தெய்வீகத்தில் ஒரு விதி உடைந்தால் அது இன்னொரு விதியைக் காட்டும் !!

அடியார்
கடவுளை அடையும் பாதையில் படிக்கட்டுகளாக அமையும் சரியை, கிரியை போன்ற முறைகளைப் பற்றி பலரும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இது பற்றி தங்களின் விளக்கங்களை அறிய ஆவலாக உள்ளோம், குருதேவா?

சற்குரு
இறைவனை அடைவதே மனிதனின் குறிக்கோள். இந்த உயர்ந்த குறிக்கோளை அடையும் வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைக்க பல மகான்களும், பெரியோர்களும் அவ்வப்போது மக்களிடையே சாதாரண மனிதப் பிறப்பெடுத்து பன்னெடுங் காலமாக முயன்று வருவது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு மகான் கூறும் இறை தத்துவ விளக்கங்கள் மற்றொரு காலத்திற்கோ, மற்றொரு சூழ்நிலையில் உள்ள மக்களுக்கோ குழப்பத்தைக் கொடுக்கலாம். இது மகான்களின் தவறு அல்ல. இது யுக நியதி, தேச பேத அம்சங்களால் அமைவதே. கால, தேச மாறுபாடுகளைப் புரிந்து கொள்பவர்களுக்கு எந்த வித ந்தேகமும், குழப்பங்களும் கிடையாது. மகான்களும், யோகிகளும் காலத்தைக் கடந்த நிலையில் இருப்பதால் அவர்களுக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் குழப்பமோ ஐயப்பாடோ எழுவதில்லை.

உலகிலேயே மிகப் பெரிய பிள்ளையார் யார் தெரியுமா?
திருச்சியில் மலைக்கோட்டை வடிவில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு மூர்த்தியே உலகின் மிகப் பெரிய பிள்ளையார் ஆவார். உச்சி பிள்ளையாரும், மாணிக்க விநாயகரும் இந்தச் சுயம்பு மூர்த்தியின் அம்சங்களே. வியாபாரிகள் தினமும் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கும் முன் மாணிக்க விநாயகரை வலம் வந்து வணங்குவதால் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பர். தரைக் கடை வைத்திருப்பவர், பல மாடிக் கட்டிடம் கொண்ட வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் அருள் புரியும் அண்ணலே மாணிக்க விநாயகர்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நிலைகளும் இவ்வாறே. உங்கள் அனைவரையும் இந்த நான்கு நிலைகளிலுமே ஈடுபடுத்தி எல்லையில்லா பேரின்பத்தை நமது ஆஸ்ரமத்தில் அளித்து வருகிறோம் என்பதே நீங்கள் அறியாத உண்மை. நமது ஆஸ்ரமத்தில் நிகழ்வது என்ன? திருஅண்ணாமலையாரை நம்பி கிரிவலம் வரும் ஆயிரக் கணக்கான அடியார்களுக்கு இறை பிரசாதத்தையும், துõய நீரையும் இறை நாமத்தைக் கூறி பௌர்ணமிதோறும் வழங்கி வருகிறோம். இந்த அன்னதான திருப்பணியில் பங்கு கொள்ளும் அடியார்களுக்கு நீங்கள் கூறும் எல்லா இறை நிலைகளும் எளிதில் கிட்டி விடுகின்றன.

அன்னதானத்திற்காக காய் கறி வாங்குதல், சமையல் அறையை அலம்பி விடுதல், அரிசியை அளந்து போடுதல், பாத்திரங்களை கழுவி வைத்தல் இவை எல்லாம் சரியை பூஜைகளே. அன்னதானத்தை நெருப்பில் அல்லது எரிவாயு அடுப்பில் வைத்து, அதில் தேவையான பதார்த்தங்களைச் சேர்த்து சமைத்தல் கிரியை என்ற கணக்கில் அடங்கும். இவ்வாறு சுத்தமாக இறை அடியார்களால் சமைக்கப்பட்ட உணவை திருஅண்ணாமலையாருக்கும், அங்காளி தேவிக்கும், ரெங்கநாத மூர்த்திக்கும், சகல கோடி தேவதைகளுக்கும், பித்ரு தேவர்களுக்கும் நைவேத்யம் செய்து, இறை கீர்த்தனைகளைப் பாடி, மேள தாளத்துடன் வழிபடுவது யோகமாகும். இவ்வாறு தன்னலமற்ற அடியார்களால் தயார் செய்யப்பட்ட பிரசாதத்தை அண்ணாமலையாரை வலம் வந்து வணங்கும் அடியார்களுக்கு அளித்து, அவர்கள் உண்டு மகிழ்வதை நாம் கண்டு மகிழ்வது ஞானமாக பரிபூரணம் அடைகின்றது.

சரியை, கிரியை என்ற பதங்களுக்குத் தத்துவார்த்தங்களை எடுத்துரைத்தால் கலியுக மனித மனம் அதை ஏற்கும் பக்குவத்தில் இல்லை. இப்போது சொன்ன விளக்கங்கள் உங்களுக்கு எளிதில் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். புரிந்ததைக் காட்டி புரியாத அனுகிரகத்தைக் கொடுப்பதற்காகத்தான் மகான்கள் பூமிக்கு வருகிறார்கள்.

நமக்குத் தெரிந்தது மஞ்சள், சிவப்பு என ஏழு வண்ணங்களே. ஆனால், இந்த ஒவ்வொரு வண்ணமும் ஏழு வண்ணத்தால் உருவானது. எப்படி நிறமில்லாத சூரிய ஒளியைப் பகுத்துப் பார்த்தால் அதில் ஏழு வண்ண நிறமாலை ஏற்படுகிறதோ அது போல சிவப்பு வண்ணத்தைப் பகுத்துப் பார்த்தால் அதிலும் ஏழு வண்ணங்களைக் காணலாம். இது விஞ்ஞானத்தால் அறிய முடியாத மெய்ஞ்ஞானம்.

உதாரணமாக, ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கேட்டால் அவர், ‘ரோஹிணி, சுவாதி‘ என்று ஏதாவது ஒரு நட்சத்திரத்தைக் கூறுவார். உண்மையில் நீங்கள் நினைப்பது போல் ஒரே ஒரு ரோஹிணி நட்சத்திரமோ, ஒரே ஒரு சுவாதி நட்சத்திரம் மட்டுமோ பரவெளியில் பிரகாசிப்பது இல்லை. விண்வெளியில் கோடி கோடி சுவாதி நட்சத்திரங்களும், கோடி கோடி ரோஹிணி நட்சத்திரங்களும், நட்சத்திர மண்டலங்களும் உண்டு. இவற்றை எல்லாம் சொன்னால் மனித மனம் ஏற்காது, ஏற்கவும் முடியாது.

நீங்கள் ஒரு விஷயத்தை எளிதில் ஏற்கும் அளவிற்கு பக்குவப்படவில்லை என்பதால் உங்களுக்கு கிடைக்கக் கூடிய பலனை நாங்கள் மறுப்பது கிடையாது. சுவாதி நட்சத்திர தினத்தன்று ஒரு குறிப்பிட்ட கோயிலில் ஒரு குறிப்பிட்ட பூஜையைச் செய்யத் துõண்டுகிறோம். அப்போது உங்களுக்கு இந்தக் கோடி கோடி சுவாதி நட்சத்திரங்களில் எந்தக் குறிப்பிட்ட நட்சத்திர தேவியின் பலன் தேவைப்படுகிறதோ அது உங்களுக்குக் கிடைக்க அந்தப் பூஜை உதவி செய்யும். இவ்வாறு புரிந்த நட்சத்திரத்தின் பெயரைச் சொல்லி புரியாத நட்சத்திர தேவதைகளின் அனுகிரகங்களை வாங்கித் தருவதும் சற்குருமார்களின் சீரிய பணிகளில் ஒன்று.

அது மட்டுமல்ல. தொலைபேசி எண்களைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் நீங்கள். திருச்சிக்கு தொலைதுõர அழைப்பிற்காக ஒரு குறி எண் கொடுத்திருப்பார்கள். வெளியூரிலிருந்து பேசுபவர்கள் இந்த தொலைதுõரக் குறி எண்ணுடன் திருச்சி எண்ணைச் சேர்த்து அழைத்தால் திருச்சியில் உள்ள குறிப்பிட்ட நபருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும். அதுபோல, ஒவ்வொரு நட்சத்திரத்துடனும் கோடி கோடியான வானியல் நட்சத்திர மண்டலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நட்சத்திரங்களே கோடி கோடியாக இருக்கும்போது அவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள தனித் தனி மண்டலங்களைப் பற்றி நீங்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இவை அனைத்தையும் அறிந்தவர்களே சற்குருமார்கள்.

நாம் உண்ணும் எல்லா உணவு பதார்த்தங்களும் ரசாயண மருந்துகளால் கலப்படம் செய்யப்படுவதால் தற்போதைய மனிதர்கள் நல்ல உடல், மன ஆரோக்யத்தைப் பெற முடியவில்லை. நவீன விஞ்ஞானத்தால் நெருங்க முடியாதவை வண்ணங்கள். அதனால்தான் அந்தந்த தினத்திற்குரிய வண்ண ஆடைகளை அணிந்து வந்தால் அது உடல் ஆரோக்யத்திற்கும் மன ஆரோக்யத்திற்கும் வழி வகுக்கும் என்று சித்தர்கள் வழிகாட்டுகிறார்கள்.

உத்தம சற்குரு ஒருவரே தன்னுடைய சீடர்கள் பலரும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் எந்தக் குறிப்பிட்ட நட்சத்திர மண்டலத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற இரகசியத்தை உணர்ந்தவர் ஆவார். சாதாரண மனிதர்களைப் போல வெறும் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் சற்குருமார்கள் உபாசனை செய்யாது ஒரு ஜீவனின் உண்மையான, ஆதி நட்சத்திர மண்டல தேவதையிடம் பிரார்த்தனை செய்து தன்னிடம் வரும்
ஜீவன் நன்னிலை அடைய சதா சர்வ காலமும் பாடுபடுகிறார்கள்.

ஆறறிவு படைத்த மனிதர்களுக்குத்தான் சற்குருமார்களின் கர்ம பரிபாலனம் என்ற நியதி கிடையாது. ஓரறிவு, இரண்டு அறிவு என எல்லா படித்தரத்திலும் உள்ள உயிர்களுக்காக இறைவனிடம் மன்றாடுபவர்களே மகான்களும் யோகிகளும்.

(தன் எதிரில் உள்ள சில சவுக்குக் (கொம்புகளை) கட்டைகளைச் சுட்டிக் காட்டுகிறார்,)
ஆஸ்ரம கட்டிடப் பணிக்காக இந்தச் சவுக்குக் கட்டைகளை வாங்கினோம். கட்டிடப் பணியில் முட்டுக் கொடுப்பதற்காக வாங்கிய இந்தக் கட்டைகளை அந்தப் பணி நிறைவேறிய பின் நாங்கள் துõக்கி எறிந்து விட வில்லை. கட்டைகளை அறுத்தும், இரண்டு கட்டைகளைச் சேர்த்தும் தேவையான மற்ற வேலைகளுக்கு இவைகளைப் பயன்படுத்திக் கொண்டோம். கட்டிடப் பணி நிறைவேறிய பின் அன்னதான விநியோகத்திற்கு வரிசை ஏற்படுத்தும் பணிக்கு (க்யூ கண்ட்ரோல்) இவற்றைப் பயன்படுத்தி வந்தோம். க்யூ கண்ட்ரோல் செய்ய மரக் கட்டைகளுக்குப் பதிலாக இரும்புக் குழாய்களை அமைத்தபோது இந்தக் கட்டைகளின் பணி நிறைவு அடைந்தது. அப்போதும் இந்தக் கட்டைகளைத் துõக்கி எறிந்து விடவில்லை. எல்வாவற்றையும் சிறு துண்டுகளாக்கி ஆஸ்ரமத்தில் அன்னதான சமையலுக்கு விறகாகப் பயன்படுத்தினோம். ஓரறிவு பெற்ற இந்தச் சவுக்குக் கட்டைகள் கூட தங்களுடைய இறுதி காலம் வரை மற்றவர்களின், இறை அடியார்களின் சேவைக்காகப் பயன்பட்டு, உயர் நிலையை அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறோம். இதை நன்றாக நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள் ஒரு கட்டைக்காக தன் உயிரைக் கொடுக்கும் வழிகாட்டி எலும்பும் சதையும் கொண்டு ஆறறவு படைத்த உங்களை கை விட்டு விடுவானா?

ஓரறிவு ஜீவனையும் சிவம்
ஆக்குபவரே சற்குரு

அடியேனுடைய இன்னொரு அனுபவத்தையும் உங்களுக்குச் சொல்லுகிறேன். அடியேன் வீட்டில் மணி ப்ளாண்ட் என்ற ஒரு செடியை வளர்த்து வந்தேன். அந்தச் செடியினுடைய ஒரே ஆவல் எப்படியாவது திருஅண்ணாமலைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பதுதான். இந்த ஒரே ஒரு பிரார்த்தனையுடன் அந்தச் செடி வாழ்ந்து கொண்டிருந்தது. அடியேன் ஆஸ்ரம அலுவல் காரணமாக பல நாட்கள் வெளியூர்களில் தங்கும் சூழ்நிலை ஏற்படும்போது இந்தச் செடிக்கு பல நாட்கள் தொடர்ந்து தண்ணீர் ஊற்ற முடியாமல் போய் விடும். ஆனாலும், இந்தச் செடி அரும்பாடு பட்டு இறைவனிடம் வேண்டி தன் உயிரைப் பிடித்துக் கொண்டு அடியேன் திரும்பி வந்து தண்ணீர் ஊற்றும் வரை அமைதியாகக் காத்திருக்கும். அடியேனும் வெளியூரில் இருக்கும் காலங்களின் இந்த அன்புச் செடி உயிருடன் இருக்க வேண்டும் என்று அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு ஐந்து வருடங்கள் காத்திருந்த பின் கடவுளருளால் போன மாதம் தனியாக ஒரு லாரியை ஏற்பாடு செய்து இந்தச் செடிகளை எல்லாம் இங்குக் கொண்டு வந்து சேர்த்து அவர்களுடைய பிரார்த்தனையை நிறைவு செய்தோம்.

இப்போது கூறுங்கள். இந்தச் சவுக்குக் கட்டைகளுக்கும், மணி செடிக்கும் சரியை, கிரியை பற்றி என்ன தெரியும்? ஆனால், இறைவன் அவர்களுக்கும் உத்தம நிலைகளைப் பரிசாக அளித்தான் அல்லவா? எனவே, உங்களுக்கு வேண்டுவதெல்லாம் குருவின் மேல் நம்பிக்கை, வழிகாட்டியின் மேல் நம்பிக்கையே. கண் மூடி நம்பிக்கையோடு இங்கு வந்தால் உங்கள் வாழ்க்கை மண் மூடிப் போகாமல் அண்ணாமலையான் உங்களைக் காப்பான்.

அடியார்
குருதேவா, மாதம் ஒரு முறை பௌர்ணமியில் மட்டுமே தாங்கள் கூறும் யோக தியான நிலைகளைப் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மற்ற நாட்களிலும் நாங்கள் இதைத் தொடர்ந்து பெறுவது எப்படி?

சற்குரு
ஒரு முறை இந்த ஆஸ்ரமத்தில் சேவை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட அதில் உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் பயன்படக் கூடிய அளவிற்குத் தேவையான புண்ணிய சக்திகளை உங்களுக்குக் கொடுத்துத்தான் உங்களை இங்கிருந்து வழி அனுப்பி வைக்கிறோம். ஆனால், இங்கிருந்து சென்றபின் உங்கள் வாழ்க்கை முறை செயல்படும் விதத்தைப் பொறுத்து உங்களுக்குக் கிடைத்த மலையளவு புண்ணிய சக்தியை ஒரு மாதத்தில், ஒரு வாரத்தில், ஏன் ஒரே நாளிலேயே செலவு செய்து விடும் அடியார்களும் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் முதன் முதலில் ஒரு அடியாரைப் பார்க்கும்போதே அவருக்குத் தேவையான எல்லா வழிகாட்டுதல்களையும் கொடுத்து விடுகிறோம். அவர் எந்த அளவிற்கு அடுத்தடுத்து அவருக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நல்ல விதத்தில் மற்றவர் நலனுக்காகப் பயன்படுத்துகிறாதோ அந்த அளவிற்கு அவர் இங்கு பெற்ற புண்ணிய சக்தி விரயம் ஆகாமல் நல்ல முறையில் அவரை வழி நடத்தும். இங்கிருந்து சென்றபின் தன்னுடைய தவறான பழைய பாதையிலேயே செல்ல நினைக்கும்போது இங்கு பெற்ற புண்ணிய சக்தி எளிதில் விரயமாகி விழலுக்கு இரைத்த நீராகி விடுகிறது. புனிதமான ஆறுகளைப் போன்றவர்கள் மகான்கள். நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான புண்ணிய சக்தியை வாரி வழங்குகிறார்கள். அதைப் பயன்படுத்துபவர்களைப் பொறுத்தே அதன் பயன் அமைகிறது.

சில உடல் வள, மன வள, உள்ள வள யோக முறைகளை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன். இவைகளை முறையாகப் பழகி வந்தால் நாளடைவில் உங்கள் உடலும், மனமும், உள்ளமும் புனிதம் அடைந்து நீங்கள் இங்கு பெறும் நற்சக்திகள் விரயம் ஆகாமல் நல்ல முறையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சமுõயத்திற்கும் ரட்சை சக்தியாக அமைந்து காக்கும்.

வளம் தரும் யோகாசனம்

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்ற திருமூலர் வாக்கிற்கிணங்க உடம்பை நல்ல முறையில் பேணி காத்தால்தான் நற்காரியங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற முடியும். நல்ல உடல் ஆரோக்யத்திற்கு உறுதுணையாக இருப்பதே நமது முன்னோர்கள் வகுத்தளித்த எளிய யோகாசன முறைகளாகும். இதில் சரியை, கிரியை, யோகம், தியான நிலைகளும் அடங்கும். சிறியவர், பெரியோர், ஆண், பெண் என அனைவரும் பயிலக் கூடிய எளிய யோகாசன முறைகளையே இங்கு அளிக்கிறோம். இந்த ஆசனங்களைப் பயிலும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விதிமுறையே இறைநாம ஜபமாகும். உடல் ஆசனங்களைப் பயின்றாலும் மனதினுள் ஏதாவது ஒரு இறை நாமத்தை இடைவெளியின்றி ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் பெயரையே கூட நீங்கள் மனதினுள் ஜபித்துக் கொண்டு இருக்கலாம். இது மிக முக்கியம்.

உடலின் 72000 நாடிகளையும்
வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

1. வளம் தரும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.

2. வளம் தரும் ஆசனம் இரண்டு

தரையில் ஒரு கெட்டியான போர்வையை நான்காக மடித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்தே ஆசனங்களைப் பயில வேண்டும் வெறுந் தரையில் ஆசனங்கள் பயில்வதைத் தவிர்க்கவும். இது சூரிய நமஸ்காரத்தில் இரண்டாவதாக பயில வேண்டிய ஆசனமாகும்.
பத்மாசனத்தில் அமரவும். கைகளை கால்களுக்கு இடையில் நுழைத்து குக்குடாசனத்தில் நிற்கவும். மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். தங்களால் முடிந்த அளவு நேரம் இந்த ஆசனத்தைப் பயின்றவுடன் சகஜ நிலைக்குத் திரும்பவும்.

3. வளம் தரும் ஆசனம் மூன்று

வளம் தரும் குக்குடாசனம்

கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து, முட்டி மடங்காமல் நேராக தூக்கவும். முடிந்த வரைக்கும் கால் பாதங்களுக்கும் உள்ள இடைவெளி 6 அங்குலத்திற்கு மேற்படாமல் கால்களை உயர்த்தி வைத்துக் கொள்ளவும். மூச்சுக் காற்றை இழுத்து மூன்று விநாடிகள் வைத்துக் கொள்ளவும். மூச்சுக் காற்றை வெளியே விட்டு கால்களை தரைக்கு இறக்கவும்.

4. வளம் தரும் ஆசனம் நான்கு

கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் தரையிலிருந்து 90 டிகிரி அளவு முட்டி மடங்காமல் தூக்கவும். இரண்டு கால் கட்டை விரல்களைப் பார்க்கவும். மூன்று விநாடிகள் மூச்சுக் காற்றை இழுத்து நிலை நிறுத்தவும். மூச்சுக் காற்றை வெளியே விட்டு கால்களை தரையில் இறக்கவும்.

5. வளம் தரும் ஆசனம் ஐந்து

வளம் தரும் ஆசனம் மூன்று

கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் தூக்கி மெதுவாகக் கொண்டு வந்து தலைக்குப் பின்னால் தரையில் படுமாறு வைத்துக் கொள்ளவும். கால்கள் தரையைத் தொடும் அளவிற்கு உடல் வளையவில்லை முடிந்து அளவில் கால்களை நிறுத்திக் கொள்ளவும். தொடர்ந்து பழகி வந்தால் உடல் மூட்டுகளில் இறுக்கம் குறைந்து ஆசனங்கள் பயில்வது எளிதாகும். மூன்று விநாடிகள் மூச்சுக் காற்றை இழுத்து வைத்துக்கொள்ளவும். மூச்சுக் காற்றை வெளியே விட்டு, கால்களைத் தரையில் இறக்கவும்.

6. குப்புறப் படுத்துக் கொள்ளவும். தலையைத் தூக்காமல் நேரே பார்க்கவும். கைகளைப் பக்கவாட்டில் உள்ளங்கைகள் வானத்தைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து முட்டி மடங்காமல் முடிந்த அளவு உயரத் தூக்கவும். மூன்று விநாடிகள் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வைத்துக் கொள்ளவும். மூச்சுக் காற்றை வெளியே விட்டு கால்களை இறக்கவும்.

7. வளம் தரும் ஆசனம் ஏழு

வளம் தரும் ஆசனம் நான்கு

குப்புறப் படுத்துக் கொள்ளவும். இரண்டு கைகளால் இரண்டு கால் பாதங்களைப் பிடித்துக் கொண்டு உடலை வில்லாக வளைக்கவும். மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து மூன்று விநாடிகள் வைத்திருக்கவும். மூச்சை வெளியே விட்டு கால் தலையை இறக்கவும்.

8. வளம் தரும் ஆசனம் எட்டு

நேராக நிற்கவும். வலது காலை மடித்து இடது தொடையில் வைக்கவும். கைளைக் குவித்து மார்புக்கு நேரே வணங்கிய நிலையில் வைத்துக் கொள்ளவும். கண்ணெதிரே முடிந்தால் ஒரு கடவுள் படம், குழந்தைகள் படம், இயற்கைக் காட்சிகள் இவற்றை வைத்துக் கொண்டு கண் இமைக்காமல் பார்க்கவும். மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். தங்களால் முடிந்த அளவு ஆசனம் பயின்ற பின் கால்களை இறக்கவும்.

9. நேராக நிற்கவும் இடது காலை மடித்து வலது தொடையில் வைக்கவும். கைகளைக் குவித்து மார்புக்கு நேரா வணங்கிய நிலையில் வைத்துக் கொள்ளவும். கண் இமைக்காமல் நேரே எதிரில் உள்ள கடவுள் படத்தைப் பார்க்கவும். மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். வலது காலை மடித்து வைத்து எவ்வளவு நேரம் ஆசனம் பயின்றீர்களோ அதே அளவு நேரத்திற்கு இடது காலை மடித்து ஆசனம் பயிலவும்.

நாடிகளுக்கு வளம் தரும் மூச்சுப் பயிற்சி

பத்மாசனம் இட்டு கனமாக மடித்த போர்வையின் மேல் அமரவும். உடலை அசையாமல் வைத்துக் கொண்டு நேராகப் பார்க்கவும். இடது மூக்கை வலது கையால் லேசாக அழுத்திக் கொண்டு மெதுவாக, மிக மெதுவாக வலது மூக்கு வழியாக மூச்சை இழுக்கவும். தங்களால் முடிந்த அளவு மூச்சை இழுத்தபின் வலது மூக்கை அடைத்துக் கொண்டு இடது மூக்கு வழியாக மூச்சுக் காற்றை மெதுவாக வெளியே விடவும். மூச்சுக் காற்று முழுவதுமாக வெளியேறிய பின் வலது மூக்கை அடைத்துக் கொண்டு இடது மூக்கு வழியாக மெதுவாக, மிக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். முடிந்த அளவு மூச்சை உள்ளே இழுத்த பின் இடது மூக்கை அடைத்துக் கொண்டு வலது மூக்கு வழியாக மூச்சை மெதுவாக வெளியே விடவும். இது ஒரு சுற்று பிராணாயாமம் எனப்படும்.

வளம் தரும் ஆசனம் ஐந்து

இதுபோல் அவரவர் சக்திக்கு முடிந்த வரை எவ்வளவு சுற்றுகள் பிராணாயாமம் வேண்டுமானாலும் பயிலலாம். இதில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது எக்காரணம் முன்னிட்டும் மூச்சுக் காற்றை உள்ளே நிறுத்தக் கூடாது என்பதுதான். நீங்கள் இதுவரை படித்த பல புத்தகங்களில் மூச்சுச் காற்றை ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளே நிறுத்தி வைத்துப் பழகும் பல பிராணாயாம யோக முறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், மூச்சுக் காற்றை நிறுத்தி வைத்துப் பழகும் பிராணாயாம யோகம் தகுதி வாய்ந்த சற்குரு முன்னிலையில் மட்டுமே மிகவும் கவனமாகப் பயில வேண்டிய பாடமாகும். இதில் தவறுகள் ஏற்பட்டால் எந்த மருத்துவத்தாலும் குணமாக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே எக்காரணம் முன்னிட்டும் மூச்சுக் காற்றை நிறுத்தி வைக்கும் பிராணாயாம யோகம் பழக வேண்டாம்.

மேலே குறிப்பிட்ட முதற் கட்ட பிராணாயம பயிற்சியைத் தொடர்ந்து பழகி வந்தபின். அதில் எந்தவித சிரமமும் இல்லை என்றால் அவர்கள் இரண்டாவது கட்ட பிராணாயாம யோகம் பயிலலாம். பிராணாயாமத்தில் இரண்டாவது கட்டமாக மூச்சை உள்ளே இழுக்கும்போது ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை உள்ள இறை நாமத்தையோ அல்லது காயத்ரீயோ ஓத வேண்டும். மூச்சை வெளியே விடும்போது அதே எண்ணிக்கை இறை நாமத்தையோ காயத்ரீயோ சொல்லி மூச்சை வெளி விட வேண்டும்.

பிராணாயாமத்தில் மூன்றாவது கட்டமாக மூச்சை எவ்வளவு நேரம் உள்ளே இழுக்கிறோமோ அதைப் போல இரண்டு மடங்கு நேரத்திற்கு வெளியே விட வேண்டும்.
பிராணாயாமத்தை பொதுவாக 11, 21, 51 சுற்றுகள் என அவரவர் கால அவகாசத்தைப் பொறுத்து செய்து வரலாம்.
பெண்கள் இடது நாசி வழியாக மூச்சை உள்ளே இழுத்து பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.

வளம் தரும் ஆசனம் ஆறு

பலருக்கும் பத்மாசனம் என்பது தங்களால் முடியாத ஒரு பயிற்சியாகவே எண்ணி விடுகிறார்கள். உண்மையில் முயற்சி செய்தால் வயதானவர்களும், சிறுவர்களும், பெண்களும் எளிதில் நிறைவேற்றக் கூடிய ஆசனமாகும். பத்மானசம் எளிதில் பயிற்சி செய்ய முடியாதவர்களும், பத்மாசனத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் சிரமமின்றி அமர விரும்புவோரும் இங்கு கொடுத்துள்ள முன்னோடியான சில பயிற்சிகளை ஒரு சில மாதத்திற்குப் பயின்று பின்னர் பத்மாசனத்தை ஆரம்பித்தால் அது இயல்பாக சிறிதளவு கூட சிரமம், வலி இன்றி நிறைவேற்றலாம்.

பத்மாசனம் பயில்வது எப்படி ?

முதலில் படத்தில் காட்டியபடி இடது காலை நீட்டி வலது காலை மடித்து அமர்ந்து கொள்ளவும். இரு உள்ளங்கைகளும் ஒன்றையொன்று பார்க்குமாறு வைத்துக் கொண்டு அவைகளுக்கு நடுவே கால் விரங்களைப் பார்க்கவும். இந்நிலையில் உங்களால் கைகளால் கால் விரங்களைத் தொட முடியாது. ஆனாலும், கைகளின் வழியே உள்ள இடைவெளி வழியாக கால் கட்டை விரலைப் பார்த்துக் கொண்டு காயத்ரீ மந்திரத்தையோ அல்லது தேவாரப் பதிகங்களையோ ஓதிக் கொண்டு இருக்கவும். சுமார் அரை மேணி நேரத்திற்குப் பின் வலது காலை நீட்டி இடது காலை மடக்கி மேற்கூறிய வண்ணம் பயிற்சி செய்யவும்.

இவ்வாறு ஒரு மாத காலம் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உங்கள் முதுகுத் தசைகள் மென்மை அடைந்து நீங்கள் எளிதில் உங்கள் கைகளால் கால் விரங்களைத் தொடும் நிலைக்கு வந்து விடுவீர்கள். அதன் பின்னர் இரு கால்களையும் நீட்டி அமர்ந்து கொண்டு கை விரல்களால் கால் விரல்களைப் பிடித்துக் கொண்டு தினமும் ஒரு மணி நேரத்திற்குக் காயத்ரீ மந்திரம் ஓதி வரவும். அதன் பின்னர் நீங்கள் எளிதாக படத்தில் காட்டியபடி இரு கைவிரங்களையும் கோர்த்து கால் பாதங்களைப் பிடிக்கும் அளவிற்கு வந்து விடுவீர்கள் இந்நிலையை அடைந்து விட்டால் அதன் பின்னர் உங்களுக்கு நிச்சயம் பத்மாசனம் என்பது ஒரு எளிதான பயிற்சி ஆகிவிடும்.

(வீடியோ பார்க்கவும்)

இரண்டாம் கட்ட மூச்சுப் பயிற்சி

முதல் கட்ட பிராணாயமத்தைத் தொடர்ந்து ஆறு மாத காலத்திற்காவது பயிற்சி செய்த பின்னரே இந்த இரண்டாம் நிலை பயிற்சியைப் பயில வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

பிராணன் என்பது அடிப்படை உயிர் நிலை. அதை முறைப்படுத்துவதே பிராணாயாமம் என்னும் பயிற்சியாகும். பிராணனை விட சூட்சுமமான பொருள் உலகில் இல்லாததால் பிராணாயாம பயிற்சியைத் தவறுதலாக செய்து அதனால் உடலில் நோய்கள் ஏற்பட்டால் அதை குணப்படுத்த முடியாது என்பது உண்மை. அதனால்தான் அக்காலத்தில் குரு சிஷ்ய பாரம்பரிய மூலமாக மட்டுமே பிராணாயாம பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த உண்மையை மனதில் தெளிவாக நிலை நிறுத்திக் கொண்டு பயிற்சியை ஆரம்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அமைதியாக ஆசனத்தில் அமர்ந்து கொண்டபின் ஆண்கள் வலது மூக்கு வழியாக மெதுவாக, மிகவும் மெதுவாக மூச்சை இழுக்கவும். அப்போது ”ஹம்ஸ” என்னும் மந்திரத்தை மனதினுள் உச்சரித்தவாறே மூச்சை இழுக்கவும்.

போதுமான அளவு மூச்சை இழுத்த பின் மூச்சை உடலில் நிறுத்திக் கொள்ளவும். இவ்வாறு மூச்சு உடலினுள் இருக்கும்போது ”ஹம்ஸ ஸோஹம்” என்னும் மந்திரத்தை மனனுதினுள் ஓதவும்.

சில விநாடிகள் மூச்சை உள்ளே அடக்கியபின் மெதுவாக மூச்சை வெளியே விடவும். அப்போது ”ஹம்” என்னும் மந்திரத்தை மனதினுள் உச்சரிக்கவும்.

மீண்டும் மெதுவாக இடது மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து ”ஹம்ஸ” என்னும் மந்திரத்தை ஓதவும். பின்னர் மூச்சை அடக்கி மனதினுள் ”ஹம்ஸ ஸோஹம்” என்னும் மந்திரத்தை மனதினுள் ஜபிக்கவும். சில விநாடிகள் கழித்து ”ஹம்” என்று மனதினுள் ஓதியவாறு மூச்சை வெளியே விடவும்.

இது ஒரு சுற்று பிராணாயாமம் ஆகும். இவ்வாறு

ஹம்ஸ ஹம்ஸ ஸோஹம் ஹம்
ஹம்ஸ ஹம்ஸ ஸோஹம் ஹம்

என்று மந்திரங்களை மனதினுள் ஓதி அவரவர் உடல் நிலை, வயது, சூழ்நிலைக்கேற்ப எத்தனை முறை வேண்டுமானாலும் பிராணாயாமத்தைப் பயிலலாம்.

இந்த இரண்டாம் கட்ட பிராணாயமத்தைத் தொடர்ந்து பயின்று வந்தால் பெரும்பாலான எண்ண ஓட்டங்களின் வேகம் குறைந்து மனம் எளிதாக புத்தியின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.

பேருந்துகளில், இரயில்களில் பயணம் செய்யும்போதும் ஏதாவது வெளி இடங்களில் வெறுமனே அமர்ந்து கொண்டிருக்கும்போதும் கூட இந்த பிராணாயாம மந்திரங்களை ஓதுவதும் ஓர் அற்புத மனப் பயிற்சியாகும். இதனால் மனத் தெளிவு ஏற்பட்டு சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.

 

தியானத்திற்கு அடிகோலும் ஆத்மவிசாரம்

தியானத்திற்கு ஆதாரமாக, அடிப்படையாக அமைவதே ஆத்ம விசாரப் பயிற்சிகள். ஆத்ம விசாரத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், இடத்தில் பயில வேண்டும் என்பது கிடையாது. நாள் முழுவதும், 24 மணி நேரமும் நாம் பயில வேண்டிய யோகமே ஆத்ம விசாரமாகும். இருப்பினும் ஆரம்ப கட்டமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறித்த காலத்திற்கு ஆத்ம விசாரம் தொடர்ந்து செய்து வருதல் நலம். இரவு படுக்கைக்கு செல்லும் முன் சுமார் ஒரு மணி நேரத்தை ஆத்ம விசாரத்திற்காக ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வளம் தரும் ஆசனம் ஏழு

1. முதலில் அன்றைய பொழுதில் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகளுடன் என்ன பேசினீர்கள், அவர்கள் உங்களிடம் என்ன பேசினார்கள், உங்களுடைய வார்த்தைகள், உங்கள் நடவடிக்கைகள் இவற்றை நினைவு கூறுங்கள். நீங்கள் நாள் முழுவதும் செய்த காரியங்களை பல் துலக்குவது, சாப்பிடுவது, ஆடை அணிவது, பஸ், காரில் பயணம் செய்தது, வழியில் கண்ட காட்சிகள், மற்றவர்களிடம் பரிமாறிக் கொண்ட எண்ணங்கள், பிறரிடம் நடந்து கொண்ட விதம் இவற்றைப் பற்றி ஒரு கால் மணி நேரம் எண்ணிப் பாருங்கள்.

2. இரண்டாவதாக நீங்கள் அடுத்த நாள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் திட்டமிட வேண்டும். குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டுவது, பஸ் பாஸ் எடுப்பது, வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவது, தண்ணீர் குழாய் ரிப்பேர் பார்ப்பது என்று உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க அடுத்த நாள் நிறைவேற்ற வேண்டிய செயல்முறைகளைப் பற்றி முடிவெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறை இருந்தால் யாரிடம், எப்படிக் கடன் வாங்குவது போன்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

மூளை செல்களை விருத்தி
செய்யும் ஆசனம் எட்டு

பின்னர் உங்கள் தெய்வீகக் காரியத்தைப் பற்றித் திட்டமிடுங்கள். அன்றைய பொழுது என்ன தெய்வீக நற்காரியம் செய்தீர்கள், அடுத்த நாள் என்ன நற்காரியம் செய்யப் போகிறீர்கள். இதற்காக யாரை, எப்படி அணுக வேண்டும். யாரிடம் எல்லாம் நீங்கள் நல்ல விஷயத்தைப் பற்றி எடுத்துரைத்தீர்கள். இதில் நீங்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

ஆரம்பத்தில் இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கு கால் மணி நேரம் நிச்சயம் போதாது, சமயத்தில் இரண்டு மணி நேரம் கூட பற்றாததாகத் தோன்றும். ஆனால், காலப் போக்கில் எண்ணங்கள் தெளிவு பெறுவதால் எல்லா விஷயங்களையும் மிக விரைவில் அலசி ஆராய்ந்து முறையாகத் திட்டமிடும் ஆற்றல் உங்களிடம் வந்து சேரும்.

3. மூன்றாவதாக, உங்கள் பூஜை அறையிலோ அல்லது உங்கள் வீட்டில் தூய்மையான ஒரு இடத்திலோ ஆசனம் இட்டு வடக்கு நோக்கி அமருங்கள். நீங்கள் சிரமமில்லாமல் பார்க்கும் உயரத்தில் ஒரு படத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இஷ்ட தெய்வம், சற்குரு, மகான்கள், யோகிகள், தெய்வீக எந்திரங்கள், சாளக் கிராமம், தெய்வீக க்ரிஸ்டல் குளோப், உங்கள் சிறு வயது போட்டோ என்று எந்தப் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதில் ஒரு டேபிள் விளக்கின் வெளிச்சம் பளிச்சென்று படும்படி ஏற்பாடு செய்து கொள்ளவும்.

பத்மாசனம் முதல் கட்ட பயிற்சி

வலது கை குரு விரலையும், சுக்கிர விரலையும் (ஆள்காட்டி விரலும், கட்டை விரலும்) ஒன்று சேர்த்து சின் முத்திரை போல் வைத்துக் கொள்ளவும். அவ்வாறே இடது கை குரு விரலையும் சுக்கிர விரலையும் ஒன்று சேர்த்து சின் முத்திரை போல் வைத்துக் கொள்ளவும். இரண்டு சின் முத்திரைகளையும் ஒன்றாகச் சேர்த்தால் இந்த நான்கு விரல்களுக்கு நடுவே ஒரு டைமண்ட் துவாரம் உருவாகும். இந்த டைமண்ட் வடிவுள்ள துவாரம் வழியாக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படத்தைப் பார்க்கவும். அரை மணி நேரம் இவ்வாறு பயிற்சி செய்யவும். அமைதியாகப் படத்தை உற்று நோக்கினால் போதும் வேறு எந்த எண்ணமும் வேண்டாம். பயிற்சியின் நடுவே வரும் எண்ணங்களைக் கண்டு கொள்ள வேண்டாம். பயிற்சியின் நடுவே ஏதேனும் தெய்வீகக் காட்சிகளோ, வேறு காட்சிகளோ உங்களுக்குக் கிடைத்தால் அவைகளுக்கு எந்த வித முக்கியத்துவமும் அளிக்க வேண்டாம். அந்தக் காட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்யவோ, பிறரிடம் கூறவோ வேண்டாம்.

மேற்கூறிய யோக ஆசன, பிராணாயாம, ஆத்ம விசாரப் பயிற்சிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் போதும். அடுத்தடுத்து நீங்கள் செய்ய வேண்டிய உலகியல் கடமைகளும், தெய்வப் பணிகளும் தாமாகவே உங்களுக்குள் புலனாகும். உங்கள் நம்பிக்கையைப் பொறுத்து உங்களுக்குத் தேவையான எல்லா வழிகாட்டுதல்களையும் அளிக்க மேலுலகில் நல்லோர்கள் காத்திருக்கின்றனர்.

நட்சத்திர தியானம்

நமது முன்னோர்கள் அவர்களுடைய ஆன்மீக நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு லோகங்களில் இருப்பார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வது என்பது சித்தர்கள், மகான்களுக்கோ சாத்தியமாகும். ஆனால், தற்காலத்தில் பலரும் இறந்த தங்கள் மூதாதையர்களுடன் தொடர்பு கொள்ள பலவிதமாக ஆவித் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் அபாயகரமான பயிற்சியாகும். இதனால் விளையும் துன்பங்கள். ஏராளம்.

நட்சத்திர தியானத்திற்கு
துணை புரியும் பரமபிதா ஆசனம்

நம்மைச் சுற்றி எப்போதும் பல தீய ஆவிகள் சூழ்ந்து உலவிக் கொண்டிருக்கின்றன. நமது முன்னோர்களுடன் தொடர்பு கொள்ள நினைத்தவுடன் அந்த தீய ஆவிகள் நமது மன ஓட்டைத்தை அறிந்து கொண்டு நம்முடைய முன்னோர்களுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும். மனிதர்களை விட ஆவிகள் சூக்கும அறிவு உடையதால் நமக்குத் தெரியாத பல விஷயங்களை அவை எளிதில் தெரிந்து வைத்திருக்கும்.

அதனால் நாம் அவைகளை நம்பி அந்தத் தீய ஆவிகளின் வலையில் விழுந்து விட்டால் நமக்கு பணம், புதையல், பெண் போன்ற ஆசைகளைக் காட்டி நம்மை அழித்து விடும். தற்காலத்தில் பல இடங்களில் சிறுவர்களை, இளம் பெண்களை நர பலி கொடுத்து தவறான செயல்களுக்குத் தூண்டப்படுபவர்கள் அனைவருமே இத்தகைய தவறான ஆவிகளுடன் தொடர்பு கொள்வதால்தான் என்பதை உணர்ந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக, லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்களும், விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இத்தகைய ஆவித் தொடர்புகளால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் அவர்கள் தொடர்ந்து திங்கட்கிழமைகளில் ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரை தரிசனம் செய்வதும், மூன்றாம் பிறையை தரிசனம் செய்வதும், ”வேயுறு தோளி பங்கன் --” எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தை ஓதி வருவதும் அவர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும்.

பித்ரு லோகத்திலுள்ள நமது மூதாதையர்களை சித்தர்களும் மகான்களும் எளிதில் தொடர்பு கொள்ளலாம் அல்லவா? எனவே நாம் சித்தர்களையும் மகான்களிடம் பிரார்த்தனை செய்து வந்தால் அவர்கள் நமது முன்னோர்களுடன் தொடர்பு கொண்டு நம்முடைய பிரச்னையைத் தீர்த்து வைப்பார்கள்.

இவ்வாறு நமது பிரார்த்தனைக்கு உறுதுணையாக அமைவதே பரமபிதா ஆசனமாகும். ஏசுபிரான் தான் சிலுவையில் உயிர் விடும் முன்னர் கெஸ்தமணித் தோட்டத்தில் பரலோகத்தில் இருக்கும் தனது பிதாவை இந்த ஆசனத்தில் இருந்துதான் பிரார்த்தித்து உலக மக்களுக்கு நற்பலன்களை வாங்கித் தந்தார்.

முழங்காலிட்டு அமர்ந்து மெதுவாக எழுந்து இரு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்டி விரித்து தலையை பின்னார் சாய்த்து வானத்தைப் பார்க்கவும். இரு உள்ளங்கைகளும் வானத்தைப் பார்க்கும்படி வைத்துக் கொள்ளவும். இதனால் வானத்தில் உள்ள லட்சக் கணக்கான நட்சத்திரங்களின் கதிர்கள் நமது உள்ளங்கையை அடைந்து அங்கிருந்து நமது மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்யும்.

மிகக் குறுகிய நேரத்தில் மன அமைதியை அளிக்க வல்லதே பரமபிதா ஆசனமாகும். வானத்தைப் பார்க்க முடியாதாவர்கள் தங்கள் அறையிலிருந்தும் இந்த ஆசனத்தைப் பயிலலாம். உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும்.

பத்மாசனம் இரண்டாம்
கட்ட பயிற்சி

பிராணாயாம பயிற்சி

தியானத்தை மேம்படுத்தும்
சுக்ர பீட முத்திரை

 

 

 

 

 

 

 

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam

 

பத்மாசனம் மூன்றாம் கட்ட பயிற்சி