதிர விரல்) நுனி, இடது புத விரல் நுனி (சுண்டு விரல்), வலது புத விரல் நுனி, வலது சூரிய விரல் நுனி இவைகள் இணைந்து நாமத்தின் வடிவத்தை உருவாக்கும். இந்த நாமத்தின் வழியே வரும் பாஸ்கர கிரண சக்திகளை உங்கள் நெற்றியில் ஆக்ஞா சக்கரத்தில் பதிக்கும் தெய்வீகத் திருப்பணியை மேற்கொள்ளும் தேவியே ஸ்ரீஜேஷ்டாதேவி ஆவாள்.
அந்த அற்புத திருப்பணியையே நாம் ”நாமம் பதிக்கும் நல்லாள்” என்று துதித்து ஆராதிக்கிறோம்.

சில கணவன்மார்கள் தங்கள் மனைவியை அழைக்கும்போது அவர்களின் பெயரைச் சுருக்கி அழைப்பது வழக்கம். இது மங்களகரமான பெயராக அமைவது அவசியம். உதாரணமாக, ராமலட்சுமி என்ற தெய்வீக நாமத்தை ரம்மி, லச்சு என்று அழைப்பதைத் தவிர்தது லட்சுமி என்றோ, தேவி என்றோ அழைத்தல் நலம். பொதுவாக, மனைவிமார்களை நாரிமணி, நல்லாள், தேனம்மை என்று இனிமையாக அழைப்பதால் லட்சுமி கடாட்ச சக்திகள் பெருகி குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.

ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
கும்பகோணம் அருகே உள்ள தேரழுந்தூர் என்னும் ஊரில் சுந்தரன் என்ற பெயருடைய ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி அழகான அங்க லட்சணங்கள் வாய்க்கப் பெற்ற அவன் தன்னுடைய குலத் தொழிலான மரமேறும் வேலையைச் செய்து வந்தான் அக்காலத்தில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு யாரும் பணம் தருவது கிடையாது. பணம் என்பதே புழக்கத்தில் இல்லாத காலம்.

ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்தால் ஒரு மரத்திற்கு மூன்று தேங்காய்களைக் கூலியாகத் தருவார்கள். இவ்வாறு தினந்தோறும் கூலியாகக் கிடைத்த தேங்காய்களில் ஒரு மரத்தில் கிடைத்த மூன்று தேங்காய்களை மட்டும் தன்னுடைய உணவாக எடுத்துக் கொண்டு எஞ்சிய தேங்காய்களை உடைத்து காய வைத்து அந்த காய்களிலிருந்து எண்ணெய் ஆட்டி, அவ்வாறு கிடைத்த தேங்காய் எண்ணையை வைத்து திருக்கோயில்களில் ஆயிரக் கணக்கான அகல் விளக்கு தீபங்களை ஏற்றி தீப சேவை செய்து வந்தான் சுந்தரம்.

ஸ்ரீநாமபுரீஸ்வரர் திருத்தலம்
ஆலங்குடி

பொதுவாக கோயில்களில் தீபம் ஏற்றி வந்தால், அதிலும் சிறப்பாக அர்த்த நாரீஸ்வர மூர்த்திக்கு பஞ்சமி திதிகளில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் குடும்ப ஒற்றுமை பெருகும். தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்கும். இவ்வாறு சுந்தரன் ஏற்றி வந்த அகல் விளக்கு தீபங்களால் அவனுடைய காலத்தில் குடும்பத் தகராறு என்பதே கேள்விப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்தது.

திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் சுந்தரம் ஆற்றிய தொண்டு அவ்வூர் மக்களை மட்டும் அல்லாது அக்கம் பக்கம் ஊர்களில் உள்ள தம்பதிகளையும் கவர்ந்தது. பல தம்பதிகளும் சுந்தரனை நாடி தங்கள் பிரச்னைக்கு தீர்வு அளிக்க வேண்டினர். அவ்வாறு தன்னிடம் அடைக்கலம் அடைந்த தம்பதிகளுக்கு இறைவனை வேண்டி மூன்று  ஆழாக்கு தேங்காய் எண்ணெயை அளித்து அவரவர் ஊரில் உள்ள திருக்கோயில்களில் தீபம் ஏற்றுமாறு பணித்தான்.

சுந்தரம் அளித்த தேங்காய் எண்ணெயால் தீபம் ஏற்றிய தம்பதிகள் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை உணர்ந்தது மட்டும் அல்லாமல் குழந்தைச் செல்வம் போன்ற செல்வப் பெருக்கையும், நோயற்ற ஆரோக்கிய வாழ்வையும் அடைந்தனர்.

தேங்காய் மட்டையை உரித்து அதிலிருந்து பெறும் நாரையும் சுந்தரம் பாதுகாத்து அதைக் கொண்டு கயிறு திரித்து திருக் கோயில் தேர்களை இழுக்க அற்புதமான வடக்கயிறுகளையும் தயாரித்துக் கொடுத்தான்.

திருக்கோயில்களில் தேர் இழுப்பதை திருத்தேர் வடம் பிடித்தல் என்றுதான் அக்காலத்தில் அழைப்பார்கள். அதாவது இறைவன் பவனி வரும் தேரை யாரும் இழுக்க வேண்டியது இல்லை. தேர் வடத்தைப் பிடித்தால் போதும் அதுவே இறைவன் அருளால் வீதிகளில் வலம் வரும் என்பதே இதன் பொருள்.

தேர் திருவிழாக்கள் நடக்கும்போது பக்தர்கள் குறித்த திருத்தலத்தில் கூடி தேர் வடத்தைப் பிடித்துக் கொண்டு இறை நாமங்களை, கீர்த்தனங்களை ஓதியவாறே நின்று கொண்டிருப்பார்கள். நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்யங்களையும் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

யாரும் தேரை இழுக்க முயற்சி செய்வது கிடையாது. இறைவன் விரும்பிய குறித்த முகூர்த்த நேரம் வந்தவுடன் தேர் தானாக நகர ஆரம்பிக்கும். அவ்வாறு தேர் நகர்வதற்கு எத்தனை மணி நேரம் ஆனாலும் அவர்கள் தேர் வடத்தைத் தொட்டவாறு இறை நாமத்தைக் கூறியவாறே நின்று கொண்டிருப்பார்கள்.

ஸ்ரீஜேஷ்டாதேவி திருக்கொண்டீச்சரம்

தேர் வடம் மிகவும் தெய்வீக சக்தியை உடையது. தேரில் எழுந்தருளிய இறை மூர்த்தியை தரிசனம் செய்த அதே பலனை தேர் வடத்தை தரிசனம் செய்தாலும் பெறலாம் என்பது உண்மையே. இன்றும் பல பக்தர்கள் இந்த உண்மையை செயலில் நிறைவேற்றி நன்மை அடைகிறார்கள்.

குறிப்பாக, முதுகுத் தண்டில் ஏற்படும் நோய்களுக்கு தேர் வடக்கயிறு அருமருந்தாக அமையும். திருத்தலங்களில் தேர் வடத்தைத் தொட்டவாறு ஆதித்ய ஹ்ருதய துதியை ஓதி வந்தால் எத்தகைய கடுமையான முதுகுத் தண்டு நோய்களுக்கும் நிவாரண வழி முறைகள் கிட்டும்.

தற்காலத்தில் இறை நம்பிக்கை குறைந்து போய் மக்கள் இழுத்தால்தான் தேர் ஓடும் என்ற கருத்து பலம் பெற்று விட்டதால் பல திருக்கோயில்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி தேரிழுப்பது மட்டும் அல்லாமல் புல்டோசர் போன்ற இயந்திரங்களையும் தேரிழுக்க பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

சுந்தரத்தின் தன்னலமற்ற சேவையால் எவரும் தேரை இழுக்காமல் இறைவன் தானே விரும்பி தேர் வலம் வந்த காட்சி அனைவரையும் பரவசப் படுத்தியது. எனவே பாரத தேசம் எங்கும் சுந்தரத்தின் புகழ் பெருகி பல தூர பிரதேசங்களில் உள்ள ஆலயங்களுக்கும் தேவையான தேர் வடத்தை சுந்தரமே செய்து தரும்படி இறை அடியார்கள் கேட்டுக் கொண்டனர்.

இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அற்புத இறை சேவை ஆற்றிய சுந்தரம் தன்னுடைய மானிட உடலை உகுக்க வேண்டிய தருணம் வந்தது. உத்தம இறை அடியார்களின் உயிரை எம தூதர்கள் தீண்டுவது கிடையாது. உயர்ந்த ஜீவன்களின் உயிரை எம தர்ம ராஜாவே நேரில் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற இறை நியதி இருப்பதால், அரிய ஆன்மீகத் திருப்பணி ஆற்றிய சுந்தரத்தை உரிய இடத்தில் சேர்ப்பதற்காக எம தர்ம ராஜா தேரழுந்தூர் திருத்தலத்தை அடைந்து நறுமணம் வீசும் புஷ்ப விமானத்தில்  சுந்தரத்தை ஏற்றி பிரம்ம லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பொதுவாக, நூறு கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகத் திருப்பணிகளை ஆற்றியவர்களுக்கு இந்திர பதவி அளிக்க வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால், சுந்தரமோ ஆயிரக் கணக்கான திருக்கோயில்களுக்கு அற்புத திருப்பணிகள் ஆற்றி விட்டதால் சுந்தரத்தின் தெய்வீகத் தகுதியை நிர்ணயிக்கும் பொருட்டு சுந்தரத்தை பிரம்ம லோகம் அழைத்து வந்தார் எம தர்ம ராஜா.

திருமகள் பூவாளுர்

பிரம்மாவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி பணிவுடன் நின்றார் சுந்தரம். பிரம்மா சுந்தரத்தை ஆரத் தழுவிக் கொண்டு, ”சுந்தரா, அற்புதமான தெய்வீக திருப்பணிகள் நீ ஆற்றி உள்ளதால் உன்னை இந்திர பதவியில் அமர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளார்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

சுந்தரம், ”ஐயனே, தங்களின் தேவ வாக்கு அடியேனை பேரானந்தத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த அற்புதமான பிரம்ம லோக திருச்சன்னதியில் தங்களிடம் ஒரு வரம் கேட்க விரும்புகிறேன். அடியேன் இந்திரப் பதவியில் அமர்ந்து தேவ லோகத்தை ஆட்சி செய்யும்போது அதில் எந்த வித தவறும் நேராமல் நேர்மையான நியாயமான ஆட்சியை அமைக்க விரும்புகிறேன். அதற்காக அடியேன் செய்ய வேண்டிய தவ முறையைப் பற்றி அருள வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டார்.
பிரம்ம தேவர் மகிழ்ந்து, ”நல்லது, குழந்தாய். பொதுவாக, இந்திர பதவி கிடைத்ததுமே அதை உடனே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே மானிட ஜீவன்களிடம் மிகுந்திருக்கும். நீயோ அதற்கு விதி விலக்காக இருக்கிறாய். அதுவும் இறைவன் திருவுள்ளமே”, என்றார்.

”நெறி தவறாமல் தர்மம் பிறழாமல் இந்திர லோகத்தை ஆள விரும்பினால் நீ ஜேஷ்டாதேவியை நோக்கி தவம் செய். உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று அருளினார். சுந்தரமும் அவ்வாறு ஸ்ரீஜேஷ்டாதேவியை நோக்கி தவம் இயற்ற பிரம்ம தேவரிடமும் எமதர்ம ராஜாவிடமும் அனுமதி பெற்று பிரம்ம லோகத்திலிருந்து புறப்பட்டார்.

தொடர்ந்து ஒன்பது சதுர் யுகங்கள் தவம் ஆற்றிய பின்னர் சுந்தரத்திற்கு ஸ்ரீஜேஷ்டாதேவியின் தரிசனம் கிட்டியது. அன்னை அருளிய அமுத மொழிகளை சிரம் மேற்கொண்டு தேவ லோகம் அடைந்தார் சுந்தரம்.

மனிதனாக இருந்த சுந்தரத்திற்கு தற்போது சுந்தர வர்ம இந்திரன் என்ற பட்டத்தை சப்த ரிஷிகளின் தலைமை ரிஷியாக விளங்கிய ஸ்ரீஅகத்திய  ரிஷி அளித்து அவரை கௌரவப் படுத்தினார். தேவ லோகத்தில் இந்திரனுக்கு தேவ லோக சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் நிகழ்த்தும் போது சப்த ரிஷிகள் இந்திரனை ஒரு பல்லக்கில் ஏற்றி தேவ லோகத்தை பவனி வந்து பின்னர் வைரம், வைடூரியம் போன்ற தேவ லோக நவரத்தினங்கள் பதித்த அபராஞ்சித தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்த்துவது வழக்கம்.

ஸ்ரீஜேஷ்டாதேவி திருவரங்குளம்

அவ்வழக்கப்படி பல்லக்கை இந்திரன் முன் கொண்டு வந்து வைத்து சப்த ரிஷிகளும் அவர்களின் தலைமைக் குருவுமான ஸ்ரீஅகத்திய மாமுனி சுந்தர வர்ம இந்திரனை பல்லக்கில் அமரும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர வர்ம இந்திரன் ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, ”தேவரீர் அகத்திய மகா பிரபு, தங்களைக் காணவே பல ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய மேன்மை படைத்த தங்கள் திருக்கரங்களின் ஸ்பரிசம் படுவதற்கு கூட இந்த இழியவனுக்குத் தகுதி கிடையாது. அப்படி இருக்கும்போது தாங்கள் பல்லக்கைச் சுமந்து அதில் அடியேன் ஏறி வருவது என்பதை அடியேனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தயவு செய்து அடியேன மன்னித்து விடுங்கள்,” என்று உறுதியாகக் கூறி விட்டார்.

சப்த ரிஷிகளும் ஸ்ரீஅகத்தியரும் சுந்தர வர்ம இந்திரனின் பணிவையும் பக்தியையும் கண்டு பேருவகை எய்தினர். இந்திர லோகம் உண்மையில் பேறு பெற்றது என்று நினைத்து வியந்தனர்.

எத்தனை எத்தனையோ இந்திரர்களை பதவியில் ஏற்றி வைத்த சப்த ரிஷிகள் இப்படி ஒரு பணிவுடைய இந்திரனைப் பார்த்தது கிடையாது. ஒரு முறை ஒரு இந்திரன் ஸ்ரீஅகத்திய முனியை ”சர்ப்ப சர்ப்ப” என்று சொல்லி அவர் பல்லக்கு சுமக்கும்போது காலால் நெண்டி ஸ்ரீஅகத்திய முனியின் சாபத்தைப் பெற்றான்.
மற்றோர் இந்திரனோ கௌதம முனிவரின் உத்தம பத்தினியான அகலிகை மேல் மோகம் கொண்டு அவர் சாபத்தைப் பெற்றான். இவ்வாறு தவறுகள் பல செய்த இந்திரர்களைக் கண்ட தேவ லோகத்தில் உத்தம இந்திரன் ஒருவன் வருகை தந்தது கண்டு தேவ லோகமே பிரமிப்பில் ஆழ்ந்தது.

சப்த ரிஷிகள் தன்னுடைய பல்லக்கத்தைத் தூக்கக் கூடாது என்று உறுதியுடன் கூறியதோடு சுந்தர வர்ம இந்திரன் நின்று விடவில்லை. ஒவ்வொரு சப்த ரிஷியின் பாதங்களிலும், ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஒவ்வொருவரையும் பல்லக்கில் வைத்து தேவ லோகம் முழுவதும் தான் ஒருவனாகவே பல்லக்கில் அவர்கள் அனைவரையும் சுமந்து சென்று அவர்களுக்கு சேவை ஆற்றினார் சுந்தர வர்ம இந்திரன்.

இந்த அற்புதமான தெய்வீக சேவையைப் பாராட்டி மும்மூர்த்திகளுமே தங்கள் பத்தினி தெங்வங்களுடன் எழுந்தருளி சுந்தர வர்ம இந்திரனை மனமார வாழ்த்தினர்.
இப்படி இதுவரை தேவலோகம் கண்டிராத அற்புத இந்திரனாக மாறுவதற்கு உதவி செய்த தேவியே ஸ்ரீஜேஷ்டா தேவி ஆவாள். அன்னை ஜேஷ்டா தேவியின் அறிவுரைப் படிதான் இந்திரன் சப்த ரிஷிகள் பல்லக்கு சுமப்பதை அனுமதிக்காமல் தான் அவர்களைப் பல்லக்கில் சுமந்து சென்று சேவை ஆற்றினான். அதனால் இந்திர லோகத்தில் நிரந்தர பதவியையும் பெற்றான்.

ஸ்ரீஜேஷ்டாதேவி திருகோடிகா

எல்லா மனிதர்களுக்கும் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி என்ற ஒரு அற்புத சக்தி மறைந்துள்ளது. குண்டலினி என்ற இந்த அரும்பெரும் சக்தியை தியானத்தின் மூலம் மேலெழச் செய்தால் அளப்பரிய ஆற்றல்களைப் பெற்றலாம். இவ்வாறு பெறும் அளப்பரிய ஆற்றலை மற்ற ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தியவர்களே மகான்களும் ரிஷிகளும்.

இவ்வாறு குண்டலினி சக்தி உச்சந் தலையில் சஹஸ்ரார சக்கரத்தை அடையும்போது அதை முறைப்படுத்தி உத்தம ஜீவன்கள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைகிறார்கள். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை மனித உடலில் ஏற்கும்போது உடலின் வெப்ப நிலை முச்சுடர் கத அளவிற்கு உயர்கிறது என்பது சித்தர்களின் கணக்கு. முச்சுடர் கதம் என்ற சித்த பரிபாஷை பதத்தை இன்றைய விஞ்ஞான அளவு கோல் கொண்டு கூற வேண்டுமானால் அதை 30,000 டிகிரி சென்டிகிரேட் என்று கூறலாம்.

நிர்விகல்ப சமாதியில் நிலைத்திருக்கும் ஒரு ஜீவனின் உடல் வெப்ப நிலை 30,000 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயரும் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆனால், இதுவே உண்மை. இதுவே சமாதி ரகசியம் ஆகும். ஒரு சிறிய அகல் விளக்கின் தீபம் உடலில் ப,ட்டாலே உடம்பு வெந்து போகிறது என்றால் இத்தகைய கற்பனைக்கு எட்டாத அளவு சூட்டை எப்படி மனித உடல் தாங்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயமே.

ஒரு சாதாரண மனித உடல் இந்த அபரிமிதமான வெப்பத்தை, சூட்டை ஏற்க முடியாது என்பது உண்மை. ஆனால், மனித உடல் முழுவதும் தூய்மை அடையும் போது அது ஒளி உடம்பாக மாறி எந்த அளவு உஷ்ணத்தையும் ஏற்கும் அளவிற்கு தயாராகிறது. மேலும், நிர்விகல்ப சமாதி நிலையை அடையும் அளவிற்கு ஒரு மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது அவன் மறைமுகமாக ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தைப் பெற்றவன் ஆகிறான்.

ஸ்ரீஜேஷ்டாதேவி திருமேற்றளி

அந்நிலையில் ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தால் அந்த ஜீவனின் உடலில் முனிநிழல் என்ற ஒரு குளிர்ச்சி, சீதளத் தன்மை ஏற்படுகிறது. எந்த அளவிற்கு உடல் வெப்பம் அதிகரிக்கிறதோ அந்த உஷ்ண அளவிற்கு, உடல் வெப்பத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இந்த முனி நிழல் என்ற குளிர்ச்சி நிலையும் உடலில் தோன்றும்.
இறைவனின் அனுகிரகத்தை கருணை என்று அழைக்கிறோம். சற்குரு நாதனின் அனுகிரகத்தை குரு பிரசாதம் என்று அழைக்கிறோம். அதுபோல ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரக சக்தியை ”முனி நிழல்” என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். தியாகத்தின் சிகரமாகப் பொலிந்த உத்தாதலக மகரிஷியின் நிழலாக எங்கும் அவரைத் தொடர்ந்து அவர் திருவடிகளில் சதா சர்வ காலமும் பாத பூஜையை நிறைவேற்றி வந்ததால் ஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் என்ற பட்டம் மட்டும் அல்லாது மூத்த சுமங்கலி என்ற உயர்ந்த பட்டத்தையும் கொண்டு விளங்குகிறாள் என்பது பலரும் அறியாத ரகசியம்.

ஸ்ரீஜேஷ்டாதேவி
பசுபதிகோவில் தஞ்சாவூர்

எம்பெருமான் ஈசன் அடிமுடி காணா அழற்பிழம்பு ஜோதியாக விஷ்ணு மூர்த்திக்கும் பிரம்ம தேவருக்கும் காட்சி அளித்தார் அல்லவா? பின்னர் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பூலோக மக்களும் மற்ற ஜீவன்களும் எல்லை இல்லாப் பரம்பொருளான ஈசனை தங்கள் ஊனக் கண்ணால் கண்டு வணங்கும் வண்ணம் மலையாய்க் காட்சி தர இசைந்தார்.

பரம்பொருள் அக்னி பிழம்பாக ஒளிர்ந்தால் அதை யாராலும் காண முடியுமா? எனவே பரம்பொருளின் உஷ்ண சக்தியை யாராவது ஏற்றுக் கொண்டு அக்னியை குளுமை அடையச் செய்தால்தான் தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்று எம்பெருமான் அருளிடவே எல்லையில்லா அண்ணாமலை உஷ்ண சக்தியை தாங்கும் வல்லமை பெற்ற அந்த உத்தமர் யார் என்று பிரபஞ்சம் எங்கும் தேடி அலைந்தனர் தேவர்கள்.

ஸ்ரீஜேஷ்டாதேவி திருவிளையாட்டம்

இறைவனின் ஒரு சிறு துளியாக தோன்றிய சூரியனிடமிருந்து வெளிவரும் ஒளியில் உஷ்ணம், வண்ணம், பிரகாசம், வியாப்தம் போன்ற பல்வேறு குணங்கள் உண்டு என்றால் எம்பெருமானின் அழற்பிழம்பு ஜோதியில் எத்தனை ஆயிரமாயிரம் குணாதிசயங்கள் பொதிந்திருக்கும். அந்த ஜோதியின் உஷ்ணம் அல்லது வெப்பம் என்னும் குணத்தை மட்டும் கிரகிக்கும் உத்தமரைப் பல லோகங்களில் தேவர்கள் தேடி அலைந்த பின்னர் எம்பெருமானின் அழற் பிழம்பு ஜோதியின் வெப்பத்தைத் தாங்கி குளிரச் செய்து அதை பூலோக மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கக் கூடிய தியாகேசன் உத்தாதலக மகரிஷி ஒருவரே என்று தெளிந்து அவரிடம் தஞ்சம் அடைந்தனர்.
தேவர்களின் விருப்பத்தை அறிந்த உத்தாதலக மகரிஷியும் பிரபஞ்சத்தின் நன்மையை உத்தேசித்து அண்ணாமலை ஜோதியின் வெப்ப சக்தியைத் தாங்கி அதற்கு அற்புதமான குளிர்ச்சியை ஊட்டி தியாகச் செம்மலாக மலர்ந்தார். அதனால்தான் அனல் மலையான திருஅண்ணாமலையின் உட்புறம் மிக மிக குளிர்ச்சியாக விளங்குகிறது. இது சித்தர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் ஆகும்.

தியாகத்தால் உன்னத நிலைபெற்ற உத்தாதலக மகரிஷியின் நிழலாக ஸ்ரீஜேஷ்டாதேவி விளங்கும் காரணத்தால் தேவி மனித உடலில் தோன்றும் குண்டலினி சக்திக்கு ஈடு செய்யத் தேவையான சீதள சக்தியை வழங்கி சீதளாம்பிகையாக அருள்பாலிக்கிறாள்.

எனவே, சுந்தர வர்ம இந்திரன் போற்றும் குளிர்ந்த நாமத்தை உடையவள் என்பது இந்த துதியின் மேலோட்டமான பொருளாகும்.
மேற் கூறிய மூன்று துதிகள் மட்டும் அல்லாது அனைத்து துதிகளையும் தினந்தோறும் ஸ்ரீஜேஷ்டாதேவியை தியானத்துடன் ஆத்த விசாரம் செய்து வந்தால்தான் அன்னையின் அருளை ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும்.

காயத்ரீ மந்திரம் (தமிழ் வடிவம்)

ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின்
மேலான ஒளியைத் தியானிப்போமாக.

நிதியே பொருள் யாவர்க்கும் முதலே
பானுவே பொன்செய் பேரொளித் திரளே
கருதி நின்னை வணங்கித் தொழுதேன்
கர்ம வினை தீர காட்டுதி வழியே.

சம்பு நடன நடராஜ துதி

நடராஜப் பெருமானின் திருக்கூத்தை எல்லா இடங்களிலும் கண்டு களிக்கும் பேற்றைப் பெற்ற வியாக்ர பாதரும் பதஞ்சலி முனியும் இந்த அனுகிரகத்தைப் பெற்ற இடமே மீமிசல் கல்யாண ராமர் திருத்தலமாகும். எம்பெருமான் எப்போதும் ராம நாம தாரக மந்திரத்திலேயே லயித்திருப்பதால் ராமர் சிறப்பாக அருளும் தலத்தில் இந்த அனுகிரகத்தை அருளியது பொருத்தம்தானே. மேலும் சீதை பிராட்டி வேண்டிக் கொண்டதன் பேரில் சம்பு நடன அஷ்டக துதியை பதஞ்சலி முனிக்கு அருளிய திருத்தலமும் மீமிசல் திருத்தலமாகும் என்பது பலரும் அறிய வேண்டிய ஆன்மீக இரகசியமாகும்.

ஸ்ரீநடராஜ பெருமான்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீநடராஜ பெருமான்
சங்கரன்கோவில்

சம்பு நடன அஷ்டகம் என்பது கால் இல்லாமல் கொம்பு இல்லாமல் விளங்கும் அற்புத துதியாக இருப்பதால் கால் இல்லாத முடவர்களுக்கு மூன்று கால் சக்கர வாகனங்களையும், கோசாலைகளுக்கு கோதுமை தவிடு, கீரை, வெல்லம் போன்ற உணவு வகைகளை அளித்து பராமரித்து வருவதும் சம்பு நடன அஷ்டக துதியை ஓதிய முழு பலனையும் அளிக்க வல்லதாகும். இதன் பின்னால் அமைந்த ஆன்மீக தாத்பர்யம் சுவையானதாகும்.

நந்தீஸ்வரரும், பிருங்கி முனிவரும் காலும் கொம்பும் இல்லாத பதஞ்சலி முனிவர் எப்படி சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டும் கேட்டும் மகிழ்வார் என்று ஏளனம் செய்யவே காலும் கொம்பும் இல்லாத சம்பு நடன அஷ்டக துதியைப் பாடி நடராஜ பெருமானை மகிழ்வித்தார் அல்லவா ? அதே சமயத்தில் பிருங்கி முனியும், நந்தீஸ்வர மூர்த்தியும் சிவத் தொண்டரான பதஞ்சலி முனிவரை ஏளனம் செய்த தவறுக்குப் பிராயசித்தத்தையும் இத்துதி மூலம் பெற்றுத் தந்தார் பதஞ்சலி முனிவர். எனவே இத்துதியை தெளிவாக உச்சரித்தல் சற்றே கடினம் என்பதால் மூன்று கால் வாகனமும், பசு பராமரிப்பும் மூன்று கால்கள் உள்ள பிருங்கி முனிக்கும், நான்கு கால்களும் கொம்புகளும் உள்ள நந்தீஸ்வர மூர்த்திக்கும் அவர்கள் சிவ அபராதத்திற்கு பிராயசித்தத்தை அளிக்க வல்லது.


















மகான்கள், யோகிகள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கும். பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் நந்தி மூர்த்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையில் நடனமாடி் அனைவருக்கும் திருக்காட்சி அளிக்கிறார் அல்லவா ? எனவே பிரதோஷ வேளையில் கால்களும் கொம்புகளும் இல்லாத சம்பு நடனத் துதியை ஓதி வந்தால் இரண்டு கொம்புகளும் நான்கு கால்களும் உடைய நந்தியின் மேல் எம்பெருமான் ஆடும் ஆனந்த தாண்டவத்தை நம் உள்ளத்திலேயே தரிசனம் செய்யும் அற்புத பாக்கியத்தைப் பெறலாம். இதுவே ஆதிசேஷ அவதாரமான பதஞ்சலி மூர்த்தியின் பிரார்த்தனையும் ஆகும். பர சிதம்பர நடன கோலத்தை உள்ளத்தில் தரிசிப்போமாக.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி

தேவி இன்னுரை

அன்புநிறை அமுதங்களே,

எல்லாம் வல்ல சக்தி ஸ்ரீஅங்காள பரமேசுவரியின் திருவருள் ஆணையின்படி, “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்பதற்கிணங்க தேவஉலக வாழ்வு, தெய்வ உலக வாழ்வு என்ற இரண்டு நிலை உள்ள வாழ்வு மனித குலத்திற்கு தேவி அருளிய திருவருட் கருணையாகும். இவற்றில் தெய்வ உலக வாழ்வு, ஒருவன் சிறந்த பக்தனாகத் தேவி நாமம் பரப்பினால் அதில் கிடைக்கும் பேறாகும். நான், எனது என்ற கர்வம் அற்றவர் தேவஉலக வாழ்விற்கும் எட்டாத மேலான தெய்வ உலக வாழ்வை (வீட்டுலக வாழ்வு) அடைவர். தேவிஉலக வாழ்வு நினைவாலும், சொல்லாலும், செயலாலும் விளக்க முடியாததோர் பரமானந்த நிலை தேவி அருளால் சுயஅனுபவத்தால் மட்டுமே, பக்தன் அனுபவிக்கக் கூடியதோர் உத்தமநிலை ஆகும். இந்நிலை அடைந்தவருக்கு, மீண்டும் பிறப்பு என்பது இல்லை. சான்றோர் எனப்படுவோரிடத்திலும், அவர்களையும் அறியாமலே சுயநலம் என்பது இலைமறை காயாக மிகமிகச் சிறிய அளவிலேனும் மறைந்திருக்கும். ஆனால், ஞானிக்கு இந்நிலை இல்லை. ஞானியை உருவம் வைத்து அறிவது மிகவும் கடினம். பக்திதான் ஞானத்தின் எல்லை. கலியுகத்தில் நாமகீர்த்தனம்தான் பக்தியை வளர்க்கும்.

“வாய் திறந்து பாடினால் வாழவழி காட்டுவாள்” - என்பது உறுதி.

அத்தகைய பெருநிலையை அடைய “ஸ்ரீஅங்காள பரமேசுவரி அந்தாதி" உதவும் என்று தேவி அருளால் அறிந்து, இவ்வந்தாதியினை, ஸ்ரீஅகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி ஸ்ரீஅங்காளபரமேசுவரியின் திருமலர்ப் பாதங்களிலும், அடியேனுள்ளிருந்து இவ்வந்தாதியினை அருளிய சற்குரு லோபாமுத்திரை அகஸ்திய குருதேவருக்கும், பூண்டி சற்குருதேவருக்கும், பிதுர்லோக குருதேவருக்கும், மகரிஷி ராம்ராம் குருதேவருக்கும், ஸ்ரீ-ல-ஸ்ரீநாதமுனி குருதேவருக்கும், தாய் அரவிந்த மாதாவுக்கும், சாக்தபரப்பிரம்ம ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தருக்கும், மற்றுமுள்ள அனைத்துக் கோடி தேவர், சித்தர், யோகியர், முக்தர்கள், கந்தர்வர், முனிகளுக்கும், பதினெண் சித்தர்களுக்கும், பிரம்ம ஞானியர்களின் பாதங்களிலும் சமர்ப்பிக்கின்றேன். குறையிருப்பின் மன்னித்து, அனைவரும் தேவியின் திருநாமத்தைப் பரப்ப வேண்டுகிறேன்.

இந்நூல் யாவரும் பலன்பெறும் வண்ணம் வெளிவருவதற்கு அரும்பெரும் தொண்டாற்றிய ஸ்ரீஅங்காளபரமேசுவரியின் அடிமைகள் பலருக்கும் ஸ்ரீஅங்காள பரமேசுவரி நல்லருள் புரிய வேண்டுகின்றேன்.

ஸ்ரீஅங்காளபரமேசுவரி அடிமை,
வெங்கடராமன்.

ஆனந்த கணபதி காப்பு

முருகனுக்கு மூத்தோனாய் முழுமுதற் சுழியாய் வைத்தென்றும்
பெருகிவளர் சோதியா யெங்கும்பரவி யருளென்னும்
அருகுபுல் சாத்திய ஆனந்த கணபதியருளால் அங்காளம்பிகை அந்தாதி
உருகி யாவருள்ளத்திலுள்ளே ஊடுருவக் கண்டு

நூல்

உதிக்கின்ற திங்கள் உணர்வூட்டும் முகமென் னினைவில்
பதிக்கின்ற நின்பார்வைப் பாலில் பழமும் வீழ்ந்து
மதிக்கின்ற குவளைபோல் பராசக்தியென் பாவம் தீர்த்து
துதிக்கின்ற தூய்மையாக்கும் தூயவளே. 1

தூயவளே துன்பந் தகர்ப்பவளே துணையாயென்றும்
மாயவளே மாணிக்கமே மலைமன்னன் புதல்வியே
தாயவளே தமிழவளே தந்தையாயு மென்றும்
வாய்ப்பவளே வளம்பல வாய்த்திடுவாய். 2

வாய்த்திடுவாய் தாயாயெனக் கென்றும்
சாய்த்திடுவாய் திருவருளமுதந்தா யெனக்கு
வாய்த்திடுவாய் கருணையுளந்தனைக் கண்ணகத்தே
பாய்த்திடுவாய் நின்திருவுளப் பேரொளியே. 3.

பேரொளியே மாயப்பாசத் தொடரெலாம்
தாரொளியே தகர்த்தங்கு தகுதியுடைய வனாய்ப்
போர்த்தங்கு புண்ணியப் புவியதில் பக்குவமாய்
வார்த்திங்கு விட்டினையே விந்தைமிகு நாயகியே. 4.

நாயகியே நான்முகனும் நாரணரும் நமசிவாயருக்குத்
தாயாகியே யொளிவிடும் தனிப்பெருஞ்சுடரே யெனைச்
சேயாக்கியே சித்தம் தெளிவுறச் செய்து செல்வியே
பேயனை யென்றும் பெருமைபட வைத்திட்டாயிங்கு. 5

இங்குளநாள் மட்டுமல்லா தினியான்
எங்குசெல்கினும் நின்னருளால் நின்புகழ்தான்
தங்குமென்று தாரணியில் பரப்பிடும்போது
அங்கெல்லாம் வந்தென்முன் நிற்கும் முக்கண்ணியே. 6

முக்கண்ணியே முனிவரும் தேவரும் மூவரும்
இக்கன்னியாய்த் தோன்றியிங்கு முத்தொழில் செய்திட்டு
தண்ணிலவாய் தன்பத்தியினைப் பரப்பியே பலரிடம்
விண்ணிலவமுதாய் வேழாம்படியில் வீற்றிருப்பவளே. 7

வீற்றிருப்பவளே யீரேழுலகெங்கும் விந்தையாய்
தோற்றியிருப்புவளே தோற்றத்துள்ளிருந்து துலங்குபவளே
போற்றினா யென்னுள்ளத்திலிருந் துன்னேயே யென்மனம்
மாற்றினா யெங்கும்பரம் பொருளான சுந்தரியே. 8

சுந்தரி சுகந்தருஞ் சுயஞ்சோதி சுயம்பிரகாசினி
அந்தரி யகத்தினுள்ளிருந்து மந்திரம் விளக்குபவளே
தந்திரஞ் செய்பவளே தமிழாயெங்குந் தாவியே
இந்தத் தரணியிலாடிடும் அங்காளம்பிகையே. 9

அங்காளம்பிகையாய் அகமதிலாடு மருட்கடலே
செங்காளம்பிகையாய்ச் செகமதிலாடி யிங்கு
கங்கையம் மனாயானந்தக் கூத்திட்டு மாலுக்குத்
தங்கையம்மனாய்த் தரணியகத்தாடும் தாரணியே. 10

தாரணியே தன்தமிழ்ப் பாசாங்குசச்
சீரணியே சிதம்பரத்தாடும் நாயகனுக்குப்
பேரணியே பெருமாட்டியே பேச்சும்பாட்டு மீயவல்ல
நாராயணி நம்பினவருக்கு நலம்பல ஈந்திடும் நாயகியே. 11

நாயகி நாயேனுனை நம்பவைத்திங் காட்டிடும்
தாயாகித் தன்மனத்தே யெனைவைத்து வித்துவளர்செடி பூவுமாக்கிக்
காயாகிக் கனிந்து கற்பகத் தருவாக்கிநின் சேயாக்கும்
மாயா விளையாட்டினை விளம்பத்தா னியலுமோ. 12

இயலுமோ உன்பெருமைதனை யியம்ப விமயத்தரசி
கயலுமென் விழிகாட்டி விளக்கியிச் சிறியனுக்குப்
பயிலுவித்தாய் பக்திதனைப் பராசக்தி பாரெங்குமினித்
துயிலுருமோ யிவ்வுள மோங்காரத் தெளிவே. 13

தெளிவே தென்னாட்டி னின்னமுதே ஞான
நெளிவே நெல்முத்தே நெல்லையப்பருக் கருட்
பொலிவே ஏகாந்தமே யெண்ணிலடங்காத யென்னம்மே
வலிவே ஈந்திடுவாயிப் பாடலென்று மீரேழுலக முலாவிடவே. 14

உலாவிட உன்னருள் பரப்பிடவே பிறந்திங்கு
குலாவிடவே குழந்தையாய் உன்னருட் புனலில்
கலாபமயிலே மயிலைவாழும் கற்பகாம்பிகையே யருட்
பலாபல னீந்திடுவாய் நின்பாதம் பற்றியே. 15

பற்றினேன் இவ்வாக்கை நினைவுதனை யென்றும்
கற்றிலேன் காலன்பற்றா கல்விதனை ஞான
நெற்றியிலே ஆடுகின்ற அங்காளம்பிகையே
வெற்றியே யாவருக்கு மீந்திட்ட யென்தாயே. 16

தாயே தரம்பெற்ற பத்தருக்கு ளெனையென்றும்
சேயாக்கிவிட்டு யெனைச் சிறப்புறச் செய்தாய்
மாயாப் பிறவியிட்டு மனமகிழ வைத்திங்கு நினை
வாயாரப் புகழவைப்பா யென்றென்று மிவ்வையகத்தே. 17

வையகத்தே வாய்திறந்து பாடவைத்தாயே யெனையுன்
கையகத்தே யென்றும் வைத்தாட வேண்டுகின்றேனென்
மெய்யகத்தே யென்று மேவிவிளையாடு மென்னம்மே
தையல் நாயகியே தரணியில் தான்தோன்றி. 18

தான்தோன்றி தரணியில் தந்திடும்நின் புகழ் முன்பே
வான்தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்புகழ்பாட
யான்தோன்றி யென்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும்நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே. 19

பராசக்தியே மூவர்க்கும் முதலே யென்றும்
மாறாசக்தியே சத்தியஞான பீடமே யென்னுள்
தீராசக்தியே தீவினை யகற்றும் தெளிவே
பாராயோ சக்தியே பாரில் யாவரையும் பத்தராக்கி. 20

பத்தராக்கி நின்நாமமே நான்கு வேதமாக்கி யென்றும்
சித்தருக்கு உபதேசித்த சிவசக்திரூபியே யெங்கும்
முத்தருக்கு மூலபீடமே முக்கண்ணியே யென்போன்றோருக்கு ஞானப்
பித்தமே உன்னருள் கூட்டி வந்ததே. 21

சிறந்தவளே சித்தந் தெளிவுறச் செய்பவளே எம்மயமாய்
பிறந்தவளே பிறவிப் பெருங்கடல் நீந்திடவே எம்மோடு
மறந்திடாமல் வந்தெம்மை யாட்கொள்ளு மகா சக்தியே
இறந்திடுதல் வந்தெம்மையாட்கொள்ளு முன்னேநீவரல் வேண்டும். 22

வேண்டுமென நான்கேட்கு முன்னே நீயறிந்து
வேண்டின வெலாந்தந்திடும் அங்காளம்பிகையே நின்னருளால்
தாண்டினேன் தரணிப்பொருளாசையை யென்போல் நின்பத்தருக்கும்
வேண்டியே தந்திட்டால் விந்தை மிகுவாழ்வை விளம்பத்தா னியலுமோ. 23

இயலுமோ உன்னருட் சக்தியைச் செப்புதற்கே யென்றும்
பயிலுகின்றேன் நின்னருளால் நீலியுனைப் பாடவே யிவ்வுடல்
துயிலுருமுன்னே தூக்கியெம்மைக் காத்திடுவாய்
வயலூர்ப் பெருமானை யீன்றெடுத்த வடுவாம்பிகையே. 24

ஈன்றெடுத்த தாயினைக் காட்டினாய் நினைவி லென்றும்
மூன்றெழுத்தோங்காரங் காட்டியே முப்பத்து கோடியினரும்
சான்றதுன் பாதமே சாவாமருந்தளிக்கும் சாந்தியே
போன்றதுன் நாமம்போல் சாந்தமளிக்கு மொருநாம முன்டோ. 25

உண்டோ உனைப்போலுளமுருகி உவந்தளிக்கும் தெய்வமதைக்
கண்டிலனே இப்பாரெங்கும் பரந்துநிற்கும் பராசக்தியே
தொண்டே உனக்கென்றுஞ் செய்திடவே வைத்தாண்டு
கொண்டே யிருப்பா யினியெப் பொழுதுமே. 26

பொழுதென்னு மிரவுபகலா யென்று மேத்தியுன்னைத்
தொழுதென்றுந் துதித்திட்டென் நினைவிலாலம்
விழுதென யென்றும் பற்றியே ஆனந்தக் கண்ணீரால்
அழுதழுதுன்னைத் தொழுதிடக் குறையேது அங்காளம்பிகையே. 27

குறையேது குணக்குன்றே குளிர்மலை வாழுமெம்
பிறைசூடிய பெருமானென்று முன்னன்பெனு மருட்
கரையிலமர்ந்தங்கு மோனத்தவம்புரிய வைத்திட்டு
நிறையருளை நிறைந்தருளும் நீர்மல சுந்தரியே. 28

சுந்தரி சூக்குமச் சுடர்சோதியே மாயா
தந்திரி மனமகிழ்சித்திக்கு வித்துநீ சிந்தை தெளிவூட்டும்
மந்திரி மங்களநாயகி மாமறைதேடிடு மென்றும்
வந்தறிவாய் விளங்கவேண்டு மென்னுள்ளே. 29

என்னுற் சொல்லும் செயலும் நீயேயாகி யெனை
உன்னுளுறைகின்ற உயிர்க் கதிரொளியாக்கித்
தன்னுளிருந்து தாருக்களிக்குந் தாரமுதமே யென்
கண்ணுள் நீயிருக்கு மதிசயத்தை யென்னென்பேன். 30

அதிசயமான வடிவில் வந்தாடும் வளர்சோதியே நினையுன்
பதியே பலகாலம் தவமிருந்து பார்த்திட்டா ரெனக்கு
கதியே நினையன்றி வேறுயாருளா ரெப்பிறப்பிலும் வருமென்
விதியை மாற்றிட மனங்கொண்டாடும் மகாசக்தியே. 31

சூலங்கொண்ட கையொன்று சுற்றியெனைக் காக்க
ஆலமரன்பனுக் கருட்கூட்டு மங்களாம்பிகையே தமிழுக்கொரு
வேலனை யீந்திட்டவேம்புலி நாயகியே யென்மேல்
காலக் கயிறதுவிழுமுன்னே கண்முன்னே வரல்வேண்டும். 32

கண்ணாவோ நின்கருனைக் கெல்லையொன்றுண்டோ
அண்ணாவோ திருவண்ணாமலைக்கு நீயருள் அண்ணாவோ மாதுள
வண்ணாவோ வாய்திறந்து பாட்டியற்று மிவ்வேழைதனை நீயென்றும்
எண்ணாவோ யிருந்திடலு மியலுமோ விமயத்தரசியே. 33

கனியே கனியின்ரசமே கற்கண்டே மலர்ப்
பனியே பணியும்பத்தருக்குப் பாலமுதே பணியாதவர்க்கு மாயத்
துணியே துணிகிழித்தெறியுந் தூயபொருளே யென்றும்
துணிந்துனைப் பணிந்தபின் பணியேன்நின் பக்தரல்லாதவருக்கே.  34

இல்லாதவரு முன்நாமங் கல்லாதாருண்டோ யிவ்வுலகில்
சொல்லாத நாளுண்டோ நின்தோத்திரமே யிப்புவியில் நின்திருக்கோயில்
செல்லாத நாளென்னநாளோ நானறியேன் நாளெல்லாம்
நில்லாதது சென்றாலும் நீயேயெனக்கு வந்தெதுவும் செய்தல் வேண்டும். 35

அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமா யெனக்கேட்கு மங்காளம்பிகையே யென்றும்
எது வெனக்கு நலந்தருமோ அதையேநினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே.  36

அகத்தே யொன்று வைத்தனைத்துயிர் வாழும்
செகத்தே யொன்றுசொல்லி சிறியோர் முன்னேசிரந் தாழ்த்தி
இகத்தே பிறக்கும் பொருள்நாடி யிறவாதென நம்பி
நகத்தே யெடுக்குமழுக்குபோல் யானுள்ளேனே. 37

அழுக்கது அகலவோர் மார்க்கம் கூறென்னன்னையே
முழுக்கது போட்டிடிவ்வுலக வாழ்விற்கு ஞானக்
கூழுக்கழுது வருமென்னைக் கூட்டிக்கொண்டிடு குலதேவி
ஊழுக்கழுதிடாம லென்னுளமதி லாடம்பிகையே. 38

ஆடனைத் தாட்டமும் நீயேயாடு உள்ளக் காமக்
காடழிந்திடவே காளியென்றே யாடென்மனம்
நாடும் நாராயணி நலமிகுவிவ் வேழுலகும்
பாடும்பாடும் பராசக்தியென்றே பாடும். 39

பாடு பலகோடி ஜீவன்களில்பாடு நின்பக்தரோடு
கூடு யென்றுங் கூட்டினுள்ளோடுங் குகைநாயகியே
கேடொன்றுமில்லை நின்நாமங் கேட்டபோதே உன்னருளைத்
தேடு தேடென்றே தேடவைத்தாய் ஞானப் பித்தனாக்கி. 40

பித்தனெனப் பெயர்சூடினான் சுடலை நாயகன் பத்தியால்
கத்தாமலிருப்பேனோ நினைக்காணும் வரைகண்டபின்னென்றும்
சொத்தாய் நீயெனக்கு வேண்டுமென்றே பித்தாயலைகின்றேன்
சித்தாய்ச் சிதம்பரமாய்ச் சின்மயமாய் வீற்றிருப்பவளே. 41

சாதனையென் றொன்றுண்டெனிலது நீயேகுளிர்மலை
நாதனும் நீயிட்டபடி செய்வதே சாதனை யென்றான்திரு
ஆதிமூலனுமாறு முகத்தோனும் மூத்தோனும் நின்நாமமே சாதனை யென்றார்
நாதியுனையன்றி வேறறியாருக்குச் சாதனையும் சாந்தியும் நீயே. 42

இவள் சோதனை செய்யமுனைந்திட்டால் சொல்லத்தானியலுமோ
பவள நிறத்தினள் பாரில்லோர்க்கெல்லாம் பக்திப் பாலூட்டினாள் நின்னருள்
துவளாதென்று மெனையுமனைவரையுங் காக்குமிச்சக்தி
அவள் செய்வதத்தனையுந் திருவிளையாட லென்றியம்புவது நன்றே. 43

இயம்புவதுன் நாமத்தை நின்னடியாரிடையே யென்றும்
சுயம்பு சோதியாய்ச் சுற்றியாவரையுஞ் சுத்திசெய்தெங்கும்
மயங்க வைத்தாய் மகாசக்தியெனும் நாமக்கள்ளையூட்டி யாவரையும்
இயங்க வைத்தாயுன்னருட்சக்தியாலே பலவண்ணமாய். 44

மூவருந்தேட மற்ற முனிவருந்தேட ஆயிரங்கோடி யண்டந்தேட
யாவருந்தேட உடுக்கை சூலமுடனெம்முன் வந்திங்கெமைநீ
பாவலராக்கிப் பாட்டிசைத்துப் பாடியிங்கெமக் கென்றுங்
காவலாகிக் காட்சியாகி நின்றாயே. 45

நின்றா யெம்மனத்து ளென்றுமுனைப் பற்றியெங்கும்
கன்றா யுன்னடிமை கொண்டுநான் பிறமதத்தில்
நன்றாய்ச் சேருவேனோ கனவிலுமில்லையடி தாயே
இன்றா யிக்கணமாயிங் கென்முன் நிற்கவே. 46

என்முன் வாழவழிவகுத்து விட்டாய் வளம்பெரும்
பொன்வாழ்வொன்று காட்டினாய் ஞாலம் புகழ்
உன்வாழ்வொளியென்மீது வீசியே யென்றும்
நின்வாழ்வை யென்வாழ்வாக்கிய நாயகியே. 47

வாழ்வில் தவறேது நின்னருளால் செய்யினும் நாயகியே
தாழ்வுறும் தவறேதும் வேண்டாதடுத்ததை நீதிருத்தி
வீழ்வுறு மெண்ணம் வீணுக்குந்தோன்றல் வேண்டா ஞானக்
கூழுற்றி யெனக்கூட்டும் குலப்பெரும் நாயகியே. 48

குறிப்பறிந் தளிக்குங் கூர்மதியுனக்கன்றி யாருக்குளதோநல்
நெறிப்பண்புதனை யென்றுமென்னுடலுதிரமாக்கி யென்மனப்
பரிதனையடக்கியே யெங்கும் நீயேயாகி யென்னுளடங்கும்
கரியநீலக் காரிகையே கற்பகாம்பிகையே. 49

கரிந்திவ்வுடல் சாம்பலாகிப் பயனற்றுப் போகுமுன் கற்பகத்தருவே யெனை
பரிந்து நீயுமேற்று நின்பாதப் பணிவிடை செய்வித்துனைத்
தெரிந்த பின்னும் சாகும்காரியம் செய்வித்திடாம லென்றும்
சரிந்திவ்வுடல் வீழுமுன்னே சமாதியெனக் கருளே. 50

அகங்காரங் களைந்திட நாமங்கொண்டா யங்காளம்பிகையெனச்
செகத்தேயென்றும் செகதாம்பிகையாய் நின்றவளே யென்றும்
இகபரவாழ்வில் வந்துதவுமினியபெரு நாயகியே உன்கை
நகத்தேயிருந் துதிர்ந்ததுதானே திருமாலுக்குத் தசாவதாரமே. 51

அவதாரம் பலவுருவிலெடுக்கும் நாயகியே யார்
அவதார மெடுத்தாலு முன்னருளால் வந்தவரே முத்தருக்குத்
தவத்தாரமளிக்கும் தமிழ்ப்பூங் பூங்கோதையே யனைத்
தவதாரமு முன்னவதாரமெனத்தெரியும் நாளென்றோ. 52

உன்னருளால் வந்தவரிங்கு பலகோடியே யாவரையும்
தன்னருளால் வந்ததெனக் கூறவைத்தாயே யெங்கும்
இன்னருளத்தனையு மெங்கிருந்தாலுமது
உன்னருளால் வந்ததென இயம்ப வைத்திடாயோ. 53

இவரு யர்ந்தவரென்று பலகூட்டங் கூற
அவரு யர்ந்தவரென்று மற்றோர்கூற அனைவருள்ளும்
எவரு யர்ந்தவரெனக் கேட்கவைத்தனையே யாவரையும்
கவர்ந்திழுக்குங் கருணைதான் உயர்ந்ததெனப் புகட்டிலையோ. 54

புகட்டாத பொருளொன்றுண்டோ யிப்புவிமீதே உன்னருளால்
பகட்டான பொருளுக்கே பலகோடியினரையும் மயங்கவைத்தா யென்றும்
திகட்டாதுன் நாமம்திவ்வியத் திருவே யாவரையு முன்னருள்
நகட்டா திருக்குமோ ஞானவழி நோக்கியே. 55

ஞானவழி நடந்திட நலமிகுநாமம் மேல்
வானவழி பறந்திட சீலமிகுநாம மங்கு
கானவொலி கேட்டிட ஒலிமிகுநாம மவள்பணிக்கு
தானமென யீவதிவ்வுடல் பொருளாவிதானே. 56

உடலதுருவாக்கி யுயிரெனப்புகுந்துள்ளே யுனையடையுமாசைக்
கடலதுவைத்துநீ கப்பலாயாகி கரையதுசேர்க்கவே ஞானத்
திடலதமைத்தாயழியா மெய்ப்பீடத்துள்ளே உனையென்றும் பாடும்
மடலது ஈந்திட்டிட்டாய் மணப் பூங்குயிலே. 57

குயிலே நீகூவியழைத்திடிற் குழந்தை நானாடியழகு
மயிலாய் வந்துநின் பாதம் பற்றியேயென்றும் ஞானப்பாடம்
பயிலவே யிங்குவந்துனை வேண்டவைத்தா யுன்னுடனெனை யழைத்து
கயிலை சென்றங்குவைத்துக் காட்சியாயுன்னோ டாக்கிடுவாய். 58

ஆவிநீதானே என்னுடலென்னும் கட்டைக்குள்ளே
காவியணிந்திட வேண்டுமோ துறவியெனப் பிறரறிய
பாவியெனக்குப் பலநிறஆடைபூட்டினாய் பாசமுடன்நீ
தாவியே நிர்மல ஆடைவேண்டி வந்தெனக் களிக்கவே. 59

ஒன்றுனது நாமமே யென்றுமெனது நாட்டமே
இரண்டுனது அருள்பொருளிவ்வையத்தினையு மளித்தெனக்கு
மூன்றுனது கண்களால் மும்மலம் போக்கியே யுனை
நான்முகனும் நாரணனும் நமசிவாயனும் நலமுறவணங்கக் காண. 60

வணங்கவே வந்துவிட்டேன் வாழ்நாளெல்லாம் பிறர்சொல்லால்
சுணங்கி சோம்பித் திரிதலும்வேண்டா யிவ்வுலகச் சுற்றத்தாரெல்லாம்
பணிந்துனக்குப் பணிசெய்யும் நாள்தனைப்பார்த்தென் பாமாலையை
அணிந்துனக் கென்றும் பார்த்திடுவே னங்காளம்பிகையே. 61

வானமது நீயேயானாய் வளர்சோதி உன்மீதபி
மானமது நீயேயளித்தாய் வளர்மா மதுரைவாழ்
மீனாட்சியானாய் வந்தெனக் கென்றும்திரு
ஞானமது ஈந்தென்னை யுன்னோடு கூட்டினையே. 62

கூட்டியே சென்றென்னை மனங்குளிர வைத்தமுதப்பால்
ஊட்டினையே உளத்தென்று முன்னருட் பெருக்கை
நாட்டினையே நாட்டமுடன் நின்நாமமந்திரத்தை யென்றும்
நோட்டமே யெனக்கு வைத்தாண்டு கொள்ளே. 63

பொருள்தரும் போகந் தரும் மதிமயங்கிப் போகுமுன்னே
அருள்தரு மனைத்துந்தரும் அங்காளம்பிகைதானே
திருவருள்தருந் தினந்தரும் தன்பால் நீங்காநினைவூட்டி யானந்தக்
கருப்பொருளாய் வந்தெனைக் காக்கும் அம்பிகையே. 64

அன்பாலழுதானந்தக் கண்ணீரா லர்ச்சித்தே யென்றும்
உன்பால் தொழுதுன்னைப் பக்தியால் பாட்டிசைத்தே யென்றும்
என்பால் பழுதுபட்டிருக்கும் உளமாசுதனைப் புதுப்பித்
தன்பால்வந்தெனை யணைத்துக் கொள்ளாயோ. 65

அசைவற்ற பொருளும் நீயேயெனங்கமெலாம்
இசையாகி வந்தாடும் வனப்பும் நீயேயெத்
திசையுமுன் நாமம் பரப்பியே உன்னன்புப்
பசையாகி படர்ந்துன்னுடன் வாழவேண்டுமம்மா. 66

குருவாகி யெனக்குநீ வரல்வேண்டு மென்முன்னே
உருவாய் வந்துநின்றருளல் வேண்டுமுன்னொளிக்
கருவாய் வந்திவ்வேழை பிறந்திடல் வேண்டுமென்றுந்
திருவாய்வந்து நிற்குந் திருவெல்லை நாயகியே. 67

வல்லவள் நீயே வியத்தகுயிவ்வுலகி லென்றும்
நல்லவள் நீயேநம்பினோருக்கும் நம்பாதோருக்கும்
மெல்ல நினைவூட்டினையே நின்நாமம்
சொல்லசொல்லச் சுவைக்கொரு யெல்லையுண்டோ. 68

சத்தியம்நின் உடலாகும் சாந்தியே நின்கண்ணாகும் நின்நாமம்
நித்தியங் கூறினோருக்கு நீடுபுகழ்நீயே யுனைவணங்க மனதில்
பத்தியமேதும் வேண்டா பாரில்வளர் நாயகியேயென்று மெனக்கு நல்ல
புத்தியைத்தா புனித வீணையேந்திய சக்தியே. 69

வழிபட வைத்தனையே நின்னை யென்றும் பிறர்மீது
பழிபட யெனைநடத்திடல் வேண்டா வீணாய்
அழிபடும் பொருள்மீது பற்றெனக்கு வைத்தெக் காலத்தும்
இழிவுபட வைத்திடாதே இனியபெரு நாயகியே. 70

வாளுடன் வந்தவடிவழகு நாயகியென் வாக்கினில் நின்று
ஆளுடன் வந்தவருக்கெல்லா முன்நாமங் கூறியவர்
கோளது மாற்றியே குறைதீர்த்திடச் செய்து
நாளெல்லாம் நின்நாமங் கூறும்நிலைதனை யீந்திடாயோ 71

சோமன் நின்னருட்கொண்டான் சூக்குமச்சோதியே நின்
நாமமும்பெரிதெனக் கொண்டு நாரணனும் நலம்பெற்றுக்
காமனைத் தகனஞ் செய்து சிவனுமுயர்
வாமன அவதாரத்தான் தங்கையுனை மணந்தான்தானே. 72

சிவனும் சக்தியுஞ் சேர்ந்து வந்ததுன்னருளால்
அவனுமவளு மவதாரம் பெற்றது அங்காளம்பிகையால்
இவனுமிவளுஞ் சேர்ந்துனைப் பாடவைத்தனேயே யென்றும்
அவனுமுன்னைப் பணியாது சென்றதில்லையே செகப்பெருநாயகியே.  73

ஆசைதனை யிரண்டாக்கி யழியாஅழியுமெனக் கூறியுனைப்
பூசனைச் செய்ய வைத்தனையோ அழியாதுணையடைய வென்றுங்
காசைக் கொடுத்து மனமாசை வளர்த்தல் வேண்டா நின்னருளால்
ஈசனென்பது மீசுவரியென்பது முன்நாமமே. 74

கரும்பு வில்லுங்கைக்கொண்டு காரிகையே என்றுமுனை
விரும்பும் நினைவே நீயளித்திடல் வேண்டுந் துட்டவெண்ணந்
துரும்பளவும் வந்திடல் வேண்டா யென்னுள்ளென்றும் வளர்
அரும்பாகி யனைத்துமாகி அண்டமாகி யென்னன்னை யாகினையே.  75

பூதநாதனுக்குப் புண்ணியப் பொறுப்பளித்தா யிவ்வேழைதனுக்கும்
பூதவுடலகத்தே உன்னினைவுப் பொறுப்பளிப்பா யென்னுள்ளே
நாதவொலி கேட்டுநாளெல்லாம் நின்நினைவு கூட்டவேண்டுந் தமிழ்
வேதவொலி போற்றும் வேதநாயகியே வேதவுமையே. 76

உமையே யாருக்கு மடியேனுன்னருளா லென்றும்
சுமையா யிருந்திடல் வேண்டா யைம்புலனடக்கும்
ஆமையா யிருக்கவைத்தென்னை யுன்னன்புள்ளத் தென்றும்
அமைத்திடுவா யம்பிகை சிலைபோல் அன்பே. 77

அன்பே யெனன்பினிற் புகுந்துமுக்கால முணர்த்தி
இன்பமுமினிமையும் நீயாகி யினிய பத்தருக்குள்
துன்பமேதுமின்றித் துடைத்து நீதூயநிலை யளித்து
அன்பு மறனுமளித்தாளுகின்றனையே. 78

காதலாகிக் கனிந்திவ்வுளங் கதிநீயேயென்று மிவ்வுலகத்தே
சாதலெனும் மாயவாழ்வில் வைத்தென்னை மயக்கிடாதே
பாதயாத்திரியாயென்று முன்கோவிலுக் கெனைவரவழைத்துக்
கீதமா யென்று முலாவிடும் கீதாம்பிகையே. 79

புண்ணியம் யாதுசெய்யவைத்தனை புலம்புகின்றே னுன்னருளால்
பண்ணிய பாவந்துலைத்திடாயோ தூயபெருநாயகியே யென்னுள்
எண்ணியதெலா முன்னருளால் நிறைவேற்றினாய் நீயேயென்றும்
திண்ணிய நெஞ்சந்தந்தென்னைப் புண்ணியஞ் செய்வித்திடாயோ. 80

புண்ணியஞ் செய்துன்னருட் கொண்டு நின்புகழ்பரப்பிக் கடமை
கண்ணியங் கட்டுப்பாடென்பது நின்செயலே யென்வாழ்வில்
நன்னியுன்னை நலமுடன்நாடிவந்தே னுன்னருளால்
மண்ணில் வாழ்நாளெல்லாம் மனமகிழ் நாளாக்குவாய். 81

வந்தேனென் வாழ்நாளெல்லா முனைப்பாடி யென்றும்
தந்தே னெனக்கென் றொன்றுண்டென்றா லத்தனையும்
கந்தவேளே காக்கும்படித் தமிழுக்கீந்த கருணைபோல்
வந்தேன் நாளுமரிய பலசெயலைச் செய்திடும் நாயகியே. 82

மெல்லிய குழல்குரல் கொண்டே கூவியழைத்தேன் குருவாகி
சொல்லிய மந்திரமென்னுள் ஒலிக்கவே யென்றுந்தூய
மல்லிமணம் பரப்பித் தூயதீபமுள்ளே காட்டியென்றும்
அல்லி யங்காளம்பிகையா யாகிவந்தாய் ஞானமுதளிக்கவே. 83

நஞ்சுண்ட ஐயன் நஞ்சுதனைக் கண்டத்திலே நிறுத்தித் தேவருக்கெலாம்
அஞ்சேலெனக் கூறிநின்னன்ப ருய்யும் வண்ணமுயிரூட்டி யனைவருந்
தஞ்சமெனயுனை வைத்துத் தரம்பெருவாழ்வளிக்கும் நின்
மஞ்சளது குங்கும மகிமையை மனமகிழ்ந்து பாடவைத்தனையே. 84

குங்குமந் தந்திடுங் குறைவில்லா வாழ்வுதனை உலகுக்கு
எங்கும் பரப்பியே பாடிட வேண்டும் நின்னருளால்
தங்குமே யென்றும் நினக்குச்செய்யுந்தொண்டே யழியாமல்
இங்கினி வேறோருக்குப் புகழில்லையே உனைப்போலே. 85

திருநீற்றின் மகிமையைத் திருத்தமுடன் கூறயெனக்கியலுமோ
பெருங் காற்றென வந்திடுமெக்குறையும் மடக்கி யொழிக்கும்
வருகாற்றென வந்து வேண்டாதென ஓட்டித் தள்ளி ஞானமூட்டும்
அருட்தென்றலாகி யானந்தக் களிப்பூட்டுந் திருநீறே. 86

பாதமலர் கண்டுநானும் பாசமுடன் பாடியுன்னை தமிழ்
வேதமலர் தூவியே துதித்துன் பாதயிடைப் பத்திச் சர்க்கரை
சாதம்வைத்து சாந்தமெனும் நின்னருட் பழம் படைத்தன்பு
கீதம்பாடியே கீர்த்தனை புரிய வேண்டுமம்மா. 87

தாமரை மலர்ப் பொன்னடிதனைப் பொறுப்புடன் வணங்கி
யாவரையும் யாவையும் செய்யத் தூண்டியென்னை யுன்புனித
பூவறைத்தாள் மீதுபுண்ணியனாய் வைத்தென்றுமுன்
பாவறையும் செயலீந்தனையே ஈகைபெருமாட்டியே. 88

பூவடி பெருமைதனைப் புரிந்துகொள்ளும் நாளென்றோ ஞானக்
காவடிப் பாட்டிசைத்து நின்கணங்களெல்லா மாடக்கண்டு
பால்வடியும் நின்பாசப் புன்னகையுடனிங்கு நீயெழுதும்
நாலடிப் பாடலுக்கு நலமிகு நின்பாதம் பட்டிடவே. 89

பாதநினைவே யெனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காததூரம் ஓடிடவேண்டும் நின்நினைவென்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாதநினைவே வேண்டும்நின்
பாதமேயென் பலபிறவி யழிக்க வந்ததே. 90

பார்வை யொளியால் பகலிரவு செய்துளமாயப்
போர்வை களைந்தெறிய வந்திடாயோ வீணுக்குழைத்தென்
வேர்வை ஒழியப் பாடுகின்றேன் பண்ணிசையே யுன்மீதென்றும்
ஆர்வம் வந்திடப் புனிதப் பார்வை பாய்ச்சுவாயே. 91

நின்புருவமசைந்திடில் நீலகண்டனாடுவா னென்னுள்ளத்தே
அன்புருகொண்ட நாயகியே யாயிரங்கோடி யண்டங்களும்நின்
புன்முறுவலில் வந்ததே புண்ணியமூட்டும் நாயகியேயிங்கு
என்புருவாயிருக்கு மெனையேற்றுக் கொண்டருள்வாயே. 92

புவனங்களாடப் புவியெங்குமாட புலன்களாட யென்
கவனங்களாட வுன்னால் கண்டதத்தனையுமாட யிவனுன்
மவனென்று கொண்டாட மனமகிழ்ந்து நானும் மெத்த
தவமென்ன செய்தேனோ தவமருள் நாயகியே. 93

நுதலதில் அழகொரு பொட்டுங் கண்டேன் ஞானப்
பதிகங் கூறும் மூன்று திருநீற்றுப் பட்டை கண்டேனென்னால்
அதிக மியம்பத்தா னியலுமோ ஞானமுன்மூத்த
துதிக்கை நாதனாற்றான் நவில இயலுமே. 94

வேல்கொண்டளித்தாய் குமரனுக்கே ஞானத்தால்
மேல்கொண்டெழ வைத்தெனக் கமிர்தப் பாலளித்துநின்
கால்தனுக்குத் தொண்டுசெயுங் காலந்தந்துநின்
கோலமெல்லாம் நானாகித் திருநீராயமர் நாளென்றோ. 95

இடுகாட்டிற் சென்றுயெனை யிட்டிடல் வேண்டா ஞானச்
சுடுகாட்டிற் சென்றுசுட்டென்னைப் பசும்பொன்னாக்கு
வடுவாம்பிகையே வந்தென்னை வளர்த்திட்டுன்னருளாற் பாழும்
படுகுழிக்கழுத்தும் நின்பாசமற்றவருடன் சேர்த்திடாதே. 96

அறியாது நின்னருளால் யாதுபிழையும் செய்தல் வேண்டா மதிமயக்கித்
தெரியாமலெதுவுஞ் செய்வித்திடல் வேண்டா யென்றும் நல்ல
நெறியது தவறாமல் நலம்பல நின்னன்பருக்கெலாம் செய்தென்
குறியது நின்திருப்பாதமே யென்றிருக்க வைப்பாயே. 97

அனத்து மழிந்தாலும் நின்னருளா லழியாநல
மனைத்து மளித்து நம்பிக்கையு மளித்துநின்புகழ் மாலையால்
வினையத்தனையுந் தீர்த்து வீடுகொடுத்திடுவாய் யாருக்காவது
தினைத்துளி யளவேனும் நின்பத்தருக்குத் தீர்த்தமளித்தே. 98

ஓடுகின்ற நீருமுன் பெயர்கூறியே யோடியெங்கும்
வாடுகின்ற பயிர்வாழவழிசெய்து நீயெமக்குநின்
வீடுபுகழளித்து நினைவத்தனையும் நீயேயாகி நினை
நாடுகின்றவருக்கு நாமமாம் பராசக்தியே. 99

கல்லையு முருக்கு முன்நாமங் கனிந்தழுதிடில்ஞான
எல்லையுந் தாண்டவைக்கும் நின்நினைவா லென்றுமிருப்போர்
புல்லையும் நெல்லாக்கும் புனிதநிலை பெறுவரே யனைவர்
தொல்லையும் போக்குந் தூயநிலை நின்போலாவாரே. 100

கண்கண்டு குருடராய் குணம்பிரண்டலைதல் வேண்டா
மண்கொடுக்குமாசையதை மனதிலும் வேண்டா அழியும்
பொன்பொருள் கொடுக்குமாசையதை யொழித்துநீ யென்றுமுயர்
பண்கொண்டநின் நாமயிசை யென்றுமென் நினைவில் நிற்கவே. 101

நூல்பயன்

அன்புடன் அண்டங்கோடி யனைத்துங் காக்குமங்காளம்பிகையை
இன்பமுடன்பாடி பணிந்தோருக் கெல்லாந் துன்பம்
என்பதில்லையே துயரெல்லாந் தீர்த்துத் தூய்மையாக்கி
இன்பமுண்டினிமை யுண்டென்று ளமாடுமே.

இப்பாடல்கள் அனைத்தும் தேவியின் மூலமந்திர எழுத்துக்களின் பூரண சக்திதனை நூறு பாடல்களாய்ப் பிரித்து, கடைசிப் பாடலில் கருணையைச் சேர்த்து 'க' என்னும் மூலசக்திதனை விளக்கும் பயனாக அம்மன் அருளால் அமைகின்றன.

1. நல்லெண்ணம் வளர, பாவம் தீர
2. மறந்தவர் ஒன்றுசேர
3. தாய் தந்தையை அடைய

4. மாயை விலக
5. சித்தம் தெளிவுற
6. அருள் சேர
7. யோக நிலை எய்த
8. தவறு வழி செல்லாதிருக்க
9. மந்திர சித்தி பெற
10. தேவி அருள் பெற
11. பாடும் வல்லமை பெற
12. நம்பிக்கை வளர
13. பக்தி வளர
14. நாமம் பரப்ப
15. தூய உள்ளம் பெற
16. நினைத்த காரியம் இடையூறின்றி நடக்க
17. சத்சங்கம் கிடைக்க
18. தியானத்தில் பூரணம் அடைய
19. தான் என்ற அகந்தை ஒழிய
20. தெய்வத் தொண்டு செய்யும் வரம் பெற
21. முக்காலம் உணரும் சக்தி பெற
22. முக்தி பெற
23. பொருளாசை விட
24. மரண பயம் அகல

25. ஞானம் பெற
26. அழியா செல்வமும், வீடுபேறும் பெற
27. பக்தி பரவசம் உண்டாக
28. பேரின்பம் அடைய
29. சித்துக்கள் பெற
30. மாயை அகல
31. விதியையும் வெல்ல
32. வழித்துணையாய் வர
33. மனக்குறை தீர
34. மகாமாயை அகல
35. நினைத்தவுடன் பலன் பெற
36. தாயின் கருணை பெற
37. உள்ளம் தெளிவு பெற
38. தேவியைக் காண
39. காமம் அழிய
40. தேவிஉருவை உள்ளத்தில் என்றும் காண
41. அருட்பெருஞ்ஜோதி காண
42. மனசாந்தி கிடைக்க
43. இக்கட்டான நிலை நீங்க
44. சகலபோக பாக்கியங்கள் அடைய
45. பகைவர்களால் உண்டாகும் பயம் நீங்க

46. எம்மதமும் ஒன்றாய்க் காண
47. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
48. வாழ்க்கையில் தவறினாலும் மீண்டும் தவறு செய்யாதிருக்க
49. நிரந்தரமான மகிழ்ச்சி உண்டாக
50. சமாதிநிலை அடைய
51. உள்ளத்தே ஞானஒளி உண்டாக
52. மனப்பக்குவம் அடைய
53. நிலையான மனசந்தோஷம் உண்டாக
54. அம்பிகை அருள் என்றும் கிடைக்க
55. அரிய பெரிய செயல்களைச் செய்ய
56. கெட்ட நடத்தை உள்ள மகன், மகள் திருந்த
57. வாக்குவன்மையும் செல்வமும் அடைய
58. இறக்கும் தருவாயில் தேவி நினைவு பிரியாதிருக்க
59. இல்லறம் நல்லறமாக
60. கன்னிகைகளுக்கு நல்லவரம் கிடைக்க
61. தேவிக்கு செய்த அபசார தோஷம் தொலைய
62. மரண அவஸ்தை இல்லாது ஒழிய
63. புத்திரபாக்கியம் உண்டாக
64. தனக்குரிய பொருள் தப்பாமல் அடைய
65. ஈவிரக்கம் வளர
66. நடிப்பு, பாட்டு, ஓவியம் முதலிய கலைகளில் திறமைபெற

67. குருவை அடைய

ஒரு சதுர்யுகம் என்பது சுமார் 43,20,000 ஆண்டுகள் கொண்டது. 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம், ஒரு மனுவானவர் ஆட்சி செய்யும் காலம். இத்தகைய 14 மனுக்களின் ஆட்சிக் காலம் சேர்ந்ததே ஒரு கல்பம். இது பிரம்மாவிற்கு ஒரு பகல். இத்தகைய ஒரு பகலும் இரவும் சேர்ந்ததே 365 நாட்களைக் கொண்ட ஒரு பிரம்மாவின் வருட காலத்தைக் கணித்தால் அது எத்தனை கோடி ஆண்டுகள் வரும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த பிரம்ம ஆண்டுகள் நூறு சேர்ந்ததே ஒரு பிரம்மாவின் ஆயுள். இது போல் ஒரு லட்சம் பிரம்மாக்களின் சக்தியைப் பெற்றவரே ஸ்ரீஔர்வ மகரிஷி என்றால் அப்பெருமானின் சக்தியையோ ஆயுளையோ எவராலும் கணக்கிட்டு, அளவிட்டுக் கூற முடியுமா ? இத்தகைய மகரிஷியின் ஆயுளையும், சக்தியையும் கணக்கிட்டுக் கூற வல்லவர் நம் சற்குரு என்றால் நம் சற்குருவின் சக்தியை எப்படி எவராலும் வாய்விட்டுக் கூறத்தான் முடியும் ?

ஒருவரின் சக்தி என்று எதைக் கூறுகிறோம். இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது, “ஒருவர் எத்தனை ஆண்டுகள் தான் என்ற எண்ணம் இன்றி தவமியற்றுகிறாரோ அதையே அவருடைய சக்தியாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம்,” என்றார். அதாவது ஒருவர் நூறு பிரம்ம ஆண்டுகள் தவமியற்றுகிறார் என்றால் அவர் நூறு பிரம்மாக்களின் சக்தியைக் கொண்டவராக ஏற்றுக் கொள்ளப்படுவார். அப்படியானால் ஸ்ரீஔர்வ மகரிஷியின் சக்தியைப் பற்றிக் கூறவல்லவரின் சக்தி எத்தகைய பெருமை உடையதாக இருக்கும்.

கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்டமான சக்தியை உடைய நம் சற்குருவும் பூமியில் அவதரிக்கும்போது புனித பூமியின் தன்மையாக “அவரும்” ஒரு ஆசையுடன்தான் பிறக்கிறார். என்ன ஆசை அதுவோ ? அதுவே, குருவாகி நீ (அங்காளித் தாய்) எனக்கு வர வேண்டும், என்பதே. அந்த ஆசை நிறைவேறியதா என்பதை தம் அடியார்களுக்கு உணர்த்துவதே இந்த அங்காளித் துதியின் மகிமையாகும்.

குருவாகி எனக்கு நீ வர வேண்டும் .. அங்காளி நம் சற்குருவிற்கு ருருவாய் வருகை தர வேண்டும்
என் முன்னே உருவாய் நின்று அருளல் வேண்டும் .. இடியாப்ப சித்த ஈசன் வடிவில் அவள் தோன்றினாள்
உன்னொளிக் கருவாய் வந்து இவ்வேழை பிறந்திடல் வேண்டும் .. கரு என்பது அடிப்படை உயிர் சக்தி. இவ்வுலகில் தோன்றும் ஒவ்வொரு ஒளிப் பிழம்பின் பின்னணயில் பிரகாசிப்பது நம் சற்குருவே
என்றுந் திருவாய் வந்து நிற்கும் திருவெல்லை நாயகியே .. ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்தாலும் அறிந்து கொள்ள முடியாத மகத்துவம் கொண்டது, எல்லை நாயகி என்ற சொற்றொடர். இருப்பினும் இதை ஓரளவே விவரிக்க முயற்சிக்கிறோம்.

ஸ்ரீஔர்வ தட்சிணாமூர்த்தி
தக்கோலம்

ஒரு பத்தடி அகலமுடைய அறையில் ஒரு விளக்கு எரிந்தால் அந்த பத்தடியில் இருக்கும் பொருட்களை மட்டுமே நாம் காண முடியும். அறைக்கு வெளியே வந்து வானில் காயும் பௌர்ணமி நிலவைப் பார்த்தால் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நிலவையும் அதனினும் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களையும் நாம் காண முடியும். புலன்களுக்கு உட்பட்ட இத்தகைய மகத்துவம் ஒரு புறம் இருக்கட்டும். ராமானுஜர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று பெருமாளுடன் தினமும் உரையாடிக் கொண்டிருப்பார். இது பலரும் அறிந்த இரகசியம். ஒரு நாள் அந்தக் கோயிலில் மாலைகள் கட்டி அளிக்கும் பக்தர் ஒருவர் ராமானுஜரிடம், “சுவாமி, அடியேனுக்கு முக்தி எப்போது கிட்டும் என்று தாங்கள் பெருமாளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். ராமானுஜரும் அதற்கு சம்மதித்தார். சுவாமிக்கு தினமும் சாமரம் வீசிக் கொண்டே உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ராமானுஜரும் அன்று இரவு பெருமாளிடம் அந்த பக்தரின் வேண்டுகோளைப் பற்றித் தெரிவித்தபோது பெருமாள் சிரித்துக் கொண்டே, “இன்று இரவு அவன் முக்தி அடைவான்...”, என்றார். ஆனால், இது பற்றி அந்த பக்தரிடம் ராமானுஜரால் தெரிவிக்க முடியவில்லை.

அடுத்த நாள் இரவு சுவாமிக்கு சேவை சாதிக்க சென்ற ராமானுஜர் அந்தக் கோயிலில் மாலைகட்டி சேவை செய்யும் அந்த பக்தன் சுவாமிக்கு சாமரம் வீசிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார். தன்னுடைய சேவையைத் தொடர முடியாத குழப்பத்தில் பெருமாளிடம் தனக்கு எப்போது முக்தி கிட்டும் என்று வினவ பெருமாள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து, “முக்தியா... அது ரொம்ப கஷ்டமான விஷயமாச்சே...இருந்தாலும் நீ என்னுடைய பக்தன் அல்லவா ? உன்னுடைய விருப்பத்தை நான் நிறைவேற்ற வேண்டுமே?” என்று கூறி சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாராம். பின்னர், “ஸ்ரீரங்கத்தில் நம்பியாண்டான் என்று ஒருவன் இருக்கிறான். அவன்தான் உன்னுடைய குரு. அவனைப் போய்ப் பார். அவன் விரும்பினால் நீ முக்தி அடைவாய்...”, என்று கூறி அனுப்பினாராம் பெருமாள். நம் சற்குரு தெரிவித்த இந்த அற்புத தெய்வீக உரையாடலைப் பற்றி ஆத்மவிசாரம் செய்து வந்தால் முக்தி, மோட்சம், குரு, தெய்வம் என்ற அனைத்து தெய்வீக பொக்கிஷங்களையும் அடியார்கள் அள்ளிக் கொள்ளலாம்.

வருணஜீவிக்கும் அருளும்
சற்குரு

பல அடியார்களும், “நாங்கள் சற்குருவை நேரில் பார்க்கவில்லையே, நாங்கள் என்ன செய்வது?” என்று தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு சற்குரு அளிக்கும் விளக்கமே இது. ஒருவர் ஒளியை, வெளிச்சத்தைக் காண முடிந்தால் அது சற்குருவின் ஒளிக் கருவே, அங்காளித் தாயின் ஒளிக் கருணையே, ஒளிப் பிழம்பே, பிரகாசமான வழிகாட்டுதலே!

ஒரு முறை நம் சற்குரு பாண்டிச்சேரியில் தம் அடியார் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாலை நேரம், கொசுக்கள் படையெடுத்து வர ஆரம்பித்து விட்டன. பாண்டிச்சேரி கொசுக்களோ வலிமையும் சக்தியும் நிரம்பியுள்ளவை என்பது நீங்கள் அறிந்ததே. அந்தக் கொசுக்களின் கடி தாங்காமல் நம் சற்குருவுடன் வந்திருந்த அடியார் மற்றவர்களிடம் ஜன்னல், கதவுகளை எல்லாம் சார்த்தி விடுங்கள், டார்டாய்ஸ் (கொசுவத்தி) கொளுத்தி வையுங்கள் என்று கூறி தானும் அந்தப் பணியில் சுறுசுறுப்பாய் கலந்து ஈடுபட்டார். அப்போது அவர் ஒரு அதிசயத்தைக் காண நேர்ந்தது, இல்லை குருவருளால் அந்த நிகழ்ச்சியை அவர் காண முடிந்ததா என்பதை அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை என்பதே உண்மை. கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருந்த அவ்வேளையில் நம் சற்குருவோ அமைதியாக இருந்தது போல் தோன்றியது. அனைவரையும் ‘பதம்’ பார்க்கும் கொசுக்கள் சற்குருவை மட்டும் தீண்டவில்லையா என்ன, என்ற ஆச்சரியத்துடன் நம் சற்குருவை உற்று நோக்கினார் அவர். அப்போதுதான் அந்த ஆச்சரியத்தை அவர் கண்டார். ஆம், ஒரு கொசு சற்குருவின் கையில் அமர்ந்து அவர் கையை நன்றாக உற்சாகத்துடன் கடித்துக் கொண்டிருந்தது. சற்குருவோ அதைவிட உற்சாகத்துடன் அந்த கொசுவிற்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தார், அதாவது தன்னுடைய கையினால் அந்தக் கொசு பறந்து போய் விடாத அளவிற்கு விசிறிக் கொண்டிந்தார். இதுவே அந்த அடியாரை பிரமிக்க வைத்த காட்சி.

ஒரு புறம் ஔர்வ மகரிஷியின் ஆற்றலையும் விளக்கவல்ல சற்குரு, மறுபுறமோ லேசாகத் தட்டினால் உயிரை விடும் கொசு. இரண்டையும் சமமாய்க் காணக் கூடிய திவ்யமான கண்களை நம் சற்குரு பெற்றிருக்கிறார் என்றால் இத்தகைய சற்குருவின் மகிமையை விட உயர்ந்த தெய்வீகத்தை உலகத்தில் நீங்கள் காண முடியுமா, கேள்விப்பட்டதுதான் உண்டா ?

68. வேலை கிடைக்க
69. மேல்படிப்பு வளர
70. வீண்பழி வராமல் காக்க
71. கிரகங்களால் ஏற்படும் துன்பம் அகல
72. திருமணம் நிகழ
73. வேலையில் மேல் பதவி பெற
74. கடவுள் உண்டா இல்லையா என்ற சந்தேகம் அகல
75. கெட்ட நினைவுகள் எண்ணங்கள் மறைய
76. தலைமைப் பதவி பெற
77. அரச பதவி பெற
78. அட்டமாசித்துக்கள் பெற
79. அனைவரையும் மகிழவைக்கும் பொறுமை பெற
80. தன் குழந்தைகள் நலம் பெற
81. கடமை, கண்ணியம், கட்டுப்பாடுஅறிய
82. பக்குவ நிலை அடைய
83. மீண்டும் பிறவா நிலை அடைய
84. சுமங்கலியாய் இருக்க
85. விதிப்படி காதல் நிறைவுபெற
86. நோயற்ற வாழ்வு பெற
87. தேவியை கனவில் காண, தீய கனவு வராமல் இருக்க
88. வேதங்கள் உணர

89. தேவி திருவடி தீட்சை கிடைக்க
90. பலகோடி அசுவமேத யாகங்கள் செய்த பலன் பெற
91. ஆயுதங்களால் உண்டாகும் பயம் அகல
92. அம்பிகையின் திருவுருவுடன் நேரே பேச
93. இல்லத்திலேயே துறவறத்தின் தவவலிவு பெற
94. தடங்கல்கள் வராமலிருக்க
95. சிவனாய் ஆக
96. நன்றி மறந்தவரும் திருந்த
97. பஞ்சபூத நிலையறிய
98. வறுமையென்றும் வராதிருக்க
99. பயிர் செழிப்புடன் வளர
100. தேவியாய் ஆக
101.அகிலாண்டமெங்கும் புகழ்நிலைக்க

ஸ்ரீஅங்காளபரமேசுவரி திருமலரடிசரணம்
திருக்கயிலாயபொதியமுனி திருமலரடிசரணம்

இந்திராக்ஷி கவச மந்திரம்

इन्द्राक्षी स्तोत्रम् :- ॐ अस्य इन्द्राक्षी स्तोतमहामन्त्रस्य शचीपुरन्दर ऋषिः
अनुष्टुप् छन्दः। इन्द्राक्षी देवता । महालक्ष्मिर्बीजम् । भुवनेश्वरी शक्तिः ।
महेश्वरी कीलकम् । इन्द्राक्षी देवी प्रसाद सिर्द्ध्य्थे जपे विनियोगः ।

 

अथ करन्यासः
ॐ इन्द्राक्षी अंगुष्टाभ्यां नमः।
ॐ महालक्ष्मी तर्जनीभ्यां नमः।
ॐ महेश्वरी मध्यमाभ्यां नमः।
ॐ अम्बुजाक्षीं अनामिकाभ्यां नमः।
ॐ कात्यायनीं कनिष्ठकाभ्यां नमः।
ॐ कौमारीं करतलकरपृष्ठाभ्यां नमः।
  अथ अंगन्यास
ॐ इन्द्राक्षी ह्रदयाय नमः।
ॐ महालक्ष्मी शिरसे स्वाहा।
ॐ महेश्वरी शिखायै वषट् ।
ॐ अम्बुजाक्षीं कवचाय हुं ।
ॐ कात्यायनीं नेत्रत्रयाय वौषट् ।
ॐ कौमारीं अस्त्राय फट् ।
।। भू-र्भूवस्सुवरोमिति दिग्बन्धः ।।
।।अथ ध्यानम् ।।
नेत्राणां दशभिश्शतैः परिवृत्यामत्युग्र चर्माम्बरां ।
हेमाभां महतीं विलम्बित शिखा मा मुक्तिकेशान्वितां
  घण्टामण्डित पादपद्य्मयुगलां नागेन्द्रकुम्भस्तनीं ।
इन्द्राक्षी परिचिन्तयामि सततं प्रत्यक्ष सिद्धिप्रदाम् ।।
  इन्द्राक्षीं द्विभुजां देवीं पीतवस्त्रद्वयान्वितां ।
वामहस्ते वज्रधरां दक्षिणेन वरप्रदाम् ।
  इन्द्राक्षीं नौमि युवतीं नानालंकार भूषितां ।
प्रसन्न वदनाम्भोजामप्सरो – गणसेविताम् ।।

 

।। इन्द्र उवाच ।।
इन्द्राक्षी पूर्वतः पातुपातुग्रेय्यां पथेश्वरी ।
कौमारी दक्षिणे पातु नैर्ऋत्यां पातु पार्वती ।।
वाराही पश्चिमे पातु वायव्ये नारसिंह्यपि ।
उदीच्यां कालरात्रिर्मामीसन्यां सर्वशक्तयः ।।
  भैरव्यूर्ध्व सदा पातु पात्वधो वैष्णवी तथा ।
एवं दशादिशो रक्षेत्सर्वांग भुवनेश्वरी ।।
इन्द्राक्षी नाम सा देवी दैवतैः समुदाह्रता ।
गौरी साकम्वरी देवी दुर्गानाम्नीति विश्रुता ।।
  कात्यायनी महादेवी चण्डघण्टा महातपा ।
सावित्री सा च गायत्री ब्राह्मणी ब्रह्मवादिनी ।।
  नारायणी भद्रकाली रुद्राणी कृष्ण पिंघला ।
अग्रिज्वाला रौद्रमुखी कालरात्री तपस्विनी ।।

 

  मेघस्वना सहस्राक्षी विकटांगी जडोदरी ।
महादरी मुक्तकेशी घोररुपा महाबला ।।
  अजिता भद्रदाऽनन्ता रोगहत्री शिवप्रिया ।
शिवदूती काराली च शक्तिश्च परमेश्वरी ।।
  आर्या दक्षायणी चैव गिरिजा मेनकात्मजा ।
महिषासुर संहारी चामुण्डा सप्तमातृका ।।
  सर्वरोगी परस्मनी नारायणी नमोऽस्तुते ।
इन्द्राणी चेन्द्ररुपा च इन्द्रशक्तिः परायणी ।।
वाराही नारसिंही च भीमा भैरव नादिनी।
सदा संमोहिनी देवी सुन्दरी भुवनेश्वरी ।
एकाक्षरी महामायी एकांगी एकनायकी ।।
  कोमल श्यामलारुपी कोटिसूर्यप्रकाशनी ।
श्रुतिः स्मृतिधृतिर्मेधा विद्या लक्ष्मी सरस्वती ।।
  अनन्ता विजयाऽपर्णा मानस्तोकाऽपराजिता ।
भवानी पार्वती दुर्गा हैमवत्यम्बिका जया ।।
  शिवा भवानी रुद्राणी शंक्करार्धशरीरिणी ।
ऐरावत गजारुढा वज्रहस्ता धर्नुधरा ।।
  ऐन्द्री देवी सदाकालं शान्तिमाशु करोतु मे ।
ऐतैर्नाम पदैर्दिव्यैः स्तुता सक्रेण धीमता ।
आयुरारोग्यमैश्वर्यमपमृत्युभयापहं ।
क्षयाऽपस्मारकुष्ठादि तापज्वर निवारणं ।।
  शीतज्वर निवारणं उष्णज्वर निवारणं ।
सन्निज्वर निवारणं सर्वज्वर निवारणं ।
सर्वरोग निवारणं सर्वशत्रु निवारणं ।।

 

महाभय निवारणं मनःक्लेश निवारणं ।
शतमावर्तयेद्यस्तु मुच्यते व्याधि बन्धनात् ।।
  आवर्तन् सहस्रं तु लभते वाच्छितं फळं ।
ऐतत् स्तोत्रं जपन्नेत्यं सर्वव्याधिविनाशनं ।
रणे राजभये चोरे सर्वत्र विजयी भवेतु ।।
  सर्व मंङ्ळ मांङ्गल्ये शिवे सर्वाध साधिके ।
शरण्ये त्रयम्बिके गौरी नारायणी नमोऽतुते ।।
  त्रिपादभस्म् प्रहरणस्रिशिरा रक्तलोचनः ।
स मे प्रीतः सुखम् दद्यात् सर्वामय पतिर्ज्वरः ।।
ज्वरं च ज्वरसारं च ज्वरातीसारमेव च ।
सन्निपात ज्वरं चैव शीतोष्ण ज्वरमेव च ।
  कौबेरन्तं मुखे रौद्रे नन्दिमन्दिमवाह ।
ज्वरं मृत्युभयं घोरं ज्वरं नाशयं मे ज्वर ।
भस्मायुधाय विद्य्महे रक्तनेत्राय धीमहि ।
तन्नो ज्वरः प्रचोदयात् ।।

 

  ज्वरराजाय विद्य्महे त्रिशिरस्काय धीमहि ।
तन्नस्रिपात् प्रचोदयात् ।।
  मृत्योस्तुल्यं त्रिलोकीं ग्रसितु मातिरसान्निस्मृताः
किं नु जिह्वाः किं वा कृष्णांघ्रिपद्य्मद्युतिभि-
रुरुणिता विष्णुपद्याः पदव्यः ।
प्राप्ताः संध्याः स्मरारेः स्वयमतु
नुतिभिस्तिस्र इत्यूह्यमानाः
दिव्यैर्देवा स्रिशूलक्षत-
महिषजुषो रक्तधारा जयन्ति ।।
मातर्मे मधुकैटभग्नि महिषप्राणापहारोद्यमे
हेला निर्मित-धूम्रलोचन-वधे हे चण्डमुण्डार्दिनि ।
निःशेषीकृत – रक्तबीजदनुजे नित्ये निशुम्भापहे
शुम्भध्वंसनि संहराशु दुरितं दुर्गे नमस्तेऽम्बिके ।।
अष्टौ भुजांङगी महिषस्य मर्दिनीं
सशंखचक्रां शरशूलधारिणीं ।
तां दिव्ययोगीं सहजातवेदसीं
दुर्गां सदाऽहं शरणं प्रपद्ये ।।

महिषमस्तक नृतविनोदन-
स्फुटरणन्मणिनूपुरमेखळा ।
जननरक्षणमोक्षनविधायनी
जयतु शुम्भनिशुम्भनिषूदिनी ।।
  ब्रह्माणी कमळेन्दुसौम्यवदना महेश्वरी लीलया
कौमारी रिपुदर्पनाशकरी चक्रायुधा वैष्णवी ।
वाराही घनघोरघर्घरमुखी द्रंष्टी च चक्रयुधा
चामुण्डा गणनाथरुद्रसंहिता रक्षन्तु मां मातरः ।।
उद्धतौ मधुकैटभौ महिषासुरं तु निहत्य तं
धूम्रलोचन- चण्डमुण्डक – रक्तबीजमुखांश्च तान् ।
दुष्ट – शुम्भनिशुम्भमर्दिनी नन्दितामरवन्दिते
विष्टपत्रय – पुष्टिकारिणी भद्रकाली नमोऽस्तुते ।।
  लक्ष्मी – प्रदान – समये नवविद्रुमाभां
विद्या – प्रदान – समये शरदिन्दु शुभ्रां ।
विद्वेषि वर्ग विजयेऽपि तमाल – नीलां
देवीं त्रिलोक – जननीं शरणं प्रपद्ये ।।
।। श्री महादेव्यै नमः ।।
इन्द्राक्षीस्तोत्रं सम्पूर्णम् ।। (श्री मार्कण्डेय पुराणम्)

ஸ்ரீகணேச காப்புத் துதி
'

गणेशपञ्चरत्नम्
मुदाकरात्तमोदकं सदा विमुक्तिसाधकं कलाधरावतंसकं विलासिलोकरक्षकम् ।

ஸ்ரீசக்கரவிநாயகர் பெருநகர்

अनायकैकनायकं विनाशितेभदैत्यकं नताशुभाशुनाशकं नमामि तं विनायकम् ॥१॥

नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम् ।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम् ॥२॥

समस्तलोकशंकरं निरस्तदैत्यकुञ्जरं दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् ।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥३॥

अकिंचनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम् ।
प्रपञ्चनाशभीषणं धनंजयादिभूषणम् कपोलदानवारणं भजे पुराणवारणम् ॥४॥

नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥५॥

महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहं प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम् ।
अरोगतामदोषतां सुसाहितीं सुपुत्रतां समाहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात् ॥६॥

ஸ்ரீஆதிசங்கரர் அருளிய தசசுலோகி
'

न भूमिर्न तोयं न तेजो न वायुः न खं नेन्द्रियं वा न तेषां समूहः ।
अनेकान्तिकत्वात् सुषुप्त्येकसिद्धः तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ १॥

न वर्णा न वर्णाश्रमाचारधर्मा न मे धारणाध्यानयोगादयोऽपि ।
अनात्माश्रयाहंममाध्यासहानात् तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ २॥

न माता पिता वा न देवा न लोका न वेदा न यज्ञा न तीर्थं ब्रुवन्ति ।
सुषुप्तौ निरस्तातिशून्यात्मकत्वात् तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ३॥

न साङ्ख्यं न शैवं न तत्पाञ्चरात्रं न जैनं न मीमांसकादेर्मतं वा ।
विशिष्टानुभूत्या विशुद्धात्मकत्वात् तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ४॥

न चोर्ध्वं न चाधो न चान्तर्न बाह्यं न मध्यं न तिर्यङ् न पूर्वाऽपरा दिक् ।
वियद्व्यापकत्वादखण्डैकरूपः तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ५॥

न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं न कुब्जं न पीनं न ह्रस्वं न दीर्घम् ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात् तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ६॥

न शास्ता न शास्त्रं न शिष्यो न शिक्षा न च त्वं न चाहं न चायं प्रपञ्चः ।
स्वरूपावबोधो विकल्पासहिष्णुः तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ७॥

न जाग्रन् न मे स्वप्नको वा सुषुप्तिः न विश्वो न वा तैजसः प्राज्ञको वा ।
अविद्यात्मकत्वात् त्रयाणां तुरीयः तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ८॥

अपि व्यापकत्वात् हितत्त्वप्रयोगात् स्वतः सिद्धभावादनन्याश्रयत्वात् ।
जगत् तुच्छमेतत् समस्तं तदन्यत् तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम् ॥ ९॥

न चैकं तदन्यद् द्वितीयं कुतः स्यात् न केवलत्वं न चाकेवलत्वम् ।
न शून्यं न चाशून्यमद्वैतकत्वात् कथं सर्ववेदान्तसिद्धं ब्रवीमि ॥ १०॥

ஓம் குருவே சரணம்

தொடரும் தோத்திரங்கள் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam