சிரத்தையுடன் நம்பிக்கையுடன் அளிப்பதே சிரார்த்தம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!

பார்க்கலையோ பெரியவரின் ஜாதகம்!
“என்னைத் தெரிஞ்சிக்க முடியாதுடா ராஜா! நாங்க இந்த லோகத்து ஆளுங்க கிடையாதுப்பா! எங்களுக்குன்னு தனி தெய்வீக சாம்ராஜ்யம், தனி சித்தருங்க எல்லாமே தனி ஸ்பெஷல்தாண்டா! ஆனா என்ன இருந்தாலும் தெய்வீகத்தைப் பரிபூரணமா அனுபவிக்கனும்னா அந்தத் தெய்வச் சுவையை ரசிச்சு அனுபவிக்கணும்னா அது மனுஷ உடம்புல ஸ்வயம்பு மூர்த்தி நெறஞ்சிருக்கிற இந்த பூலோகத்துல அதுவும் நம்ப பாரதத்துல, தமிழ்நாட்டுலதாண்டா கிடைக்கும்! அதுக்குத்தான் மகரிஷிங்களே ஏதாச்சும் காரணம் சொல்லி பூலோகத்துக்கு டுபுக்குனு ஓடோடி வந்துடுவாங்க!” பெரியவருடைய இந்தக் கூற்றில்தான் அவருடைய ஜாதகமே அடங்கியிருக்கிறது என்பதைச் சிறுவன் இவ்வாறாகத்தான் புரிந்து கொண்டான்!

வாராய் மங்கள நாயகி !

குருவருள் –> via கயா! இப்படித்தான் ஒரு முறை பீகார் மாநிலத்தில் உள்ள கயாவிற்குச் சென்றிருந்த போது.......

உச்சி வெயில் நேரத்திலெல்லாம் கயாவின் பல்குனி நதிக்கரைப் படிக்கட்டில் பெரியவர் காலாட்டிக் கொண்டு உட்கார்ந்து இறை விஷயங்களை நிறையப் பேசி விட்டு, மாலை தீர்ந்து இருட்டிய நேரத்தில் திபுதிபுவென்று பல்குனி நதிக்குள் ஓடினார். பல்குனி நதியில் நீர் இல்லை என்றாலும் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் பாதம் நனையும் அளவிற்குத்தான் தண்ணீர் ஓடினாலும் தடவுகின்ற இருட்டில் எங்கு கால் வைப்பது? எங்கு தாண்டுவது?

காரிருளில் தட்டுத் தடுமாறிய சிறுவன் அவர் பின்னால் ஏதோ குருட்டாம் போக்கில்தான் ஓடினான்! ஓடிய தூரமே கிட்டத்தட்ட முக்கால் மைல் இருக்கும்! எதிர்க் கரையில் (அப்போது) அடர்ந்த காடு! கும்மிருட்டில் சிறுவன் ஏதோ தோராயமாகத்தான் பெரியவரைத் தொடர்ந்தான்! விளக்கு வசதியில்லாக் காலமது!

முந்தைய இரவில் காசியை விட்டுப் புற்ப்படும்போது தான் பெரியவர் கயா பகுதியில் (அப்போது இருந்த) கொள்ளையர்களைப் பற்றியும் காட்டு விலங்குகளைப் பற்றியும் சொல்லிப் பெரிதும் பயமுறுத்தி இருந்தார்.. அது வேறு சிறுவனைத் தொற்றிக் கொண்டு விட்டது!

கரிய இருட்டில் .... அதுவும் எந்தத் திசையில் போகிறோம் என்று கூடத் தெரியாது பெரியவரின் இடுப்பு அரைஞாண்க் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர் பின்னால் literal ஆகவே வெகு வேகமாக ஓடிக் கொண்டிருந்தான்.!

“காட்டு விலங்குன்னா பயப்பட வேணாம்டா! எல்லாமே கடவுளோட படைப்புதாண்டா! தைரியமா சிவ, சிவ ராமா, ராமான்னு அவங்கவங்க வேலய கவனிச்சாப் போதும்! அதுங்க புழங்குற இடத்துல மனுஷனுக்கு என்ன வேலை! உலகம் ஃபுல்லா மனுஷங்க  உடம்புலேந்து, மனசுலேந்து கால் வரைக்கும் கொதிச்சு வெளில பரவெளியில கலக்கற குரோத, விரோத சக்திங்களை, தீய எண்ணங்களை எல்லாம் காட்டு விலங்குங்கதான் கிரகிச்சுத் தங்களோட பங்குக்குப் பரவெளியச் சுத்தப்படுத்துது! வில்வ மரத்துல தலை கீழாகத் தொங்கி ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி மாசக் கணக்குல உபவாசம் இருந்து தபஸ் பண்ற குரங்கும், கரடியும் இருக்குடா!”

‘என்ன அழகாகப் பேசிக் கொண்டு ஓடுகிறார்?’

ஸ்ரீதேனுறிஞ்சி பிள்ளையார் திருபுறம்பியம்

ஆனால், நன்றாக வெயில் கொளுத்திய பகல் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு இரவில் இவர் ஏன் நதிக்குள் இப்படி ஓடுகிறார்? ” சிறுவன் சற்று எரிச்சலாகவே எண்ணி விட்டான்! அவன் எண்ணிய எண்ணியாங்கின்படி முக்கால் ஆற்றைக் கடந்தவராய்ப் பெரியவர் திடீரென்று நின்றார்.

யாமிருக்க பயம் வீண்! “டேய் இங்க தாண்டா தர்ப்பணம் பண்ணனும்!”

சிறுவன் திடுக்கிட்டான்.. இந்த நேரங்கெட்ட நேரத்திலா? சிறுவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. தண்ணீரோ... கால் பாதம் நனையும் வரைதான் ஓடி.... இல்லையில்லை நகர்ந்து கொண்டிருந்தது... பக்கத்தில் சலசலவென்று ஒருவிதமான சப்தம் வேறு கேட்டது. ஏதாவது காட்டு விலங்குகளாக இருக்குமோ? இதில் எப்படித் தர்ப்பணம் கொடுக்க முடியும்?

சிறுவனுக்குப் பயம் உச்சந் தலைக்கு ஏறியது..

“ஏண்டா! தர்ப்பணத்துக்குத் தர்பையும், எள்ளும் வாங்க மறந்துட்டேனே, என்ன பண்றது?”

“கரைக்குப் போய் வாங்கிவா” என்று பெரியவர் சொல்லி விட்டால்..!

சிறுவனுக்கு நினைத்துப் பார்க்கவே சிரசே சில்லிட்டது.. பெரியவர் எந்த சமயத்தில் என்ன சொல்வார், எதைச் செய்வார் என்பது பரம இரகசியமாயிற்றே! இந்த இருட்டில் கரைக்குத் திரும்பிப் போனால்.... பயத்தில் எலும்புதான் மிஞ்சும்! சிறுவனுக்கு வாழ்வில் முதன் முதலாக மரண பயம் தோன்றியது போலிருந்தது! ஓஹோ! இதுதான் மரண பயமா?

பெரியவர் குரலைக் கனைத்துக் கொண்டார்!

“ஆமாண்டா! இதுதான் மரண பயத்தோட ஆரம்பம்! ஆனா குருகிட்ட இருந்தாக்க இதெல்லாம் வரக் கூடாதே! அப்படியும் வந்தாக்க குருமேல நம்பிக்கை போறாதுன்னு அர்த்தம்!”

சிறுவனுக்குக் கிலி பிய்த்துக் கொண்டது.. வயிறு கலக்கி, கலங்கி பேதி கூட ஆகும் போல் தோன்றியது.. He had millions of butterflies in his stomach! முன்பு செஞ்சியில் நிகழ்ந்த அலறும் அனுபவங்கள் அவனுக்கு மலரும் நினைவுகளாயின!

“ஏண்டா அப்பனே!.... .” பெரியவர் சற்றே நிதானித்தார்!

 ஆம்! அவன் பயந்தது நிகழ்ந்தே விட்டது!

எள் எனவே ஓது(டு) !

“இந்தா ரெண்டு ரூபா! தர்பையும், எள்ளும் வாங்கிக்கிட்டுச் சட்டுனு வந்துடு பார்க்கலாம், ஓடு!”

இருட்டில் அவர் கைகளிலிருந்து இரண்டு ரூபாய் நோட்டு பரிமாறியதுதான் அவனுக்குத் தெரியும். மற்றபடி அந்த கும்மிருட்டில் பெரியவரின் சுவடே அவனுக்குத் தெரியவில்லை! அவரும் தெரிய விடவில்லையோ?

(குரு எங்கே? குரு எங்கே? என்று கேட்கின்றீர்களே, அவர் இவ்வளவு சோதனைகளைத் தந்தால் அவரிடம் நிலைத்து நிற்பீர்களா? நீங்கள் இவ்வகையில் சிந்தித்துப் பார்க்கவே இறைவன் இவ்வளவு அனுபூதிகளை இறை அன்னமாய், குருவண்ணமாய்ச் சமைத்துத் தருகின்றான்! ஆன்ம தாகம் எடுத்து இறைப் பசி பூண்டால்தான் இதன் மகிமை புரியும்! அதுவரையில் குருவைத் தேடுகின்ற காலமானது உங்களை இத்தகைய குருகுலவாசத்திற்காகப் பக்குவப்படுத்திடவே!)

“எள் வாங்கி வா!” என்று பெரியவர் சொல்லிடவே அவ்வளவுதான், சிறுவன் உள்ளூர அலறி விட்டான்! அவர் சொன்னபடி எள்ளும், தர்பையும் வாங்கி வராவிட்டால் நிச்சயமாக இனி அவர் கண்களில் தென்பட மாட்டார். இந்த ஜன்மத்தில் அவரை மீண்டும் பார்க்கவும் முடியாது! மரியாதையாக அவர் இட்டதை குரு ஆணையாக பயமோ, குளிரோ, சிங்கமோ, புலியோ – எதுவாயினும் சரி – நேரே கரைக்குப் போய் எள்ளும் தர்பையும் வாங்கி வந்தால்தான் இந்த இரவில் அவர் கண்களுக்குத் தென்படுவார். இல்லாவிட்டால் கும்மிருட்டில் பயந்து பயந்து இங்கு கடுங்குளிரில் வாடவேண்டியது தான்!

“ம்.... ம்.... ஜல்தி.. ஜல்தி... இந்த சுப நேரத்தோட மகிமை தெரியாததுனாலத் தாண்டா ஏதேதோ குப்பை மாதிரியெல்லாம் எண்ணங்கள் உனக்கு வருது.... ஓடு .... ஓடு....!” பெரியவரின் குரல் எங்கோ அசரீரியாகக் கேட்டது! சிறுவன் பிய்த்துக் கொண்டு ஓடினான்!

His Master’s Voice!  ஆனால்... மீண்டும் சோதனை! கொஞ்ச தூரம் ஓடியதுமே !

வருடங்களைக் குறிக்கும் படிகள்
சுவாமிமலை

“ஏண்டா கரையப் பாத்து ஓடுவியா, கரைக்கு எதிர்த்த திசையப் பாத்து ஓடறியே...!”

பெரியவரின் அசரீரிக் குரல் – அசரீரி என்ன – உண்மையான குரலே மிகமிக அருகிலேயே துல்லியமாகக் கேட்டது... That’s Sathguru! Place impeccable faith in him, he becomes omnipresent like Him by His Order!

சிறுவனுக்கு நன்கு வெலவெலத்து விட்டது!

“கரைக்கு எதிர்ப்புறம் உள்ள காட்டை நோக்கியா இருட்டில் ஓடினோம்? இருக்கின்ற பயம் போதாதென்று இதுவேறா! நல்ல வேளை 200 அடி ஓடியதும் வாத்யார் சொன்னாரே! அதுவும் முழுசுமாக ஓடுவதற்கு முன் சொன்னாரே, எதிர்க் கரைக்கு மட்டும் போயிருந்தால்...!”

சிறுவனுக்கு நினைக்கவே நெஞ்சில் ரத்தம் உறைந்தது!

“சொன்னதைச் செஞ்சால் உன் பின்னாடி நாங்க நிற்போம்! ... இல்லாட்டி நாங்க தள்ளியே நிற்போம்!”

பெரியவர் அடிக்கடி உதிர்க்கும் divine maxim இது! அடிக்கடி அவர் மெய்யாக்கிக் காட்டும் குருவாய் மொழியும் கூட!

உருஇன்றி ஒலியைக் காண்!

“அப்பாடி! இருக்கின்ற பயத்தில் நல்ல வேளை அவர் உருவம் தெரிகின்றதோ, இல்லையோ அவர் குரலாச்சும் நம்ப பின்னாடி வந்தா அதுவே போதும்! பாதி பயம் தெளிஞ்சிடும்! மீதி ஜயம்தான்!”

சிறுவன் தன்னைத் தேற்றிக் கொண்டான்!

“ஆமாண்டா! இந்த positive development வர்றதுக்குத் தாண்டா உன்னை கயா வரைக்கும் 700 மைல் தாண்டி இந்த இருட்டுல கூட்டிக்கிட்டு வந்தோம்! இந்த development நம்ப ஊரு தட்சிண கயாவுல தென்னிந்திய கயான்னு பெரியவங்க சொல்ற பூவாளூரிலேயே வந்திருந்தா, நம்ப ஏன் பாஷை தெரியாத இந்த கயாவுக்கு வந்து இப்படிக் கஷ்டப்படணும்? இங்க நீயும் நானும் ஏன் வரணும்?  நீயும் இப்படி பயத்துல வெலவெலத்துக் கிட்டே ஓடணும்! எல்லாம் உன் தலையெழுத்துடா! குரு மேல நம்பிக்கை இன்னமும் உனக்கு சரியா வரலையே, வந்தா இப்படியெல்லாம் நடக்குமா? என்ன செய்யறது?”

காட்டை நோக்கி இருட்டில் தவறாக ஓடிய சிறுவன் திரும்பி அலறி அடித்துக் கொண்டு கரையை நோக்கி ஓடுகையில் அருகிலேயே பெரியவர் பேசிக் கொண்டே வருவது மிக, மிகத் தெளிவாகக் கேட்டது! பெரியவர் சிரித்துக் கொண்டே பின் வருவதும் பக்கத்திலேயே பேசிக் கொண்டே வருவதும் போல் அவர் குரல் சிறுவனுக்கு நன்றாகத் துல்லியமாகக் காதில் விழுந்தது.

ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சிறுவன் பெரியவரைக் காண்பதும் குறைந்தது.. அவர் குரல் மட்டும் கேட்கத் தொடங்கியது... அப்பப்பா! குருகுலவாசத்தில் தான் எத்தனை எத்தனை சோதனைகள்! இவற்றையெல்லாம் தாண்டினால் தேவாமிர்தம்தான்!

ஒரு வழியாய் மினுக் மினுக்கென்று ஹரிக்கேன் விளக்குகள் தெரிந்த கரைக்கு வந்த சிறுவன் ஹிந்தி தெரியாததால் தட்டுத் தடுமாறி அலைந்து ஏதேதோ சொல்லித் தனக்கு ஓரளவு தெரிந்த தெலுங்கையும் கயாவில் கரைத்து(!)த் தர்பை, எள்ளை வாங்கினான், மிச்சச் சில்லறை கொஞ்சம் இருந்தது.!

நவகிரக படிக்கட்டுகள்
திருவீழிமிழலை

A Fruitful decision! அப்போது ஒரு வயதான கிழவர் ஒரு கிரிணிப் பழத்தை நீட்டிடவே... அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது!

“பிச்சைக்காரங்களுக்குக் காசு போடாதே! பீடி, மது குடிச்சு உடம்பைக் கெடுத்துப்பான்! அந்தக் கெட்டதுலேயும் உனக்குப் பங்கு வந்துடும்! வேணும்னா பொருளாக் கொடு! உணவாக் கொடுக்கறது the best! அதுவும் பசியாத்தறப் பொருளாக் கொடு! தர்பை, பூ, எள், பால், சுண்ணாம்பு இதையெல்லாம் காசு கொடுக்காம சும்மா வாங்கக் கூடாதுடா....! எப்போதும் ரீங்காரமிடும் பெரியவரின் குருவாய் மொழிகளிவை!

கிரிணிப் பழம் போன்றிருந்த அதனை மிச்சக் காசிற்கு கொஞ்சம் risk(!!!) எடுத்து வாங்கிக் கொண்டு தர்பையையும் எள் பொட்டலத்தையும் பழத்தைச் சுற்றித் தாங்கலாக வைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய்ச் சிறுவன், பல்குனி ஆற்றினுள் பாய்ந்தான்... படிக்கட்டுக்கு 90 டிகிரி நேரே போனால் கும்மிருட்டில் பெரியவரைப் பிடித்திடலாம் என்பது அவன் (மனக்) கணக்கு! ஆற்றின் நடுவில் சிறு ஓடைகளாய் ஆங்காங்கே பாதம் நனையும் அளவிற்கு மட்டுமே நீர் இருந்தது.. இருப்பினும் ஏதோ நெடுந்தூரம் ஓடியது போலிருந்தது... அவனுக்கு! நல்ல வேளை அந்த இருட்டில் பெரியவர் அவனை ரொம்பவும் சோதனைப்படுத்த விரும்பவில்லை போலும்!

“வா, ராஜா, உன்னை ரொம்ப விரட்டி விரட்டி வேலை வாங்குறேன்தானே!”

இவ்வளவு tension கொடுத்தாலும் பயங்கரம் ததும்பிய அந்த இருட்டிலும் பெரியவருடைய அன்பு நன்கு கொப்புளித்துப் பிரகாசித்தது! அவர் குரலைக் கேட்டதும்தான் அவனுக்குத் தெம்பு வந்தது. ஆனால் அதே சமயத்தில் திகிலும் பயமும் வழக்கம்போல் சேர்ந்து விட்டன! பெரியவரிடம் எதுதான் நிரந்தரம், அவருடைய பரிசுத்தமான அன்பைத் தவிர!

Heavenly falls!  சிறுவனுக்குத் திடீரென்று அச்சம் குடிகொள்ளக் காரணம் இல்லாமல் இல்லை! கிரிணிப் பழத்தை இரு கைகளிலும் உயரப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தமையால், தர்பையும், எள்ளுப் பொட்டலமும் நடுவில் எங்கோ நழுவி விழுந்து விட்டன! அவனிடம் எஞ்சியது கிரிணிப் பழமே! சிறுவன் வெலவெலத்து அலறி விட்டான்.. வாழ்க்கையின் எல்லைக்கே வந்தது போலிருந்தது அவனுக்கு!

பெரியவர் என்ன செய்யப் போகிறாரோ? இருட்டானதால் அவன் என்ன வைத்திருக்கிறான் என்பதும் பெரியவருக்குத் தெரியாதே! நைஸாக நழுவித் திரும்பிப் போய் தர்பையும் எள்ளும், வாங்கி வந்துவிடலாமா என்று கூடச் சற்றே யோசித்தான்! ஆனால் அவருக்குத் தெரியாமல் இந்தப் பிரபஞ்சத்தில் எதைத்தான் செய்ய முடியும்?!

“கையில் ஒரு பைசா கூட இல்லையே! மிச்சம் இருக்கின்ற காசுக்கும் பெரியவரிடம் கூடச் சொல்லாமல் பலத்த risk! எடுத்துக் கிரிணிப் பழம் வாங்கி வந்து விட்டோமே., ஒரு வேளை நள்ளிரவில் ஆற்றுப் படுகையிலேயே அவர் படுத்திட்டால் பசியைத் தணிப்பதற்காகவாவது பழம் உதவுமே என்ற நல்ல எண்ணத்தில்தானே வாங்கினோம்! அதற்கும் கூட பெரியவர் ஏதாச்சும் சொல்வாரோ” , என்ற பயமும் இன்னமும் அவனிடம் தொற்றிக் கொண்டு இருக்கிறதே!

“டேய், அந்தக் கிரிணிப் பழத்தை இப்படிக் கொடு!” என்று பெரியவர் கேட்டிட... சிறுவன் திடுக்கிட்டான்!

“ஆமாம் நான் கிரிணிப் பழம் வாங்கினேன் என்று இவருக்கு எப்படி தெரியும்? இருட்டில் யார் யார் எங்கிருக்கிறார் என்றே தெரியாத போது இந்த கிரிணிப் பழ ஸப்ஜக்ட் அவருக்கும் எப்படித் தெரிந்தது?”

சிறுவன் திகைத்தான்! நிச்சயமாகக் கடவுள் இருக்கிறார் என்று தன் மனம் தனக்கே பாடல் சொல்வது கண்டு அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது! கடவுளே எதிரில் குரு வடிவில் வந்தால்கூட கலியுக மனம் இப்படித்தான் திணறும்! சிறுவன் தட்டுத் தடுமாறி, கைகளைத் துழாவி அவருடைய இருப்பிடம் அறிந்து பெரியவரிடம் பயபக்தியுடன் கிரிணிப் பழத்தை கொடுத்தான்.. அப்பாடி! ஒரு பெரிய problem successfully solved! சிறுவன் பெரு மூச்சு விட்டான்!

தேவ தர்ப்பணத் திருக்காட்சிகள்! அடுத்த சில விநாடிகளில் அங்கு அசாத்ய மௌனம் நிலவியது. திடீரென்று மந்திர ஒலிகள் கேட்டன. தர்ப்பண மந்திரங்கள் என சிறுவன் அவற்றை நன்றாக உணர்ந்தான்! ஏனென்றால் அவற்றையெல்லாம் சொல்லிப் பெரியவர் பலருக்கும் தர்ப்பணம் செய்து வைப்பதைச் சிறுவன் நன்கு கவனித்திருக்கின்றான். பளிச்சென்று ஒரு மின்னல் அடித்திட... திடீரென்று அங்கே வானில் குபுகுபுவென்று மேகங்கள் திரண்டன! எங்கிருந்துதான் அவ்வளவு மேகங்கள் கூடி வந்தனவோ தெரியவில்லை!

கிரிணி, தர்ப்பண சக்தி தாரிணி! சட சடவென்ற அமிர்த மழை பொழிந்தது! அந்த மின்னல் ஒளியில்தான் சிறுவன் ஒன்றை கவனித்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.. ஆம்... யாரிடம் கிரிணிப் பழம் வாங்கினானோ, அவர்தம் பழத் துண்டுகளை வைத்துப் பெரியவருக்கு  ஆம் பெரியவருக்கே தர்ப்பண மந்திரங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார்! மின்னல்கள் விட்டு விட்டு வந்தமையால் அவ்வொளித் திரட்சியில் பலவிதமான யோக நிலைகளில் அங்கு தர்ப்பண பூஜைகள் நடப்பதை அவனால் காண முடிந்தது கிரிணிப் பழத்தை வைத்தா தர்ப்பண அர்க்யம் கொடுப்பார்கள்! சிறுவனுக்கு உலகமகா அதிசயமாக இருந்தது.

உண்மையில் அங்கு மகா இருட்டாக இருந்தாலும் மின்னல்கள் கோர்வையாக வந்தமையாலும் அவனுக்கென திவ்யமான தேவ காட்சிகள் கிட்டுவது போல தொடர்ந்து அங்கு ஒளிப் பிரகாசம் தோன்றிப் பல தர்ப்பண பூஜைகள் நடக்கின்ற காட்சிகள் அவனுக்கு நன்றாகத் தெரிந்து கொண்டிருக்க... அப்பேரொளியின் ஊடே பெரியவரே அர்க்யம், தர்ப்பணங்கள் கொடுக்கும் காட்சியை அவன் கண்டான். கிரிணிப் பழம் கொடுத்தவருடன் மேலும் ஒரு சிலர் அங்கு மந்திரங்கள் ஓதுவதைக் கண்டு சிறுவன் வியப்புற்றான். இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்.?

ஸ்ரீமனோன்மணி அம்மன் திருநாவலூர்

யாரிந்த பெரியோர்கள்? கணீரென்று மந்திர ஒலிகள்! வடமொழி, தமிழ் மறை ஒலிகளும் அங்கு கூடியமை அவனுக்குப் பரமானந்தத்தைத் தந்தது.. கொட்டும் மழையில் கயாவின் இறுக்கமான குளிரில் வாடுகின்றோம் என்ற எண்ணம் அவனுக்குச் சற்றும் தோன்றவில்லை! கயா திருத்தலம் தோன்றியதே கயாசுர மகரிஷியின் திருமேனியின் மேல்தானே! கயாசுர மகரிஷி வான்நோக்கிப் படுத்திருக்க அவருடைய மார் மேனியில் தானே அனைத்துத் தர்ப்பண பூஜைகள், வேள்விகள், யாகங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களால் நிறைவேற்றப்பட்டுப் புனித கயாவே தோன்றியது.!

கயாசுர மகரிஷி போலவே பெரியவர் பல்குனி ஆற்றில் சயனக் கோலம் கொள்ள அவருடைய சிரசிலும், மார்பிலும், தோளிலும், நாபியிலுமாகக் கிரிணிப் பழத் துண்டங்கள் வைக்கப்பட்டு பல்குனி ஆற்றுத் தீர்த்தத்துடன், அமிர்த மழைத் துளியும் பொழிந்திட, கூடியிருந்த ஒரு சிலரும் தர்ப்பண மந்திரங்களை ஓதி பூஜைகளைச் செய்தனர்..!

ஸ்ரீஆயுர்தேவி அம்பிகை வந்தாள்!  

எத்தனை மணிநேரம் சிறுவன் அங்கிருந்தான், எவ்வளவு நேரம் அவ்வரிய தேவ காட்சிகளை அவன் கண்டான் என்று அவனுக்கே தெரியாது... திடீரென்று மற்றொரு பெரிய மின்னல் பளிச்சிட.. ஆங்கே ஸ்ரீஆயுர்தேவியின் அதியற்புதக் காட்சி கிட்டியது! ஆம்! அம்பிகையின் வலது முதல் திருக்கரத்தில் பொலிபவர்தாமே ஸ்ரீகயாஸுர மஹரிஷி! ஸ்ரீஆயுர்தேவியிடமே கரப்பீடம் பெரும் பாக்யம் பெற்றவர் எனில் என்னே கயாஸுர மஹரிஷியின் மகிமை!

அவனை அறியாமலேயே ஏதோ ஒரு பித்ரு லோலத்தில் ஒளிப் பிரகாசத்துடன் நிகழ்கின்ற தர்ப்பண பூஜையைக் கண்டு நிர்விகல்ப யோக சமாதி நிலையைப் பூண்டவன் போல் தேவ ஒளியில் லயித்துக் கிடந்த சிறுவனை,

“வாடா, நம்ப வந்த வேலை முடிஞ்சது திரும்பிடலாம் , வா,வா....!”  என்ற பெரியவரின் அமுத மொழிகள் தாம் அவனைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தன!

“வா, வா போகலாம்..! என்று கூறியவாறே பெரியவர் சிறுவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கரையை நோக்கி நடந்தார்..! “ நள்ளிரவிலும் கொட்டும் மழையிலும் அவர் கரையை நோக்கி நடக்கின்ற நளினத்தைக் கண்டு சிறுவன் அயர்ந்தே விட்டான்! வந்த களைப்பில் எதுவும் சாப்பிடாது கரையில் கயா ஆலயத்தின் கரையோர மரத்தடியில் படுத்த சிறுவன்...

... கண் விழித்தபோது, தான் வாரணாசிக் கங்கைக் கரையில் இருக்கக் கண்டு அதிசயித்தான்!

“ஏண்டா, கயாசுர மஹரிஷி, அஹிர்புத்ன்ய மகரிஷி எல்லாருமே கயாவுக்கு  வந்திருந்தாங்களே, பல்குனி நதியில தர்ப்பண, அர்க்ய பூஜையெல்லாம் பண்ணி வச்சாங்களே அவங்க கை, கால்ல விழுந்து முக்தி கேட்டு வாங்கியிருக்கலாமில்ல! இவ்வளவு தூரம் கயாவுக்கு வந்துட்டு, வந்த தெய்வீகச் சான்ஸையும் miss பண்ணிட்டியே! இதெல்லாம் எத்தனை கோடி ஜன்மம் எடுத்தாலும், திரும்ப வருமா?”

சிறுவன் வியந்து நின்றான்! கூடவே (பொய்க்) கோபமும் அவனிடம் கரை புரண்டது!

தென்காசி மகாத்மியம்

வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!! தென்காசி மகாத்மியத் தொடர் நிறைவு பாகம்!

வெற்றி தருவது வேறு, காரிய சித்தியுடன் வெற்றிக்கு வடிவழகைத் தருவது வேறு! அவரவருடைய லௌகீக விருப்பங்களுக்கேற்பப் பூர்வ புண்ய சக்திகளின் பலன்களாக வெற்றிகளாகக் கிட்டுவது உண்டு. ஆனால் இது நிரந்தரமான வெற்றியாகவோ அல்லது பவித்ரமான ஆனந்தத்தையோ, மனசாந்தியையோ தருவதாக இருப்பது கிடையாது.. ஆனால் வடிவழகு கூட்டப்படுகின்ற வெற்றியானது காரிய சித்திகளின் பலன்களாக ஏற்பட்டு நல்ல ஆத்ம சந்தோஷத்தை நிரந்தரமாகத் தருகின்றது.. எனவே நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நற்காரியத்திலும், நற்செயலிலும் வடிவழகைப் பெற்றுத் தருவதற்காக குறித்த ஆலயவழிபாட்டு முறைகளைக் கடைபிடித்திடில் பரம்பொருளே சுயம்பு லிங்க மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கின்ற தலமே தென்காசி ஸ்ரீவிஸ்வநாத மூர்த்தி சிவாலயமாகும்.

இலஞ்சி முருகனின் ஆலயத்திலிருந்து நீங்கள் காண்கின்ற தென்காசி ராஜ கோபுரம் வடிவமும், தென்காசி சிவாலயம் அருகிலிருந்து பார்க்கின்ற ராஜகோபுரமும் நிச்சயமாக வேறுபட்டிருக்கும்.. இரண்டும் ஒரே ராஜகோபுரம்தானே, எவ்வாறு மாறுபடமுடியும்? இலஞ்சி ஆலயத்தைச் சுற்றிக் (ஸ்)கந்த பாவன ஜீவக் கதிர்கள் நிலவுகின்றன. இங்கு கோவிலுக்கு எதிரே உள்ள தங்க அரளிச் செடியிலிருந்து வெளிவருகின்ற ஸ்வர்ண ரேகைகள்யாவும் ஸ்கந்த ஜீவ தீப ஒளிகளே! இவைதாம் சிவஜோதிக் கதிர்களாகப் பரிமாணம் செய்து ராஜகோபுரத் தரிசனத்தின் மேன்மையை இவை ஊட்டி உணர்த்துகின்றன!

தென்காசி சிவாலயம்

இவ்வாலயத்தை இறையருளால் தோற்றுவித்த பராக்கிரம பாண்டியன் ஸ்கந்த குளிகா யோகத்தில் தக்க சற்குருவின் துணையால் சிறப்புற்று விளங்கியவன். இதனை முறையாகப் பயின்று நன்முறையில் சிவபூஜைகளைக் கடைபிடித்து நாட்டு மக்களுக்கு தார்மீகமான அறநெறி ஆட்சியைத் தந்தமையால்தான் அவனுக்கு அபூர்வ மந்திர சித்திகள் அடங்கிய குளிகை ஒன்று வீர கண்ட விந்தையனார் என்ற சித்தர்பிரானின் குருவருளால் இறைவனிடமிருந்தே கிட்டியது. இதன் மூலம் தினந்தோறும் காசிக்குச் சென்று வருகின்ற அரும்பெரும் பாக்கியத்தைப் பெற்ற பராக்கிரம பாண்டியன் இறைலீலையால் காசிக்கு நிகரான தலமாக விளங்குகின்ற தென்காசியின் மகிமையை உணர்ந்து இங்கு நிறைந்திருக்கும் லிங்க பிரதிஷ்டா சக்தியையும் தெய்வீகச் சிந்தனையால் உய்த்துணர்ந்து இத்திருக்கோயிலை எழுப்பினான். காசியின் கங்கை நீரோட்டத்தில் பூமிக்கு அடியில் உள்ள நாம் அறியாத அடித்தள தேவநீரோட்ட சக்திகள் நிறைய உண்டு.. கோடிக்கணக்கான ஜீவன்களுடைய பாவங்களைக் கரைக்க வல்ல தீர்க்கமான தேவ புண்ய சக்தியை கங்கை நதி பெற்றுள்ளது என்றால் அதனுடைய அடித்தள நீரோட்டமானது எத்தகைய தெய்வீக சக்தியைக் கொண்டிருக்கும்! இவ்வரிய அடித்தள நீரோட்ட தேவ ஈர்ப்பு சக்தியானது கங்கை நதிப் பிரவாகம் இல்லாத இடங்களில் ராஜகோபுரம் மூலமாகப் பரவெளிக்கு அளிக்கின்ற மகத்தான சிவஜோதி கோபுரமே தென்காசி சிவத்தல ராஜ கோபுரமாகும்.

கோடானு கோடி நட்சத்திர மண்டங்களிலிருந்து வெளிவருகின்ற சூரிய ஒளியை விடப் பலகோடி மடங்கு தேவ சக்திகள் நிறைந்த நட்சத்திர கிரணங்களைத் தன்னுள் ஈர்த்து அவற்றை ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் புண்ணிய சக்திகளாக மாற்றித் தருகின்ற வல்லமை கொண்டதே தென்காசி ராஜகோபுரமாம்.. இதனால் தான் கோபுர தரிசனம் கோடி பாபநாசனம் என்று உரைத்தார்கள். இவ்வாறாக உலகெங்கும், பாரதமெங்கும் பரந்திருக்கின்ற ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சித் திருவுருவங்களுக்கு ஆதி மூல சுயம்பு மூர்த்தியாக தென்காசி ஸ்ரீவிசாலாட்சி சமதே ஸ்ரீவிஸ்வநாத லிங்க சிவமூர்த்தியே ராஜகோபுரத்திலிருந்து வெளிவருகின்ற கிரணங்கள் மூலமாகவும் ராஜகோபுர  அடித்தள நீரோட்ட கிரணங்கள் மூலமாகவும் வாரண கங்கா சக்தியை அளித்து ஜீவன்களுக்கு அருள்பாலிக்கின்றார்..

இறைவனிடம் நேருக்கு நேர் உரையாடும் பாக்யம் பெற்ற சிவனடியாராய் மன்னனாக மிளிர்ந்து இங்கு வருகின்ற இறையடியார்களின் பாதம் பணிந்து வணங்குகின்ற அடக்கம், பணிவு, பொறுமை எல்லாம் கொண்டவனே பராக்கிரம பாண்டியனாவான்.. தென்காசித் திருத்தல மகாத்மியத்தைப் பரப்புவோர்க்கும், எழுதுவோர்க்கும், உரைப்போர்க்கும், உணர்த்துவோர்க்கும், தம்முடைய தாள் பணிந்த அடைக்கல நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மேலுலகில் ஓர் உத்தம நிலை கொண்டிருக்கும் பராக்கிரம பாண்டியன் உணர்விக்கின்றான். இவ்வகையில் சேவை ஆற்றுவோர்க்குப் பராக்கிரம பாண்டியனே அளிக்கின்ற இறை நன்றித் திருப்பாடல் இதோ!

‘சேலேறிய வயல் தென்காசி ஆலயம்
தெய்வச் செயலாலே சமைந்த திங்கென்
செயல் அல்ல அதனை இன்னும்
மேலே விரிவு செய்தே புரப்பார்
அடி வீழ்ந்தவர் தம்பால் ஏவல் செய்து’
பணிவேன் பராக்ரம பாண்டியனே!’‘

- (பராக்ரம பாண்டிய மகாராஜாவின் தென்காசி ஆலய சிலாசனம்!) எனவே இவ்வகையில் தென்காசி தரிசனத்திற்கு முன்னால் இத்தொடரில் சித்புருஷர்கள் அருளிய வகையிலே அளிக்கப்பட்டுள்ள அனைத்துச் சிவத்தலங்களையும் தரிசித்து இறுதியில் வெற்றிக்கு வடிவழகு கூட்டுகின்ற தென்காசி சிவநாதரைத் தரிசித்துப் பல உத்தம நிலைகளை அடைந்து சற்குருவின் அருளால் இறை நெறியில் துய்ப்போமாக! தென்காசியைச் சார்ந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஓய்வு பெற்றபின் கண்டிப்பாக தென்காசியில் தங்கி தென்காசிநாதரின் இறைப் பணிகளில் ஒன்றி இறைப் பரம்பொருளின் திருவருளைத் துய்த்திட வேண்டுமாறு திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்..! ஈசன் அருளால் இவ்வரிய தென்காசி மஹாத்மியம் பரிபூரணம்.!

ஸ்ரீசட்டைநாத சித்தர்

ஸ்ரீவடுகநாதர் உபாசனை மிகவும் கடினமானதாம்! இவ்வுபாசனையில் தலை சிறந்து விளங்கும் சித்புருஷர்தாம் சட்டை நாத சித்தர்! ஸ்ரீரங்கம் போன்ற சிலதலங்களில் சூட்சும ஜீவாலயங்களைக் கொண்டுள்ள உத்தம சித்புருஷர்! 18 சித்தர்களில் ஒருவர்! வ்ருஷ (விஷு) வருடத்தில் தாம் பல கோடி யுகங்களாக மானுட வடிவில் பூலோகம் வந்து சங்குநாதம் கேட்கின்ற, சங்கால் தர்ப்பணம் அளிக்கின்ற இடங்களிலும் பிரசன்னமாகித் தம்முடைய யோகத் தபோ பலன்களை அருளாசியாக வழங்குகின்றார். திருவாதிரை, திருவோணம், புனர்பூசம், புதன்கிழமை, அமாவாசை, வாஸ்து நாள் போன்ற விசேஷமான நாட்களிலும் குறிப்பாக வ்ருஷ (விஷு) வருடத்தில் இந்நாட்களில் ஸ்ரீசட்டைநாத சித்த மாமுனி தர்ப்பயாமி என்று 18 முறைகள் ஓதி கீழ் நோக்கிய சின்முத்திரை வடிவில் வலது கையைத் தாழ்த்தி வைத்துக் கைகளில் நீரை வார்த்து அர்க்கியம் அளித்தல் சிறப்புடையதாகும்... ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் போல வலது ஆள்காட்டி விரல் (குருவிரல்), கட்டை விரல் (சுக்கிர விரல்) நுனிகளைச் சேர்த்து ஏனைய மூன்று விரல்களையும் நேர்ப்படுத்தி வடித்தலே சின்மய முத்திரையாகும். குறிப்பாக மாயைகளில் சிக்கி மனம் பேதலித்து எவ்வித வாழ்க்கை லட்சியமின்றி அல்லது கொண்டுள்ள நல்ல இறை லட்சியத்தில் பிடிப்பின்றி மனம் போன போக்கில் வாழ்வோர் ஸ்ரீசட்டைநாதர் சித்தருக்குத் தினந்தோறும் சித்த/அமிர்த யோக நேரத்தில் அர்க்யம் அளித்திடல் வேண்டும்! பித்ருக்களுக்குத் தர்ப்பணம் போல தெய்வாதி, தேவ தேவாதியர்க்கும், மகான்கள், யோகியர், சித்தர்களுக்கும் அர்க்யம் அளிக்கப்பட வேண்டும்! தினந்தோறும் கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்களைக் கொண்டு ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஇடியாப்ப சித்தர், ஸ்ரீசட்டைநாதர், ஸ்ரீவசிஷ்டர் போன்ற சித்தர்களுக்கும் , மகரிஷிகளுக்கும் கைகளில் நீர் வார்த்து அர்க்யம் அளிப்பது அவர்களுடைய மகத்தான ஆசிகளைப் பெற்றுத் தரும்!

திப்பிராஜபுரம் ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரர்

விக்ரம ஆண்டிற்கான திருத்தல ஆலயமே கும்பகோணம் அருகில் உள்ள திப்பிராஜபுரம் ஸ்ரீவிக்ரம சோழீஸ்வர சிவாலயமாம்! கம்ப்யூட்டர் துறையில் வைரஸ் தீவினைகளைக் களைய உலகமே அருள் பெற வேண்டிய உத்தமத் தலம்!  விக்ரம ஆண்டில் ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரரைப் பலரும் முறையாக வழிபட்டு வந்திருக்க வேண்டும். எனவே இனியேனும் தாமதம் செய்திடாது இந்த விக்ரம ஆண்டு நிறைவு பெறுவதற்குள் திப்பிராஜபுரம் ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரருக்கு உரித்தான அபிஷேக, ஆராதனைகளை, இறைத் திருப்பணிகளை ஆற்றிடுங்கள்! அந்தந்த ஆண்டில் களைய வேண்டிய கர்மவினைகளைக் களைவதற்கான, சேர்க்க வேண்டிய புண்ய சக்தியைச் சேர்ப்பதற்கான இறைப் பணிகளை, சமுதாயப் பணிகளை, தான, தர்மங்களை நிறைவேற்றினால் கர்மபாரம் தணியும். இல்லையெனில் கர்மச் சுமை பெருத்து விடும்!

ஸ்ரீஆடிப்பூர அம்மன் பட்டீஸ்வரம்

விக்ரம, வ்ருஷ (விஷு) ஆண்டுகளே கம்ப்யூட்டர் துறையில் எதிர்வினைகளாக விளங்குகின்ற வைரஸ்களைக் களைகின்ற மகத்தான ஆண்டுகளாகும்! நாம் கடந்த இதழில் அளித்துள்ளது போல கண்டராதித்ய சோழ மாமன்னனே இன்றைக்குக் கம்ப்யூட்டர்த் துறையில் இப்பூவுலகின் முடிசூடா மன்னனாகப் பிறப்பு கொண்டு திகழ்கின்றான். தம் குருநாதராம் ஸ்ரீகருவூர்ச் சித்தர் பெருமானின் அருளாணைப்படி தான் அறிந்தோ அறியாமலோ தன் வாழ்வில், செய்த வினைகளுக்குப் பிராயச்சித்தம் பெறுவதற்காக இச்சோழப் பேரரசன் தன் வாழ்நாளின் இறுதியிலும் இத்தலத்திலேயே தங்கியிருந்து மகத்தான இறைப்பணிகளையும் தான தர்மங்களையும் செய்து ‘யாம் மீண்டும் பிறப்பு எடுத்தால் கருவூர்ச் சித்தரின் அருள் அரவணைப்பில் தோன்றி இப்பூவுலகிற்கு மகத்தான இறைப்பணிகளை ஆற்றிட வேண்டும் என்பதையே உத்தம நல்வரமாகப் பெற்ற திருத்தலமே திப்பிராஜபுரமாகிய விக்ரம சோழீஸ்வரமாகும். இதற்குப் பெருந்துணை புரிபவர் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகிய கருவூர்ச் சித்தரே! சற்குருவே அனைத்துப் பிறவிகளிலும் நற்காரியங்களுக்குத் துணையாய்த் தொடர்ந்து வருகின்றார் என்பதையும் இதன்மூலம் உணர்ந்திடுக! எனவே விக்ரம ஆண்டில் களைய வேண்டிய தீவினைகளைக் களைந்து தருமாறு ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரரை வேண்டி, வெண்பட்டு ஆடைகளைச் சார்த்தி, திருஞானசம்பந்தருடைய இடர்களையும் பதிகங்களைப் பாடி, ருத்ரம், சமகம் போன்ற வேத மந்திரங்களை ஓதி, வெண்பட்டு ஆடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுதல் வேண்டும்.

வெண்திரையாகக் கம்ப்யூட்டரின் monitor விளங்குவதால் இங்கு சுவாமிக்கு வெண்பட்டாடைகளைச் சார்த்தி உழவாரப் பணிகளோடு தக்க வழிபாடுகளை மேற்கொண்டிட கம்ப்யூட்டர் துறையில் வைரஸால் ஏற்படும் பலத்த தீவினைகள் தடுக்கப்பட்டு உலகம் காக்கப்படும்.. நம்மிடம் தான் கம்ப்யூட்டர் இல்லையே, நாம் ஏன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று எண்ணாதீர்கள். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பல துறைகளிலும் பஸ், ரயில் டிக்கெட் புக்கிங், வரிகள், வங்கி, இன்சூரன்ஸ், அரசு/தனியார் நிறுவனங்களில் கம்ப்யூட்டர் தானே வேலை செய்கின்றது.. அதில் ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால் உங்களையும் பாதிக்கும் அல்லவா! எனவே வைரஸ் காரணமாக மனித சமுதாய வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க விக்ரம ஆண்டிற்குரித்தான சுயம்பு மூர்த்தியாகப் பிரகாசிப்பவரே திப்பிராஜபுரம்  ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரர் ஆவார். விக்ரம ஆண்டு நிறைவு பெறுவதற்குள் இச்சிவாலயத்தைத் தரிசித்து இங்கு ஆற்ற வேண்டிய தான தருமங்களை, இறைப் பணிகளை மிக விரைவில் ஆற்றிடுங்கள், ஏனென்றால் மீண்டும் விக்ரம வருடம் உங்கள் ஆயுளில் தோன்றுமா என்பதை நீங்களேதன் உணர்ந்து கொள்ள வேண்டும்!

ஆகவே கம்ப்யூட்டர் மற்றும் இதன் சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்தோர் இந்த விக்ரமவருடத்தில் ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரரை வழிபட்டு கம்ப்யூட்டர் சிதைவு (virus) சக்திகளை முறியடிக்கக் கூடிய பெருவரத்தை ஈசன் அருளால் பெறுவார்களாக!

தமிழ்ப் புத்தாண்டு விஷூ

இக்கட்டுரையைப் புத்தாண்டு தினத்தன்று பக்தி சிரத்தையுடன் படிப்பதும் மிகச் சிறந்த பஞ்சாங்க படனமாகின்றது!

வ்ருஷ வருடமா! விஷு வருடமா? நம் மூதாதையர்கள் நமக்குக் குறித்துத் தந்துள்ளது வ்ருஷ வருடம் என்ற அதி அற்புதச் சொல்லேயாம்.. எவ்வாறு வெகுதான்ய வருடம் என்பது பகுதான்ய வருடமாக மாறியதோ அதுபோல வ்ருஷ வருடம் என்பதே விஷு வருடம் ஆயிற்று. எனவே இரண்டையுமே நன்முறையில் பயன்படுத்திடலாம்... வ்ருஷ வருடம், விஷு என்று சொல்லாட்சியிலும் மாறுதல் கொண்டது! வ்ருஷ் வருடம் என்று பொறிப்பதில் பல அரிய அபூர்வமான பீஜாட்சர சக்திகளும் கைகூடுவதால் வ்ருஷ வருடம் என்றே நாம் இங்கு குறிக்கின்றோம்.

புதுப் பஞ்சாங்கம் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் தொட்டு வணங்கிடுக! கடந்த ஆண்டுகளின் புத்தாண்டு ஸ்ரீஅகஸ்திய விஜய இதழ்களை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள், பல அரிய விளக்கங்களை இறையருளால் உணரப் பெறுவீர்கள்! ஒவ்வொரு தமிழ் வருடத்தின் பெயரும் பல அற்புதமான பீஜாட்சர சக்திகளைத் தன்னுள் கொண்டதாகும். சர்வேஸ்வரனின் இடது கண்ணாம் தேவமொழி போல, மகத்தான தெய்வீக மொழியான தமிழானது இறைப் பரம்பொருளின் வலது கண்ணாக விளங்குகின்ற அருட்தன்மையைப் பெற்றிருக்கின்றது என்றால் ‘அ’ முதல் ‘ன்’ வரையிலுள்ள அனைத்துத் தமிழ் எழுத்துக்களிலுமே பல கோடிக்கணக்கான பீஜாட்சர சக்திகள்  நிறைந்துள்ளமைதானே!

தெய்வத் தமிழே போற்றி!

மொழி சப்தம் வேறு, பீஜாட்சர ஒலிகள் வேறு! கால சுந்தர பீஜாட்சர சக்திகளி ஒலித் தன்மையே அறுபது தமிழ் வருடப் பெயர்களாகப் பரிமளிக்கின்றன. நாம் அறியாத தமிழ்ச் சொற்கள் எத்தனையோ ஆயிரங்கள் உள்ளன... இன்றைக்கும் சிவலோகத்தில், வைகுண்டத்தில் மகரிஷிகள், சித்தர்களின் முன்னிலையிலே தமிழ் மொழியில் உரையாடுவதிலேயே இறை மூர்த்திகள் பெரிதும் உவகை கொள்கின்றார்கள்.

ஸ்ரீமார்கண்டேய மகரிஷி

சூரிய பகவான் வந்தார்!

13.4.2001 வெள்ளிக் கிழமை நள்ளிரவு 11.54 மணிக்கு திருக்கணித முறைப்படி சூரிய பகவான் மேஷ ராசியில் பிரசன்னமாவதால் இதுவே வ்ருஷ (விஷு) வருடப் பிறப்பு நேரமாக அமைகின்றது. ஆகவே 13.4.2001 வெள்ளிக் கிழமை இரவே தமிழ்ப் புத்தாண்டு பிறந்து விடுகின்றது. இந்த அரிய தருணத்தில் உங்கள் இல்லத்தில் 12 கட்டங்களுடன் கூடிய வ்ருஷ (விஷு) வருடப் பிறப்பின் ஜாதகக் கட்டமாக, அந்த நாளில் உள்ள கிரக நிலைகளை வ்ருஷ ஆண்டிற்கான ஜாதகாலங்காரமாக – செம்மண் பூசிய பச்சரிசி மாக்கோலமாக முதல் நாளன்றே இட்டிடுக!

இப்புனிதமான நேரத்தில் சூரிய பகவானுக்கு உரித்தான அனைத்துப் பொருட்களையும் (கோதுமை, பவளம், ஆரஞ்சு நிற ஆடை போன்றவை) மாக்கோலச் சக்கரத்தின் மேஷ ராசிக் கட்டத்தில் வைத்து வழிபடுவீர்களேயானால் அரும்பெரும் நற்பலன்களைப் பெற்றிடலாம்! ஏனென்றால் மேஷ ராசி மண்டலத்தில் சூரிய பகவான் புகுகின்றபோது அவர் கண்களுக்கு இவையெல்லாம் சூட்சுமமாகத் தென்பட்டுத் தன்னை வரவேற்கின்ற பக்தி நிலை பூண்ட பூலோக ஜீவன்கள் என்ற ஆனந்தத்தால் இத்தருணத்தில் அவருடைய தெய்வீக ஆசி பல அற்புதமான அனுகிரகங்களாகக் கனியும்!

அன்புக்குக் கட்டுப்படும் ஆதித்யன்! கலியுகப் பழக்கம் போல் ஏதேனும் கொடுத்து சூரிய பகவானை ஆனந்தம் அடையச் செய்கின்றோம் என்பதல்ல இதன் பொருள்! இந்த அதியற்புதக் கோலச் சக்கர பாவனையால் வானத்தின் கிரக சஞ்சாரமே உங்கள் இல்லத்தில் நிகழ்வதால் அங்கு அன்புக்கு, பக்திக்குக் கட்டுப்பட்டு சூரிய பகவான் வந்துதானே ஆக வேண்டும்! ஸ்ரீராமரே ஸ்ரீஅகஸ்திய மாமுனியால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரம் ஓதி வழிபட்ட சூரிய பகவானே நம் இல்லத்திற்கு வந்து கிரகக் கோலத்தில் ஆவாஹனம் ஆகின்றார் என்றால் இதைவிடப் பெரும் பாக்யம் நமக்கு என்ன வேண்டும்?

திருக்கணித முறைப்படி சூரியனுடைய மேஷ ராசிப் பிரவேசத்தின் போது 13.4.2001அன்று இரவு சரியாக 11.54 மணிக்கு மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கின்றபோது உங்கள் இல்லத்தில் கண்டா மணி ஒலித்திட, சங்கொலி கேட்டிட, நாம் சங்கீர்த்தனங்கள் ரீங்காரமிட, ராம் ராம், சிவ சிவ, சுவாமியே சரணம் ஐயப்பா, ஓம் முருகா போன்ற இறை நாம ஒலிகளுடன் மேஷ ராசியில் சூரிய பகவானை வரவேற்றிடுங்கள். எப்போதும் முப்பத்து முக்கோடி தேவர்களுடைய பிரார்த்தனைகளுடன் மேஷ ராசி சஞ்சாரத்தைக் கொள்கின்ற சூரிய பகவான் இவ்வாறு மிகவும், அரிதாக பூலோக ஜீவன்களுடைய நல்லிறை ஒலி கேட்கும்போது மிகவும் பரமானந்தம் அடைகின்றார். ஏனென்றால் மனித உடலில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு பூஜைக்கும் மகத்தான பலன்கள் உண்டு.. இவற்றை ஏனைய தேவ லோகங்களில் கூடப் பெற முடியாது. தேவர்களுடைய பூஜா பலன்களை விட மனித உடலில் செய்யப்படுகின்ற பூஜா பலன்களுக்கு நிலைப்பு சக்தியும், ஈர்ப்பு சக்தியும், பலாபல சக்தியும், பலாதிபலா சக்தியும் மிக மிக அதிகம்.. நீங்கள் செய்கின்ற பூஜா பலன்களினால் சூரிய பகவானுக்கே பெருத்த நன்மைகள் ஏற்படுகின்றன என்பதும் சித்தர்கள் காட்டுகின்ற தெய்வீக இரகசியமாகும்.. என்னே அரிய மானுடப் பிறவி!

ஸ்ரீகால பைரவர் யோக விதானம் கொள்ளும் வ்ருஷ (விஷு) வருடக் காலச் சக்கரம்

மேற்குறித்த கோலமே தெய்வீக இரகசியங்களும் காரிய சித்திகளும் அமைந்த அற்புதமான வ்ருஷ (விஷு) காலச் சக்கரம் ஆகும். இந்நாளில் எங்கெல்லாம் இந்தக் காலச் சக்கரம் அமைக்கப்படுகின்றதோ அங்கு ஸ்ரீகால பைரவர் முதன் முதலில் ஆவாஹனம் ஆகிறார்! வ்ருஷ (விஷு) ஆண்டிற்கான ஜாதகக் காலச் சக்கரத்தை நீங்கள் வரைந்த உடனேயே முதன் முதலில் பிரசன்னமாவது ஸ்ரீசுந்தர கால பைரவர்தான்.. வ்ருஷ (விஷு) ஆண்டிற்குரித்தான பலாக் கனி விநாயகர் எனப்படும் தேன் உறிஞ்சும் (கும்பகோணம் அருகில் உள்ள) திருப்புறம்பிய விநாயகப் பெருமானைப் பிராத்தனை செய்தவாறே ஸ்ரீசுந்தர கால பைரவர்தான் வந்து அமர்கின்றா. ஒன்றே பரம்பொருள் என்ற உத்தம நிலை உங்களுக்குக் கிட்டும்போது சிவ, விஷ்ணு, அம்பிகை, விநாயகர், முருகன் உருவங்கள் ஒன்று சேர்ந்து விஸ்வரூபராக இறைவன் காட்சியளிப்பான்! வெள்ளிக்கிழமை, மூலம் நட்சத்திரம், சப்தமி திதி, பரிகம், யோகம் , பத்திரை கரணம், வடக்கு யோகினி, சித்த யோகம், வடமேற்கு விவாகச் சக்கர இவற்றுடன் வ்ருஷ (விஷு)ப் புத்தாண்டு தொடங்குகின்றது.. வ்ருஷ (விஷு) ஆண்டிற்கான மகர சங்கராந்தி தேவதையாக விளங்குபவர் மந்தாகினி தேவ மூர்த்தி ஆவார். இன்று குடிமம் எனப்படும் வாத்தியத்தால் சூரிய பகவானை வரவேற்றல் மிகவும் சிறப்புடையதாகும். நடனக் கலை அறிந்தவர்கள் ஊர்த்துவ தாண்டவத்தில் நாட்டியமாடி சூரியபகவானை, வ்ருஷ (விஷு) பகவானை வணங்கித் துதித்தல் வேண்டும்.

ஸ்ரீசந்திர மௌலீஸ்வர சுவாமி
முசிறி

சகல தேவதாமூர்த்திகள் வழிபாடு – வ்ருஷ (விஷு) ஆண்டிற்கு உரித்தான

ஓம் ஸ்ரீவ்ருஷ (விஷு) கணபதியே போற்றி!
ஓம் ஸ்ரீதுவிஜ கணபதியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்தி கணபதியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்ருஷ (விஷு) மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்ருஷ (விஷு) நாயகியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்ருஷ (விஷு) மும்மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசற்குருவே போற்றி!

இவ்வாறாக நீங்கள் அறிந்த தெய்வ மூர்த்திகளையும் சற்குருவையும் வணங்கிடுங்கள்! பின் புதுப் பஞ்சாங்கத்தைத் தொட்டு வணங்குதல் வேண்டும். தினந்தோறும் நீங்கள் வானில் அனைத்து கிரக மூர்த்திகளையும் தரிசித்தாக வேண்டும். அவை கண்களுக்குத் தென்படுகின்றனவோ இல்லையோ அவை நிச்சயமாகப் பரவெளியில் உலவுவதால் உங்களையும் அறியாமல் நீங்கள் வானத்தை கவனிக்கின்றபோது அனைத்து நட்சத்திர மூர்த்திகளையும் கிரக மூர்த்திகளையும் நீங்கள் வழிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றீர்கள்! எனவே பஞ்சாங்கத்தில், ஜாதகக் கட்டங்களிலுள்ள இறை மூர்த்திகளின் சஞ்சாரங்கள் கூட உங்களுக்கு வானில் கிரக மூர்த்திகளைத் தரிசித்த பலாபலன்களைப் பெற்றுத் தருகின்றன.. எனவே பஞ்சாங்கத்தைத் தினந்தோறும் மூன்று வேளையும் படித்துப் பார்த்து இதனையே ஒரு வான தேவா தரிசனப் பூஜையாகக் கொண்டிடுங்கள்! இத்துதிகளை ஓதிப் பூக்களால் அர்ச்சித்திடவும்.!

வ்ருஷ வருட  கால தேவதா மூர்த்திகள்!

ஓம் ஸ்ரீவெள்ளிக் கிழமை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசனிக் கிழமை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசப்தமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூல நட்சத்திர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூராட நட்சத்திர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபரிகம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசிவம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபத்ரை கர்ண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபாலவ கர்ண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவடக்கு திசை யோகினி தேவதையே போற்றி!
ஓம் ஸ்ரீமீன லக்ன தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமேஷ லக்ன தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஉத்தராயண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதட்சிணாயன தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிக்ரம வருஷ தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்ருஷ (விஷு) வருஷ தேவதாமூர்த்தியே போற்றி!

கிரகத் துதிகள்

ஸ்ரீகாலபைரவர் திருவீழிமிழலை

ஓம் ஸ்ரீமேஷத்தில் உறைகின்ற ஸ்ரீசூரிய பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீரிஷபத்தில் உறைகின்ற ஸ்ரீகுரு பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீரிஷபத்தில் உறைகின்ற ஸ்ரீசனீஸ்வர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீமிதுனத்தில் உறைகின்ற ஸ்ரீராகு பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீவிருச்சிகத்தில் உறைகின்ற நெடுமால் (ஸ்ரீப்ளூடோ) பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீதனுசுவில் உறைகின்ற ஸ்ரீகேது பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீதனுசுவில் உறைகின்ற ஸ்ரீசெவ்வாய் பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீதனுசுவில் உறைகின்ற ஸ்ரீசந்திர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீமகரத்தில் உறைகின்ற கலியன் (ஸ்ரீயுரேனஸ்) பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீமகரத்தில் உறைகின்ற நிஷ்காமிய (ஸ்ரீநெப்டியூன்) பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீமீனத்தில் உறைகின்ற ஸ்ரீசுக்ர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீவக்ர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவசந்த ருது மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீ2001 வ்ருஷ தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீ2002 வ்ருஷ தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீ13 தின தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீ14 தின தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீ1 தின தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகண்ட தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநிமிஷ தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவினாடி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநாழிகை தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபாஷை தேவதா மூர்த்தியே போற்றி!

மூல நட்சத்திர நான்கு பாத அட்சர மூர்த்திகள்/அம்சங்கள் வழிபாடு!

ஓம் ஸ்ரீமூல நட்சத்திர முதல் பாத..யே அட்சர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூல நட்சத்திர இரண்டாம் பாத..யோ அட்சர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூல நட்சத்திர மூன்றாம் பாத...ப அட்சர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூல நட்சத்திர நான்காம் பாதா...பி அட்சர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூல நட்சத்திர ராக்ஷஸ கண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூல நட்சத்திர பைரவி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்ருஷ வருஷ மகர சங்கராந்தி தேவதா மந்தாக்னி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசப்த ஸ்வரமூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீசப்த லிங்க மூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீசப்த ரிஷிகளே போற்றி!
ஓம் ஸ்ரீசப்த கன்னி மூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீசப்த கன்னிகளுக்குக் காப்பாக இருக்கின்ற ஸ்ரீசப்த கணபதி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதின தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுத்ர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகால தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவசக்கர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவாம்ச தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஜ்வாலா சக்கர தேவதா மூர்த்தியே போற்றி!

ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் திங்களூர்

வருட மூர்த்திகள் வழிபாடு - ஓம் ஸ்ரீஅறுபது வருட தேவதா மூர்த்திகளே போற்றி! போற்றி!!

ஓம் ஸ்ரீபிரபவ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிபவ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுக்கில வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிரமோதுத வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிரஜோற்பத்தி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆங்கீரஸ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமுக வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபவ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீயுவ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதாது வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஈஸ்வர வருட மூர்த்தியே போற்றி!

திருப்பனந்தாள் திருத்தலம்

ஓம் ஸ்ரீவெகுதான்ய வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிரமாதி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிக்கிரம வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிஷு வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்திரபானு வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுபானு வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதாரண வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபார்த்திப வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிய வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசர்வஜித்து வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசர்வதாரி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிரோதி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிக்ருதி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகர வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநந்தன வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிஜய வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஜய வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமன்மத வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுர்முகி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஹேவிளம்பி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிளம்பி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிகாரி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசார்வரி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிலவ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுபகிருது வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசோபகிருது வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகுரோதி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிசுவாவசு வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபராபவ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிலவங்க வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகீலக வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசௌமிய வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசாதாரண வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிரோதிகிருது வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபரிதாபி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிரமாதீச வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆனந்த வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஇராக்ஷஸ வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநள வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிங்கள வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகாளயுக்தி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்தாத்திரி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரெளத்திரி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுன்மதி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுந்துபி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீருத்ரோக்காரி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரக்தாக்ஷி வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகுரோதன வருட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅக்ஷய வருட மூர்த்தியே போற்றி!

மாதங்கள் :- ஓம் ஸ்ரீபன்னிரு மாத தேவதா மூர்த்திகளே போற்றி! போற்றி!!

ஸ்ரீபூலோகநாதர் திருச்சி

ஓம் ஸ்ரீசித்திரை மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவைகாசி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆனி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆடி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆவணி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுரட்டாசி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஐப்பசி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகார்த்திகை மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமார்கழி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதை மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமாசி மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபங்குனி மாத தேவதா மூர்த்தியே போற்றி!

கிழமைகள் :- ஓம் ஸ்ரீஏழுவார தேவதா மூர்த்திகளே போற்றி! போற்றி!!

ஓம் ஸ்ரீஞாயிற்றுக்கிழமை வார தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிங்கட்கிழமை வார தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசெவ்வாய் வார தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுதன் வார தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவியாழன் வார தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவெள்ளி வார தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசனி வார தேவதா மூர்த்தியே போற்றி!

யோக மூர்த்திகள் : ஓம் ஸ்ரீஇருபத்தேழு யோக தேவதா மூர்த்திகளே போற்றி!

ஓம் ஸ்ரீவிஷ்கம்பம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீப்ரீதி யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆயுஷ்மான் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசௌபாக்யம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசோபனம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅதிகண்டம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுகர்மம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிருதி யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசூலம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகண்டம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிருத்தி யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுருவம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்யாகாதம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஹர்ஷணம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவஜ்ரம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்தி யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவ்யதீபாதம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவரீயான் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபரிகம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசிவம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம்ஸ்ரீசித்தம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசாத்தியம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுபம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுப்பிரம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிராம்யம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமாகேந்திரம் யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவைதிருதி யோக தேவதா மூர்த்தியே போற்றி!

கரண தேவதைகள் வழிபாடு :- ஓம் ஸ்ரீபதினொரு கரண தேவதா மூர்த்திகளே போற்றி!

ஸ்ரீஅகோரவீரபத்திரர் காருகுடி

ஓம் ஸ்ரீபவம் கரண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபாலவம் கரண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகௌலவம் கரண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதைதுலை கரண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகரசை கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீவணிசை கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீபத்திரை கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீசகுனி கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீசதுஷ்பாதம் கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீநாகவம் கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகிம்ஸ்துக்னம் கரண தேவதா மூர்த்தியே போற்றி

திதி தேவதா வழிபாடு :- ஓம் ஸ்ரீபதினாறு திதி தேவதா மூர்த்திகளே போற்றி!

ஓம் ஸ்ரீபிரதமை திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுவிதியை திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிரிதியை திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசதுர்த்தி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபஞ்சமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசஷ்டி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசப்தமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅஷ்டமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதசமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஏகாதசி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுவாதசி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிரயோதசி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசதுர்த்தசி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபௌர்ணமி திதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅமாவாசை திதி தேவதா மூர்த்தியே போற்றி!

நட்சத்திர மூர்த்தி வழிபாடு:- ஓம் ஸ்ரீஇருபத்தியேழு நட்சத்திர தேவதா மூர்த்திகளே போற்றி!

ஸ்ரீரிஷபாரூட மூர்த்தி திரைலோக்கி

ஓம் ஸ்ரீஅசுவினி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபரணி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகிருத்திகை நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரோகிணி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமிருகசீரிஷம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிருவாதிரை நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுனர்பூசம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூசம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஆயில்யம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமகம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூரம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஉத்திரம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅஸ்தம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்திரை நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுவாதி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிசாகம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅனுஷம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகேட்டை நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமூலம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூராடம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஉத்திராடம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிருவோணம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅவிட்டம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசதயம் நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூரட்டாதி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஉத்திரட்டாதி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரேவதி நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!

திக் தேவதா வழிபாடு : ஓம் ஸ்ரீஅஷ்டதிக்கு தேவதா மூர்த்திகளே போற்றி!

கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி ஆகிய திக்கு தேவதைகளையும், யோகினி, சூல தேவதைகளையும் போற்றி வழிபடுங்கள்.!

ஓம் ஸ்ரீஜாதக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபகல் தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஇராத்திரி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஸ்வப்ன தேவதா மூர்த்தியே போற்றி!

அஷ்டதிக்கு பாலகர்கள் வழிபாடு!

ஸ்ரீஅங்காளம்மன் ஆலயம் ராயபுரம்

ஓம் ஸ்ரீகிழக்கு திசைக்கான இந்திர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதென்கிழக்கு திசைக்கான அக்னிதேவதையே போற்றி!
ஓம் ஸ்ரீதெற்கு திசைக்கான எம பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீமேற்கு திசைக்கான வருண பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீதென்மேற்கு திசைக்கான நிருதி பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீவடக்கு திசைக்கான குபேர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீவடகிழக்கு திசைக்கான ஈசான பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீவடமேற்கு திசைக்கான வாயு பகவானே போற்றி!

எட்டு திக்கு சக்திகளுக்கான வழிபாடுகள்!

ஓம் ஸ்ரீஅபிராமி தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீகௌமாரி தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீவாராஹி தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்த தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீவைஷ்ணவி தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீமாஹேந்திரி தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீசாமுண்டி தேவியே போற்றி!
ஓம் ஸ்ரீமஹேஸ்வரி தேவியே போற்றி!

அஷ்டதிக் கஜங்கள் :- அயிராவதம், புண்டரீகம், யாமனம், குமுதம், அஞ்சனம், பஷ்பந்தம், சர்வ பௌமம், ஸுப்ரதீபம் ஆகிய எட்டு திக்கு கஜங்களையும் போற்றித் துதிக்கவும்.

பல தேவதா வழிபாடு

ஓம் ஸ்ரீபித்ரு மூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீபித்ரு பத்னிகளே போற்றி!
ஓம் ஸ்ரீகாக பட்சி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநட்சத்திர பட்சிகளே போற்றி!
ஓம் ஸ்ரீபூர பட்ச மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதேவவாகன மூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீசகல தாவர தேவதா மூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீராசி தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதசா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமஹா தசா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுக்தி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅந்தர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபோதக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅஷ்டவர்க தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபஞ்ச பட்சி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅமர பட்ச (தேய் பிறை) தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூர்வ (வளர் பிறை) தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசவ்விய நட்சத்திர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅபசவ்ய மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசகுன தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசூன்ய திதி தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅர்தோதய தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமகோதய தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிவச தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசிராத்த தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதாராபல தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திரபல தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகோசாரபல தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஊர்த்வமுக நட்சத்திர தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅதோமுக நட்சத்திர தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிரியக்முக நட்சத்திர தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீராஜஸ குண தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதாமஸ குண தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசாத்வீக குண தேவ மூர்த்தியே போற்றி!

பஞ்சக தேவ மூர்த்திகள் வழிபாடு :-

ஸ்ரீவீணைமூர்த்தியும் ஞானமூர்த்தியும் லால்குடி

ஓம் ஸ்ரீமிருத்யு பஞ்சக தேவ மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீஅக்னி பஞ்சக தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநிஷ் பஞ்சக தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீராஜ பஞ்சக தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசோர பஞ்சக தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரோக பஞ்சக தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திராஷ்டம தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரஜ்ஜு தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகண தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீருது நட்சத்திர தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்தியே போற்றி!

ஹோரை தேவதா மூர்த்தி வழிபாடு!

ஓம் ஸ்ரீஞாயிறு ஹோரை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிங்கள் ஹோரை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசெவ்வாய் ஹோரை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுதன் ஹோரை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவியாழன் ஹோரை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவெள்ளி ஹோரை மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசனி ஹோரை மூர்த்தியே போற்றி!

ருது தேவதா:-

ஓம் ஸ்ரீவசந்த ருது கால தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகிரீஷ்ம ருது கால தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவர்ஷ ருது கால தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசரத் ருது ருது கால தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஹேமந்த ருது கால தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசிசிர ருது கால தேவ மூர்த்தியே போற்றி!

யோக தேவதா மூர்த்தி:-

ஓம் ஸ்ரீஅந்தர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபூமி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅதல மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிதல மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுதல மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதரதல மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரசாதல மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅமிர்தயோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்த யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமரண யோக தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிரபலாரிஷ்ட யோக தேவதா மூர்த்தியே போற்றி!

நம்முடைய சுவாசமானது பலவிதமான நாடிகளில் நிகழ்கின்றது. எந்நேரத்தில் சூர்ய கலையிலோ, சந்திர கலையிலோ, சுழுமுனையிலோ எந்த சுவாசம் நிகழ்கின்றது என்பதைத் தக்க யோக முறைகளைப் பயின்றால் தான் நாம் உணர முடியும்.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் வைத்தீஸ்வரன்கோவில்

ஓம் ஸ்ரீவாயு நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதகன நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசௌம்ய நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநிர்ஜல நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஜல நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅமிர்த நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஓங்கார நாடி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசூர்ய கலை சுவாச மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திர கலை சுவாச மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுழுமுனை சுவாச மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீராகு கால மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகேது கால மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகுளிகை கால மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஎமகண்ட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅர்த்த ப்ரகரண மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகாலன் மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஇரவு நேர எமகண்ட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபகல் நேர எமகண்ட மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமாந்தி மூர்த்தியே போற்றி!

கிரக மூர்த்திகள் :-

ஓம் ஸ்ரீசூரிய கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திர கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசெவ்வாய் கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுத கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகுரு கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுக்கிர கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசனைச்சர கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீராகு கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகேது கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகுளிகை கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீயுரேனஸ் கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநெப்டியூன் கிரக மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபுளூடோ கிரக மூர்த்தியே போற்றி

பஞ்சாங்க மூர்த்தி :-

பிருத்வி லிங்கம் திருஅண்ணாமலை

ஓம் ஸ்ரீநேத்திர பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதீப பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசித்தம் பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசாந்திர பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசௌர பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதிருக் கணித பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவாக்ய பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசர்வ முகூர்த்த பஞ்சாங்க மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகலியுகாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிக்ரம சகாப்த மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக மூர்த்திகளே போற்றி!
ஓம் ஸ்ரீவார சூலை மூர்த்தியே போற்றி!

வ்ருஷ வருஷத்திய நவநாயகர்கள்

ஓம் ஸ்ரீவ்ருஷ வருஷத்திய நவநாயக இராஜா சந்திர மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக மந்திரி சுக்கிர தேவ மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக சேனாதிபதி குருமூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக அர்க்காதிபதி சுக்கிர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக ஸஸ்யாதிபதி சந்திர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக ரஸாதிபதி புத பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக தான்யாதிபதி சனீஸ்வர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக மேகாதிபதி குருபகவானே போற்றி!
ஓம் ஸ்ரீநவநாயக நீராஸாதிபதி ஸ்ரீசந்திர பகவானே போற்றி!
ஓம் ஸ்ரீசூர்ய உதயாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசூரிய அஸ்தமன தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திர உதயாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திர அஸ்தமன தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகௌரி பஞ்சாங்க தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகௌரி வாக்பல தேவதா மூர்த்தியே போற்றி!

லக்ன மூர்த்திகள்! பன்னிரு லக்ன தேவதா மூர்த்திகளே போற்றி!

ஓம் ஸ்ரீமேஷ லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரிஷப லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமிதுன லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகடக லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசிம்ம லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகன்னி லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுலா லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிருச்சிக லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதனுசு லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமகர லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகும்ப லக்ன மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமீன லக்ன மூர்த்தியே போற்றி!

ராசி தேவதா மூர்த்திகள்

ஓம் ஸ்ரீமேஷ ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரிஷப ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமிதுன ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகடக ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசிம்ம ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகன்னி ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுலா ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிருச்சிக ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதனுசு ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமகர ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகும்ப ராசி மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமீன ராசி மூர்த்தியே போற்றி!

மனு மூர்த்தி :-

ஓம் ஸ்ரீஷண்ணாவதி ச்ரார்த்த மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஸ்வாயம்பு மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஸ்வாரோக்ஷிஷ மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஉத்தம மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதாமச மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரைவத மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசாக்ஷூஸ மனு மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவைவஸ்வத மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஅக்னி சாவர்ணி மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதட்ச சாவர்ணி மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபிரம்ம சாவர்ணி மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதர்ம சாவர்ணி மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீருத்ர சாவர்ணி மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபௌச்யன் மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீரௌச்யன் மனு தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஷடசீதி புண்யகால தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீபசுபதி புண்யகால தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீஉத்தராயண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதக்ஷிணாயன தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீமயான தேவதா மூர்த்தியே போற்றி!

யுகாதி தேவதா வழிபாடு :-

ஓம் ஸ்ரீக்ருத யுகாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீதுவாபர யுகாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீத்ரேதா யுகாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகலியுகாதி தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசந்திர கிரஹண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசர்வ கிரஹண தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசகல நட்சத்திர தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீகுரு மூட தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுக்கிர மூட தேவதா மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநட்சத்திர ஹோரை மூர்த்தியே போற்றி!

த்யாஜ்ய மூர்த்தி!

ஓம் ஸ்ரீவார த்யாஜ்ய மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீலக்ன த்யாஜ்ய மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீநட்சத்திர த்யாஜ்ய மூர்த்தியே போற்றி!
ஓம் ஸ்ரீசுபமுகூர்த்த தேவதா மூர்த்தியே போற்றி!

ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் புத்தாண்டு நாளுக்கான இந்த எளிய பூஜைகளை நீங்கள் கடைபிடிப்பீர்களேயானால் கிட்டத்தட்ட 450க்கும் மேலான தெய்வ, தேவாதி, கால தேவதா மூர்த்திகளைப் பிரார்த்தித்த பலாபலன்களைப் பெறுகின்றீர்கள்! உங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் வருகின்ற கால தேவதா மூர்த்திகளுடைய நாமங்களை உச்சரித்த பல பலன்களையும் பெறுகின்றீர்கள். உங்கள் வாழ்க்கையில் எந்நாளிலாவது இவ்வாறு பூஜித்து இருக்கின்றீர்களா? சாதாரண குடிமகன் இவற்றின் தாத்பர்யங்களை உணர முடியாததாலும், படித்தவர்களும் இவற்றிற்கு தக்க தெய்வீக முக்கியத்துவத்தைத் தராமல் இயந்திர கதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதாலும், சத்சங்க வழிபாடாக ஆலயங்களில் புத்தாண்டு தின வழிபாடும், பஞ்சாங்கம் படிப்பதும், சிறப்புடன் நடைபெற நம் பெரியோர்கள் நல் வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். ஏனென்றால் ஆலயங்களில்தான் அனைத்துக் கால தேவதா மூர்த்திகளும் தங்களுடைய வழிபாட்டிற்காகக் குழுமுவதால் ஆலய தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு இந்த கால தேவதா மூர்த்திகளின் அனுகிரகம் ஓரளவிற்கு தாமாகவே கிட்டிவிடும். எனினும் ஆலய பூஜைகளோடு இல்லற பூஜைகளையும் சேர்த்துச் செய்வதுதான் ஒரு மனிதனுடைய முக்கியமான கடமையாகின்றது.!

விக்ரம ஆண்டின் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி வரும் ஆண்டுகளிலும் இருக்கலாம் அல்லவா! உதாரணமாக விக்ரம ஆண்டில் உங்களுடைய வங்கிக் கணக்குகளில் சில தவறுகள்/ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டால் அந்த விக்ரம ஆண்டிற்கு உரித்தான கணக்குப் பகுதிகளுக்குச் சென்றுதானே அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்ய முடியும்? எனவே நம் வாழ்க்கையில் நீங்கள் கடந்து விட்டதாகக் கருதுகின்ற ஸ்ரீமுக, பவ, யுவ தாத்ரு, வெகுதான்ய போன்ற வருடங்களுக்கும் உங்களுக்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு! ஏனென்றால் யுவ ஆண்டில் நீங்கள் சொன்ன ஒரு பொய்யோ அல்லது ஏமாற்று வேலையோ அல்லது முறையற்ற காமச் செயலோ எதுவாயினும் தக்க பரிகாரஞ் செய்து அந்தந்தக் கர்ம வினைகள் தீரும் வரையில் அவற்றின் தொடர்வினைகள் வந்து கொண்டேதான் இருக்கும். எனவே அனைத்துத் தமிழ் வருடங்களுக்கும் உங்களுக்கும் எப்போதும் தொடர்பு உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

வ்ருஷ (விஷு) வருடக் கர்ம பரிபாலனம்

நாம் இங்கு அளிப்பது வ்ருஷ (விஷு) புது வருடத்திற்கான ஜோதிடக் கணிப்புகள் அல்ல! இவையாவும் கர்மபரிபாலன அம்சங்களே! கர்ம பரிபாலனம் என்பது சித்புருஷர்களுக்கே உரித்தான விசேஷமான தெய்வீகக் கடமையும் அறப் பணியுமாகும்! இன்றைக்குப் பிரபஞ்சத்தில் தெய்வீக நிர்வாகத்திற்கு மிகவும் சிரமமான கர்ம பரிபாலனத்தை எடுத்து நடத்துகின்ற உத்தம இறைத் தூதுவர்கள் ஒரு சிலரே. ஏனென்றால் கலியுகத்தில் ஜீவன்களுடைய கர்மபரிபாலனம் அவ்வளவு கடினமான தெய்வீகப் பணியாகும். வினாடிக்கு வினாடி கர்மச் சூழ்நிலைகள் மாறுவதாலும், மனித குலத்தின் மனோ நிலை பாவனைகளும், அதைவிட மாயைச் சூறாவளியாக மனவிருப்பங்களும் அத்துமீறி நிலையற்று அமைந்திருப்பதாலும் ஜீவன்களுடைய கர்மபரிபாலனம் கலியுகத்தில் மிக மிகச் சிரமமானதேயாகும்.

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கில ஆண்டு பற்றிய ஆன்ம விளக்கங்களை சித்தர்கள் அளிக்கின்ற கர்ம பரிபாலன முறைப்படி இப்பூவுலகில் கலியுகச் சாரமாகப் பெருகுகின்ற தீவினைத் தொகுப்புகளையும், அவற்றிற்கானப் பிராயச்சித்த பரிகார முறைகளையும் நாம் அளிக்கின்றோம். ஆனால் ஜோதிட ரீதியான பரிகாரங்கள் போலன்றி, சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தத்திலிருந்து குருவாய் மொழியாகப் பெறப்படும் இந்த ஆன்மீக விளக்கங்கள்யாவும் தீமைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும், புண்ணிய சக்தியையும், ஆன்ம வளத்தையும் பெருக்குதற்கும் துணைபுரிகின்றனர். உலகப் பொதுமறையாய் விளங்குகின்ற ஞான பத்ர கிரந்த வாக்கியங்களின் தீர்க தரிசனத்தைப் பிரபஞ்சத்திற்கு உணர்த்துவதும் நம் கடமையாகிறது. தியாகத்திற்கும், பக்திக்கும், இறைச் சரணாகதிக்கும் மகத்தான கீர்த்திகளைக் கொண்டுள்ள சித்புருஷர்களே தாமே மனமுவந்து கலியுக ஜீவன்களுக்கான மிகவும் கடினமான கர்ம பரிபாலனத்தை மகத்தான தியாக உணர்வுகளுடன், இறையாணையாக ஏற்றுக் கொள்கின்றனர். இங்கு நாம் காண்பது விஷு வருடத்திற்கான கர்ம பரிபாலனத்தை நிர்ணயிக்கின்ற தலையாய சித்தர்களின் ஞான பத்ர வாடக குருவாய் மொழிகளாம்!

ஆண்கள் நலம் பெற :- வ்ருஷ (விஷு) ஆண்டில் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுமாதலின் பெண்கள் மாங்கல்ய பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை, ஏழைச் சுமங்கலிகளுக்கு மண்தாலி, வெள்ளித் தாலி, பொன் தாலி, மாங்கல்யச் சரடு அளிக்கின்ற கைங்கர்யத்தை ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். வறுமை காரணமாக, மாங்கல்யமின்றி வெறும் மாங்கல்யச் சரடை மட்டும் அணிந்துள்ள ஏழைப் பெண்களுக்குப் பொன் மாங்கல்யம் அளிப்பது ஆண்களுக்கு நல்ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும். சினந்து பேசுதல், வைதல், கோள் மூட்டுதல், வார்த்தை தவறுதல், வாக்குப் பிழைகள் காரணமாக மதத் தலைவர்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும், உள் மதச் சண்டைகளும் ஏற்படுமாதலின் விமானக் கலசம் இல்லா ஆலய கோபுரங்களுக்கு உடனடியாகக் குறைந்த பட்சம் ஒன்பது கலசங்களை அமைத்து வழிபடுவதற்கான இறைப் பணிகளை மேற்கொண்டால்தான் பரவெளியில் ஸ்வர்ண சாந்த கிரணங்கள் நிரவி அமைதி உண்டாக ஏதுவாகும்.

இறைச் சமுதாயப் பணி வளம் பெற! :- குழப்பமான அரசியல் பிரச்னைகள் மிகுமாதலின் ஸ்ரீமனோன்மணி அம்பிகை, ஸ்ரீஆடிப்பூர அம்மன், ஸ்ரீமார்கண்டேஸ்வர மூர்த்திகள்  எழுந்தருளியுள்ள தலங்களில் ஏழைகளுக்கு மகத்தான அளவில் அன்னதானமும், ஆலயங்களில் உழவார இறைத் திருப்பணிகளும் செய்வதால் சமுதாய நிர்வாகத்தில் சாந்தம் ஏற்பட வழி உண்டு. அரசியலில் பெரும் பிழை புரிந்தோர் ஸ்ரீமார்கண்டேஸ்வரர், ஸ்ரீதண்டீஸ்வரர் (சென்னை வேளச்சேரி) , ஸ்ரீதர்மசம்வர்தினி (சென்னை கோயம்பேடு), ஸ்ரீதர்மாம்பாள், ஸ்ரீமாற்றுரைவாதீஸ்வரர் (திருச்சி – திருவாசி). ஸ்ரீஅறப்பளீஸ்வரர் (கொல்லிமலை), ஸ்ரீஅறம் வளர்த்த நாயகி போன்ற மூர்த்திகள் உள்ள இடங்களில் அடிக்கடி பிரம்மாண்டான அளவில் அன்னதானம்தனைத் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் செய்து வந்தால் தான் தாமிழைத்தப் பெரும் பிழைகளுக்கு ஓரளவுப் பிராயசித்தம் பெறுவதற்கு அறதேவதைகள் நல்வழி காட்டும்.

உண்மையிலேயே மக்களுக்குச் சுயநலமின்றித் தியாக மனப்பான்மையுடன் அரசியலைச் சார்ந்து சமுதாயப் பணி ஆற்றுவதற்கு விரும்புபவர்கள் வ்ருஷ வருடத்தில் இவ்வாண்டிற்குரிய நவநாயக ராஜாவாகிய சந்திர பகவானுக்கு உரித்தான ரோகிணி, கிருத்திகை, அஸ்தம், திருவோண நட்சத்திர நாட்களிலும், திங்கட்கிழமை மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இவ்வாண்டிற்கு உரித்தான பரணி, பூரம், பூராடம், சுக்கிர வாரமான வெள்ளிக் கிழமையிலும் திருஅண்ணாமலையில் நிறைய அன்னதானம் செய்திடல் வேண்டும்! தொடர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் திருஅண்ணாமலை, தேனிமலை, பர்வத மலை, ஐயர்மலை, பழனி, திருப்பரங்குன்றம், திருச்சி மலைக் கோட்டை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் வருதல் வேண்டும். இறை பக்தியின்றி எவ்வித சமுதாயப் பணியும் நிறைவு பெறாது என்பதை உணர்ந்தாக வேண்டும்!

ஆகமக் குறைபாடுகள் நீங்கிட. :- ஆகமக் குறைபாடுகளினாலும் தேவ சக்தி மிகுந்த விருட்ச ஹோமச் சமித்துகளை ஹோமத்தில் இடாமல் அதர்மமான முறையில் சவுக்கு, புளிய விறகு போன்ற தகாத விறகுக் கட்டைகளை இட்டு ஹோமம் செய்வதால் கும்பாபிஷேகம் மற்றும் ஆலயப் பூஜா பலன்களில் 25 சதவிகிதமே கைகூடும்! பேரளம் அருகே அம்பகளத்தூர் திருத்தலத்தில் பொதுமக்களுக்கான சமஷ்டி ஹோமங்களை நிகழ்த்தி அனைவரும் ஹோமத்தில் ஆகுதிகளை அளிக்குமாறு பொது நல இறைவழிபாடுகளை, அன்னதானங்களை நிகழ்த்துவதால் ஆகம சக்திகள் மேன்மை பெறும். குருக்கள், சிவாச்சாரியார்கள் போன்ற ஆலயங்களில் பூஜை செய்பவர்கள் தவறான பாதைகளில் செல்ல நிறைய வாய்ப்புகள் உண்டு ஆதலின் “கடார் கள கண்டராதித்ய யந்திர ஹோம” தேவ ரகசிய வழிகாடுகளைத் தக்க சற்குருமார்களிடமிருந்து பெற்று கடைபிடிக்க, நன்மை பயக்கும்.

ஆலய பூஜைகளிலும், ஹோம வழிபாடுகளிலும் முறையற்ற செயல்களும் அதர்மக் குறுக்கீடுகளும் நிறையும். குறிப்பாக மக்களுடைய இறைப் பிரதிநிதியாக ஆலய வழிபாடுகளைப் புரிவோர் நல்லொழுக்கம் தவறி முறையற்ற காமம், தீயபழக்கங்கள் மற்றும் மது, சூதுகளுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் நிறைய உண்டு ஆதலின் மதி கலங்காதிருக்க முசிறி, திருவக்கரை ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர், திங்களூர், திருப்பதி, மதுரை போன்ற தலங்களில் முறையாக விரதமிருந்து பாத யாத்திரை செய்து எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி வருதலும் இவ்வாண்டு முழுவதும் மௌன விரதம் பூணுவதாலும் நன்முறையில் தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம்.

வேத நெறிகளும், தார்மீகப் பண்பாடுகளும், அறநெறி வழிமுறைகளும் மங்கும் காலமாதலின் வேதம் கற்றவர்கள் முன்னெச்சரிக்கையாக, தற்காப்பிற்காக மௌன விரதம், உண்ணா நோன்பு, பாத யாத்திரை, இரண்டு செட் ஆடைகளுடன் மட்டுமே வாழ்தல், தினசரி ஹோம வழிபாடு, தர்ப்பணம், திவசம் போன்ற நற்காரியங்களைக் கட்டணம் பெறாது இலவசமாகச் செய்தல், தம் வருவாயின் பெரும்பங்கை அன்னதானமாக அளித்தல் போன்று கடுமையான இறை நியதிகளுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்தல் உத்தமமானதாகும். இதனை முறையாகக் கடைபிடித்தால் மகா தேஜசுடன், குருவருளுடன் ஒளிர்ந்திடுவதற்கான அறவழி முறைகள் காட்டப் பெறுவர்.

ஆண்களுக்கு கை, கால் எரிச்சல்களுடன் கூடிய நோய்கள் ஏற்படுமாதலின் கும்பகோணம் அருகே கரவீரம், திருப்பனந்தாள், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஸ்ரீவீரசேகர சிவமூர்த்தி, செங்கற்பட்டு அருகே திருமால்பேறு, கும்பகோணம் அருகே கோமல் போன்ற இடங்களில் உள்ள சிவாலயங்களில் பட்டாடைகளைத் தானமாக அளித்தலும், ஆங்கில வைத்திய முறையல்லாது ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி போன்ற இயற்கை வைத்திய முறைகளைக் கைக் கொள்தலும் நலம். வில்வம், அரசு, வேம்பு, வன்னி, வாழை போன்ற விருட்சங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருக்கும் திருத்தலங்களில் (சென்னை கோயம்பேடு பெருமாள் ஆலயம்) தல மரங்களுக்கு மண் தாலி நேர்த்தி செய்து அணிவித்து ஏழைகளுக்குப் புடவை, ரவிக்கை, தாம்பூலம் அளித்தலால் நீண்ட வருடங்களாகத் தடைபட்டுள்ள திருமணங்கள் நிறைவேறும்.

ஸ்ரீவிஸ்வநாதர், பூமிநாதர், பூவராகவர், பூமிபாலர், பூமாதேவி, பூலோகநாதர், பூலோகநாதர், பூமிநாதேஸ்வரர், மயான ருத்ரர், அகோர வீரபத்ரர், பிரளய கால பைரவர், மார்கண்டேஸ்வரர் போன்ற தெய்வ மூர்த்திகள், அருள்பாலிக்கும் தலங்களில் பசுநெய், எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), ஆட்டுப் பால் நெய், ஒட்டகப் பால் நெய் ஆகியவை கலந்த தைல நெய்க் காப்பில் துளசிச் செடியினுடைய வடக்கு திசை வேர்ப்பகுதியை ஊற வைத்து நூல், பருத்தித் துணியைச் சுற்றித் திரியாக்கி ஏற்றி இத்தீபத்தின் முன்னால் தர்ப்பணம் அளித்தலும் ஆலயமெங்கும் இத்தீபங்களை ஏற்றுதலாலும், பூகம்பத்தில் இறந்தோர்க்கு ஜீவ சாந்தி கிட்டிட நல்வழி பிறக்கும்.

கிருத்திகை ரோகிணி தேவிகளுடன்
சந்திரபகவான் மானாமதுரை

நீர் வினைகள் நீங்கிட... தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பெருக இருப்பதால் வ்ருஷ (விஷு) ஆண்டில் புனித ஆலய, நதித் தீர்த்தமாடுதல் நிறைய நடைபெறுதல் வேண்டும். கோயில் நந்த வனங்களுக்கு இலவசமாக நீர் அளிக்கும் கைங்கர்யத்தை சத்சங்க சமுதாய இறைப் பணியாக மேற்கொள்ள வேண்டும். இயற்கைக்கு மாறாக இறைவனுடைய தர்ம நெறிகளுக்கு மாறாக, விஞ்ஞான உலகம் பல அதர்மச் செயல்களை (அணுப்போர், நிலத்தடி/கடல்களில் ஆயுத சோதனை. D.N.A Mapping, MTP) புரிவதால் தான் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன. வ்ருஷ (விஷு) வருடத்தில் இவை அதிகம் ஆகும் ஆதலின் சுயம்புப் புற்று லிங்க மூர்த்திகளுக்கும், பல கோடிச் சதுர்யுக சுதை மூர்த்திகளுக்கும், திரைலோக்கி, திருவெறும்பூர், சென்னை திருநின்றவூர் ஸ்ரீராமர், ராயபுரம் ஸ்ரீஅங்காளி அம்மன், ஸ்ரீபூமிநாதர் எனும் பெயர் தாங்கியுள்ள மூர்த்திகளுக்கும் தக்க வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

வ்ருஷ(விஷு) வருடத்தில் உலக சமுதாயத்தில் நீர்க் குறைபாடுகள் கர்ம வினைகளாகத் தோன்றும், அதாவது இறைவன் வரப்பிரசாதமாக அளித்த நீரை விலைக்கு விற்றலும், தேவையில்லாத இடங்களில் பள்ளம் தோன்றி நீரை வலுக் கட்டாயமாக வெளிக்கொணர்வதும் பாவச் செயலாகும். நீர்வாழ் விலங்கினங்களுக்கு இன்னல்களை அளித்தலும், கடல் புறங்களில் அணு ஆயுத சோதனைகளை நிகழ்த்திக் கடல் உயிரினங்கள் மற்றும் தெய்வீகச் சங்குகளின் ஆன்மச் சுடரைப் பாதித்தலும் நீர் வினைகளைப் பெருக்கும்! யுகம் யுகமாக மனித குலம் நீரோட்டங்களுக்கு இழைத்து வருகின்ற அநீதிகளுக்குத் தக்க பிராயச்சித்தம் பெற வேண்டிய வருடம் இதுவே! இதை விட்டுவிட்டால் அடுத்த 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

நீர்வளம் பெற மற்றொரு ஆன்மீக வழி – கோயில் தீர்த்தங்களை நன்முறையில் பராமரித்தலும், புனித நதிகளில் கழிவு நீர் சேராமலும் தடுத்துப் புண்ணிய நதிகளின் புனிதத்தைக் காப்பதே, நீர் வினைக் கர்மச் சுமைகளைக் காக்கும். கோயிலைச் சுற்றி மல ஜலக் கழிப்பிடங்களை அமைத்தல் அறவே தகாது! இவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

வருண பகவானுக்கு உரித்தான ரோகிணி, மகம், அவிட்டம் போன்ற நட்சத்திர நாட்களிலும், சந்திர பகவான் மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் நாட்களிலும் கும்பம் வைத்துப் பூஜித்தலும் நீர் வினைகளைத் தணிக்கும். ஸ்ரீகும்பேஸ்வரர், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், ஸ்ரீசந்திரமமௌளீஸ்வரர், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீமனோன்மணி, ஸ்ரீசெங்கழுநீர் விநாயகர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ரோகிணி, கிருத்திகா தேவிகளுடன் ஸ்ரீசந்திர பகவான் அருள்பாலிக்கும் தலங்கள் (மதுரை, மானாமதுரை, கும்பகோணம் அருகே சந்திரசேகரபுரம்) போன்ற இடங்களில் கும்பம் வைத்துப் பூஜைகளும், ஹோமங்களும் நிகழ்த்துவது நீர் வினைகளைக் குறைத்து நீர்வளத்தைப் பெருக்கும்.

நீர் சம்பந்தமான நோய்கள் பெருகும் ஆதலின் பூசனி, கிரிணி, சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி போன்ற நீர் சம்பந்தமான காய்கறி உணவு வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலாலும் நீர்சுரக்கும் நித்திய வருணசேகரத் தலங்களில் (திருஆனைக்காவல், திருச்செங்கோடு, சித்தூர் அருகே காணியூர் பிள்ளையார்) ஆலயம் முழுவதும் நீர்க் கோலமிட்டு வழிபடுதலாலும் நல்ல மழை வளம் பெருகும்; நீர் நோய்கள் தீரும். மேலும் நீர் கட்டும் நந்தித் தலங்களில் (புதுக்கோட்டை திருக்கோகர்ணம், பெண்ணாடம்) நந்திக்கு மிளகுக் காப்பிட்டு வழிபடுவது நல்ல மழைப் பொழிவைத் தந்து நீர் வினைகளைத் தணிக்கும்.

ஸ்ரீஅருந்ததி வசிஸ்டர்
கரந்தை தஞ்சாவூர்

பணவெறி, பேராசை நீங்கிட .. லாட்டரிச் சீட்டு, பங்குச் சந்தை போன்றவற்றில் பண வெறி மிகுந்து மன வியாதிகள் பெருகுமாதலின், மனோன்மணி, மனோக்கியநாதர், ஹயக்ரீவ மூர்த்திகளுக்குத் தக்க பூஜை முறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலாடைகளைத் தானமளிப்பதால் கிட்டும் தான புண்ய சக்தியே இவற்றிலிருந்து எவரையும் காப்பாற்றும்! கலியுக மகாத்மியப்படி வ்ருஷ வருடத்தில் லாட்டரி, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், பங்குச் சந்தை போன்றவற்றில் பேராசைகள் பெருகி மனித சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையே பெருமளவு பாதிக்கும். ஸ்ரீஹயக்ரீவர் பூஜையும், வீணை ஏந்திய ஸ்ரீதட்சிணாமூர்த்தி தரிசனம் (லால்குடி), தும்புரு மற்றும் நாரத மகரிஷி தரிசனம், ஸ்ரீலோபாமுத்திரை சமேத ஸ்ரீஅகஸ்தியர் தரிசனம், ஸ்ரீஅருந்ததி சமேத ஸ்ரீவசிஷ்டர் தரிசன பலன்கள்தாம் (தஞ்சை – கருந்தட்டாங்குடி) பேராசைக் குழியில் விழாது நம்மைக் காப்பாற்றும்.

விலங்கினங்களின் சாபக்கேட்டிற்கு மனிதகுலம் ஆளாகும். பசுவதை, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு எலி, பூனை, குரங்கு போன்றவற்றைப் பலியாக்கி ஜீவஇம்சைகள் செய்வதால் பல அரிய விலங்கினங்கள் மறைந்து மனித குலத்தைப் பெரும் சாபத்திற்கு உள்ளாக்கும். ஒரு சிறு மண்புழு, எறும்பிற்கும் கூட பெரும் சாபத்தை அளிக்கும் வல்லமை உண்டு. ஜீவ இம்சைகள் புரியும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்படா விட்டால் அந்நாட்டிற்கு ஈடுசெய்ய முடியா இழப்புகளைத் தரும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். பலத்த ஜீவ இம்சைகளுக்கு ஆளான ஒரு குரங்குக் குட்டி சாபமிட்டால் அது பெரும் சூறாவளிப் புயலாக விரிந்து நாட்டின் பல பகுதிகளை நாசமாக்கும். மனித குலத்தின் பேராசையால் பூமித் தோண்டல்கள் பெருகும் ஆதலால் கனி வளம் மங்கிவிடும். பூமியின் அடியில் கனி வளம் பெருகுவதாக எண்ணுவது அறியாமையே! விண்ணுலகில் பிரகாசிக்கும் கோடானுகோடி விண்மீன்களின், கோள்களின், வாயு தேவதைகளின் கிரணச் சக்திகள்தாம் கனிவளத்தை நிர்ணயிக்கின்றன! பூமியை அனாவசியமாகத் தோண்டுவதால் பூமாதேவிக்கு வேதனைகள் ஏற்படுவதால் மலைத் தலங்களில் கிரிவலம் வருவதே பூமியின் வளத்தைப் பெருக்கும். திருஅண்ணாமலையை எவர் கிரிவலம் வந்தாலும் அவருடைய கிரிவலப் புண்ணிய சக்தியின் ஒரு பங்கு மனித சமுதாயம் பூமிக்கு இழைக்கின்றத் தீங்குகளை நிவர்த்தி செய்வதற்காகத் தாமாகவே பயன்படுகிறது என்பதை உணர்ந்திடுக! எனவே திருஅண்ணாமலை கிரிவலம் மகத்தான சமுதாயப் பணியே!

இவையெல்லாம் ஜோதிடக் கணிப்புகள் அல்ல. ஆனால் கர்ம பரிபாலன நியதி காட்டும் எச்சரிக்கைகளாகும். எதற்குமே தக்கதோர் ஆன்மீகத் தீர்வு உண்டு. சற்குரு ஒருவர்தாம் எத்தகைய குற்றத்திற்கும் பாவத்திற்கும் தக்க தீர்வைப் பெற்றுத் தரமுடியும். சற்குருவின் மேன்மை பற்றிய உணர்வு மலர்கின்ற ஆண்டே வ்ருஷ ஆண்டாகும். எனவே இதன் மகத்துவத்தை உணர்ந்து ஒரு வினாடி கூடக் காலம் தாழ்த்தாது ஈசன் இணையடி காட்டும் ஆசானின் மலரடி நாடுவீர்!

தமிழ் வருடப் பஞ்சாங்கப்படி ஒவ்வொரு நாளின் சூரிய உதய நேரத்தில்தான் அன்றைய நாள் தொடங்குகின்றது. புது வருடப் பிறப்பு வெள்ளிக் கிழமை 13.4.2001  அன்று இரவு நிகழ்ந்தாலும், மறுநாள் சூரிய உதயத்தையும் தாண்டி இந்த விசேஷ நாள் நீடிப்பதால் 14.4.2001 நாளையே நாம் தமிழ் வருடப் பிறப்பாகக் கொள்கின்றோம். உங்களுக்குப் பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்கள் புரிகின்றதோ அல்லது புரியவில்லையோ இதைப் பற்றிக் கவலைப்படாது, பஞ்சாங்கம் என்பது சகல இறைமூர்த்திகளுடைய அனுக்கிரகம் நிறைந்த மகத்தான தெய்வீக நூல் என்பதை உணர்ந்து உங்களுக்குப் பிடித்த பஞ்சாங்கத்தை வாங்கிப் பூஜை அறையில் வைத்துத் தினந்தோறும் பஞ்சாங்கத்தைப் பார்ப்பது மிகச் சிறந்த வழிபாடாகும். ஏனென்றால் கால தேவதைகளின் கருணையால்தான் ஒவ்வொரு விநாடியும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே பஞ்சாங்கத்தை நீங்கள் பார்க்கின்ற போது நாள், நட்சத்திரம், கிழமை, யோகம், கரணம் மற்றும் அனைத்தையும் உங்கள் கண்கள் நோக்குகின்றன. ஜாதகக் கட்டம் போல அமைந்திருக்கின்ற இராசிச் சக்கரங்களில் பலவித கிரக மூர்த்திகளை நீங்கள் பார்க்கின்றீர்கள் அதாவது தரிசிக்கின்றீர்கள்! ஜாதகக் கட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. பூலோகத்தில் ஒரு சிறு மண் புழு பிறப்பெடுக்கும் போது கூட அதற்கும் ஜாதகக் கட்டம் உண்டு.

சங்கின் மகிமை

“ஏழு முனிவர்காள் ஏற்று அருள வேண்டும் எம் குருதேவா” என்று ஓதி சங்குத் தீர்த்தத்தால் தினந்தோறும் சந்தனக் கட்டைக்கும், சந்தனக் கல்லிற்கும் அபிஷேகம் செய்து வந்தால் தீய பழக்க வழக்கங்கள் மறையும்!

ஆறு, கடல், ஏரிகளிலிருந்து பெறப்படுகின்ற சங்கு வகைகள் யாவுமே அபூர்வமான தெய்வீக சக்திகளைக் கொண்டவையாகும். புனிதமான தீர்த்தங்களில், நதிகளில், கடல்களில் சங்குகளில் நீரை ஏந்தித் தர்ப்பணம்/அர்க்யம் இடுதலானது பித்ருக்களின் ஆசியுடன் மகத்தான காரிய சித்திகளைப் பெற்றுத் தருகின்றது.. சந்ததி விருத்திக்கும், நல்லொழுக்கத்திற்கும் நல்வழி காட்டுகின்றது!

கர்மந் தங்காச் சங்காம்! சங்கில் உறையும் ஜீவன்கள்யாவும் பல தெய்வீக லோகங்களிலிருந்து பிரம்ம சங்கல்பமாகவே கர்ம பந்தமின்றித் தாமாகவே இறை ஆணையாகவே  உற்பவிக்கப் பெற்றவையாதலால் அவைகளுக்குக் கர்மச் சுமையோ, கர்ம வினைத் தொடரோ கிடையாது, அவற்றிற்கு எவ்விதமான தோஷங்களும், விழுப்புகளும், கர்ம தாரமும் ஒட்டாது! எனவேதான் ஜீவன்களின் சூட்சும  ஆத்ம சஞ்சாரம் மறைந்தும் சங்கு ஓடானது பூஜைக்குரிய பொருளாகவே ஆத்ம ஒளியுடன் பிரகாசிக்கின்றது! சங்குகளைப் பூஜை அறையில் வைத்திருப்பதே மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் பல அரிய புண்ய சக்திகளும், தர்ம சக்திகளும் சங்குகளில் குடிகொண்டிருப்பதால் அவற்றில் இறைச் சீர்மை எப்போதும் மிளிர்கின்றது! கடல்வாழ் உயிரினங்களிலிருந்தே சங்கு உருவாவதாக நமக்கு வெளிப்படையாகத் தோன்றினாலும், பலவிதமான அற்புதத் தேவலோகங்களிலிருந்து தாமாகவே உற்பவிக்கப்படுபவையே பலவகையான சங்குகளாம்! இவற்றைச் சங்கு ஜீவன்கள்/பூச்சிகள் என்று அழைப்பதே தவறாகும். நீரினுள் உறைகின்ற சூட்சும சங்கு ஜீவன்கள், அனைத்துக் கோடி கிரகங்கள், கோளங்கள், நட்சத்திரங்களின் ஒளிக்கற்றைகளை ஈர்த்து, பூஜித்து அவற்றின் புண்யசக்திகளைத் தெய்வீக அருளாக மாற்றித் தருவதற்காகவே, ஸ்வேத மண்டலம் எனப்படும் சங்கு வடிவுகளில் பிரம்ம நியதியாய் உருவெடுக்கின்றன.

சங்கு பூஜை லால்குடி

மனித சமுதாயத்தைப் போலன்றி எவ்விதப் பிறப்பு, இறப்புச் சுழலுக்கும் அப்பாற்பட்டதாக பிறவிச் சுமைகள் மற்றும் கர்ம வினைகள் அற்ற தெய்வீக வடிவுகளாய் சங்குகள் விளங்குகின்றன. அதனால்தான் இன்றைக்கும் சங்கானது அதியற்புத பூஜை வழிபாட்டின் சின்னங்களுள் ஒன்றாகவும் தீர்த்தம், பால் போன்ற திரவியங்களைத் தாங்கும் தெய்வீகப் பீடமாகவும் விளங்குகின்றன. இறைப் பரம்பொருளாம் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சங்கினைத் தாங்கி அருள்பாலிக்கின்றார் என்றால் பிரம்ம தாத்பர்யத்துடன் உற்பவிப்பவைதாமே சங்குகள்! எனவே சிலவகைச் சங்குகளைத் தாழ்வானவை என்றும், பூஜைக்குச் சிலவகைதாம் ஏற்றவை என்றும் அறியாமையால் ஒதுக்காதீர்கள்.! அனைத்துச் சங்குகளும் பூஜைக்கு ஏற்றவையே! ஆனால் அவற்றைப் புனிதமாகச் சுத்திகரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறைகளைத் தக்க சற்குருவிடமிருந்து கேட்டுப் பெறுதல் வேண்டும், சங்குகளின் திசுக்கள்யாவும் ஜலத்வீப சக்தியாக ஆஹூதி அம்சங்கள் கொண்டவையாம்!

ஓங்காரம் பொங்கும் சங்கு!

தர்ப்பணத்திற்கான, ஆராதனைக்கான, பலவித காப்புகளுக்குரிய, தீர்த்த அபிஷேகத்திற்கான சங்குகள், தைலச் சங்குகள், நைவேத்யச் சங்குகள், பிரணவ ஒலிச் சங்குகள் எனப் பலவகைகள் உண்டு.. வாஸ்து பூஜை, அம்பாள் பூஜை, சிவ, விஷ்ணு, பிரம்ம பூஜைகளுக்கான பிரத்யேகச் சங்குகளும் உண்டு.. அனைத்துச் சங்குகளிலும் விதவிதமான தொனிகளில் ஓங்காரப் பிரணவ சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கும்.. இவையே ஓங்கார பீஜாட்சர பிந்து நாத தாளங்கள் ஆகும்.. வியட்டிப் பிரணவச் சக்கரமாகவும், சமட்டிப் பிரணவச் சக்கரமாகவும் முதன்முதலில் இறைவன் பிரணவ இயந்திரத்தைப் பிரபஞ்சத்திற்குள் இட்டபோது பிரபஞ்சமெங்கும் விரவிய ஓங்கார ஒலியே பல இடங்களில் இயற்கைப் பொருட்களாக (சந்தனம், மலைகள்) தெய்வீக ஜீவன்களாக (கொன்றை மரம், தும்மைப் பூ), ஒலி வடிவங்களாகப் (சக்கரங்கள், ஓங்கார எந்திரம், ஓங்காரச் சுற்றுப் பிரகாரம்) பலவிதப் பரிமாணங்களைப் பெற்றது.. அவற்றுள் ஒன்றே சங்கு வகைகள் ஆகும்.. எனவே தினந்தோறும் சங்கினால் பூஜிக்கும் வழிமுறைகளை தக்க சற்குரு மூலம் அறிந்து அபரிமிதமான பலன்களை உய்த்திடுங்கள்! சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் பூஜைக்கான பலவகைச் சங்குகள் கிடைக்கும்.

சங்கு ஓங்கார நாதக் கருவூலம்! இன்றைக்கும் நாம் சங்குகளில் துல்லியமாகக் கேட்கின்ற ஓங்கார நாதமானது பிரபஞ்சத்தில் முதன்முதலாக எழும்பிய ஆதி முதல் ஓங்கார நாதமே ஆகும். எனவேதான் ஆராதனைகளில் சங்கு ஊதுதல் புனிதமாகிறது! ஏனெனில் அள்ள அள்ளக் குறையாத ஓங்கார சப்த விருட்சமாகவும், ஓங்கார சப்த ஐஸ்வர்யமாகவும் சங்கினுள் ஒலிக்கும் ஓங்கார ஒலி பொலிகின்றது. இதனை எத்தனை முறை ஊதி, ஓதி சப்த நாளங்களாக எழுப்பி வழிபடினும் அதனுள் நிறைந்துள்ள ஓங்காரம் குறையாது, மங்காது, தணியாது! ஒரு முறை சங்கை ஊதினாலே பரவெளியில் ஓங்கார நாளம் பெருமளவில் விருத்தி பெறுகிறது!

சங்குத் தீர்த்தம் பூமாதேவிக்கு சாந்தித் தீர்த்தம்!

சங்கினுள் தீர்த்தத்தைத் தேக்கி வைத்து அதனை அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தும் போது அது பிரணவ பீஜாட்சர ஒலித் தீர்த்தமாக மாறுகின்றது. ஏனெனில் சங்கினுள் ஆழ்நிலை யோக ரீங்காரமாக ஒலிக்கும் ஓங்காரப் பிரணவச் சுடர்கள், தீர்த்தத்தில் கரைந்து மகத்தான தேவ தீர்த்தமாக மாறுகின்றது அல்லவா! எனவே சங்கிலிருந்து தீர்த்தம் வடிந்து அர்க்யமாக, தர்ப்பண ஆரல்களாக, அபிஷேக திரவியமாக, கோமுக நீராக பூமியை அடையும் போது பூமாதேவி மிகவும் ஆனந்தமுறுகின்றாள்! பூமியின் பாரத்தால், பூலோக ஜீவன்களின் கர்மப் பெருக்கால் மிகவும் அவதியுறும் தனக்கு சாந்தியைப் பெற்றுத் தரும் இச்சங்கு நீரை பூமா தேவியே தேவ பிரசாதமாக அருந்தி இதற்கான நன்றிச் சுடராகவே ஆறுகளையும், இனிய கிணற்று நீரையும் அளித்து அவை பூலோக ஜீவன்களுக்கு மகத்தான முறையில் பயன்படுவது கண்டு பரமானந்தப் பரவசம் அடைகின்றாள்.

பூகம்பச் சாந்திக்கு ஓங்காரச் சங்கொலி! எனவே பூகம்பம் நிகழும்/நிகழ்ந்த இடங்களில் எப்போதும் பூஜைச் சங்கொலி கேட்கும்படி வழிபாடுகளை மேற்கொண்டால் பூகம்பங்கள் தாமாகவே மறையும்! அன்றும், இன்றும், என்றும் சங்கு தீர்த்தத்தால் செய்யப்படும் அபிஷேக ஆராதனையானது பூமாதேவிக்கு மிகுந்த ப்ரீதி அளிப்பதாக விளங்குகின்றது.! மேலும் சங்கு வடிவானது நாம் இப்போது காண்கின்ற ஓங்கார வடிவத்தின் சஹஸ்ர மகாரூபங்களுள் ஒன்றாகும். ஓங்காரப் பிரணவப் பிழம்புச் சுடர் என்றே சங்கு பற்றிச் சித்புருஷர்கள் தம் பரிபாஷையில் உரைக்கின்றார்கள். வியட்டிப் பிரணவமும், சமட்டிப் பிரணவமும் கூடிய பிள்ளையாரப்பனின் தும்பிக்கையில் அகமர்ஷண மகரிஷியால் யோக சக்கரப் பீடமாக, ஓங்கார உரு ஏற்பட்டபோது தோன்றிய ஆதி முதல் இறை நாத ஓங்கார வடிவுகளுள் சங்கும் ஒன்றாம்.

பாற்கடலினின்று எழுந்த ஐஸ்வர்யங்களுள் சங்கும் ஒன்றுதானே! நாம் இன்றைக்கு உலகில் காண்கின்ற அனைத்து வகைச் சங்குகளும் பாற்கடலில் உருவான சங்கின் பாரம்பரியச் சேய்களாகும். எனவேதான் சங்குகளுக்குத் தோஷமோ, ஆசாரக் குறைவுகளோ கிடையாது. இறப்புத் தீட்டோ, தோஷமோ எதுவுமே அவற்றை எப்போதும் அண்டாது!

ஜாதி, மத, குல, இன பேதமின்றி அனைத்து மரபினரும், சங்காலான அபிஷேகத்தை இல்லத்திலும் எளிய முறைகளில் தக்க வழிமுறைகளுடன் கடைபிடிக்கலாம். சங்கால் அபிஷேகம் செய்வதற்கான உருவமோ, இறை உருவமோ, விக்கிரகமோ, தெய்வ உருவமோ நம்மிடம் இல்லையே என எண்ணி ஏங்காதீர்கள். வீட்டில் உள்ள பூஜா யந்திரங்கள், சக்கரங்கள் போன்றவற்றிற்கும் நீங்கள் அறிந்த இறைத் துதியை ஓதியவாறு, நன்றாகப் புனிதப்படுத்தி, சங்கு தீர்த்தம் ஊற்றிப் பூஜித்தாலே மிகச் சிறந்த சங்குத் தீர்த்த வழிபாடாக இது மலர்கிறது.!

இல்லத்தில் சிவலிங்கமோ, தெய்வ உருவ விக்கிரகங்களோ இல்லையென்றாலும் கூட சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையைப் பாண லிங்கமாகவும், சந்தனக் கல்லைப் பீடமாகவும் பாவித்து சந்தனக் கட்டைக்கும் சங்கால் அபிஷேகம் செய்யலாம். இதுவே சந்தன லிங்க அபிஷேகமாக, அதியற்புத வழிபாடாக அமைகிறது என்பதை இனியேனும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனச் சாந்தி தரும் கணச் சங்கு! இல்லத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத புது நாணயங்கள் இருந்தால் அவற்றையும் ஆவுடைகளாக, வட்டச் சிவலிங்கங்களாக பாவித்து சங்காபிஷேகம் செய்திடலாம். இதனால் பணக் கஷ்டத்திற்கு விடிவு கிட்டும். விளக்குகளைக் கூட குறிப்பிட்ட சில நாட்களில் சுத்தம் செய்து முதலில் சங்கால் அவைகளுக்கு அபிஷேகம் செய்து, விளக்கேற்றிப் பூஜைகளைத் துவக்குவது சிறப்புடையதாம்! இதனால் சங்குகளின் புனிதத் தன்மை தீபங்களில் குடியேறி அத்தீப ஒளி மூலம் நம் இல்லங்களில் ஓங்கார சாந்தி பரவி தம்பதியருக்கிடையே ஒற்றுமை, மன சாந்தியை உருவாக்கும்.

பொதுவாக சண்டை சச்சரவு நிறைந்த குடும்பங்களில் ஒற்றுமை நிலவிட விளக்குகளுக்குச் சங்கில் புனிதமான கங்கை/ காவிரி தீர்த்தம் ஊற்றி அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். சூரியன் மற்றும் சந்திரனின் கிரணங்களில் நம்மால் கிரஹிக்க இயலாத பல கோடி அரிய தெய்வீக சக்திகள் உண்டு. சூரிய, சந்திரக் கிரணங்கள் நம் உடலின் மீது பட்டால் தான் அவற்றின் தெய்வீகச் சக்திகளை நாம் கிரகிக்க இயலும் என எண்ணாதீர்கள். இவற்றின் கிரணங்கள் புக இயலாத இல்லம், அலுவலகம், தொழிற்சாலைகளிலும் கூட கட்டிடங்கள் ஊடே ஊடுருவி வருகின்ற கிரண சக்திகள் நிறைய உண்டு. இவையாவும் சுவர்களின் ஊடே புகுந்து தம்முடைய சக்திகளைக் கிரகிக்கக் கூடிய சந்தனம், மஞ்சள், தாம்பூலம் போன்ற தெய்வீகப் பொருட்களில் தங்குகின்றன.

எனவே உங்கள் இல்லத்தில் கதவுகள் மூடப்பட்டிருந்தால் கூட பகலிலும், இரவிலும் கோடிக்கணக்கான நட்சத்திர, சூரிய, சந்திர ஒளி சக்திகளை கிரகித்து நமக்குத் தேவையான புண்ய சக்திகளாகவும், தெய்வீக சக்திகளாகவும் மாற்றித் தருகின்ற தேவ சக்திகளைக் கொண்டதாகவே சங்குகள் விளங்குகின்றன. பால், வெண்ணெய், பூக்கள் போல எப்போதும் விருத்தியளிக்கும் தெய்வீக சக்திகள் சங்குகளுக்கும் உண்டு.!

கலைமகள் கடாட்சம் பொங்கும் அலைகடற் சங்கு! கல்வியும், செல்வமும் விருத்தியடைய வேண்டிய ஐஸ்வர்யங்கள் தாமே! எனவே தாம் உங்கள் குழந்தைகளுடைய பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்களைச் சங்குச் சிப்பிகளில் வைக்கின்ற நல்வழக்கத்தை, ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் ஞாபக சக்தி பெருகும்! கடற்புலி எழுதுகோல் அமர்வு இரு உறைச் சங்கு, ஒரு உறைச் சங்கு என சங்குகளில் கலைமகளின் அருட்கடாட்சம் நிறைந்த சங்கு வகைகள் உள்ளன. இவை கலைச் செல்வத்தை விருத்தி செய்யக் கூடியவை. ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீபிரம்ம மூர்த்தி, ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி பூஜைக்கான சங்குகளே பூமியில் வித்யா பீட தாரணங்களாக (இரு உறைச் சங்கு, ஒரு உறைச் சங்குகளாக) பூமிக்கு வருகின்றன!

நான்முகனும், கலைமகளும் தம்பதி சகிதம் சிவலிங்கத்திற்கு சங்கால் அபிஷேகித்த போது அந்தச் சங்கு அபிஷேக தீர்த்தமானது கும்பாபிஷேகத் தீர்த்தமாகப் பிரபஞ்சத்தில் தெறி(ளி)த்து, பல சங்குகளாகப் பூரித்து பூமியில் கலைச் செல்வத்தை விருத்தி செய்யக் கூடிய அருட்கலைச் சங்குகளாக இலங்குகின்றன! இவற்றில் எப்போதும் பேனா, பென்சில்களை வைப்பதால் அவற்றின் மேல் நீங்கள் எழுதுகின்ற அம்சங்களுக்கு நல்ல வித்யா விருத்தியும், கார்ய சித்தியும் ஏற்படும். உதாரணமாக, பத்திரங்களில் கையெழுத்திடல், பத்திரங்கள் தயாரித்தல், டெண்டர் எடுத்தல், குழந்தைகள் தேர்வுகள் எழுதுதல் போன்றவற்றிற்கு கடற்புலி ஒரு உறை, இரு உறை போன்ற சங்குகளில் வைக்கப்பட்ட பேனாவைப் பயன்படுத்துவதால் எவ்விதத் தடங்கலுமின்றி காரிய சித்தி கூடும். இவை இன்று fancy items போல் தோன்றினாலும் இவற்றில் வித்யா பீட சக்கர சக்திகள் பொலிவதை இனியேனும் உணருங்கள்!! அக்காலத்தில் குருதட்சிணையாக பல அரிய சங்குகளை சற்குருமார்களுக்கு அர்ப்பணித்து ஆசி பெறுவர்.

நரம்பு சக்தியைப் பெருக்கும் சிறப்புடைச் சங்கு! புஷ்பங்களால் அர்ச்சனை செய்யும் போது ஓரிரு விரல்களை மட்டும்தானே பயன்படுத்துகின்றார்கள்! தர்ப்பணம் அளிக்கும் போது வலது கட்டை விரல், ஆள்காட்டி விரல்களுக்கிடையே உள்ள உள் பகுதியே பயனாகின்றது. தேங்காய் உடைக்கும் போது ஐந்து விரல்களையும் அபிஷேகத்தின் போது நாலு விரல்களின் நுனிப் பகுதியை மாறி மாறிப் பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் சங்கு அபிஷேகத்தின் போது மட்டும் தான் சங்கை உள்ளங்கை, விரல்கள் அனைத்தாலும் அழகாக அரவணைத்துக் கையின் முழுப் பகுதியும் சங்கில் அமையுமாறு அபிஷேகிப்பதால் உள்ளங்கை ரேகை சக்திகள் தேவ சக்திப் பரிமாற்றம் பெற சங்காபிஷேகம் உதவுகின்றது.

பொதுவாக, கை சம்பந்தப்பட்ட நோய்களால் வாடுவோர் தக்க நிவர்த்திகளைப் பெற நோயாளிகளோ, அவர்தம் குடும்பத்தினரோ தினந்தோறும் வடக்கு முள்ளீஸ்வர சங்குகளால் சுவாமிக்கு, அரசு, ஆல், புரசு, வேம்பு போன்ற விருட்சங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தால் கை நடுக்கங்கள், கை இயலாமை, நரம்புத் தளர்ச்சி போன்ற துன்பங்களுக்கு எளிதில் தீர்வு கிட்டும்.

ஜுரம் நீக்கும் வரம் பூண்ட சங்குத் தீர்த்தம்! அடிக்கடி உடலில் காய்ச்சல் ஏற்பட்டு, டி.பி சம்பந்தப்பட்ட வியாதிகள், சுவாச நோய் போன்றவற்றால் அவதியுறுவோர் ஸ்ரீஜுரஹரேஸ்வரர் மூர்த்திக்கு ஐவிரல் சங்கு எனும் அபூர்வச் சங்கினால் மஞ்சளும் சந்தனமும் கலந்து அபிஷேகம், அன்னதானம் செய்து வந்தால் நல்ல தீர்வு பெறலாம். சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே ஸ்ரீஜுரஹரேஸ்வரரை நாம் தரிசிக்க இயலும். (தஞ்சை ஸ்ரீசங்கர நாராயணர் கோவில், பவானி ஸ்ரீசங்கமேஸரர் ஆலயம், திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்).

பீஜாட்சர சக்தி நிறைந்த சங்குகள்! மேலும் பல அரிய பீஜாட்சர மந்திரங்களை உபதேசிப்பதற்கான கடுமையான இறை நியதிகளைப் பலரும் பெறாமையால் இத்தகைய பீஜாட்சர சக்திகளை உலகின் நன்மைக்காகப் பயன்படுத்த முடியாமல் பரவெளியிலேயே அவை உறைந்து போகின்றன! ஆனால் இப்பிரபஞ்சமானது அத்தகைய அரிய பீஜாட்சர சக்திகளை இழந்துவிட்டமையால் இப்பீஜாட்சர சக்தியால் நிவர்த்தி அடைய வேண்டிய இன்னல்களும் துன்பங்களும் இன்றும் உலகில் இருக்கத்தானே செய்கின்றன. எவரொருவர் இத்தகைய பீஜாட்சர சக்திகளைத் தக்க சற்குருவிடமிருந்து உபதேசமாகப் பெறுகின்றார்களோ அவரால் மட்டுமே இத்தகைய இன்னல்களைத் தீர்க்க இயலும்.

சற்குருவானவர் குறித்த சில சங்குகளைத் தினந்தோறும் உரு ஏற்றி ஊதி ஒலித்தலின் மூலம் இப்பீஜாட்சர சக்திகளை எளிய இறையிழைப் பின்னல்களாக்கி பரவெளியில் நிறைத்து விடுகிறார். ஆலய பூஜா சக்திகளும் இவ்வகையில்தாம் கோயில்களில் உள்ள கலசங்களும், ஆலய கோபுர பொம்மைகளும் கிரகித்து மூலவருக்குரித்தான  அபிஷேக ஆராதனை தரிசனங்கள், விபூதி, குங்குமம், புஷ்பம், மஞ்சள், தீர்த்தம் போன்ற தெய்வீகப் பிரசாதங்கள் மூலமாக மக்களைச் சென்றடைகின்றன. எனவே இன்றைக்குப் பூவுலகில் பலராலும் பெற முடியாத அரிய தவ யோக சக்திகளைச் சங்குகள்தாம் பூலோக ஜீவன்களுக்குப் பெற்றுத் தருகின்றன. எனவே நம்மால் இயலாது, மிகவும் கடினமானது, ஆசார அனுஷ்டானங்களுக்கு உட்பட்டது. நமக்குத் தெரியாத விஷயம் என எண்ணிச் சங்கு பூஜைகளைக் கைக் கொண்டு தக்க காரிய சித்திகளைப் பெறுவீர்களாக! மேற்கண்ட தெய்வீகச் சங்கு வகைகள் யாவையும் சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜயம் கேந்தராலயாவில் பெற்றிடலாம்!

தெய்வீகமாக வாழ்வது எப்படி?

தெய்வீகம் என்பது நம் உடல், மனம், உள்ளம், உயிரோடு இணைந்த அம்சமாகும். எல்லோருள்ளும் ஆத்மார்த்தமாக இறைவன் உறைகின்றான் எனில் ஒருவன் தீயசெயல்களில் ஈடுபடுவது ஏன் என்று பலரும் கேட்கின்றார்கள்,  வயதாக வயதாக கெட்ட பழக்கங்களுக்கும், தீவினை சக்திகளுக்கும் ஆட்பட்டு நாம் பிறந்ததிலிருந்து நூற்றுக்கு நூறு சதவிகிதமாக நம்முடன் இணைந்துள்ள இவ்வியற்கைமய தெய்வீக சக்தியை விட்டு நாமேதாம் விலகிச் செல்கின்றோம்! எனவே நம்முள் தெய்வீக சக்திகள் எப்போதும் உறைந்து தான் கிடக்கின்றன. நாம்தாம் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை! கர்ம வினைகளின் விளைவாக நாமே அவற்றை விட்டு விலகிச் சென்று வாழ்கின்றோம்!

ஆத்ம சக்தியை மறைத்திடாதீர்! புனிதமான இடத்தில்தான் ஆத்ம சக்தியான தெய்வீக சக்தி உறைந்திருக்கும். அந்தப் புனிதமான இடத்தைப் பாழ்படுத்தவே தீவினைச் சக்திகளும், கெட்ட பழக்கங்களும் மனதிலும், உடல், உள்ளத்திலும் நுழையுமேயானால் அங்கு தெய்வீக சக்தி எப்படித் தங்க முடியும்? இதற்குப் பொறுப்பாளி அவரவர்களேயாம்! அனைத்து உள்ளங்களிலும் பரமாத்மா நிறைந்துள்ளது என்பது பரிபூர்ணமான உண்மையே. ஆறு நிறைய இனிய நீர் ஓடினாலும் அங்கு சென்று அருந்தினால்தானே அதன் இனிமை தெரியவரும்! (ஆன்ம) தாகமும் அடங்கும்!

விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் இல்லாத தீவினை சக்திகளையும், தீய பழக்கங்களையும் பகுத்தறிவு படைத்த மனிதன் கொண்டிருக்கின்றான் என்றால் அவனுடைய பகுத்தறிவு உண்மையாக வேலை செய்கின்றதா? நிச்சயமாக இல்லை! தெய்வீகப் பரிசாக இறைவன் மானுடப் பிறவிக்கு அளித்துள்ள ஆறாவது அறிவான பகுத்தறிவைப் பெரும்பாலான மனிதர்கள் மதித்து உணர்ந்து கடைபிடிக்காததால் தான் பல நூறு கோடி மக்கள் உள்ள இப்பூவுலகில் வருடத்திற்கு ஏழே ஏழு மனிதர்கள் மட்டுமே முக்தியும் மோட்சமும் அடைகின்ற உத்தம இறைநிலைகளைப் பெறுகின்றார்கள். ஏனைய அனைவரும் கர்ம வினையின் வசப்பட்டுத் தீய எண்ணங்கள், தீவினைக் காரியங்களில் ஈடுபட்டுத் தங்களுடைய தெய்வீக சக்தியை மறைக்கச் செய்து விடுகின்றார்கள், மறுந்தும் விடுகின்றனர்!

தெய்வீகமாக வாழ்வது எப்படி எனும் இத்தொடரில் நம்முள் உறைந்துள்ள தெய்வீக சக்தியை ஜோதி ரூபமாகவும், உருவமாகவும் உணர்ந்து வழிபடும் எளிய முறைகளை தெய்வீகத்தை நம்முடைய தினசரி வாழ்வில் கடைபிடிக்கும் வழிமுறைகளை –இறையருளால் –நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளாக – நாம் இங்கு எடுத்து உரைக்கின்றோம்.

அளவிலா அண்ணாமலை கிரிவலப் புண்ய சக்தி! மாதந்தோறும் குறைந்தது இருபத்தோரு முறையேனும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதால் நம் உடலில் தெய்வீக சக்திகள் நிரந்தரமாக நிறைந்திருப்பதை குருகடாட்சத்தால் நன்கு உணர்த்திடலாம்! ஆனால் தீர்த்தங்களில் நீராடல், தான தர்மங்கள், அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், உண்ணா நோன்பு போன்ற பலவித புண்ய சக்திகளைப் பெற்றாலும் அவற்றை உடனடியாகக் கரைக்கும் வகையில்தானே மனிதன் தன் தினசரி வாழ்வில் செயல்படுகின்றான். ஆனால் பக்தியுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும்போது நாம் பெறும் புண்ய சக்தியானது அவ்வளவு விரைவில் கரைந்து விடாது. ஏனெனில் உடல், உள்ளம், மனம் ஆகியவற்றில் ஆழப் பதியும் புண்ய சக்தியாக அது மலர்வதோடு மட்டுமின்றி பித்ரு லோகமும் சென்று அங்கும் சேவையாற்றும் சக்தியை அளிப்பதாக இப்புண்ய சக்தி அமைவதால் திருஅண்ணாமலையில் பெறப்படும் புண்ய சக்தி அவ்வளவு எளிதில் தீர்ந்து விடாது!

ஆனால் புகை பிடித்தல், மது, முறையற்ற காமம் மற்றும் தீயொழுக்கங்களில் ஈடுபட்டால் மிக எளிதில் சில நிமிடங்களிலேயே அவை கரைந்து விடும்! பெருமளவில் சேர்கின்ற புண்ய சக்தியை இவ்வாறு கெட்ட வழிகளில் கரைத்து விட்டு அருணாசல கிரிவலம் வந்தும் பிரயோசனமில்லை என்று கூறுவது எவ்வளவு அறிவற்ற செயல்! ஆனால் அருணை கிரிவலப் புண்ய சக்தியைப் போற்றிப் பாதுகாக்கும் வழிமுறைகளைத் தக்க குருமூலம் அறிந்திடில் இதுவே பலகோடி யுகங்களுக்கும், ஜன்மாதி ஜன்மங்களுக்கும் பெருந்துணை புரியுமன்றோ!

துணை வரும் அருணைப் புனல்! ஆமாம், அண்ணாமலை கிரிவலமே பிறவிப் பெருங்கடலைத் தாண்டவிடும் தானே, பின்னர் பலகோடி ஜன்மங்களுக்கு அது எப்படி உதவி புரிவதாகும்? திருஅண்ணாமலையே நினைத்தாலே முக்தி தரும் பெருஞ் சிவத் திருத்தலம் தானே! இங்கு கிரிவலம் வந்து பெறும் சக்தி பலகோடி ஜென்மங்களுக்கும் விரிந்து வருகிறது என்றால் ஜென்மமல்லாத பிறவி அளிப்பது தானே அருணைப் புண்ய சக்தியின் மகிமை என்று குறுக்குக் கேள்வி கேட்கத் தோன்றும்.

திருஅண்ணாமலையிலிருந்து பெறப்படும் புண்ணியம், பிறப்பு இறப்பற்ற தன்மையை உத்தம நிலைகளைத் தரவல்லதே! ஆனால் முக்தி நிலையை அப்புண்ய சக்தி அறவழிகளாகக் காட்டும் போது அவற்றின்பால் செல்லாதது மனிதனின் குற்றம்தானே! திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி எனும் போது அம்முக்தி நிலையை உணர்ந்த ஒரு மனிதன் நிச்சயமாகத் தவறு செய்ய மாட்டான். தவறுகள் ஒருபுறம், கடவுள் வழிபாடு ஒரு புறம், தான தருமங்கள் மறுபுறம் என்று இரண்டு, மூன்று வேடங்களிட்டு மனச்சாட்சியின்றி வாழும் மனிதனுக்கு முக்தி நிலைக்கு முந்தையதான பக்தி நிலை எவ்வாறு கிட்டும்?

முக்தி நிலை அடைவதெனில் வினைகளைத் தாமே அனுபவித்துத் தீர்த்து, அக்கர்ம வினைகளின் தன்மைகளை உணர்ந்து, அவற்றை மீண்டும் சேர்த்திடலாகாது எனும் மனவைராக்கியத்துடன் செயல்படுதலேயாகும்! இதே கர்ம வினைகளால் அவதியுறுகின்ற ஜீவன்களுக்கு நல்வழிகாட்ட மேலும் அறவழிகளை உணர்ந்து சற்குருவின் பாத கமலங்களில் சரணடைதலே உண்மையான முக்திக்கான உத்தம நிலையாகும். ஏதோ முக்தி நிலை பூலோகத்திற்கு வந்து பிறப்பெடுக்காமல் மேலுலகம் சென்று இறைவனுடன் ஐக்கியமாவதென்று மட்டும் பொருள் கொள்ளாதீர்கள். இறைவனிடம் ஐக்கியமடைதல் என்றால் இறைவன் இட்ட ஆணைப்படி எத்தனை கோடிப் பிறவிகள் என்றாலும் எடுப்பதற்குத் தயாராக வேண்டும். இவ்வாறாக சற்குருவோடு இணைந்து வரும் உத்தமப் பிறவிகளில் அண்ணாமலைப் புண்ய சக்தி துணை வரும்! மேலும் முக்திக்கு முந்தைய நற்பிறவிகளில் அருணை கிரிவல சக்தி அருட்துணை புரியும்! இதுவும் முக்திக்கான உத்தம நிலைக்ளில் ஒன்றாகும்.!

மாதந்தோறும் குறைந்தது இருபத்தோரு முறையேனும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதால் குருகடாட்சம் கிட்டும் வழிமுறைகளை நன்கு உணர்ந்திடலாம்! எனவே தினந்தோறும் மானசீகமாவது இறைப் பகுத்தறிவு கூடிய உள்ளத்தளவில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதை நித்ய பூஜையாகக் கொண்டிடுங்கள்!

செவலூர் ஸ்ரீபூமிநாதர்

செவலூர் ஸ்ரீபூமிநாதர் ஆலயத் தீர்த்த மஹிமை!

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

வாஸ்து சக்திகள் நிறைந்த அற்புதத் தலம்! நீரோட்டம் சிறக்க உதவும் அற்புதத் தலம்! பூமி பூஜைக்கு உவப்பான, வாஸ்து பூஜைக்கு ஏற்ற அற்புதத்தலம்! புதுக்கோட்டை – பொன்னமராவதி மார்கத்தில் குழிபிறை வழியாகச் செல்லும் சாலையில் செவலூர் உள்ளது.  மிகச் சிறந்த சமுதாய வழிபாடாக வாஸ்து நாட்களிலும், ஸ்ரீபூமாதேவிக்கு உரித்தான செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 6-7, பகல் 1-2, இரவு 8-9) செவலூரில் ஸ்ரீபூமிநாத சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூமிக்குக் கீழே விளைகின்ற கிழங்கு வகையிலான பொருட்களை அன்னதானமாக அளித்து வந்தால் எத்தகைய நில சம்பந்தப்பட்ட தகராறுகளுக்கும் தக்க தீர்வுகிட்டும். இயற்கைச் சீற்றங்களால், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு நல்வாழ்வும், இறந்தோர்க்கு நற்கதியும் கிட்டும்.

செவலூர் சிவாலயம் அருகேயுள்ள பிருத்வி தீர்த்தம் மகத்தான தீர்த்தம், பலரும் இதன் மகத்துவத்தை உணராமையால் தற்போது ஒரு சாதாரணக் குளம் போல் தென்படுகின்றது. தர்ப்பணம் அளிப்பதற்கான மிகச் சிறந்த தீர்த்தமிது! இத்தீர்த்தத்தின் மகிமை என்னவென்றால் பூலோக நீரோட்டங்கள் அனைத்துமே இத்தீர்த்தத்தோடு சம்பந்தப்பட்டதாகும். கோடையில் வறண்டிருந்தாலும், நீர்வளம் நிறைந்திருக்கும் தீர்த்தமிது. சுவாமியே ஸ்ரீபூமீஸ்வரராக, ஸ்ரீபூமிநாதராக விளங்குவதால் ருத்ர பூமிச் சுயம்புச் சிவலிங்க மூர்த்தியாக இருப்பதால் உலகத்தில் உள்ள அனைத்து பூமி நீரோட்டங்களும் இந்த ஆலயத்தோடு இத்தீர்த்தத்தோடு சம்பந்தம் கொண்டவையாகும்.

பூகம்பம் ஏற்படுவதற்கு விஞ்ஞானப் பூர்வமாகச் சொல்லப்படுகின்ற காரணமானது பூமியின் அடியில் உள்ள பாறைகளின் தொடர்ச்சியில் ஏற்படும் விரிவாகும். குஜராத்தில் உள்ள அடிப்பாறைத் தொடர்ச்சியானது தமிழகத்தின் தருமபுரி, ஓசூரின் எல்லை வரை இருப்பதாக விஞ்ஞானம் குறிப்பிடுவது மெய்ங்ஞானத்தில் தொடர்ச்சியே! மெய்ங்ஞான விஞ்ஞானத்தில் இதைவிட அதியற்புத உண்மைகள் உண்டு.

செவலூர் பிருத்வித் தீர்த்தம்! செவலூர் சிவாலயக் குளத் தீர்த்தமானது பூலோகத்தில் அனைத்து நீரோட்டங்களுடன் தொடர்பு கொண்டதாகும். இதனுடைய பூகோள ரீதியான பூமித் தன்மையானது மகத்தான தெய்வீகத் தன்மைகள் கொண்டதாம்! ஒரு யுகத்தில் கோடானுகோடி தேவர்களால் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட, பூஜிக்கப்பட்ட தலமானது இன்றைக்கு பக்தர்களுடைய அசிரத்தையால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என்பது வேதனைக்கு உரியதாகும்!

நம் கண்களுக்குத்தான் இடிபாடுகள் நிறைந்த ஆலயமாக இச்சிவத்தலம் தென்படுகின்றதே தவிர, சூட்சுமமாக தேவாதி தேவர்கள் இன்றைக்கும் தங்களுடைய ஆறுவேளை பூஜைகளையும் இங்கு தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இவையெல்லாம் தேவலோக விந்தைகளாகும். மனிதனின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டதாகும்! இதை உணர்வதற்கான தெய்வீக நேத்ர சக்தியைப் பெறுவீர்களேயானால் இந்த செவலூர் ஆலயம் மட்டுமல்லாது இன்றைக்கு பூலோகத்தின் அனைத்து ஆலயங்களுமே பிரம்மாண்டமான மதில்களுடன் மிகச் சிறந்த விமானங்கள் கூடியதாக சூட்சுமத் தோற்றுத்துடன் திகழும்.

பிருத்வி தீர்த்தம்
செவலூர்

கோடி நீரோட்டம் கூடிடும் செவலூர்த் தீர்த்தம்! செவலூர் சிவத்தலத் திருக்குளத் தீர்த்தத்தை சித்தர்கள் பிருத்வி தீர்த்தம் என்றே அழைக்கின்றார்கள். மற்ற ஆலய தீர்த்தங்களில் எல்லாம் பூமியின் மேலே ஓடுகின்ற ஆயிரமாயிரம் புண்ய நதிகளுடைய தீர்த்தம் கலந்திருக்கும். ஆனால் செவலூர் தீர்த்தத்தின் மகா மகிமை என்னவென்றால் பூமியின் அடியில் ஓடுகின்ற புண்ய நீரோட்டங்களின், ஆறுகளின் தீர்த்தங்களையெல்லாம் கொண்டதான மகத்தான தீர்த்தமாக விளங்குகின்றது.!

இன்றைக்குக் கலங்கலான, சாதாரண தீர்த்தம் போல் இது தோன்றினாலும் சூட்சும தேவ பார்வையில் இதை நோக்கினால் மிகவும் அதியற்புத சக்தி நிறைந்த தீர்த்தமாக விளங்குவதைப் பரிபூரணமாக உணர்ந்திடலாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து போன்று எந்த நாட்டிலும் பூமியின் அடியில் ஓடுகின்ற புனித நீரோட்டங்களின் அம்சங்களை, ஆன்ம இணைப்பினை இத்தீர்த்தத்தில் நாம் கண்டிடலாம். இதனுடைய பூகோள அமைப்பானது பல அற்புதமான பூமி ஆழ்வு நீரோட்ட இணைப்புகளைக் கொண்டிருப்பதால்தான் இவ்விடத்தில் சுயம்பு மூர்த்தியாக, ஸ்ரீபூமிநாதராக சிவபெருமான் அருள்பலிக்கின்றார்!

பித்ருக்கள், பித்ரு பத்னிகள் வழிபடும் தீர்த்தம்! பூகம்பத்தில் உயிர் துறந்தோர்க்கான தர்ப்பணங்களை நிகழ்த்துவதற்கான மிகச் சிறந்த தீர்த்தமிது! பண்டைய காலத்தில் மகத்தான தர்ப்பணத் தலமாக விளங்கிய இச்சிவாலயமானது இன்றைக்கு மனித சமுதாயத்தின் அசிரத்தையால் கவனிப்பற்று இருக்கின்றது. இனிமேலாவது பக்தகோடிகள் விழித்தெழுந்து இங்கு தினந்தோறும் பூஜைகள் நன்முறையில் நடைபெறுவதற்கு அனைத்து இறைப் பணிகளையும் ஆற்றிட வேண்டும். எந்த நாட்டிலும் பூகம்பத்தில் இறந்தோர்க்கான நற்கதி அளிப்பதற்கான மகத்தான தர்ப்பண சக்தியை இத்தலமும், இத்திருக்குளமும் கொண்டிருப்பதால் இங்கு செவ்வாயும் அமாவாசையும் கூடுகின்ற விசேஷ நாள் மற்றும் ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு உரித்தான செவ்வாய்க்கிழமைகளிலும், வாஸ்து நாளிலும், அமாவாசை திதியிலும், மூதாதையர்களுடைய திதிகளிலும் இங்கு தர்ப்பணம் அளிப்பதும் பூமி பூஜை செய்வதும் மிகச் சிறப்புடையதாகும். பெரும்பாலும் பூலோகத்திற்குத் தனித்து வரும் பித்ருக்கள் இங்குள்ள பிருத்வி தீர்த்தத்திற்கு பித்ரு பத்னிக்களுடன் வழிபாட்டிற்கு வருதல் இவ்வாலாயத்தின் அரிய மகத்துவத்தை உணர்த்துகிறது.

ஸ்ரீஆரணவல்லி அம்பிகை
செவலூர்

இங்குள்ள திருக்குள தீர்த்தத்தில் நீர் உள்ளதோ, இல்லையோ, கலங்கி உள்ளதே எனக் கவலைப்படாதீர்கள்! குடத்திலாவது, பாத்திரத்திலாவது உங்களுடன் நீரைச் சுமந்து வந்து இங்கு தர்ப்பணம் அளித்திடில் இது மகத்தான பலன்களைத் தரும்! சூட்சும தேவ பார்வைக்கு இங்கு நீர்வளம் என்றும் குறைவது கிடையாது. ஏனென்றால் பூலோக நீரோட்டங்களின் மையமாக விளங்குகின்ற தலம் என்பதால் இதற்கு மகத்தான தெய்வீக சக்திகளும், ஜல வளமும் உண்டு! இத்தலத்தின் மகிமையை உணர்ந்தாவது இனியேனும் பக்தர்கள் ஸ்ரீவாஸ்து நாட்களிலும் இவ்வாலயத்தில் ஸ்ரீபூமிநாத சிவபெருமானுக்கு அனைத்து விதமான பூஜைகளையும் மேற்கொண்டு செவ்வாய்க் கிழமை தோறும் அபிஷேக ஆராதனை, லிங்கத்தின் பட்டை  வடிவங்களுக்கு ஒவ்வொரு பட்டைக்கும் ஒவ்வொரு விதமான காப்பு சார்த்தி நன்முறையில் வழிபடுதல் வேண்டும்!

ஸ்ரீபைரவமூர்த்தி ஒழுகமங்கலம்

பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு நற்கதியையும் அவர்தம் சந்ததியினர்க்கு நல்வழிகளையும், சேதங்கள் ஏற்பட்ட பூமிக்கு மீண்டும் நல்வளத்தையும் பெற்றுத் தருவதற்காக இங்கு சமுதாய இறைவழிபாடாகக் காருண்யத் தர்ப்பண வழிபாடுகளை மேற்கொள்வதோடு, இதனையே சிறந்த வாராந்திர, மாதாந்திரச் சமுதாய பூஜையாக அமைத்து உலகமே பயனுறும் வண்ணம் செய்வது பக்த கோடிகளாகிய உங்களின் பெரும் பொறுப்பாக அமைகிறது.!

க்ஷீர கோடித் தர்ப்பணம் என்ற ஓர் அற்புதமான தர்ப்பண முறை உண்டு. பொதுவாக பூகம்பத்தின் விளைவுகளால் ஏற்படும் ஜீவ மரணங்களுக்குத் தக்க ஜீவ சாந்தி பெற்றுத் தருவதற்காகச் சித்தர்கள் இந்த அரிய தர்ப்பண முறையை அளித்திருக்கின்றார்கள் இந்த தர்ப்பண முறை உதித்த ஆண்டே பலகோடி யுகங்களுக்கு முன் வ்ருஷ (விஷு) ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பெரும்பாலும் ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீபூமீஸ்வரர் போன்ற பூமி நாமங்களைத் தாங்கிய சிவாலயங்களில் வ்ருஷ (விஷு) வருடத்தில் கும்பாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இதை நன்கு கவனத்தில் கொண்டு பக்த கோடிகள் தமிழகத்தில் உள்ள ஸ்ரீபூமீஸ்வரர், பூமிநாதர் சம்பந்தப்பட்ட ஆலயங்களில் தக்க இறைப் பணிகளைத் துரிதமாக ஆற்றிட முயற்சி செய்தல் வேண்டும். இந்த க்ஷீர கோடித் தர்ப்பண முறையில் பூலோகத்தின் அடியில் உள்ள ஊற்று நீர் அல்லது செவலூர் பிருத்வி தீர்த்த நீர் கொண்டு தர்ப்பணம் அளித்தலையே சித்தர்கள் பெரிதும் போற்றுகின்றார்கள்.!

ஆனால் மானுடர்களாகிய நாம் பூமியின் அடியிலுள்ள நீரோட்டங்களை எப்படி வெளிக் கொணர முடியும்? அக்காலத்தில் அனைத்துக் கிராமங்களிலும் நீரானது தானாகவே ஊறி வந்து கிணறுகள் நிரம்பியிருந்தன. எனவேதான் கிணற்று நீரானது மிகவும் ஆரோக்யமுடையதாக விளங்கியது. தற்காலத்தில் எங்கு பார்த்தாலும் போரிங் (பம்ப் செட்) முறையில் நீரோட்டத்தை வலிய மேலே இழுத்து, பலவித வண்ணங்களுடன் அது மேலே வந்து பூமாதேவிக்கும் பல பாரங்களைச் சுமத்துகின்றது. பொதுவாக பம்ப் செட் மூலம் நீரைக் கொணர்வது சிறப்புடையதன்று. இது பூமிக்கு பாரத்தைத்தான் தரும். இது பூமியின் நீர் வளத்தை பாதிப்பதோடு பூமியின் நீரோட்டங்களையும் பாதிக்கும்! இந்த நீரோட்ட மாற்றங்களும் நில நடுக்கத்தை உண்டு பண்ணும்!

ஸ்ரீமுருகப் பெருமான் செவலூர்

நீரின்றி அமையாது உலகம்! ஆமாம் கிணற்றில் ஊற்று நீர்வளம் இல்லை எனில் அங்கு வாழ்வதற்கு என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகின்றதே! நீர்வளம் இல்லையெனில் அவ்விடம் ஜீவ வாழ்க்கைக்காக இறைவனால் நியதிக்கப்படவில்லை என்று பொருள்! ஆனால் மனிதமனம் இதை ஏற்குமா? இருக்கின்ற ஒரே ஒரு அரச மரத்தையும் வேரோடு பிடுங்கி விட்டு ப்ளாட்டுகள் கட்டும் சுயநலப் பேராசை பூதங்கள் பெருகி விட்டார்களே!

பம்ப் செட் மூலம் நீரோட்டத்தை மேலாக வலித்து இழுக்க இழுக்கத்தான் பூமியின் அடியில் உள்ள பாறைகளில் மணற் பாங்குகள் பிளவுபடுகின்றன. இதுவும் பூகம்பத்திற்குக் காரணமாகின்றது. எனவேதான் நீர் வளங்களையும் நிலவளங்களையும் போற்றுவதற்காகத்தான் காடுகளை வளர்த்துப் புண்ய நதிகளைப் போற்றித் துதித்து ஆலய தீர்த்தங்களை, குளங்களை எல்லாம் நம் முன்னோர்கள் நன்கு பராமரித்து வந்தார்கள்.!

தற்காலத்திலோ அடுக்கு மாடிக் கட்டிடம் என்ற வகையில் 300, 400 பிளாட்டுகள் எழுந்து விடுவதால் அவ்விடத்தில் நீரோட்ட முறையே மாறிவிடுகின்றது. இயற்கையான முறையில் நல்ல நீரோட்டங்கள் அமைந்தால்தானே அவை ஆரோக்கியம் தரும். நீரோட்டத்தின் கீழ் மாசு ஏற்படும் வண்ணம் பெருங் குழிகளைத் தோண்டி அடி நீர்மட்டத்தை வலித்து மேலே கொண்டு வந்தால், அதுபல வண்ணங்களுடன் பூமாதேவியின் கவலையைத் தானே குறிக்கின்றது!

எங்கு நீரோட்டம் சரியாக அமையவில்லையோ ஜீவன வாழ்க்கை அங்கு இறைநியதியாக விதிக்கப்படவில்லை என உணர்ந்து அவ்விடத்தை விட்டு விலக வேண்டும். இதற்காகத்தான் பூமாதேவிக்குச் சாந்தம் தரும் நில அம்சங்களை அறியவே கொய்யாக் கோல் கொண்டு நீர் மட்டத்தை அறியும் பாங்கினை நம் முன்னோர்கள் வகுத்தார்கள்.!

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர்

பூமாதேவி தரும் நன்னீர்! எங்கெல்லாம் பூமாதேவிக்கு மதுர ஜல த்வீப நாளங்கள் மிகுந்துள்ளனவோ, அங்கு மட்டும்தான் நீரில் இனிமைச் சுவையும், நல்ல நீரோட்டமும் அமையும். இந்த மதுர ஜல த்வீப நாளங்கள் உள்ள இடங்களிளெல்லாம் பூமாதேவியே மனமுவந்து நீரை மேலே கொண்டு வந்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்றாள். ஆனால் தற்காலத்தில் மதுர ஜல த்வீப நாளங்கள் இல்லாத இடங்களிலெல்லாம் நீரை வலிய மேலே கொண்டு வந்து நீரோட்ட இயற்கைச் சூழ்நிலையை மாற்றிச் சேதங்களை விளைவிக்கின்றனர். இதுவும் பூகம்பத்திற்கு ஒரு காரணமாக அமைகின்றது.

தற்காலத்தில் பாலாலயம் என்ற பெயரில் மூலவருக்கு உரித்தான அபிஷேக ஆராதனைகளை முழுவதுமாக நிறுத்தி விட்டு உற்சவர்களுக்கு மட்டும் அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்கின்றார்கள். ஆனால் தற்போதைய தாமதச் செயலாக்கங்களினால் ஒரு ஆலயத்திற்கு பாலாலயம் செய்து 1, 2, 3 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் பெறாமல் மூலவருக்குச் செய்யும் வழிபாடுகளை நிறுத்தி விடுவது முறையானதா? பாலாலயம் என்று தொடங்கி விட்டால் கும்பாபிஷேகம் தானாகவே நடைபெறும் என்று எண்ணி இன்றைக்கும் பல ஆலயங்களில் பாலாலய நிலையிலேயே கும்பாபிஷேகம் நிகழாமல், பல மாதங்களாக மூலவருக்கும் அபிஷேக, ஆராதனைகள் இல்லாமல் தாமதமானால் எத்தகைய பெரும் பிழை இது! இவையெல்லாம் பூமியின் நீரோட்டங்களைப் பாதிக்கும் பூகம்பத்தையும் தருவிக்கும்.!

கோமுக நீரே குல வளம் / நில வளம் தரும்!

சுயம்பு மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆறுவேளையும் நடைபெற்று வந்தால்தான் இந்த அபிஷேக நீர் நிலத்தில் பாய்ந்து நீரோட்டத்தை நன்முறையில் வளமாக்கும். இன்றைக்கு ஆலய அபிஷேக நீராக கோமுகம் வழியாக வருகின்ற நீர் (தே)தங்கி நாற்றமடைவது போலத் தோன்றினாலும் அது உண்மையிலேயே புனிதம் நிறைந்த நீராக பூமியில் சேர்ந்து பூமியின் நீர்வளத்தைப் பெருக்குகின்றது. அபிஷேக நீர் வருகின்ற கோமுக வாயிலில் கோடிக்கணக்கான பூமி தேவதைகள் காத்திருந்து அவற்றைப் பிரசாதமாக அருந்தி பூலோகமெங்கும் கோமுகப் புனித நீரைத் தெளித்து பூமியின் நீர் வளத்தைப் பெருக்குகின்றார்கள். ஆறு வேளை பூஜை அல்லது குறைந்தது மூன்று வேளையாவது அபிஷேகம் நிறைந்தால் தானே இந்த பூமி தேவதைகள் ஏமாறாது அபிஷேக நீரைப் பெற முடியும். எனவே பாலாலயம் என்ற பெயரில் மூலவருக்கு எவ்வித அபிஷேக ஆராதனைகளும் நிகழாவிட்டால் அல்லது பழைய ஆலயங்களில் நிர்வாகக் குறைபாடுகளினால் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் என்ற வகையில் பூஜைகள் இருந்தால் இவ்வாலயங்களில் எல்லாம் கோமுகத்தில் காத்திருக்கும் பூமி தேவதைகள் எவ்வாறு திருப்தி அடையும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
செவலூர்

(ஜன)வாசத்திற்கு வாஸ்து சாஸ்திரம்! நீர் வளங்கள் நிறைந்த இடங்களில் மட்டும்தான் கிணறு, நீர்ப் பாசனங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஏனைய இடங்களை ஆலயங்கள், கால்நடை, வனப் பராமரிப்பு, மேய்ச்சல் போன்றவற்றிற்கு விட்டு விடுதல் வேண்டும். அப்படியானால் எல்லா இடங்களிலும் மக்கள் வசிக்க முடியாதே! ஆம் உண்மையே! ஒரு நகரம் என்றால் தற்போது இருப்பதுபோல் எல்லா இடங்களிலும் ஜனவாசம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த இடத்தில் தோட்டங்கள், விளை நிலங்கள், ஆலயங்கள், தீர்த்தங்கள் என்று பகுத்து அனைத்திற்குமாகத்தான் நிலவளம் சமமாகப் பிரிக்கப்பட வேண்டுமே தவிர காடுகள், வனங்கள் இவற்றை அழித்துக் குடியிருப்புகளாக மாற்றினால் நீர்வளமும், கனிம வளமும், ஆரோக்ய வளமும் குறையத்தானே செய்யும். நகரத்தில் ஜனவாசம் பெருகுவதை விட, இயற்கை வளமும், நில வளமும், தெய்வீக சக்தியும் சூழ்ந்த கிராமங்களில் சீராகப் பரவுவதுதான் சிறப்புடையதாகும். கட்டுப்பாடற்ற, இறைமைச் செறிவில்லா நகர வளர்ச்சி தான் தற்போதைய பூமியின் அனைத்து நாடுகளிலும் பல துறைகளில் நலமின்மைக்குக் காரணமாக அமைகின்றது. அமாவாசையும், ஸ்ரீவாஸ்து நாளும் சேர்கின்ற நாளானது மிகமிக அபூர்வமான நாளாகும். ஏனென்றால் இந்நாளில்தான் செவலூரில் ஸ்ரீபூமிநாதர் சுயம்பு மூர்த்தியாக இங்கு அவதாரம் கொண்டார்.

செவலூரில் பூமா தேவியின் பெருந்தவம்! எதிர் வரும் யுகங்களில் தமக்கு ஏற்படும் பாரங்களைத் தாங்குவதற்கான தெய்வீக சக்தியைப் பெறுவதற்காகக் கிருதயுகத்திலேயே பூமாதேவி கடுந்தவம் மேற்கொண்டாள். ஆனால் சர்வேஸ்வரனோ, “அம்மா பூமாதேவி! வருகின்ற யுகங்களில், குறிப்பாகக் கலியுகத்தில் உனக்கு ஏற்படுகின்ற ஜீவன்களின் கர்ம பாரங்களைச் சுமப்பதற்கு, உன்னுடைய இந்த தவசக்தி போதாது, உன்னுடைய பக்தர்கள் தாம் கூடுதல் பூஜை செய்து, அவற்றை நீ தாங்கும் வண்ணம் தக்க தெய்வீக சக்தியை ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் அருளாகப் பெற்றிட வேண்டும்”, என்று அருளினார்.

நல்ல பக்தர்களைப் பெறுவதே சிரமமான காரியம். எனவே முதலில் தக்க பக்தர்களைப் பெறுவதற்காக ஸ்ரீபூமாதேவியே பூலோகமெங்குமுள்ள சுயம்பு மூர்த்திகளை வலம் வந்து தம்முடைய அடிப்பிரதட்சிண தவத்தைத் தொடர்ந்தனள், எங்கெல்லாம் பூமாதேவி மானுட ரூபத்திலேயே அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டாளோ, அங்கு ஸ்ரீபூமி நாதர், ஸ்ரீபூமிநாதேஸ்வரர், ஸ்ரீபூலோகநாதர் போன்ற பூமித் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இங்கெல்லாம் பொறுமையின் சிகரமாக ஸ்ரீபூமாதேவியே அமர்ந்து பூஜித்தமையால், இவ்விடத்தில் பல அற்புத நீரோட்டங்கள் இறைச் சீர் வளமை கொண்டன. இவையே தீர்த்தங்களாகவும் மாறின. இவ்வாறு பாரதமெங்கும் பூமாதேவி வழிபட்ட தலங்கள் நிறைய உண்டு. பிற நாடுகளிலும் இத்தகைய பிருத்வி சக்தி நிறைந்த தலங்கள் உண்டு. இவற்றைத் தக்க சற்குரு மூலமாக உணர்ந்திடுக! இவையாவும் தெய்வீக இரகசியங்களாகும்! இறைப் பகுத்தறிவால் உய்த்து உணரப்பட வேண்டியவையாம்! செவலூர் சிவாலயத் திருப்பூமியிலே, பூமாதேவி பல கோடி யுகங்களாக அமர்ந்து பூஜித்தமையால்தான் இத்தலத்திற்கு விசேஷமான, அதீதமான நீரோட்ட அற்புதங்களும் உண்டாயின. இங்கெல்லாம்தாம் பூமித்தாய் தமக்குண்டான சிறந்த பக்தர்களையும் அருந்தவத்தால் பெற்றனள்! இவர்கள்தாம் இன்றைக்கு மகான்களாகவும், மகரிஷிகளாகவும், தேவாதி தேவர்களாகவும் அண்டசராசரங்களிலும் நிறைந்திருந்து இன்றும் இங்கு வந்து வாஸ்து நாட்களில் சூட்சும வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

ஸ்ரீலட்சுமி வராகர் சிங்கவரம்

தருணம் வந்ததையா! ஏன் இத்தலத்தின் மேன்மை இதுகாறும் உணரப்படவில்லை? பூமாதேவியே இதன் மகிமையை பூலோக மக்களுக்கு உணர்த்திச் செவலூர் சிவாலயத்தை மகத்தான சிவத் தலமாகப் பிரகாசிக்கச் செய்திருக்கலாமே என்று கேட்கத் தோன்றும்! எந்தத் திருத்தலமானது எப்போது மீண்டும் பூமியில் பிரகாசித்துத் தக்க இறைப் புகழை அடைய வேண்டுமோ அத்தருணத்தில் சித்தர்கள், சற்குருமார்கள், மகரிஷிகள் மூலமாக அத்தலத்தைப் புதுப்பித்துக் கொள்கின்றார்கள். இவ்வாறுதான் சமீபகாலத்தில் ஸ்ரீவிஷ்ணுபதி, வாஸ்து பூஜை, பௌர்ணமி கிரிவலம், அங்காரக சதுர்த்தி விரதம், ஸ்ரீஆயுர் தேவி பூஜை போன்ற விரதங்கள் மீண்டும் மேம்பாட்டை அடைந்தன. இவ்வழியாடுகள் எல்லாம் பிற யுகங்களில் பிரசித்தி பெற்றவைதாம். இடைக்காலத்தில் மக்களால் ம(றை)றக்கப் பெற்று, மறைந்து மீண்டும் பூலோகத்தில் உருவாகியுள்ளன.

இதேபோல செவலூர் ஸ்ரீபூமிநாதர் சிவாலயம் மீண்டும் மக்களிடையே பிரசித்தி பெறத் தக்க தருணம் வந்துள்ளமையால் தான் சித்தர்களின் ஞான பத்ர வாக்கியங்கள் மூலமாக இதன் தெய்வீகத் தன்மைகள் மீண்டும் உலகிற்கு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் அவர்தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவாய் மொழிகளாகப் பறை சாற்றப்படுகின்றன !

காப்பில் விளைந்த காப்பு லிங்கம்!

ஸ்ரீபூமாதேவி இங்கு தவம் பூண்ட வேளையிலே ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, கஸ்தூரிக் காப்பு, வெண்ணெய்க் காப்பு, மூலிகைக் காப்பு என பலவிதமான காப்புகளைச் சார்த்திப் பூஜித்தமையால் ஒவ்வொரு காப்பும் ஒரு பிருத்விப் பட்டையாக சிவலிங்கத்தில் உருக்கொண்டது. ஆனால் பூமாதேவியால் ஏற்படுத்தப்பட்ட பட்டைகளல்ல இவை! பூமாதேவியின் பூஜா பலன்களால் வெளிப்படுத்தப்பட்டவையே! எனவே சுயம்பு ஜ்வல தீபமாக உள்ளே ஒளிர்ந்திருந்த நீரோட்ட சக்திகள் தாம் பூமாதேவியின் திருக்கரங்கள் பட்டவுடனேயே பிருத்விப் பட்டை லிங்க முகங்களாக ஜ்வலித்தன! எனவே பூமாதேவியின் திருக்கரங்களால் மீண்டும் நம்முடைய கண்களுக்கு பிருத்விப் பட்டைச் சுயம்பு லிங்கமாகத் தோன்றுவதற்காக இறைவனின் நல்வரம் மலர்ந்த தலமே இதுவாகும். பிருத்வி தேவர்களுக்கான அதியற்புத அர்க்யத் தலமாகவும், பித்ரு தேவர்களுக்கான தர்ப்பணத் தலமாகவும் விளங்குவதால் அனைத்துக் கோடிப் பித்ருக்களும், பித்ரு பத்னிகளும் இங்கு கூடி அமாவாசை தினத்தன்று இப்புனித பூமியை தர்ப்பணத் தலமாக ஜ்வலிக்கச் செய்கின்றனர்! எனவே இத்திருக்குளம் தர்ப்பணம் செய்வதற்கான சிறப்பான தீர்த்தத் தலமாகும். பூமாதேவியே அமர்ந்து பூஜித்த பூமியல்லவா! பூலோகத்தில் வேறு எங்கும் கிட்டிடாத அளவில் பூமியின் அடியில் நீடோட்டங்கள் நிறைந்த தீர்த்தம் ஆகையால் இத்தல தீர்த்த சக்தியை வேறெங்கும் நாம் பெற்றிட இயலாது.

ஸ்ரீநடராஜப் பெருமான்
செவலூர்

வாஸ்து நாளும், அமாவாசையும் கூடும் அற்புதத் திருநாள்! பித்ருக்கள், பித்ரு பத்னிகள், நீரோட்ட தேவதைகள், பூமி தேவதைகள் அனைவரும் கூடும் அரிய பெருநாள் 23.4.2001

கும்பகோணம் மகாமகக் குளத்தில் கோடானு கோடி புண்ய நதி தேவதைகள் மகாமகத்தன்று நீராடி திருக்குளத்தின் புனிதத் தன்மையை மேம்படுத்துவது போல இங்கு செவலூரில் கோடானு கோடி நீரோட்ட தேவதைகள், பித்ருக்கள், பித்ரு பத்னிகள், நீரோட்ட தேவதைகள், பூமி தேவதைகள் ஒன்று கூடிப் புனிதம் கூட்டுகின்ற திருநாளே வாஸ்து நாளும், அமாவாசை திதியும் சேர்ந்து வருகின்ற நாளாகும்.

வாஸ்து நாளும், அமாவாசையும் கூடும் அற்புதத் திருநாள்! இத்திருநாளில் இத்திருக்குளத்தில் தர்ப்பணமிட்டு பூமாதேவி பூஜித்த பிருத்விப் பட்டைச் சிவலிங்கத்திற்கு வெண்ணெய்க் காப்பு, மஞ்சள் காப்பு, கஸ்தூரிக் காப்பு போன்றவற்றை இட்டு வழிபட்டு வந்தால் கீழ்க்கண்ட பலாபலன்களைப் பெற்றிடலாம். இதன் பிறகு செவ்வாய்க் கிழமைகளிலும், அமாவாசை, வாஸ்து நாட்களிலும் இப்பூஜையைத் தொடர்ந்திடலாம். செவலூர் ஸ்ரீபூமிநாதர் பூஜா வழிபாட்டுப் பலன்கள் :-

1. பூகம்பங்களினால் பாதிக்கப்பட்டு இறந்த ஜீவன்களுக்கு நற்கதியைப் பெற்றுத் தந்து அவர்கள் சந்ததியினர் நன்முறையில் தழைத்து வளம் பெறுவதற்கும், பூமியின் சேதங்கள் தீர்வு பெற்று நன்முறையில் பூமி வளம் நிறைவு பெறுவதற்கும் இப்பூஜா பலன்கள் உதவுகின்றன.

2. கோர்ட் வழக்குகள், உறவினரிடையே பகைமை, விரோதம் போன்றவற்றால் தடைப்பட்டுள்ள நிலசம்பந்தமான தொழில்கள், தொழிற்சாலைகள் மீண்டும் புத்துயிர் பெற்றுத் தழைக்க இப்பூஜா பலன்கள் உதவும்.

ஸ்ரீநந்தி மூர்த்தி
செவலூர்

3. பலவிதமான தகராறுகளால், பிரச்னைகளால் தடைப்பட்டுள்ள கட்டிடங்கள் நன்முறையில் தீர்வு பெற்று மீண்டும் கட்டிட வேலைகள் தொடங்க உதவும்.

4. விவசாயம் குன்றி வளமையை இழந்து பூசல்களால் விவசாயமே ஸ்தம்பித்து நிற்கின்ற இடங்களில், நிலங்களில், தோட்டங்களில் விவசாயம் சிறந்திட இப்பூஜா பலன்கள் உதவும்.

5. வீடோ, தொழிற்சாலையோ, அலுவலகமோ கட்டுவதற்காக வேப்ப மரம், ஆலமரம் போன்ற சமித்து விருட்சங்கள், நாகப் புற்றுகள் போன்றவற்றை வெட்டிச் சாய்த்து சாபங்களையும், பாவ தோஷங்களையும், நாக தோஷங்களையும் பெற்று நில, தொழில் வளர்ச்சியின்றி, நஷ்ட, துக்க சம்பவங்களால் அவதியுறுவோர் இப்பூஜா பலன்களால் தோஷங்கள் நீங்கப் பெற்று நன்முறையில் குடும்பத்திலும், தொழிலிலும் முன்னேற்றம் பெறுவர். வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் இப்பூஜையைத் தொடர்ந்து இச்சிவாலயத்தில் செய்து வருதல் வேண்டும்.

6. பெருமூலம், ரத்த மூலம், முதுகுத் தண்டு நோய்கள், பிருஷ்ட நோய்கள் போன்றவற்றால் உட்கார, நடக்க, பயணம் செய்ய இயலாது அவதியுறுவோர் இப்பூஜைகளை முறையாகச் செய்து கிழங்கு வகை உணவுகளைத் தானமாக அளித்து வந்தால் தக்க நோய் நிவர்த்திகளைப் பெறுவார்கள்.

7. கோவில் நிலங்கள், வீடுகள் போன்றவற்றை ஆக்கிரமித்துக் கொண்டு மிகக் குறைந்த வாடகையைக் கொடுத்து ஆண்டவனையே ஏமாற்றி வருபவர்கள். தங்களுக்குரிய பிராயச்சித்தத்தைப் பெற வேண்டிய அற்புதமான தலங்களுள் இதுவும் ஒன்றாகும். ஆனால், இதுவரையில் தான் தெய்வத்தை ஏமாற்றிய தொகைக்கு வட்டியும், முதலுமாகச் சேர்த்து இவ்வாலயத்தில் இறைப்பணிகளாகவும் தான தருமங்களாகவும் தொடர்ந்து செய்து வந்திடில் தான் இவற்றிற்குப் பிராயச்சித்தத்தைப் பெற முடியும். வரும் வ்ருஷ (விஷு) வருடமே இத்தகைய பாவ வினைகளுக்குப் பிராயச்சித்தத்தைத் தரும்! தம் ஆயுளில் இது போன்ற வ்ருஷ (விஷு) வருடத்திற்கான சந்தர்ப்பம் மீண்டும் தோன்றுமா என்று யோசித்துச் செயல்படுங்கள்!

ஸ்ரீஇரட்டைவாகன பிள்ளையார்
செவலூர்

சட்ட திட்டங்களால் தாம் குறைந்த வாடகையை அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் எந்த உண்மையான வாடகையை, விளைச்சலை ஆலயங்களுக்கு அளித்திட வேண்டுமோ, அந்த வித்தியாசத் தொகையை அந்தந்தக் கோயிலின் உண்டியலில் செலுத்தியோ அல்லது இத்தலத்தில் தான தருமங்களாகவும், தர்ப்பண பூஜை வழிபாடுகளிலும் செலவழித்தால்தான் பூமி சம்பந்தப்பட்ட தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற முடியும்.

க்ஷீர கோடித் தர்ப்பண முறை

அமாவாசையும் வாஸ்து நாளும் சேர்கின்ற திருநாளில் இயற்கைச் சீற்றங்களில், விபத்துகளில் அகால மரணம் அடைந்தோர்க்கான விசேஷ முறையிலான தர்ப்பணத்தை அளித்து அவர்களுக்கு நற்கதி பெற்றுத் தாருங்கள்! ஒவ்வொருவரும் தம் சந்ததியினர் அகால மரணம் பெறாது நல்வாழ்வைப் பெற பித்ருக்களின் ஆசியைப் பெற்றிட அமாவாசை வாஸ்து நாள் சங்கம நாளில் செவலூரில் பிருத்வி தீர்த்தத்தில் விசேஷ தர்ப்பணம் அளித்திடுங்கள்.!

வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும், அமாவாசை தினங்களிலும் செவலூர் பிருத்வி தீர்த்தத்தில் தர்ப்பண பூஜையை மேற்கொள்தல் சிறப்புடையதாம். பூகம்பங்களால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தக்க ஆன்ம சாந்தியைப் பெற்றுத் தருவதற்கு விசேஷமான க்ஷீர கோடித் தர்ப்பண முறை சித்தர்களால் அருளப்படுகிறது. இவற்றை ஸ்ரீபூமிநாதர் போன்று பூமி சம்பந்தப்பட்ட நாமங்களை உடைய ஆலயங்களில் செய்தல் சிறப்புடையதாகும். (திருச்சி ஸ்ரீபூலோகநாதர், திருச்சி அருகே மணச்சநல்லூர், சென்னை அருகே மரக்காணம்) இத்தர்ப்பண பூஜைக்கு மகிமை வாய்ந்த தலமாக விளங்குவது செவலூர் ஸ்ரீபூமிநாதர் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கதாம்!

கோதூளி மகிமை! இன்று உலகத்தில் மிகவும் பவித்திரமான, புனிதமான பொருட்களில் ஒன்றாக விளங்குவது எது தெரியுமா? பசுவின் குளம்படி பட்ட மண்ணிற்குத் தான் அந்த மகத்தான பவித்ர சக்தி உண்டு. வீடு, கட்டிடங்கள் கட்டும்போது நீங்கள் உபயோகப் படுத்துகின்ற மண்ணில் கோதூளி எனப்படும் பசு நடக்கும் போது அதன் கால் மண் பட்டுத் தெறிக்கின்ற மண் துகளைச் சேகரித்துப் பூஜை செய்து வழிபட்டு மண்ணுடன் சேர்த்து உங்கள் கட்டிடங்களைக் கட்டுவீர்களேயானால் இது மகத்தான நில விருத்தியை, சந்ததி விருத்தியை, இல்லத்தில் சாந்தமான ஒற்றுமையை தெய்வீகப் பரிசாக அளிக்கின்றது என்ற அரிய ஆன்ம சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கோதூளி எனப்படும் பசுவின் காலடி மண்ணிற்குத்தாம் அந்த மகத்தான பவித்ர சக்தி உண்டு. வீடு, கட்டிடங்கள் கட்டும்போது நீங்கள் உபயோகப் படுத்துகின்ற மண்ணில் கோதூளி எனப்படும் பசு நடக்கும் போது அதன் கால் மண் துளி பட்டுத்தெறிக்கின்ற மண் துகளைச் சேகரித்துப் பூஜை செய்து வழிபட்டு மண்ணுடன் சேர்த்து உங்கள் கட்டிடங்களைக் கட்டுவீர்களேயானால் நிலத்தில் தூவி வருவீர்களேயானால் இது மகத்தான நில விருத்தியை, சந்ததி விருத்தியை, இல்லத்தில் சாந்தமான ஒற்றுமையை தெய்வீகப் பரிசாக அளிக்கின்றது என்ற அரிய ஆன்ம சத்தியைத்தை அறிந்து கொள்ளுங்கள்.

உலகின் உடலின் ஆரண
மையம் செவலூர்

கோதூளி எனப்படும் பசுவின் காலடி மண்ணிற்குத்தாம் இத்தகைய அரிய தெய்வீக சக்திகள் உண்டு. அக்காலத்தில் மகரிஷிகள் யாக சாலையைக் கட்டும் போது பசுக்களைக் கம்பளங்களின் மேல் நடக்க வைத்து அவற்றின் கால் குளம்பிலிருந்து தெறிக்கின்ற மண்ணைப் பவித்திரமாக எடுத்து வைத்து, பூஜித்து வணங்கி யாக சாலையில் சேர்ப்பார்கள். எனவே க்ஷீர கோடித் தர்ப்பணம்தனை அமாவாசையும் ஸ்ரீவாஸ்து நாளும் சேர்கின்ற அரிய நாளில் செவ்வாய் பகவானுக்குரித்தான முக்கோண வடிவில் உள்ள பலகையிலோ, ஆடைகளையோ விரித்து ஆசனம் அமைத்து அதன் மேல் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.

க்ஷீர கோடி அமிர்த நெய்! ஆட்டுப் பாலிலிருந்தும், ஒட்டகப் பாலிலிருந்தும் பெறப்படுகின்ற ஆட்டுப் பால் நெய், ஒட்டகப் பால் நெய், எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) ஆகியற்றைக் கலந்து தைல நெய்க் காப்பு ஆக்கிடுக! துளசிச் செடியின் வடக்குத் திசையில் உள்ள வேர்த் துண்டை இத்தைலக் காப்பில் ஒரு நாள் ஊற வைத்துத் திரியாக்கி ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீபூலோக நாதர், ஸ்ரீபூமீஸ்வரர் போன்ற பூமி நாமம் தாங்கிய சிவாலயங்களில் வாஸ்து நாட்களிலும், அமாவாசைத் திதிகளிலும், இறந்தோருடைய நினைவுத் திதிகளிலும், இயன்றால் தினந்தோறுமே ஆலயங்களில் தீபமிட்டுத் தர்ப்பணம் அளித்தல்தான் க்ஷீர கோடித் தர்ப்பண முறையாகும்.

இதுவே சித்புருஷர்களால் விளக்கப்படுகின்ற பூகம்பத்தில் இறந்தோர்களுக்காக அளிக்கப்பட வேண்டிய மிகவும் பிரத்யேகமான விசேஷத் தர்ப்பண பூஜையாகும். இந்த அரிய தீபத்தின் சாட்சியாகத் தர்ப்பணம் அளிக்கப்படுவதால் ஹோம ஆகுதிகளைத் தாங்கிச் செல்கின்ற ஸ்வாஹா தேவியும், தர்ப்பண அர்க்ய நீரைச் ஏந்திச் செல்கின்ற ஸ்வதா தேவியும், பித்ருக்கள், பித்ரு பத்தினிகளுடன் அமாவாசை மற்றும் வாஸ்து நாட்களில் செவலூர் ஸ்ரீஆரணவல்லி சமேத ஸ்ரீபூமிநாத லிங்க மூர்த்தி மற்றும் ஸ்ரீபூமிநாதர் பெயர் கொண்ட ஆலயங்களில் ஒன்று கூடி ஆசி அளிக்கின்றனர். ஜீவ சாந்திக்காக அமைகின்ற மகத்தான இறைச் சமுதாய பூஜையே இதுவாம்!

அனைத்திலும் அனைத்திற்கும்
ஆதாரம் சற்குருவே

ஒரு தாம்பாளத்தில் கோதூளி, அதாவது பசுவின் கால் பட்ட மண்ணைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இன்று சங்கு வகைகளால் தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும். திலாம்பர யோக சக்தி உள்ள தீர்த்தங்கள், நதிகளிலிருந்தும், பூலோகக் கடல்கள் மற்றும் சில குறித்த கிணறு/சங்குத் தீர்த்தங்களிலிருந்தும் பெறப்படுகின்ற கருவலரிச் சங்கு, ஐவிரல் சங்கு, வடக்கு முள்ளீஸ்வரச் சங்கு போன்றவை எள் சம்பந்தப்பட்ட சக்தியைப் பெற்றிருப்பதால் இன்று வாஸ்து நாளும், அமாவாசையும் சேர்கின்ற புனித நாளில் இச்சங்கு வகைகளால் தர்ப்பணமளித்தல் சிறப்புடையதாகும். செவலூர் ஸ்ரீபூமிநாதர் ஆலயத் தீர்த்தத்தை இச்சங்குகளில் நிரப்பி தர்பைச் சட்டத்தின் மேல் வைத்துத் தர்ப்பணம் அளித்தல் வேண்டும். இந்த நான்கு வகை நெய் எண்ணெய் தீபத்தின் முன் செய்கின்ற தர்ப்பணமானது, பூமாதேவிக்கு மிகுந்த ப்ரீதியைத் தருவதாகும்.

நிலதோஷம் நீக்கும் க்ருதாஞ்சன தர்ப்பணம் :- நில தோஷங்களையும் நீக்குகின்ற வாஸ்து நாளில் அமைவதாலும் நெய் கூடுவதாலும் க்ருதாஞ்சன தர்ப்பணம் என்றும் சித்தர்கள் இதனை அழைக்கின்றார்கள்.

பசு மேட ஒட்டை நெய்ப் புனலே
வசுதேவன் பிது(ர்)ப் பதிக அருட் கனலே
செவலூரின் புவிநாதன் சிவக் கனலே
விஷு கால விதிவலசை புவிச் சுழலே
புவிமாதா புலம் வேண்டும் நீர்த் திரளே!
(மேடம் – மேஷம் – ஆடு ; ஒட்டை – ஒட்டகம்; நீர்த் திரள் – தீர்த்தம்) என்பது சித்தர்களுடைய பரிபாஷையாகும். இவ்வரிய தர்ப்பண பதிகத்தை ஓதியும் க்ருதாஞ்சனத் தர்ப்பணத்தை அளித்திடலாம். வாஸ்து நாளும், அமாவாசையும் கூடிடும் இத்திருநாளில் க்ஷீர கோடித் தர்ப்பணம் என்றும் க்ருதாஞ்சன தர்ப்பணம் என்றும் அழைக்கப்படுகின்ற இவ்வரிய தர்ப்பண முறையை மேற்கொள்தலால் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்கதியும் அவர்கள் சந்ததியினர் நல்வளம் பெற்று சாதி, மத, இன, குல பேதமின்றி அவர்கள் சந்ததியினர் நன்முறையில் வாழவும் சேதமுற்று உள்ள கட்டிடங்கள், நிலங்கள் மீண்டும் வளம் பெறுவதற்கும் இத்தர்ப்பணப் பலன்கள் பெரிதும் உதவுகின்றன.

வாஸ்து நாளும், அமாவாசையும் அபூர்வமாகச் சேர்ந்து கூடுவதால் வாஸ்து தோஷங்கள் நிறைந்த கட்டிடங்கள், நிலங்களுக்கும் இச்சிவாலய வழிபாடுகளால் தக்க தீர்வைப் பெற்றிடலாம். எனவே செவ்வாய் மற்றும் ஸ்ரீவாஸ்து நாட்களில் செவலூர் ஸ்ரீபூமிநாதருக்கு உரித்தான மேற்கூறப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்திடுக! ஸ்ரீவாஸ்து பூஜைக்கான ஆலயமாகச் செவலூர் ஸ்ரீஆரணவல்லி சமேத ஸ்ரீபூமிநாதர் ஆலயம் பரிமளிப்பதற்கு பக்த கோடிகள் உறுதுணையாக நிற்க வேண்டும்.

பச்சை மாமலைபோல் மேனி
செவலூர்

கைவிரல் வளையங்களின் ஆத்ம சக்தி

கைவிரல்களில் உள்ள வளையங்கள், கங்கணங்கள் சுழல் ரேகைகளுக்குப் பூஜா மற்றும் பித்ரு ஆசி சக்திகளை கிரகிக்கும் தேவ வன்மை உண்டு! ஆனால் கைகளை நற்காரியங்களுக்கு, நல்வழிபாடுகளுக்குப் பயன்படுத்தினால்தானே அவற்றின் புண்ய சக்தி பெருகும்! கைகளினால் செய்யும் பூஜைகள் மலிந்தமையால்தான் கலியுகத்திற்கான ஓரளவு பூஜா பலன்களைத் தருவதாக கரங்களினால் ஆற்றப்படுகின்ற தானதர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன! நம் உடலில் ஆத்ம சக்தி பூரித்துள்ள இடங்களில் கைரேகைகளும் ஒன்றாம்! கை விரல்களில் உள்ள வளையங்கள், வட்டமான ரேகைகளுக்குப் பல அபூர்வமான தெய்வீக அம்சங்கள் உண்டு இவையெல்லாம் தெய்வீக சக்திகளைச் சேர்த்துப் பாதுகாத்து வைக்கின்ற இறைப் பெட்டகங்களாக இருக்கின்றன. பெரியோர்கள் மஞ்சள் அட்சதைகளால் ஆசி அளிக்கின்றபோது சில குறிப்பிட்ட விரல்களால் மட்டும் அட்சதையை எடுத்து ஆசீர்வதிப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்! இதற்கெல்லாம் எண்ணற்ற ஆன்மீகக் காரணங்கள் உண்டு.

சுக்கிர விரலுடன் (கட்டை விரல்) குருவிரலாகிய ஆள்காட்டி விரலைச் சேர்த்தோ அல்லது சனி விரலாகிய நடுவிரல் கூடியோ அல்லது சூரியவிரலாகிய மோதிர விரலைச் சேர்த்தோ அவரவர் கர்மவினைப்படி அட்சதையை எடுத்து மகான்களும், யோகியர்களும், சித்தர்களும் பலவித தெய்வீக இரகசியங்களுடன் ஆசிகளை அளிக்கின்றார்கள். விரல் நுனிகளின்  உட்பகுதியில் வேதிய வளையங்கள் பூத்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்! இவ்வாறாக உங்கள் கைகளிலே பல தெய்வீகத் தாத்பர்யங்கள் நிறைந்திருப்பதைத் தக்க சற்குரு மூலமாகவே முழுமையாக உணர முடியும்!

தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உங்கள் உள்ளங்கை ரேகைகளைக் கண்களால் நன்கு உற்று நோக்கித் தியானித்து வருதல் வேண்டும். ஏனென்றால் ஒருநாள் கையில் பார்த்த வளையங்கள், ரேகைகள் மறுநாள் கூடச் சற்றே மாறுபடுவது போலத் தோன்றும். இந்தத் தோற்ற மாறுதல்கள் யாவும் உங்களுடைய கர்மவினைப் பரிபாலனப் பாங்கினைக் குறிக்கின்றன. இனியேனும் இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உங்களுடைய கைகளை நன்கு உற்று நோக்கி நீங்கள் கரபீட யோகம் பயின்று வருதல் வேண்டும். இவற்றையே கரந்யாச நியதிகளாக நம் வழிபாட்டு முறையில் நம் பெரியோர்கள் வகுத்துத் தந்துள்ளனர்! ஆனால் இவற்றைக் கடைபிடிப்போர் இன்று ஒரு சிலரே உள்ளனர்!

மனித மூலம் ஆரணமையமே
செவலூர்

கைகளில் ரேகைகள், வளையங்கள், மேடுகள், தொடர் ரேகைகள் என்று எத்தனையோ நுழைப் புல ரேகாம்சங்கள் நிறைய உண்டு. இவற்றின் தன்மைகளையோ, குணாதிசயங்களையோ உங்களால் உணரமுடியாவிட்டாலும் ஒவ்வொரு விரலாக, பகுதி பகுதியாக உங்கள் கைகளில் உள்ள அனைத்தையும் நீங்கள் உற்று நோக்கித் தெரிந்து கொள்ளுங்கள். குறைந்தது ஆறு மாதங்கள் வரை நீங்கள் இவ்வாறு “ரேக நாள யோகம்” பயின்று வருவீர்களேயானால், உங்களிடத்திலே ஒரு மகத்தான சாந்தியும், தெய்வீக அமைதியும் ஒளிரும்.

அனைத்து விதமான துன்பங்களையும் சமாளிப்பதற்கான மனோதிடமும், வைராக்கியமும் இந்த யோகம் மூலமாக உங்களிடத்தில் ஊறுவதை நீங்கள் உணர்வீகள். ஆலயங்களில் தீர்த்தங்கள் (புனித நீர்) அளிக்கப்படுகின்றபோது உள்ளங்கையில் தாங்கிக் குமிழ வைத்து அருந்துகின்ற போது உள்ளங்கைப் பகுதியில் உள்ள ரேகைகள் தாம் அந்தத் தீர்த்தத்தின் சக்தியை கிரகித்து உங்களுடைய உடல் உறுப்புகளுக்குச் செலுத்துகின்றன.

வாசி தீர்க்கும் ஆசி! வாய் மூலமாக அருந்தி ஜீரணிக்கப்படுகின்ற நீர் வகை தீர்த்த சக்திகள் ஒரு சிலவே. ஆனால், சூரிய ஒளி போல நேரடியாகக் கிரகிக்கப்படுகின்ற தீர்த்த சக்திகளையும் நேரடியாகப் பெற்றிடவே இறைவன் நமக்கு ரோமம் மற்றும் தோலைப் படைத்திருக்கின்றான். பெரியோர்களும், மகான்களும் ஆசி அளிக்கின்ற பொழுது கைகளைக் குவிய வைத்து தீர்க்க ஆயுசு பவ என்றும், நீடூழி வாழ்க என்றும் சொல்லி ஆசீர்வாதம் செய்கின்றபோது, அவர்களுடைய உள்ளங்கை ரேகைகளிலிருந்துதாம் ஆசீர்வாதக் கதிர்கள் தோன்றுகின்றன. அந்த அளவிற்கு ஆசீர்வாத சக்திகளைத் தேக்கி வைக்கின்ற தெய்வீக சக்தியை உள்ளங்கையின் கிரணங்கள், ரேகைகள் கொண்டுள்ளன.

ஸ்ரீஷீரடி சாய்பாபா, ஸ்ரீபரமாச்சார்யாள் போன்றோருடைய திருக்கரங்களிலிருந்து ஆசீர்வாதக் கிரணக் கதிர்கள் வெளிப்படுவதுண்டு. மகான்களின் உள்ளங்கை ரேகைகளில் சகஸ்ர நேத்திரக் கிரணங்கள் குவிந்து அவற்றின் மூலமாக ஆசீர்வாத சக்திகள் பெருகுகின்றன. இதே போன்று பெரியோர்களும், உத்தமர்களும், மஹான்களும், சித்தர்களும், புஷ்பம், மங்களகர அரிசி (அட்சதைகள்), பிரசாதம் போன்றவற்றை எடுத்து அளிக்கும் போது விரல்களை மட்டும் குவித்தோ அல்லது உள்ளங்கையில் வைத்தோ அளிப்பார்கள். எந்த விரல்களைக் கொண்டு பிரசாதத்தை அளிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்துத் தெய்வீக ஆசி அம்சங்களும் மாறுபடும்.

அரிதிலும் அரிய பாடி தர்பைகள்
திருமழபாடி

கைரேகைகளில் கூடும் தர்ப்பண சக்தி! அர்க்யங்கள், தர்ப்பணங்களிலும் விரல் மற்றும் உள்ளங்கை ரேகை பாவனைகளும் மாறுபடும்! விபத்தில் இறந்தோர்க்குத் தர்ப்பணம் அளிக்கையில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து ரஜத சந்திர முத்திரை கூட்டி இவற்றின் இடையே தர்ப்பண நீரை வார்த்திட வேண்டும்! தர்ப்பணத்தைப் பற்றிச் சித்தர்கள் அளிக்கின்ற பல அரிய தெய்வீக விளக்கங்கள் நிறைய உண்டு! எனவே இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளும், புறமும் புதைந்திருக்கின்ற தெய்வீக ரகசியங்கள் எத்தனை எத்தனையோ! இவை அனைத்தையும் உணர்வது என்றால் எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் இயலாததொன்றாம்! ஆனால் சற்குருவைப் பெற்றோமேயானால் இவற்றை எல்லாம் அவரவருடைய அறிவுப் பாங்கின்படி உணர்விக்கின்ற உத்தம இறைத் தூதுவராக சற்குரு பொலிவதால் ஒரு மணி நேரம் ஆழ்ந்த குரு பக்தியுடன் சற்குருவுடன் இருத்தல் கூட உங்களுக்கு எத்தனையோ கோடி ஜென்மங்களின் அனுபவங்களை, அனுபூதிகளாகத் தந்திடுமே!

தர்ப்பணத்திலும் கூட அதன் தெய்வீக சக்தியை கிரஹிப்பதற்கான பல உத்தம வழிபாட்டு முறைகள் உண்டு. கைகளில் மஞ்சள், பசு வெண்ணெய், மருதாணி போன்ற பல முக்கியமான தைலங்களைப் பூசியவாறு தர்ப்பணம் அளிப்பதால் ரேகைகளின் சக்திகள் மேம்படுகின்றன. இது மட்டும் அல்லாது பலவிதமான நவரத்தினக் கற்கள் நிறைந்த மோதிரங்களை அணிந்தும் தர்ப்பணம் இடுவதால் இவையாவும் தர்ப்பண சக்தியை மேலும் மேம்படுத்துகின்றன. ஆனால் வசதியில்லாதோர் என்ன செய்வது? மோதிர விரலில் தர்பை மோதிரம் என்னும் பவித்திரத்தை அணிந்து கொண்டு தர்ப்பணம் அளித்திடலாம்.. பவித்திரம் என்பது தர்பைப் புல்லை வளைத்து முடிச்சுகள் இட்டு மோதிரம் போல் செய்து வலதுகையில் மோதிர விரலில் அணிந்து கொள்வதாம்.

அக்னி தீர்த்தம்
திருவிளமர்

இன்று வயல்களில் கிடைக்கின்ற தர்பைகளிலே, சிவன் தர்பை, விஷ்ணு தர்பை என்றவாறாகச் சிலவகைகள் உண்டு. தக்க பெரியோர்களிடம் இவற்றின் தாத்பர்யத்தைக் கேட்டு உணர்ந்திடுக! தர்பைப் பாயில் அமர்ந்து கொண்டு தர்ப்பணமிடுதல், தர்ப்பணத்தின் போது நிறைய தர்பைகளைப் பயன்படுத்துதல், பஞ்சகச்சம் அணிந்திருத்தல், அக்னி தீர்த்தங்கள் போன்றவை தர்ப்பண சக்திகளை மேம்படுத்துகின்றன. இவ்வாறாக நாம் சாதாரணமாக நினைக்கின்ற தர்ப்பணமானது, பித்ருக்களுக்கு ப்ரீதி தருவதுடன் பல உத்தம தெய்வீக சக்திகளையும் நமக்குப் பெற்றுத் தருவதாகும்.

அனைவருக்கும் அனைத்திற்குமான காருண்யத் தர்ப்பணம்! நம்முடைய உறவினர்களுக்கு மட்டுமல்லாது, குஜராத், துருக்கி போன்ற இடங்களில் பூகம்பத்தால் இறந்த நாம் அறியாத எண்ணற்ற ஜீவன்களின் நல்வாழ்விற்காகவும் அமாவாசை தோறும், தினந்தோறும் கூட நாம் நிச்சயமாகத் தர்ப்பணம் அளித்திடலாம். மேலும் ஜாதி, மத, குல, இன பாகுபாடின்றி அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய தர்ப்பணம் பற்றிய சித்தர்கள் அருளிய அரிய விளக்கங்களை எமது ஆஸ்ரம வெளியீடான “எளிய தர்ப்பண முறைகள்” எனும் நூலில் காணலாம்.

இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் தர்ப்பணம் அளிக்கின்ற பழக்கம் நின்று போய்விட்டமையால், நீங்கள் அளிக்கின்ற க்ஷீர கோடித் தர்ப்பண சக்தியானது, சங்குத் தீர்த்தத்தால் அளிக்கின்ற தர்ப்பணமானது எத்தனையோ குடும்பங்களில் பல வருடங்களாக அளிக்கப்படாதிருக்கின்ற தர்ப்பண பூஜை முறைக்கு ஓரளவு பிராயச்சித்தத்தையாவது பெற்றுத் தருவதால், இது மகத்தான சமுதாய இறைவழிபாடாக மலர்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பாரத மக்களாகத் தெய்வீகப் பிறவிகளைப் பெற்றிருக்கின்ற நமக்கு இறை வளம் மங்கி வருகின்ற மேலை நாடுகள் உட்பட, உலகத்தின் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களின் கர்மவினைகளை நீக்குவதற்கான தக்க பூஜைகளை மேற்கொள்ள வேண்டிய மகத்தான பொறுப்பு நிச்சயமாக உண்டு. தர்ப்பணத்தைப் பற்றி அறியாமல் இருப்பவர்களுக்கும் தர்ப்பண சக்தியைப் பற்றிய ஞானத்தைப் பெற்றுத் தருதலே உலக சமுதாயத்திற்கான மகத்தான இறைப்பணிகளுள் ஒன்றாம்!

சங்குகளின் மகாத்மியம்

1. பிரயாணத்தில் தற்காத்துக் கொள்ள கடகக்காட்டுக் குங்குமச் சிமிழ் – பிரயாணங்களின் போது தம்மைப் பலவிதமான விபத்துகள், தாமதங்கள், இன்னல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் தம் குடும்பத்தைப் பலவிதமான சோதனைகளிலிருந்து ரட்சையாகக் காத்துக் கொள்வதற்கும் குங்குமாங்க்ருத புண்ணிய சக்தி தேவைப்படுகின்றது. அதற்காகத்தான் அக்காலத்தில் கணவன் வெளிச் செல்லும்போது மனைவி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வழி அனுப்புவாள். துளசிச் செடிக்கும் குங்குமமிட்டுப் பிரயாணத்தைச் சுபசகுனத்தோடு துவங்குவார்கள். பொதுவாக சங்கு வகைகள் பலவிதமான தோஷங்களிலிருந்து நம்மைக் காப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். திருமாலின் திருக்கரங்களில் பொலியும் சங்குகூடத் தீய சக்திகளை அழித்து நல்லோரை, நன்மைகளைக் காப்பதற்காகத்தானே! சங்கு வகைகளில் கடக்காட்டுக் குங்குமச் சிமிழ் என்று போன்றப்படுகின்ற தேவ சீரிஷச் சங்கு வகை ஒன்றுண்டு. பிரயாணத்திற்கு முன் ஸ்ரீகாலபைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை சார்த்தி, குங்குமத்தினைக் கடக்காட்டுச் சங்குக் குங்குமச் சிமிழில் நிரப்பி ஸ்ரீகால பைரவ தியான மந்திரம் ஓதி, நெற்றியில் குங்குமமிட்டு பிரயாணத்தின்போது குங்குமச் சிமிழைத் தம்முடன் எடுத்துச் சென்றால் இது மிகச் சிறந்த இரட்சையாகத் துணை புரிந்து காக்கும்.

2. நாக தோஷம் நீக்கும் பூநாகப் புறவளர் குங்குமச் சிமிழ் – நாகச் சந்திர பாண குங்குமச் சிமிழ்:- நாக தோஷம் என்பது பலருக்கும் இருக்கின்றது. காரண காரியமில்லாமல் நாகங்களை வதைத்தல், வன்மையான வார்த்தைகளைப் பேசி விஷ ஊசி போல் பிறரை வார்த்தைகளால் புண்படுத்துதல், தம்மை நம்பியவருக்குப் பாம்பு கொத்துவது போல் திடீரென்று துரோகம் செய்தல், பாம்புப் புற்றுகளை இடித்து வீடு கட்டுதல், புற்று மண்ணைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பல கர்ம வினைகளின் தொகுப்பாகவே நாக தோஷம் ஏற்படுகின்றது. நான்கு என்பது ராகுவிற்கும், ஏழு என்பது கேதுவிற்கும் உரித்தான எண்கள் அல்லவா! ராகு, கேது வழிபாடு நாக தோஷத்திற்கு நல்ல பிராயச்சித்தங்களைப் பெற்றுத் தரும். மேலும் ராகு தோஷங்களும், கேது தோஷங்களும் உண்டு. எதிர்காலத்தில் ராகு காலம் போல கேது காலமும் அமையும்! ஆனால் எவ்வித தோஷம் இல்லாதோரும் கூட தங்களுடைய சந்ததிகளுக்கு இத்தகைய தோஷங்கள் ஏற்படாமல் காப்பதற்காக ராகு,கேது மூர்த்திகளை முறையோடு தினந்தோறும் கண்டிப்பாக வழிபட்டு வருதல் வேண்டும். பூநாகப் புறவளர் குங்குமச் சிமிழ்ச் சங்கானது விண்வெளியில் சூரிய சந்திர இணைப்பாடாக (Nodal Points) விளங்குகின்ற ராகு கேது கிரக மண்டலங்களின் நாக பூஷண கிரணங்களைக் கிரகித்து நெற்றிப் பொட்டில் இடப்படுகின்ற குங்குமத்திற்கு ரட்சா சக்தியை அளிக்கின்றது.

தாழம்பூ போன்ற புஷ்பங்களில் காணப்படுகின்ற பூநாகங்களைக் கண்டு மக்கள் அஞ்சினாலும் இவை மகத்தான தெய்வீக சக்தியைக் கொண்டவையாகும். பூநாகச் சித்தர் என்பார் பூ நாகங்களுக்கு முக்தி மோட்ச நிலைகளை அளிக்கின்ற உத்தம சித்தராவார். தினந்தோறும் பூவுலகில் உள்ள நாகப் புற்றுகளுக்குக் குங்குமமிட்டு வலம் வந்து வணங்குகின்ற அதியற்புத சித்தர். அஸ்தீக சித்தருடைய சிஷ்யரும் ஆவார்! பூநாகங்களுடைய நாக மண்டலத்தின் வடிவில் இந்த நாகபூஷணச் சங்கு விளங்குவதால் பூநாகச் சித்தர் பாம்புப் புற்றுகளுக்கு இடுகின்ற குங்கும தேவ பிரசாதமானது சூட்சுமமாக இதில் நிறைவதால் இக்குங்குமச் சிமிழில் குங்குமத்தை வைத்து ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூர்த்திகளுக்கான துதிகளை ஓதி வைத்து வழிபட்டு வந்தால் அனைத்து விதமான நாக தோஷங்களும் நீங்கிச் சந்தானச் செல்வம் கிட்டிடவும், நாக தோஷத்தால் தடைபட்டுள்ள திருமணம், நில பாக்யம் போன்றவற்றிற்குத் தக்க தீர்வுகள் கிட்டிட பூநாகச் சித்தர் அருள்புரிவார்.

3. ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்கு – பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெறப்பட்டபோது ஸ்ரீவாஸ்து மூர்த்தியும் இறையருளால் தமக்குத் தேவையான பல தேவ திரவியங்களையும் அவதார கிருத்தியங்களையும் பாற்கடலில் இருந்து பெற்றார். குறிப்பாக ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் பலவிதமான சயன நிலைகளுக்குத் தேவையான சந்தனமரத்தாலான மரக்கால்களையும் பாற்கடலில் பள்ளி கொண்ட கூர்ம மூர்த்தியிடமிருந்தே அவர் பெற்றார்! தம் திருக்கரங்களை எந்த திசை நோக்கி வைத்து ஸ்ரீவாஸ்து மூர்த்தி சயனிக்கின்றாரோ அந்தத் திக்கிற்கு உரித்தான ஆபரணங்கள், நாக மோதிரங்கள் மற்றும் கழல்கள் தம்முடைய விஷ்ணு மற்றும் சிவ பூஜைக்கான அபிஷேக கண்டிகைகளையும் பாற்கடலிலிருந்தே பெற்றார். அவற்றில் ஒன்றுதான் ஸ்ரீவிநாயகப் பெருமானே வாஸ்து நாளில் ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு அளித்த ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்காகும். பொதுவாக, பாற்கடலின் தேவாமிர்தமானது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மட்டுமே பங்கிடப்பட்டதாக நாம் எண்ணுகின்றோம். ஆனால் இது ஸ்ரீதன்வந்த்ரீ விஷ்ணுவின் பிரசாதமாதலால் அனைத்து மூர்த்திகளுமே இதனை தெய்வீகப் பிரசாதமாக ஸ்ரீவிநாயகரிடமிருந்தே பெற்றனர். இவ்வாறு பிள்ளையார் அமிர்தத்தை இன்றும் சங்கில் த(தா)ங்கி வைத்துள்ள கோலமே ஸ்ரீசங்கு விநாயக மூர்த்தியாவார். ஸ்ரீவிநாயகரே ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு அமிர்தப் பிரசாதம் தந்த தேவ கண்டியே ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்காகும். வாஸ்து நாட்களில் இதில் வில்வம், வேப்பிலை, துளசி போன்ற தேவ மூலிகைகள் கலந்த தீர்த்தங்களுடன் புண்ணிய நதி தீர்த்தங்களையும் சேர்த்து ஸ்ரீவாஸ்து மூர்த்திக்குப் பூஜை செய்து தங்கள் இல்லங்கள், கடைகள், தொழிற்சாலைகளிலும் தெளித்து வந்தால் வாஸ்து தேவ சாஸ்தி நியதிகளை மீறிய கட்டிடங்களுக்கும், நில தோஷன்களுக்கு நல்ல தீர்வு கிட்டும்.

எச்சூர் மகிமை

எச்சூர் ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீமார்கண்டேஸ்வரர்!

நிலையான செல்வம் தரும் சித்திரை சதயச் சந்தனக் காப்புத் திருநாள்! பெற்றோர் பிள்ளையிடையே உள்ள பகை தீர்க்கும் உத்தம சதயச் சந்தனக் காப்பு நாள்! சித்திரைச் சதய நாளில் சந்தனக் காப்பில் அருள்புரியும் எச்சூர் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமார்க்கண்டேஸ்வரர்! எமபகவானுக்கு உரித்தான சதய நட்சத்திரத்தில் ஸ்ரீமார்கண்டேஸ்வரருக்குச் சந்தனக் காப்பு இட்டு மரணபயம் தீருங்கள்!

எச்சதத்தன் என்பார் நிறையப் பசுக்களை வளர்த்து வந்த பண்ணையாரிடம் பணி புரிந்து கொண்டிருந்தார். அவருடைய பிள்ளை விசார சர்மன், தந்தைக்குரிய தனயனாய் மிகவும் பொறுப்புடன் உதவிகளைச் செய்து வந்தான். இளவயதிலேயே நல்லொழுக்கமும், சிவ பக்தியும் கொண்டிருந்தமையால் சிறுவனுக்குத் தானாகவே லிங்க வழிபாட்டில் மனம் கூடியது.

விசார சர்மன் மணலால் லிங்கம் வடித்து அதியற்புத வழிபாடுகளை மேற்கொண்டதுடன் தாம் மேய்க்கின்ற பசுக்களின் பாலையும் மணலாலாகிய லிங்கங்களின் மேல் சொரிய வைத்து அபிஷேகித்துப் பேரானந்தம் கொண்டான். இவ்வாறாகவே அன்றும், இன்றும், என்றும் உலகின் எங்கெங்கோ மூலைகளில் அடக்கம், பணிவு, எளிமை, பக்தியுடன் எவரெவரோ செய்கின்ற பூஜா பலன்கள்தாம் மழை, தான்ய வளம், சந்ததிகள் போன்றவையாக  அனைத்துக் கோடி மக்களுக்கும் சுபிட்சத்தைப் பெற்றுத் தந்து இப்பூவுலகை இயங்க வைக்கின்றது!

விசார சர்மனின் பக்தி மார்கமானது ஜமீனுக்கு வருவதான பசும்பாலின் பெருக்கை குறைத்ததால் பண்ணையாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் எச்சதத்தனை எச்சரித்திடவே, அவரும் தம் பிள்ளையின் செயலைக் கண்காணிக்கும் பொருட்டு, மரம் மீதேறி அமர்ந்தார். இதை அறியாது சிறுவனும் தன் லிங்க வழிபாட்டைத் தொடர்ந்தான்.

பசுக்கள் வரிசையாகத் தாமாகவே வந்து நின்றிட அவற்றின் பாலைக் கறந்து அபிஷேகத்திற்காகக் குடத்தில் நிரப்பி மணல் லிங்கங்களுக்கு அபிஷேகித்துச் சிறுவன் பரமானந்தம் கொண்டான். மரத்திலிருந்து இறங்கினார் எச்சதத்தன்! சினம் கொண்டு பசும்பால் நிரம்பியிருந்த குடத்தைக் காலால் ஓங்கி உதைத்திடவே... இதைக் கண்டு திகைத்த சிறுவன் தம் சிவபூஜைக்கு இடையூறு விளைவித்ததால் தந்தையென்றும் பாராது அருகில் இருந்த ஒரு கோலை எடுத்திட.. சிவனருளால் அதுவே ஈஸ்வரனின் மழுப் படையாக மாறியது.. அம் மழுவால் தந்தையின் காலை வீழ்த்தி விட்டுக் கண்ணெனத் தம் சிவ பூஜையைத் தொடர்ந்தான் விசார சர்மன்!

எச்சதத்தனின் சினத்திலிருந்து தம் பக்தனாம் சிறு பிள்ளையைக் காத்திட்ட சிவபெருமானே ஆங்கே காட்சி தந்து சிறுவனை மார்கண்டேயனுக்குத் தந்த அரவணைப்பினை ஒத்த அன்பால் கட்டி அனைத்து மழுவினால் உன் தந்தையை எறிந்தாய்! உனக்கு உரிய தந்தை இனியாமே என்று கூறி அவனைத் தடுத்தாட்கொண்டார் சர்வேஸ்வரன்! அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும், சூடுவனவும், உனக்காகச் சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்றார் !

மழுவால் வெட்டுண்ட எச்சதத்தனிடம் , “எச்சதத்தா, நீ பாரெங்கும் பாதை யாத்திரை புரிந்து எம் திருமார்பில் எம் திருக்கண்டத்தில் உதைக்க எத்தனித்தமையால், கண்டம் தீர்க்கும் மார்க்கண்டேஸ்வரனாய் யாம் விசேஷ லிங்கத் தோற்றம் கொண்டுள்ள இடத்தையடைந்து வழிபட்டுப் பிராயச்சித்தம் பெறுவாயாக! ஆங்கே கண்டம் தீர்க்கும் நாளாம் சித்திரை சதயத்தில் எமக்கு அரைத்த சந்தனக் காப்பிட்டு வணங்கிடில் சிவபதம் அடைவாய்!” என ஆசி கூறினார்.

எச்சதத்தன் பல இடங்களிலும் சுயம்பு லிங்க மூர்த்திகளை வணங்கி வர.... “காஞ்சீபுரத்தருகே, தத்தா இத்தீர்த்தம் அமர்!” என்ற அசரீரி கேட்டு அங்கிருந்த தீர்த்தக் கரையை அடைந்திட ஆங்கே இரு தீர்த்தங்களிடையே அதியற்புத லிங்கம் பரிமளிப்பது கண்டு பரமானந்தம் கொண்டார். தாம் தேடிய சிவலிங்கம் இது என உணர்த்தும் வண்ணம் அச்சிவலிங்கத்தின் மார்பில் சந்தனம் உறைந்திருப்பது கண்டு அதிசயித்தார். மேலும் எச்சதத்தன் அவ்விடத்தில் வந்த நாளும் சித்திரை மாதம் சதய நட்சத்திரமானது கண்டு ஆனந்தமுற்றார்.

அதே நாளில் சந்தனம் அரைத்துக் காப்பிட்டுத் தலைக் கட்டு முறைப்படி ஸ்ரீமார்கண்டேஸ்வர மூர்த்திக்கு ஆலயம் எழுப்பிச் சிவபதம் கொண்டார். எச்சதத்தன் கட்டிய கோயிலை உடைய ஊர் ஆதலின் எச்சூர் என ஆயிற்று. இத்திருவிளையாடல் நிகழ்ந்த காலமே அந்த யுகத்தின் வ்ருஷ (விஷு) வருடச் சித்திரை மாதச் சதய நட்சத்திரமாகும். மார்கண்டேய புராணத்தில் எமபகவான் அம்பிகையிடம் தமக்குப் பிராயச்சித்தம் பெற்றிடச் சக்கரப் பூஜைகள் செய்தபோது மரகத லோகத்தில் ஸ்ரீவித்யா சக்ரதாரிணியாகப் பரிணமித்த பச்சை வடிவ ஸ்ரீமரகதாம்பிகையே இத்தீர்த்தக் கரையில் தவம் பூண்டு ஸ்ரீமார்கண்டேஸ்வரரை மணந்தார், இங்குள்ள எச்சதத்தத் தீர்த்தம் என்பதற்கு ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. எச்சம் என்பது மிச்சமாய், சொச்சமாய், கச்சையாய், இச்சையாய், பச்சையாய், சர்ச்சையாய் இருக்கின்ற கர்ம வினைகளைக் குறிப்பதாகும். தத்தம் என்றால் நிறையப் பொருளிருப்பினும், அர்ப்பணித்தல் என்ற பொருளும் உண்டு.

நம்முடைய கர்ம வினைகளை நாம் தானே அனுபவிக்க வேண்டும், பிறருக்கு எவ்வாறு அர்ப்பணிக்க முடியும்? இந்த எச்சதத்த தீர்த்தத்தில் எமபகவான் சதய நட்சத்திரம் தோறும் ஸ்ரீமார்கண்டேஸ்வரரைப் பூஜித்து பூலோக ஜீவன்களின் கர்மவினை பாரத்தை, மரண பயம் இல்லாதவாறு தானே தாங்குகின்றார்! மரண பயத்தை வெல்வதாகவே, ம்ருத்யு பயக் காப்புத் தூண்களாகவே இங்கு இரண்டு தீர்த்தங்களும் விளங்குகின்றன! ஆம்! மரண பயத்தை வெல்வதெனில் மிருத்யுவை, அகால மரணத்தை வென்றவராகப் பரிசுத்தம் ஆவதுதானே..!

அகால மரணம் தவிர்க்க.... மார்கண்டேய மாமுனியும் தாம் அடைந்த சிரஞ்சீவித்துவத்தைப் பலரும் பெற்று உய்யும் வண்ணம் சித்திரைச் சதய நாளில் இங்கு சூட்சுமமாக ஸ்ரீமார்கண்டேஸ்வரருக்கு வழிபாடுகள் நிகழ்த்திப் பக்தர்கள் தத்தம் செய்கின்ற கர்மச் சுமையின் ஒரு பங்கைத் தாம் ஏற்கின்றார். ஆனால் மேற்கண்ட வகையில் எமபகவானும், மரகதாம்பிகையும், மார்கண்டேய ரிஷியும் இணைந்து தருகின்ற அருள் வரங்களைப் பெற்றிட வாழ்நாளில் அமாவாசை தோறும், சதய நட்சத்திரம் தோறும் இங்கு எச்ச தத்தத் தீர்த்தக் கரையில் முறையாகத் தர்ப்பண பூஜை செய்திடல் வேண்டும். இதனால் ஆயுள் விருத்தி கிட்டும். தந்தையை அவமதித்த, தந்தையைப் பழித்த துன்பங்கள் தீரும். விபத்து, கொலை, தற்கொலை போன்ற வகையிலான அகால மரணங்கள் ஏற்படாது காத்திடும்.

பொதுவாக மரணபயம் ஏற்படுவதற்கான காரணமே, பல ஆண்டுகளாக இல்லப் பெரியோர்களுக்கு, தாய் தந்தையோர்க்கு அமாவாசை, திதித் தர்ப்பணங்களை, திவசங்களை, படையல்களை முறையாக அளிக்காததே ஆகும். எனவே இதுகாறும் தர்ப்பணத்தின் மகிமையை உணராதவர்கள் இனியேனும் உணர்ந்து அறிந்து இச்சிவாலயத் தீர்த்தக் கரையில் சித்திரைச் சதய நாளில் தர்ப்பண பூஜை செய்து ஸ்ரீமார்கண்டேய சிவலிங்க மூர்த்திக்கு சந்தனக் காப்பிட்டு ஆயுள் சக்தியை விருத்தி செய்யக் கூடிய முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை கலந்த சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கலை இங்கு தானமாக அளித்திட மரண பயம் தீரும். குடும்பத்தில் அகால மரணம் அடைந்தவர்களுக்கும் நற்கதி கிட்டும்.

குடும்பப் பகை நீங்க.. பெற்றோர், பிள்ளைகள், பெண்களிடையே பகைமை இருப்பின், அவர்கள் சித்திரைச் சதய நாளில் இங்கு ஸ்ரீமார்கண்டேஸ்வரருக்குக் கையால் அரைத்த சந்தனக் காப்பு இடுவதுடன் அங்கப் பிரதட்சிணம் செய்து இருபாக உணவு, திரவியங்கள், நல்பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் இனிமையான நல்லுறவு மீண்டும் தொடரும்... (இருபாக வகைகள் = இரண்டிரண்டாய் இருப்பவை – முந்திரி, புடவை – ரவிக்கை, வெற்றிலை – பாக்கு, மஞ்சள் – குங்குமம், அவரை, டபுள் பீன்ஸ், Bread and Butter  போன்றவை.  நம் ஆஸ்ரமம் சார்பாக இறையருளால் எச்சூர் ஸ்ரீமார்கண்டேஸ்வரர் சிவலிங்க மூர்த்திக்கு வருகின்ற வ்ருஷ வருட சித்திரை மாத சதய நட்சத்திரத் திருநாளில் (19.4.2001 – வியாழக்கிழமை) சந்தனக் காப்பிற்காகச் சந்தனம் அளிக்க இருக்கின்றோம். பல அரிய தெய்வீகத் திரவியங்கள், மூலிகா பந்தனங்கள் நிறைந்த சந்தனக் காப்பு இது!

சித்திரை சதயத் திருநாளில் ஜீவன்களுடைய மரண பயம் தீர்த்து மனித சமுதாய நல்வாழ்விற்காக இவ்வரிய மானுடப் பிறவியில் நன்முறையில் வாழ்ந்திட எச்சூர் ஸ்ரீமார்கண்டேஸ்வர மூர்த்திக்குச் சந்தனக் காப்பு இட்டு மகத்தான இறையருளைப் பெற்றிடுவோம், வாரீர்! ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீமார்கண்டேஸ்வர ஈசா போற்றி! போற்றி!!

 குறிப்புகள் :- ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் இவ்வரிய இறைச் சேவையில் பங்கு பெற்றிடலாம். இது உலக ஜீவன்களின் நல்வாழ்விற்கான மகத்தான இறைப் பணியாகும். நீராடி, நல்லாடை தரித்து, நெற்றிக்கு விபூதி, குங்குமம், சந்தனம், திருமண் இட்டு இறைத் துதிகளை ஓதியவாறு சந்தனம் அரைத்தல் சிறப்புடையது. சந்தனக் கட்டை, கல் கொண்டு மட்டுமே சந்தனம் அரைக்கப்பட வேண்டும். ஒருபோதும் சந்தனப் பவுடரைக் குழைத்துக் கரைத்தல் கூடாது. சந்தனப் பவுடர் தோஷமுள்ளதே! உள்ளங்கை விரல்களில் உறைகின்ற பாதாம்புஜ சக்திகள் வெளிப்படும் வண்ணம் சந்தனக் கட்டைக் கொண்டு அரைத்தலே உத்தமமானதாம். சந்தனப் பவுடர் கொண்டு கரைக்கப்படுவது உண்மையான சந்தனமாகாது. இவ்வகைப் பவுடர் குழைப்பு, சந்தனமாக ஏற்கப்படவும் மாட்டாது என்பதை உறுதிபட அறிவிக்கின்றோம்.

ஸ்ரீமார்கண்டேஸ்வர மூர்த்திக்குச் சந்தனம் அரைத்துத் தருவதற்காக ஏழை மக்களுக்குச் சந்தனக் கல், கட்டையைத் தானமாக அளிப்பது மகத்தான புண்ணிய சக்தியைப் பெற்றுத் தரும். 19.4.2001 அன்று தரிசனத்திற்கு வரும் அன்பர்கள் யாவரும் இச்சந்தனத் திருப்பணியில் பங்கு கொள்ளும் வண்ணம், இச்சிவாலயத்திற்குச் சந்தனக் கல், கட்டையைக் கொண்டு வந்து அவர்களுக்கும் அளித்து சந்தனம் அரைத்துத் தரும் பாக்கியத்தைப் பெற்றுத் தருவது உன்னதத் திருப்பணியாகும். அப்பர் சுவாமிகள் கடைபிடித்த அரிய உழவாரத் திருப்பணியின் ஓரங்கமிது!

சந்தனம் அரைக்கும் போது, கீழ்க்கண்ட இறைத் துதிகளை ஓதி அரைப்பது சிறப்புடையதாகும். அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், காஸ்யபர், ஆங்கீரஸர், கௌதமர் போன்ற ஏழு சப்த ரிஷிமார்களும் பூலோக பூஜைகளுக்காகத் தேவலோகத்திலிருந்து கொணர்ந்த தேவ விருட்சமே சந்தனம் ஆதலின் அவர்களுக்குப் பெய்யும் நன்றி வழிபாடாக, “ஏழு முனி ஏற்று அருள வேண்டும் எம்குருவே போற்றி!” என்று ஓதிச் சந்தனத்தை அரைத்தல் சப்த ரிஷிகளுடைய ஆசிகளைப் பெற்றுத் தரும். மேலும் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜபிக்கலாம்...

ஸ்ரீபுதபகவானின் புதல்வர் ஸ்ரீபுரூரவஸூ அனைத்துத் கோயில்களிலும் சந்தனம் அரைத்து இறைவனுக்குச் சாற்றி ஓதிய மாமந்திரம் :- “சந்தன கந்த தேவா அனுக்ரஹ யக்ஷயக்ஷணி தேவஸ்ய ஸேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி” எனக் கூறி சந்தனம் அரைக்க ஆரம்பிக்க வேண்டும். “சிவாய பவாய பவாத்மஜாய சந்தான விருக்ஷாத்மா நாத்புத கந்தாய சித்ரூப சிதானந்த சின்மயாய சந்தோஷ ரூபாய புதபுத்ர ஸேவார்த்தம் நமோ நமஹ” எனக் கூறி சந்தனம் அரைக்க வேண்டும்.

ஸ்ரீமார்கண்டேஸ்வரராக சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலங்களிலும் சித்திரைச் சதயத் திருநாளில் சந்தனம் சார்த்துவது அரிய பலாபலன்களைப் பெற்றுத் தரும்.  வ்ருஷ (விஷு) வருடம் மட்டுமின்றி ஆண்டு தோறும் சித்திரைச் சதயத் திருநாளில் ஸ்ரீமார்கண்டேயப் பெருமானுக்குச் சந்தனக் காப்பு சார்த்துதலை மகத்தான திருவிழாவாகக் கொண்டாடுதல் பக்த கோடிகளின் பெருங்கடமையாகும்.

எச்சூர் செல்லு வழி:- சென்னை – காஞ்சீபுரம் மார்கத்தில் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள சுங்குவார் சத்திரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் எச்சூர் உள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து எச்சூருக்கு உள்ள டவுன் பஸ் (T-26) சுங்குவார் சத்திரம் வழியாகச் செல்கின்றது.

அமுத தாரைகள்

1. மணமுள்ள புஷ்பங்களையே பயன்படுத்திடுவீர் – மணமுள்ள பூக்களில் பலவித நல்தேவதைகள் உறைவதால் எப்பொழுதும் மணமுள்ள பூக்களையே கோயிலுக்கும், இல்லத்தில் உள்ள சுவாமிப் படத்திற்கும், சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் பொழுதும், நீங்கள் சூடும் போதும் பயன்படுத்துங்கள். எத்தகைய கவின்மிகு வண்ணம் பெற்றிருந்தாலும் வாசமற்ற புஷ்பங்கள் (காட்டுமல்லி, கனகாம்பரம், டிசம்பர்பூ போன்றவை), காகித, பிளாஸ்டிக் பூக்களை ஒருபோதும் ஏற்காதீர்/அளிக்காதீர். பூஜைக்கும் பயன்படுத்துதல் கூடாது.

2. கடந்த ஆண்டு கடந்த ஆண்டாக இருப்பது கிடையாது. பல பிழைகளுக்கும், பெருங் குற்றங்களுக்கும் தக்க பிராயச்சித்தங்களும் ஒவ்வொரு ஆண்டிலும் உண்டு. அந்தந்த ஆண்டில் புதிதாகக் கர்மங்கள் சேர்வதும் உண்டு! இதற்காகத்தான் சித்தர்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் உரித்தான ஒன்று அல்லது பல ஆலய வழிபாடுகளை நமக்குத் தந்திருக்கின்றார்கள். இவற்றைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து உணர்ந்தால்தானே அந்த ஆண்டிற்குள் பிராயச்சித்தப் பரிகார முறைகளைப் பெற முடியும். இல்லாவிடில், அறுபது வருடங்கள் காத்திருக்க வேண்டும்! இவற்றைப் பற்றி உணர்விக்கின்ற சித்தர்களுடைய குருவாய்மொழிப் பெட்டகமாக, சற்குருவின் அருள்வழிக் கூடமாக, கதியற்றோர்க்கு இறைவழிச் சாலையாக, மெய்ங்ஞ்ஞானப் பஞ்சம் உடையோர்க்கு தெய்வீக அருள் பொங்கும் அமுத மழையாக விளங்குவதே ஸ்ரீஅகஸ்திய விஜயம்!

2. சந்திராஷ்டம தினங்களுக்கான விசேஷமான சங்குச் சிமிழ் பூஜை :- ஒவ்வொருவருடைய ராசியிலிருந்து எட்டாம் இடத்தில் சந்திர பகவான் இருக்கின்ற இரண்டேகால் நாட்களே அந்தந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினங்கள் எனப்படும். சந்திராஷ்டம தினங்களில் மனம் பேதலித்துச் சஞ்சலங்கள் ஏற்பட்டுக் காரியத் தடங்கல்கள் உண்டாகும். இதற்காக, சந்திர பகவான் எட்டால் இடத்தில் இருப்பதால்தான் இத்தகைய இடர்கள் ஏற்படுகின்றன என்று எண்ணாதீர்கள். மதிகாரகனாக விளங்குகின்ற சந்திர பகவானுக்கும் நம்முடைய மூளைச் செல்களில் உள்ள நட்சத்திரப் பாகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சந்திர கிரகத்திலிருந்து எழுகின்ற பலவகையான அமிர்த கிரணங்கள் நம்மூளை நாளங்களில் உள்ள, அவரவர் நட்சத்திரத்திற்கு உரித்தான பாகைப் படிமங்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இத்தகைய அமிர்த கிரணங்களை முழுமையாகப் பெறமுடியா வண்ணம் சந்திர நேத்திரங்கள் விலகிச் செல்லும்போது மன ஆக்கமும், ஊக்கமும், வளமும் குறைந்து எண்ணச் சிதறல்கள் உண்டாகி மனம் பேதலிக்கும். இதுவே சந்திராஷ்டம விளைவுகளுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

கடலில் உள்ள சில வகை முத்தாரச் சங்குகள் சந்திரனிடமிருந்து பூரண கோகுல சக்திகளை – பாற்கடலின் வெண்ணிற அமிர்த தாரைகளை – ஈர்த்துத் தம்முள் பிரதிபலிக்கின்றன! அதாவது சந்திராஷ்டம தினங்களின் போது அந்தந்த நட்சத்திரகாரர்களுக்கு மன ஆக்கத்தைத் தரவல்ல க்ஷீராமிர்த சக்திகளை இச்சங்குகள் தம்மிடம் உட்கிரணங்களாகப் பதித்து அவ்வப்போது வெளியிட்டு அவர்களுடைய மன பேதலிப்பினைத் தவிர்த்து மனச் சாந்தியைத் தருகின்றது. இத்தகைய சங்குகளுக்கு நல்முத்து பூரண வண்ண பிரதி பிம்பச் சங்குகள் அல்லது முக்தாமிர்தச் சங்குகள் என்று பெயர். சந்திராஷ்டம தினங்களின் போது இச்சங்குகளில் உள்ள குங்குமத்தைப் பூஜித்து ஸ்ரீசந்திர பகவானுக்குரித்தான (ஸ்ரீகாயத்ரீ) மந்திரங்களை ஓதி, குங்குமத்தை நெற்றியில் இடுவதுடன் செல்லும் இடமெங்கும் எடுத்துச் சென்றும் சந்திர பகவானுக்கு உரித்தான உளுந்து சம்பந்தப்பட்டவற்றை (வடை, கொழுக்கட்டை) தானமாக அளித்தும் வந்தால் சந்திராஷ்டம விளைவுகள் தணியும்.

3. காணீரோ தெய்வீகச் சங்கு! இந்த இதழில் அபூர்மான சில சங்குகளைப் பற்றிய சித்த ஞானபத்ரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களை அளித்துள்ளோம். கோயில், இல்லத்தில் உள்ள இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதற்கு உரித்தானதும் காரியசித்தியை நல்க வல்லதுமான இச்சங்குகளில் ஒரு சிலவற்றை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்திராலயங்களில் பெற்றிடலாம்.

4. பட்டை லிங்க முக தரிசனம்!  - திருஅண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் வருகையில் பிருத்வி நந்தியிடமிருந்து எட்டுத் தப்படிகள் முன் வைத்து மலையை நோக்கி நாம் பார்க்கின்ற போது நமக்குக் கிட்டுகின்ற தரிசனமே பட்டை லிங்க முக தரிசனம்! திருஅண்ணாமலையின் அதியற்புதத் தெய்வீகத் தன்மை என்னவென்றால் இன்றைக்கு உலகில் உள்ள அனைத்து லிங்கங்களின் வடிவங்களையும் இதில் கிரிவலத் தரிசனங்களாகக் காணலாம். ஏனென்றால் அனைத்துச் சுயம்பு மூர்த்திகள் உருவாகின்ற ஆதிமூல சிவத்தலமே, பரம்பொருளே மலையாய்ப் படர்ந்து இருக்கின்ற திருத்தலமே திருஅண்ணாமலையாகும். எனவே பிருத்வி நந்திக்குரித்தான வழிபாடுகளை மேற்கொண்டு, சுயம்பு மூர்த்திகளெல்லாம் ஸ்ரீபூமிநாதராக வடிவம் கொண்டிருக்கின்ற திருத்தலங்களிலும் முறையான வழிபாடுகளைச் செய்து வந்தால் பூகம்பங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். மேலும் வாஸ்து நாட்களில் ஸ்ரீபூமிநாதருக்கும், திருஅண்ணாமலையில் ஸ்ரீபிருத்வி நந்திக்கும் தக்க அனுமதியுடன், குறித்த முறைகளுடன் புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி போன்ற திரவியப் பட்டைக் காப்புகள் சார்த்தித் திருஅண்ணாமலையின் பட்டைக் காப்பு லிங்க முக தரிசனத்தைப் பலரும் காணும்படி செய்து வந்தால் கோர்ட் வழக்குகள், உறவினர், கூட்டாளிகள் தகராறுகளால் நின்று போன விவசாயம், நில சம்பந்தமான தொழில்கள், முடங்கியுள்ள தொழிற்சாலைகள், நின்று போன கட்டிடங்கள் போன்றவற்றில் தீர்வுகள் ஏற்பட்டு நன்முறையில் நிலவளர்ச்சி, விவசாயம், தொழில்கள் தொடரும். கிழங்கு வகை உணவு வகைகளை அன்னதானமாக இடுதல் விசேஷமானது!

5. பசுவை அடித்தால் பரந்த சந்ததி அடிபடும்! இக்காலத்தில் காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள், தோட்டக்காரர்கள் அவ்வழியே பசு வரும்போது பெரிய தடியால் அதன் மடியிலும், வாயிலும் அடித்து சார்த்திவிடுகின்றார்கள். இது மகாகொடுமை வாய்ந்த, பாவகரமான செயலாகும். ஒரு பசு வந்து தன் கடையினுள் காய்கறிகளை எடுத்துத் தின்றால்தான் பொருள் இழப்பு ஏற்படுகின்றது என்பது அறியாமையே! மாறாக பசு வருகின்ற போது இரண்டு வாழைப் பழங்களையோ, கொஞ்சம் காய்கறிகளையோ தானமாக கொடுக்கின்ற நற்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பசு சாத்வீகமாகத் தானே திரும்பி விடுவதோடு நல்ஆசியுந் தந்திடும்! உலகத்திலேயே இந்தியாவில் மட்டுமே தெருக்களில் பசுக்களின் நடமாட்டம் பெருமளவு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இன்னும் பசுக்களின் நடமாட்டமே தெருக்களில் அற்றுப் போய்விடும். கோடானு கோடி தேவ மூர்த்திகள் உறைகின்ற பசுவைக் காண்பது கடவுள் தரிசனமாக நமக்கு இன்று விளங்குகின்றது. எனவே இந்நிலையில் தெருவில் பசுவின் புனிதக் காட்சி கிட்டும் பாரதத்தில் பிறந்தது பெரும் பேறே! அரும் பெரும் மகரிஷிகளே பசுக்களாய் பிறப்பெடுக்கின்றனர்! புனிதம் நிறைந்த மகரிஷிகளையா கம்பால் அடிப்பது? என்னே கொடுஞ்செயல் இது!

பசுவைத் தடியால் அடித்து விரட்டுபவரும், அவர்தம் சந்ததியினரும்தாம் பெரிதும் பாதிக்கப்படுவர். அதிலும் நிறைமாத கர்ப்பிணியாக வருகின்ற பசுவை அதன் வயிற்றில் அடித்தால் எத்தகைய கடுமையான சோதனைகள் இல்லத்தில், வியாபாரத்தில், குடும்பத்தில், சந்ததிகளின் வாழ்வில் ஏற்படும் என்பதை இனியேனும் உணர்ந்திடுங்கள். குழந்தைப் பருவத்தில் ஈன்றாத் தாயாய் பால் தந்து பேணிய பசுவை ஒரு வெறும் விலங்கு என்று அடித்துத் துரத்துவதா? புனித பாரதத்தில் இப்படியும் ஒரு பாவகரமான கேவலமான செயலா? இந்தக் கொடியப் பாவச் செயலைக் காண்பவர்களும் பசுவை அடித்துத் துன்புறுத்துபவர்களுக்குத் தக்க அறிவுரைத் தந்து பசுவின் தெய்வீகத் தன்மையை அனைவரும் உணரச் செய்வீர்களாக!

6. இறைமை பொங்கும் தாய்ப் பால்! பூமாதேவி மிகவும் ஆனந்தம் கொள்கின்ற நேரம் எது தெரியுமா? எங்கெல்லாம் தாய்ப்பால் ஊட்டப்படுகின்றதோ, எப்போதெல்லாம் பசுமடிக் காம்பிலிருந்து பால் சுரக்கின்றதோ, எங்கெல்லாம் விலங்குக் குட்டிகள் தாயிடமிருந்து தாய்ப்பாலை அருந்துகின்றனவோ, அந்நேரமெல்லாம் பூமாதேவிக்கு பரமானந்தத்தைத் தருகின்ற நேரங்களாகும். ஏனென்றால் தாய்ப்பாலின் தேவ சக்தித் தத்துவமே ஜீவ சிருஷ்டியை உணர்விப்பதாலும் மிகவும் புனிதமான தாய்ப்பால், பசும்பால் போன்றவற்றைச் சுரக்கும் நாளங்கள் பூமியின் நீரோட்ட நாளங்களுடன் சூட்சும ஆன்மப் பிணைப்பைக் கொண்டவை ஆதலாலும் ஜீவ சிருஷ்டியில் பூமாதேவி தேவானந்தம் கொள்கின்றாள்! மானுடரோ, விலங்கினமோ யாவற்றின் தாய்ப்பாலும் மகத்தான க்ஷீர பிருத்வி தெய்வீக சக்திகளைக் கொண்டவையே. பசும்பால் என்பது கோடானு கோடி தேவ மூர்த்திகள் உறைகின்ற பசுவிடமிருந்து பெறப்படுகின்ற தேவ கோமள அமிர்தமாகையால் டென்மார்க், பின்லாந்து, இங்கிலாந்து, இந்தியா எந்த நாட்டிலும் எப்போது பசு மடியிலிருந்து பால் கறக்கப்பட்டாலும் அது பூமாதேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.

நமக்குப் பால் தருவதற்கு மட்டுமன்றி அழுகல் என்று நீங்கள் தூக்கி எறிகின்ற இலைத் தழைகள், காய்கறிகளை உண்டு அதிலுள்ள கோடிக் கணக்கான கிருமி ஜீவன்களுக்கெல்லாம் உத்தம ஆன்ம நிலைகளைத் தருவதற்காகவும் பசுக்கள் இப்புவியில் பிறக்கின்றன. தம் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காகவே இலை தழைகளை, அழுகிய, பூச்சி அரித்த காய்கறிகளைப் பசுக்கள் உண்பதாக ஒருபோதும் அறியாமையால் எண்ணாதீர்கள்! பூச்சி அரித்திருக்கின்ற ஒரு வெண்டைக்காய்க்கும், கத்தரிக்காய்க்கும் மோட்சமளிக்கின்ற வகையிலே அதனைக் கோடானு கோடி தேவ மூர்த்திகள் உறைகின்ற தன்னுடைய இரைப்பையில் செலுத்தி அவற்றிற்கும் தெய்வ தரிசனங்களைப் பெற்றுத் தந்து அவற்றின் முக்திக்கு வழிகாட்டும் தெய்வீகத் தன்மையை பசு கொண்டிருக்கிறது! எனவே பசுவைத் தடியால் அடித்து சித்திரவதை செய்வதால் கொடிய பாவச் சுமையை ஏற்படுத்தும் என்பதை இனியேனும் உணர்வார்களாக!

இந்த அரிய தெய்வீக விளக்கங்களை அனைத்து பக்த கோடிகளும் துண்டுப் பிரசுரங்களாக, லட்சக் கணக்கான நோட்டீசுகளாக அச்சடித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்து பசுவைக் கம்பால் அடித்து விரட்டுகின்ற, இறைச்சிக்காகக் கொல்கின்ற, வாஜ்பேய யாகத்தில் ஆடு/பசுத் திசுக்களை ஆஹூதியாக அளிக்கின்ற அதர்மச் செயல்களைத் தடுத்து நிறுத்திட அறப்போர் புரிதல் வேண்டும். எங்கு பசுவைக் கண்டாலும் வணங்கி வழிபடுகின்ற நற்பழக்கம்தனை நம் பாரத நாட்டிற்கு உரித்தான அரும்பெரும் தெய்வீக பாரம்பரியத்தை மீண்டும் மிளிரச் செய்திடல் வேண்டும்.

நித்திய கர்ம நிவாரணம்

1.4.2001 – சூரிய பகவானுக்கு சாம்பிராணித் தைலக் காப்பு – நிதி நிறுவனத்தால் வரும் துன்பம் குறையும்.
2.4.2001 – கற்கண்டு சாதம் அன்னதானத்தால் கல்வி நிறுவனத்தில் ஏற்படும் குழப்பம் விலகும்.
3.4.2001 – தக்காளி சாதம் அன்னதானம் – மில்லில் வேலை செய்யும் நண்பர்களிடம் மன பேதத் துன்பம் தீரும்.
4.4.2001 – வேலையில் உதவுவோர் இன்று விலகியிருக்கும் நாள். உஷாராக வெள்ளரிக்காய் தானம் செய்து உதவியைப் பெறலாம்.!
5.4.2001 – கணிப்பொறியில் வேலை செய்யும் பெண்கள் தவறு செய்யும் நாளிது.. எலுமிச்சை சாதம் தானம் நல்லது.
6.4.2001 – நண்பர்களிடையே மனபேதம் உருவாகும் நாள் இது. வெல்லம் வைத்துப் பசுவிற்குச் சப்பாத்தி அளித்தல் நலம்.
7.4.2001 – ஆந்தை முகம் உடையோரால் ஆபத்து உண்டு. குழி ஆப்பம் தானத்தால் குறை தீரும்.
8.4.2001 – மொத்தை மூக்கு உடையவரால் அலுவலகத்தில் குழப்பம் ஏற்படும். கொழுக்கட்டை தானத்தால் சுகம் பெறலாம்.
9.4.2001 – வியாபாரப் போட்டி, தந்தை மகனுக்குள் ஏற்படும் நாள் இது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுப்பதால் நஷ்டம் தவிர்க்கலாம். கற்கண்டு கலந்த பால் தானம் தீர்வு தரும்.
10.4.2001 – ஏற்றுமதி வியாபாரத்தில் எதிரிகளால் குழப்பம் வரும் நாளிது. வீட்டிற்கான தென்னங் கீற்றுக் கூரை தானம் நலம் தரும்.
11.4.2001 – விஷவாயு தாக்குதலால் துன்பம் ஏற்படும் நாளிது. கோயில்களில் ஊதுவத்தி ஏற்றி இட்லிதானம் செய்தல் நலம் தரும்.
12.4.2001 – வாகனக் கடன் திருப்பித் தராதலால் துன்பம் வரும் நாளிது. கடனைத் திருப்பித் தர முயற்சி எடுங்கள்.
13.4.2001 – சிறிய வாய்ச் சண்டை பெரிதாகும் நாளிது. மௌன விரதம் இருந்து பசுவிற்குப் பழதானம் செய்தல் சிறந்தது.
14.4.2001 – முதியோர்களை மாடு முட்டும் நாளிது. நந்தீஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றவும். தேங்காய் சாதம் தானம் நல்லது. முதியோரால் முடியாவிடில் குடும்பத்தார் செய்ய வேண்டும்.
15.4.2001 – கடலில் மீன் பிடித்து விற்போர் கடலுக்கு இன்று போகாமல் இருப்பது நலம் தரும்.
16.4.2001 – கோயில் பூஜை செய்பவர்கள், சிவாச்சாரியார், குருக்கள் இடையே பகைமையால் சண்டை வரும் நாளிது. சிவகவசம் படித்துப் பால் தானம் செய்தல் நலம் தரும்.
17.4.2001 – எண்ணெய் வியாபாரிகள் கவனமாய் இருக்க வேண்டிய நாளிது. கவனக்குறைவால் துன்பம் வரும். பசுவிற்குப் புண்ணாக்கு அளித்தல் நலம் தரும்.
18.4.2001 – அந்தணர்களிடையே பகைமையால் கைகலப்பு ஏற்படும் நாளிது. விஷ்ணு சகஸ்ரநாமம் படித்துப் பாயாசம் தானம் நலம் தரும்.
19.4.2001 – வங்கி சம்பந்தப்பட்ட துறைகளில் பாங்க் யூனியன் உயர்நிலை அதிகாரிகளிடையே கலகங்கள் உருவாகிக் கலக்கும் நாளிது. தான தருமத்தில் ஈடுபடுவது நலம்.
20.4.2001 – உரம் உற்பத்தியிலிருக்கும் கம்பெனிகளில் கணக்கில் தவறு ஏற்படும் நாளிது. வெண்பொங்கல் தானம் நலம் தரும்.
21.4.2001 – வக்கீல்களுக்குள் போட்டி ஏற்படும் நாளிது. பெண் வக்கீல்கள் மனவேதனை அடைய வாய்ப்புண்டு. திராட்சை சேர்ந்த தயிர்சாதம் நலம் தரும்.
22.4.2001 – இன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்வது நலம் இல்லை. சூரிய கவசம் படித்துக் குழந்தைகளுடன் இருப்பது நலம்.
23.4.2001 – கன்னிப் பெண்கள் சப்த கன்னிமாரை வணங்கி ஏழுவகை சித்ரா அன்னங்கள் தானம் - வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.
24.4.2001 – தமிழைத் தவிர பிறமொழியைத் தாய் மொழியாய்க் கொண்டவர்கள் இன்று தங்கள் பேச்சில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.
25.4.2001 – காப்பித் தூள் தயாரிப்போர், விற்பவர்களுக்கு கவனம் தேவை, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். ஸ்ரீகருப்பண்ண சுவாமியை வேண்டி வஸ்திர தானம் செய்யவும்.
26.4.2001 – ஜோதிடம் பார்ப்பவர்கள் பணத்தால் காரிய சாதனை செய்ய முடியாத நாளிது. தான தருமத்தால் காரிய சாதனை புரியலாம்.
27.4.2001 – மின்சாரத் துறையில் வேலை செய்பவர்களுக்கு சோதனையான நாள் இது. பைரவரை வேண்டி முந்திரி கேக் தானம் நலம் தரும்.
28.4.2001 – பாங்கில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றத்தால் குடும்பக் குழப்பம் வரும் நாளிது. சனீஸ்வரர் கோயிலில் பீட்ரூட் அல்வா தானம் நலம் தரும்.
29.4.2001 – மைத்துனியால் கணவன் மனைவியிடையே சண்டை வரும் நாள். சிவன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் தானம் செய்வது நலம் தரும்.
30.4.2001 – திருமணமாகாத அக்கா தங்கைகளிடையே மனபேதம் உருவாகும் நாள் இது. பொறுமையாய் இருத்தல் நலம் தரும்.

பௌர்ணமி கிரிவல நாள் :- 7.4.2001

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam