கல்லுக்குள் இருக்கும் தேரையையும் கரையேற்றுவதே சற்குருவின் திருப்பணி !!

மண்டூக நாதம்

நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது
சித்ர மண்டூகம் என்னும் இனத்தைச் சேர்ந்த தவளைகளின் ஒலியாகும். பெரும்பாலும் வெள்ளியங்கிரியில் வசிக்கும் இந்த தவளை இனங்கள் நீலவேணு என்னும் தெய்வீக நாகத்திற்கு உணவாகின்றன.
பொதுவாக தவளைகளின் இனிய கீதம் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தி மூளைச் சோர்வை நீக்கும் இயல்புடையது.
மனித மூளைக்கு, அறிவிற்கு எட்டாத பல அற்புத பீஜாட்சர ஒலிகளை இந்த தெய்வீக தவளைகள் எழுப்புவதால் மூளை வளத்தைப் பெருக்குவதற்கு சிறப்பாக, வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு அற்புத சஞ்சீவி மருந்தாக அமைகின்றது.
உடல் நிலை, மன நிலை பாதிப்பால் இரவு தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இந்த தவளை கீதத்தைக் கேட்டு விட்டு உறங்கச் சென்றால் நிம்மதியான உறக்கம் கிட்டும்.
கனவுகளால் தொல்லை ஏற்படாது.
மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு ஆளானோர் தொடர்ந்து இந்த சித்ர கீதத்தைக் கேட்டு வருவதால் மன உறுதி பெற்று தீய பழக்களிலிருந்து விடுதலை பெற ஏதுவாகும்.
தவளை இனத்தின் குலவழி குருவான மண்டூக மகரிஷி வழிபட்ட திருச்சி அருகே உள்ள அன்பில் பெருமாள் திருத்தலம்,
திருப்பட்டூர் ஸ்ரீமண்டூக நாதர் திருத்தலம் போன்ற திருத்தலங்களில் வழிபாடுகள் இயற்றி இறை மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றி ஏழைகளுக்கு நீல வண்ண போர்வைகளைத் தானமாக அளிப்பதால் நன்னிலை அடையலாம்.

திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் எதிரே நீங்கள் காண்பதே பத்து முகடுகளுடன் கூடிய அற்புதமான தசமுக தரிசனமாகும்.

திருஅண்ணாமலையாரின் பத்து முகடுகளையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வது என்பது எவராலும் இயலாத காரணம் அல்லவா? ஆனால், இத்தரிசனத்தால் பெரிதும் கவரப்பட்ட இராவணன் எம்பெருமானின் பத்து முக தரிசனங்களையும் ஒரே சமயத்தில் தரிசனம் செய்வதற்காக பத்துத் தலைகள் வேண்டி கடுமையாக தவம் இயற்றினான்.

ஒவ்வொரு முகட்டிலிருந்தும் வேத சக்திகள் பீஜாட்சர வடிவில் தோன்றி இந்தப் பிரபஞ்சத்தை வியாபித்துக் கொண்டு இருக்கின்றன. இந்த வேத ஒலி வடிவங்களை பல யுகங்கள் கிரகித்து வந்தான் இராவணன். ஒவ்வொரு முகட்டை நோக்கி ஒரு சதுர் யுகம் தவம் இயற்றி அதிலிருந்து 1000 பீஜாட்சர சக்திகளை வரமாகப் பெற்றான்

இவ்வாறு பத்து சதுர்யுகங்கள் அயராது தவமியற்றி பத்தாயிரம் பீஜாட்சர சக்திகளை ஈர்த்த பின்னரே எம்பெருமான் தோன்றி இராவணன் வேண்டிய வண்ணம் அவனுக்கு பத்துத் தலைகளை அளித்து கருணை புரிந்தார்.

இவ்வாறு பல சதுர் யுகங்கள் தவமியற்றி ராவணன் பெற்ற வர சக்திகள் அனைத்தும் அவனுடைய அடாத செயல்களால் கரைந்து போயின. எப்போதுமே புண்ணியத்தை ஈட்டுவதுதான் கடினம். அதை செலவு செய்வதோ மிகவும் எளிது.

வயதான ஜடாயுவைக் கொன்றது, பத்தினி சீதையைக் கவர்ந்த்து போன்ற தவறான செய்கைகளால் இராவணனுடைய பத்துத் தலையைப் பெறக் காரணமாயிருந்த புண்ணிய சக்திகள் அனைத்தும் ஒவ்வொன்றாக்க் கரைந்து போயின்.

அந்நிலையில் இராவணனுடைய தலைகளில் புண்ணிய சக்திகள் எதுவும் இல்லாமல் அவை வெறும் பொம்மைத் தலைகளாகவே இருந்தன என்று சித்தர்கள் ராவணனின் அவல நிலையை வர்ணிக்கின்றனர்.

கடைசியில் ராம பிரானின் எதிரே இராவணன் நின்றபோது அவனிடம் ஒரே ஒரு தலைக்கான புண்ணியம் மட்டுமே இருந்த்து.

அந்தப் புண்ணிய சக்தியை எப்படி இராவணன் இழப்பான் என்ற ரகசியம் இராம பிரானுக்குத் தெரியும். அதை வெளியிடாம்ல் அதே சமயம் ஒரு மனிதன் எந்நிலையிலும் தன்னுடைய தர்மத்தை இழக்க்க் கூடாது என்ற பாடத்தை மக்களுக்கு அறிவிக்கும் மகத்தான பணியையு நிறைவேற்றும் முகமாக, இன்று போய் நாளை வா என்று இராவணனை மன்னித்து அனுப்பினார்.

தன்னுடைய வாழ்நாளில் தோல்வியை முதன் முதலாக சந்தித்த ராவணன் அதுவும் ஒரு மானிடனிடம் மன்னிப்பு பெற்ற ராவணன் எல்லையில்லா வேதனையுடனும், அவமானத்துடனும் தன்னுடைய அரண்மனையை வந்தடைந்தான்.

திருஅண்ணாமலை தசமுக தரிசனம்

அவன் ஆருயிர் மனைவி மண்டோதரி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் அறிவுரையை சிறிதும் லட்சியம் செய்யாமல் ராம பிரானுடன் போர் புரியும் எண்ணத்துடன் மறுநாள் காலையில் ஆயுதங்கள் தாங்கி போருக்குப் புறப்பட்டான்.

தன்னுடைய அன்பு கணவனின் இன்னுயிரைக் காப்பாற்றும் இறுதி முயற்சியாக மண்டோதரி இராவணனின் இரண்டு கால்களையும் தன்னுடைய கைகளால் இறுக கட்டிக் கொண்டு போருக்குப் போக வேண்டாமென்று தடுத்தாள்.

ஆனால், விதி வலியது அல்லவா? இராவணன் மண்டோதரியை இடது காலால் உதைத்துத் தள்ளி விட்டு போருக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். ஒரு பத்தினியை அவமதித்தால்தான் இராவணனுடைய பத்தாவது தலை மறைபும் என்பதே ராமர் அறிந்த, எவருக்கும் வெளியிடாத இரகசியம்.

இராவணனுடை பத்தாவது தலையும் பொம்மைத் தலை ஆனதே.

இத்தகைய சக்தி வாய்ந்த அருணாசல முகடுகளிலிருந்து வெளியாகும் பீஜாட்சர சக்திகளை சாதாரண மனிதர்களால் கிரகிக்க முடியாது என்பதால் மண்டூக மகரிஷி தச முகடுகளிலிருந்து ருரூ என்ற ஒரே ஒரு பீஜாட்சரத்தை மட்டும் ஈர்த்து அதை ஓதும் திருப்பணியை சித்ர மண்டூக தவளைகளுக்கு அளித்தார்.

மண்டூக மகரிஷி அருளிய இந்த பீஜாட்சரம் மண்டூக பீஜாட்சரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பீஜாட்சரத்தை ஓதுவதால் கிட்டும் பலன்களை சித்தர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.

ஆனால், கலியுக மக்களும் இந்த பீஜாட்சர சக்திகளைப் பெறுவதற்காக ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் மண்டூக நாத தியானம் என்ற தியான முறையை வகுத்துள்ளார்கள். அருணாசல ஈசனின் பத்து முகடுகளையும் தரிசித்தவாறே மண்டூக தவளைகள் எழுப்பும் மண்டூக நாத்த்தைக் கேட்டுத் தியானிப்பதே மண்டூக தியானமாகும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பலன்களை அருள்வதே மண்டூக நாத தியானமாகும்.

ஸ்ரீபிரம்மா, திருப்பட்டூர் திருத்தலம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam